07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 16, 2009

அருமை நண்பர் ஸ்ரீக்கு நன்றியும் - புதிய ஆசிரியர் லோகுவிற்கு வரவேற்பும்

அன்பின் பதிவர்களே

கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் ஸ்ரீ நான்கு இடுகைகள் இட்டு பல பதிவர்களை அறிமுகப்படுத்தி ஏறத்தாழ அறுபது மறுமொழிகள் பெற்று - ஏற்ற பணியினை குறைவின்றி மன நிறைவுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

அவருக்கு வலைச்சரம் குழுவினரின் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

17 ஆக்ஸ்டுத் திங்கள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் லோகு ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் வயதினில் மிகவும் இளையவர். திருப்பூரில் வசிக்கிறார். மூன்று வலைப்பூக்கள் வைத்திருக்கிறார். இவர் வெள்ளைச்சோறு, புள்ளைப்பூச்சி, அப்பாவி, நல்ல பையன் என ஊரிலே நல்ல பெயர் எடுத்திருந்தாலும் இவர் மிகக் கெட்டவராம். சொல்கிறார்.

பதிவுகளின் முகப்புகள் அலங்காரமாக அமைத்திருக்கிறார். பிடித்த வண்ணங்கள் இரத்தச் சிகப்பும் குளிர்ச்சியான நீலமும். காதல் கவிதைகள் எழுதுவதில் சமர்த்தர்.

அச்சம் தவிர் என்ற பெயரினில் தன்னம்பிக்கையுடன் பதிவு வைத்திருக்கிறார். காதல் மழை என்றொரு பதிவினிலும் கவிதைகளாகக் கலக்குகிறார்.

நண்பர் லோகுவினை வருக வருக - நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்துக - என நல்வாழ்த்துகள் கூறி வரவேறபதில் பெருமை அடைகிறேன்.7 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. நண்பர் ஸ்ரீ தன் கடமையை திறம்பட செய்தமைக்கு நன்றி!!!

  பாசமிகு தம்பி லொகு விற்கு வாழ்த்துக்கள். ஆசிரியர் பொறுப்பிற்கு தகுதியானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  இருவருமே நான் அறிந்தவர்கள், என்னை அறிந்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.

  நன்றி.

  ReplyDelete
 3. ஸ்ரீ அவர்களுக்கு நன்றி.

  லோகுவிற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வாய்ப்பிற்கும் வரவேற்கும் நன்றி அய்யா..

  நன்றி பீர் அண்ணா..

  நன்றி ஜமால் அண்ணா.


  நன்றி நையாண்டி நண்பா..

  ReplyDelete
 5. லோகுவிற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 6. நன்றி கார்த்திக் அண்ணா..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது