07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 20, 2009

பாடம் சொல்லும் பதிவுகள்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின்
ஊற்றாந் துணை.

- திருவள்ளுவர்
(நூல்களை கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டு தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலை போலத் துணையாக அமையும்)


*********

கணினி கல்வி என்பது பெருங்கடல், அதை முழுமையாக படித்து முடித்தவர் எவரும் இல்லை. கணிப்பொறி யை பொறுத்த வரையில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. தினம் ஒரு பாடம் படித்தாலும், வாழ்நாள் முழுவதும் படித்து கொண்டு இருக்கலாம்.

தம்மிடம் உள்ளவற்றை பிறருக்கு கொடுக்க யாருக்கும் மனசு வராது. அதற்கு மாறாக தமக்கு தெரிந்த தொழில்நுட்ப விடயங்களை பிறருக்கு கற்று கொடுக்கும் சிலரும் உள்ளனர். அப்படி பதிவுலகில் கணிப்பொறி தொழில் நுட்ப பாடம் நடத்தும் சில பதிவுகளை பற்றி இந்த இடுகையில் காண்போம்.

வேலன் :

150 இடுகைகளை இன்றைய தேதி வரையில் கொண்ட பதிவு. அனைத்தும் பாடங்கள், கணினி சம்பந்தமாக பல குறிப்புகள்.. போட்டோஷாப் போன்ற மென்பொருள்களில் எப்படி இயங்குவது குறித்து படங்களுடன், மிக விளக்கமாக, எவருக்கும் புரியும் வகையில் சொல்லி இருக்கிறார்.

கணினி நுட்பங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, வரப்பிரசாதம் இந்த தளம்.

இலவச மென்பொருள்கள், கீ போர்ட் கீக்கள் பற்றிய பாடம், போட்டோ ஷாப்பாடங்கள் , டெலிட் செய்த பைலை ரீ ஸ்டோர் செய்வது பற்றிய பாடம் என அனைவருக்கும் பயன்படும் தொழில் நுட்ப கட்டுரைகள் அடங்கியுள்ளது.


தமிழ் 2000 :

கிட்டத்தட்ட 600 இடுகைகளை கொண்ட தளத்திற்கு அறிமுகம் தேவையா. அனைத்துமே கணினி சம்பந்தமான கட்டுரைகள். மென்பொருள்களை எப்படி பயன்படுத்துவது குறித்த கட்டுரைகள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மென்பொருள்களை குறித்த செய்திகள். கணினி நிறுவனங்களை குறித்த தகவல்கள் என கணினி களஞ்சியமாக விளங்குகிறது இந்த தளம்.


தளத்தின் சுவையான இடுகைகளில் சில :

ஆன்லைனில் காப்பி- பேஸ்ட் செய்ய
விண்டோசின் வேகத்தை அதிகரிக்க
தமிழில் தட்டச்சு பழகுவதற்கு
குழந்தைகளுக்கான இணைய உலவி

என இன்னும் பல ஆச்சர்யங்கள் இந்த தளத்தில் உள்ளன. கண்டு மகிழுங்கள்.


கணினி மென்பொருட்களின் கூடம் :

நீங்கள் உங்கள் மவுசை எத்தனை தூரம் இழுத்திருக்கிறீர்கள் என்பதை அல்லது உங்கள் கீ போர்டில் குறிப்பிட்ட பட்டனை எத்தனை முறை அழுத்தியிருப்பீர்கள் என்று கணக்கிட முடியுமா?? முடியும் என்கிறது இந்த தளம் அதற்கான மென்பொருள் இந்த இடுகையில் உள்ளது. இதேபோல் கீறல் விழுந்த குறுந்தகடுகளை மீட்டெடுக்க உதவும் மென்பொருள் குறித்த இடுகை. இலவசமாக கிடைக்கும் அனிமேசன் மென்பொருள் என பல மென்பொருள்கள் குறித்தும், அவற்றை எங்கு தரவிறக்கம் செய்யலாம் என்பது குறித்தும் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளது.

சுவையாகவும், பயனுள்ளதாகும் பல இலவச மென்பொருள்கள் குறித்து இந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயனுள்ள தளம்.

********

இன்றைய தொகுப்பு குறித்த கருத்துக்களை சொல்லுங்கள். அடுத்த இடுகையில் இன்னும் சில பயனுள்ள பதிவுகளோடு சந்திக்கலாம்..


நன்றி..

10 comments:

 1. நல்ல பாடங்கள்.

  நல்ல சுட்டிகள்.

  ReplyDelete
 2. நல்ல ஒரு அறிமுகம்.....

  அத்தனைக்கும் இப்போதே விஜயம்....

  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 3. நிறைய உழைத்து இருக்கிறீர்கள் லோகு.. பல புதிய பதிவுகளை அறிமுகம் செய்து வருகிறீர்கள்.. வாழ்த்துகள்..

  ReplyDelete
 4. நன்றி நண்பரே உங்கள் ஊக்கம் எங்களை இன்னும் உற்சாகப்படுத்தும் நன்றி கோடிகள்

  ReplyDelete
 5. அன்பின் லோகு

  அருமை அருமை - பல பயனுள்ள தகவல்கள் - சுட்டிகள் - இடுகைகள்

  நல்வாழ்த்துகள் லோகு

  ReplyDelete
 6. நல்ல தகவல்கள் நல்ல சுட்டிகள் வாழ்த்துக்கள் லோகு காலம் கடந்து வாழ்த்து சொல்வதற்காக வருத்த படுகிறேன்

  ReplyDelete
 7. நன்றி ஜமால் அண்ணா..

  நன்றி சப்ராஸ் அபூ பக்கர் அவர்களே..

  நன்றி கார்த்திக் அண்ணா..

  நன்றி ராஜூ..

  நன்றி வடிவேலன் அவர்களே.. என்னை போல் பலரை உங்கள் தளம் கவர்ந்து இருக்கும். தொடரட்டும் உங்கள் சேவை..

  நன்றி சீனா அய்யா..

  நன்றி சுரேஷ் அண்ணா..

  ReplyDelete
 8. 'பாடம் சொல்லும் பதிவுகள்'.

  அருமையான பகிர்வு லோகு.

  ReplyDelete
 9. நன்றி ராஜா அண்ணா..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது