07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 5, 2009

சாமான்யனின் பாவனாதீதம் - 3

வணக்கங் கண்ணுகளா! நம்ம ஊர்ப் பழமையிகளைச் சித்த பாத்துட்டு, வலையில புதுசா எழுத வந்துருக்குற சனங்களைப் பாக்குலாஞ் செரியா?!

பாரு கண்ணூ, நான் ஒரு நாள் பொழுது விடிஞ்சதும் ஏழு மணி வண்டிக்கு நெகமம் போயி உரக் கடையில உரமும், பருத்திக் காட்டுக்கு சிம்புசு மருந்தும் வாங்குலாமுன்னு போயிட்டு இருந்தன். அப்ப வடக்காலூட்டு பாப்பாத்தி அக்கா, அங்க நின்னுட்டு இருந்த பூவாத்தக்கா கிட்டச் சொல்லுது,

பெத்தவ ஒரு
பாவமுஞ் செய்யுல;
ஆனாலும் பெத்த
புள்ளை இந்த
சின்ன வயசுலயே
செமக்குது புத்தக
பாரம்!

அதைக் கேட்டுட்டே ஊர் வாசலுக்குப் போயிச் சேரவுமு, கல்யாணி வண்டி வரவுமு செரியா இருந்தது. செஞ்சேரி மலையில இருந்தே வண்டி நெறய சனங்க தொங்கிகிட்டுத்தேன் வந்தாங்கலாமா கண்ணூ. நானுஞ் சேரின்ட்டு ஏறி கம்பியப் புடிச்சுட்டு நின்னுட்டேன். பக்கத்துல இருந்த சுண்ணாம்புக் காளவாய் கோயிந்தன் சொன்னான்,

எந்தத் தப்புஞ்
செய்யாம
நிக்கற தண்டனை
இந்த பேருந்துல!


என்றா கோயிந்தா, நெம்பத்தான் சலிச்சுக்குறன்னு அவனை ஒரு கேள்வி கேட்டுப் போட்டு, உள்ள நகுந்து போயி நின்னுட்டேன் நானு. வீதம்பட்டி மாரியாத்தா கோயில்ல வண்டி நிக்கவுமு, சனங்க உள்ள ஏறி வந்தாங்க. உள்ள ஏறி வந்ததுல இருந்த அந்த களையா இருக்குற அம்மணியப் பாத்துக் கோயிந்தன் சொன்னான், காஞ்ச கருவாட்டுக்கு ருசின்னா, கறுத்த கட்டைக்கு அழகு கழுத்துமணி! இதைக் கேட்ட அந்த அம்மணி சொல்லுச்சு, கழுத்துல இருக்குற மணி என்னவோ கறுப்புத்தான்! ஆனாக் கால்ல இருக்குறது வாகான பழைய செருப்பு!!

அதுக்கு மேலயும் கோயிந்தன் பேசுவான்னு நீங்க நினைக்குறீங்க?! இழுத்துச் சாத்திட்டு வந்தவன், சின்ன நெகமத்துலயே மொதல் ஆளா இறங்கி கண்ணு மூடி முழிக்கிறதுக்குள்ள மாயமாப் போயிட்டான்! இந்த மாதர நெறைய பழமைக; சொன்னாச் சொல்லிட்டே இருக்கலாம். வாங்க, இப்ப நாம நம்ம பதிவருகளைப் பத்திச் சித்த பேசுலாம்!

ஆமாங்க, நம்ம திலுப்பூருல இருந்து எழுதுற அண்ணந்தான் இவங்க, நிகழ்காலத்தில்... (அறிவே தெய்வம்) நாலுங்கலந்து நெம்பக் கெட்டியா எழுதுறவரு இவரு.

கோயமுத்தூர் அக்காவிங்க, பொன்னாத்தா [எ] சண்டைக்கோழி நம்மூர் நடையில வெச்சு வெளுத்து வாங்கறவிங்க இவங்க. நிலா எழுதும் கடுதாசிங்ற வலைப்பூவுலயும் எழுதுறவங்க இவங்க!

அடுத்து பாத்தீங்கன்னா, நான் பித்தனா சித்தனான்னு கேள்வி கேட்டுட்டே எழுத வந்திருக்குறவருதாங்க, சிவலோகத்துல இருக்குற வீடே உலகம்ங்ற இடத்துல எழுதுற கிறுக்கன். முதல் முத்தத்தை நெம்பவும் சிலாகிக்கறாரு இவரு.


"அழுதிட்டு இருந்தாலும் உழுதிட்டு இரு!"

அடச்சீ... சும்மா இரு; மாத்திச் சொல்லாத! அதை இப்படிச் சொல்லோணும், "அழுதிட்டு இருந்தாலும் எழுதிட்டு இரு!
"

பணிவுடன்,
பழமைபேசி.

13 comments:

  1. அழுதிட்டு இருந்தாலும் உழுதிட்டு இரு!!!!எழுதிட்டு இரு ...........ரசித்தேனுங்கோவ்.....................

    ReplyDelete
  2. நீங்க எழுதீட்டு இருக்கதை படிச்சிப்போட்டு நெம்பப் பேர் அழுதிட்டு இருக்கோமுங்க......(ஆனந்தக் கண்ணிருங்க!!!!) இஃகி!! இஃகி!!

    ReplyDelete
  3. பொன்னாத்தாக்கா கதை படிச்சேன். நல்லா மாட்டிட்டு முழிச்சிருக்காங்க.

    ReplyDelete
  4. //"அழுதிட்டு இருந்தாலும் எழுதிட்டு இரு! " //

    மூன்றாம் நாள் வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  5. வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  6. அசத்துங்க. வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. நல்லா இருக்குதுங்க. :)
    --வித்யா

    ReplyDelete
  8. ஊர்ப்பழமையே நல்லா இருக்கே

    ம்ம்ம்ம் - புதுசெல்லாம் பாத்துட்டு வாரேன்

    ReplyDelete
  9. //தேவன் மாயம் said...
    நீங்க எழுதீட்டு இருக்கதை படிச்சிப்போட்டு நெம்பப் பேர் அழுதிட்டு இருக்கோமுங்க......(ஆனந்தக் கண்ணிருங்க!!!!) இஃகி!! இஃகி!!
    //

    நன்றிங்க மருத்துவர் ஐயா!

    //சின்ன அம்மிணி said...
    பொன்னாத்தாக்கா கதை படிச்சேன். நல்லா மாட்டிட்டு முழிச்சிருக்காங்க.
    //

    ஆமாங்க... பாவம்!

    //ஆ.ஞானசேகரன் said...
    //"அழுதிட்டு இருந்தாலும் எழுதிட்டு இரு! " //

    மூன்றாம் நாள் வாழ்த்துகள் நண்பா
    //

    நன்றிங்க ஞானியார்!

    //திகழ்மிளிர் said...
    வாழ்த்துகள் நண்பரே
    //

    நன்றிங்க நண்பா!

    //வானம்பாடிகள் said...
    அசத்துங்க. வாழ்த்துகள்.
    //

    இஃகிஃகி, பேரு மாத்தியாச்சாக்கூ?

    // Vidhoosh said...
    நல்லா இருக்குதுங்க. :)
    --வித்யா
    //

    நனிநன்றிங்க...

    //cheena (சீனா) said...
    ஊர்ப்பழமையே நல்லா இருக்கே
    //

    வணக்கமுங்க ஐயா!

    ReplyDelete
  10. திருப்பூர் சிவா - அறிவே தெய்வம் - நிகழ்காலம்

    கோவை பொன்னாத்தா -

    ரெண்டும் பாத்துட்டேன் - நல்ல அறிமுகம்

    ReplyDelete
  11. அண்ணா இன்னும் நீங்க பாவனாவைப்பத்தி சொல்லாமலேயே
    3 நாள் ஓட்டிட்டீங்க

    இஃகிஃகிஃகி

    ReplyDelete
  12. //எம்.எம்.அப்துல்லா said...
    அண்ணா இன்னும் நீங்க பாவனாவைப்பத்தி சொல்லாமலேயே
    3 நாள் ஓட்டிட்டீங்க

    இஃகிஃகிஃகி
    //

    அண்ணே, ரெண்டாவது நாளே அதுக்கு விளக்கம் கொடுத்தாச்சுங்க அண்ணே... சிக்காத சிந்தனைதான் அதனோட பொருள்...

    ReplyDelete
  13. \\ஆமாங்க, நம்ம திலுப்பூருல இருந்து எழுதுற அண்ணந்தான் இவங்க, நிகழ்காலத்தில்... (அறிவே தெய்வம்) நாலுங்கலந்து நெம்பக் கெட்டியா எழுதுறவரு இவரு.\\


    அக்ஆங் (ஆமாம்), பொறுப்பை ஒணத்திப் போட்டீங்க,

    என்னதான் இருந்தாலும் நமம ஊர்காரங்க வாயால பேரு வாங்கினா உள்ளுக்குள்ல ஒரு சந்தோசத்தானுங்..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது