07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 27, 2009

வலைச்சரத்தில் நான்காம் நாள்

சிறுவனாக இருக்கிற போதே அரசியலை பற்றி மற்றவர்கள் பேசும் போது சொல்லும் ஒரு வார்த்தை அரசியல் ஒரு சாக்கடை . அரசியலுக்குள் சென்றாள் எந்த மனிதனாக இருந்தாலும் சாக்கடையில் கிடக்கும் புழுக்களை போல் மாறி விட வேண்டும் இல்லையென்றால் அங்கெ அதிக நாட்கள் வாழ முடியாது என்பார்கள் . ஆனால் எனக்கு சிறு வயது முதலே அரசியலில் மிகுந்த ஆர்வம் . ஆனால் இன்றைய சூழ்நிலைகள் நினைக்கும் அரசியலை விட சாக்கடைகளே மேல் என இருக்கிறது .

பதவி மோகம் மனிதனை எப்படி மாற்றும் மனிதன் தன் தனி தன்மையை எப்படியெல்லாம் இழக்கிறான் என்ற செய்திகளை ஒவ்வெரு நாளும் வருகின்ற அரசியல் செய்திகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம் . அரசியலில் சில நேரம் பதிவுலகமும் ரண களமாகும் . இத்தனை முரண்பாடுகளுக்கு மத்தியில் ஒரு ஆரோக்கியமான நட்புலகம் இந்த பதிவுலகில் இருக்கிறது என்பதை நாம் மறந்து விட முடியாது .

பதிவுலகம் வந்த போது நமக்கும் பின்னூட்டம் வந்தால் நன்றாக இருக்குமே என நினைத்த நேரம் பின்னூட்டமிட்டு ஊக்கபடுத்திய பல நண்பர்கள் இன்றும் என்னை ஊக்கப்படுத்தி வருகிறார்கள் அவர்களில் ஒருவர் தான் நண்பர் ஞான சேகரன் . இவரை தெரியாத பதிவர்கள் சிலராக தான் இருக்க முடியும் என்னை இந்த வலைச்சரத்திலே முதலில் அறிமுக படுத்தியவர் அவராக தான் இருக்க முடியும் . அவருக்கு என அறிமுகம் தேவையில்லைஎன்றாலும் அவரை அறிமுக படுத்தாமல் இருக்க முடியாது . அவரின் பதிவுகள் பொதுவாகவே சமுதாயத்தைச் செம்மை படுத்துவதாகவே இருக்கும் எளிய நடையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதாக இருக்கும் . அம்மா அப்பா என்ற தளத்தில் எழுதி வருகிறார் . இவருடைய பதிவுகள் அனைத்துமே எனக்கு பிடிக்கும் அதில் சில இயற்கை இயற்கையாக
நீரும் நிலமும் மனிதன் வாழ்வில் பகுதி 1 பகுதி ஓன்று முதல் ஐந்து வரை இருக்கிறது நல்ல விழிப்புணர்வு இடுகை படித்தவர்கள் பொறுத்து கொள்ளுங்கள் இல்லாதவர்கள் படியுங்கள் .

கவிதைகள் எழுதி பதிவுலகத்தை கலக்கி வரும் தோழி சக்தி நம்மை ஊககபடுத்துவதில் குறைபாடு வைக்க மாட்டார் நம் பதிவுகள் எப்படியிருந்தாலும் நம்மை ஊக்கபடுத்துவார் . இவர் வீட்டு புறா என்ற தளத்திலும் சக்தியின் உணர்வுகள் என்ற தளத்திலும் எழுதி வருகிறார் . இவருடைய கவிதைகளில் நான் பரிந்துரைக்கும் கவிதைகள் சில
குவார்ட்டரும் கோழி பிரியாணியும்
இதயம் ரணமானது
கல்வி கட்டணங்கலிருந்து எங்களை காப்பாற்ற போவது யார்

வாரத்திற்கு ஒரு பதிவு போட்டாலும் கலக்கலாக போடுவார் அவர் தான் கலையரசன் துபாயில் பணியாற்றி வருகிறார் அனைவரிடமும் நன்றாக பழகுவார் ஒரு வார இடைவெளியில் அனைவருக்கும் பின்னூட்டமிடுவார் . இவர் வடலூரான் என்ற தளத்தில் எழுதி வருகிறார் கலைநயத்தோடு எழுதும் கலையரசன் படைப்புகளில் சில
தமிழ் படிக்க தெரியுமா இத படியுங்க பாப்போம்
இத படிச்சிட்டு ஆண்கள் முறைப்பாங்க பெண்கள் சிரிப்பாங்க
கருப்பு வர்ணம்! (நல்லதா? கெட்டதா?)

நண்பர் நவாஸ் தீன் அவர்கள் இவர்களும் நல்ல ஒரு ஊக்கப்படுத்தும் நண்பர் பதிவுகள் குறைவாக போட்டாலும் நல்ல்ல கவிதைகளாக பதிவு செய்வார் . இவர் மன விலாசம் என்ற தளத்தில் எழுதி வருகிறார் .
என்று நிற்கும் இந்த இன ஒழிப்பு
விடை தெரியாத புதிராய்

நான் இன்று அறிமுக படுத்தியவர்கள் அனைவருமே உங்களுக்கு தெரிந்த முகங்களாக இருக்கலாம் . ஆனால் இவர்கள் அறிமுக படுத்த பட வேண்டியவர்கள் தெரியாத ஒரு சிலராவது இருந்தால் தெரிந்து கொள்ளட்டுமே என தான் அறிமுக படுத்துகிறேன் . தெரிந்தவர்கள் மன்னித்து விடுங்கள் நன்றி இன்றைய பொழுது இனிதாய் முடிந்தது நாளை மீண்டும் சந்திப்போம் .............


16 comments:

 1. நான் ஏற்கனவே படித்த பதிவர்கள் தான் . நல்ல பதிவர்கள் வாழ்த்துக்கள் .//////////////////////

  ReplyDelete
 2. நான்காம் நாள் வாழ்த்துக்கள் சுரேஷ் நானும் பிளாக் துவங்கலாம் என நினைக்கிறேன்

  ReplyDelete
 3. நல்லா இருக்கு அறிமுகங்கள்

  ReplyDelete
 4. நான்காம் நாள் வாழ்த்துக்கள் சுரேஷ்

  ReplyDelete
 5. இவரை தெரியாத பதிவர்கள் சிலராக தான் இருக்க முடியும் என்னை இந்த வலைச்சரத்திலே முதலில் அறிமுக படுத்தியவர் அவராக தான் இருக்க முடியும்

  ஆம் சுரேஷ் அவர் மூலம் தான் உங்கள் தளம் பிந்தொடர்ந்தோம்

  ReplyDelete
 6. வடலூரான்

  மனவிலாசம்

  அம்மா அப்பா

  அனைவரும் நண்பர்களே

  அறிமுகத்திற்கு நன்றி

  ReplyDelete
 7. நண்பா, வேலை மிகுதியால் இந்தப்பக்கம் வராமலே இருந்துவிட்டேன்.. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிபா,... வலைச்சரம் பணி அழகாக இருக்கு என்று நினைக்கின்றேன்... பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  ReplyDelete
 8. சக்தி,வடலூரான் ,மனவிலாசம்
  அனைவ‌ரின் ப‌க்க‌ங்க‌ள் நான் செல்வ‌துண்டு ந‌ல்ல‌ அறிமுக‌ம் பாராட்டுக‌ள் ந‌ண்பா

  ReplyDelete
 9. நான்காம் நாள் அறிமுகங்கள் மிகவும் நன்றாக உள்ளது.
  வாழ்த்துக்கள்.................

  ReplyDelete
 10. அறிமுகங்கள் அனைவரும் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  நான்காம் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வின்னர் said...

  நான்காம் நாள் வாழ்த்துக்கள் சுரேஷ் நானும் பிளாக் துவங்கலாம் என நினைக்கிறேன்///////////

  நன்றி வின்னர் . நல்ல விஷயம் நீங்களும் துவங்குங்க

  ReplyDelete
 12. ஆதவன் said...

  நல்லா இருக்கு அறிமுகங்கள்//////////////

  நன்றி ஆதவன்

  ReplyDelete
 13. sakthi said...

  நான்காம் நாள் வாழ்த்துக்கள் சுரேஷ்//////////////

  நன்றி சக்தி

  ReplyDelete
 14. ஆ.ஞானசேகரன் said...

  நண்பா, வேலை மிகுதியால் இந்தப்பக்கம் வராமலே இருந்துவிட்டேன்.. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிபா,... வலைச்சரம் பணி அழகாக இருக்கு என்று நினைக்கின்றேன்... பாராட்டுகளும் வாழ்த்துகளும்///////////////////////

  நன்றி நண்பா

  ReplyDelete
 15. jerin said...

  நான்காம் நாள் அறிமுகங்கள் மிகவும் நன்றாக உள்ளது.
  வாழ்த்துக்கள்................/////////////////////

  நன்றி ஜெரின்

  ReplyDelete
 16. பிரியமுடன்...வசந்த் said...

  அறிமுகங்கள் அனைவரும் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  நான்காம் நாள் வாழ்த்துக்கள்/////////////////

  நன்றி வசந்த்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது