07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 8, 2009

சாமான்யனின் பாவனாதீதம் - 6

வணக்கம் மக்களே! கடந்த 2004 - 2005ம் ஆண்டுகள்ல இசுரேல் நாட்டைச் சார்ந்த நிறுவனமான Amdocsங்ற நிறுவனத்துல நாம வேலை செய்துட்டு இருந்தோம். அந்த சூழ்நிலையில இசுரேல் மற்றும் சைப்ரசு நாடுகள்ல ஒரு ரெண்டு மாசம் பொட்டி தட்டப் போயிருந்தேன்.

ஒரு நல்ல நாள் அதுவுமா புராதன தொல்பொருள் ஆராய்ச்சி வளாகங்களைச் (archaeological sites) சுத்தி பார்க்கப் போயிருந்தோம். நிறைய இடங்கள் பார்த்தோம். அதுல ஒரு ஓவியம் என்னை மிகவும் பாதிச்சது.

ஆமாங்க, மொழியியல் அறிஞர்கள் எல்லாரும் உட்கார்ந்து பேசிட்டு இருக்குற மாதிரியான வண்ண ஓவியம் அந்த அரண்மனைக் கூடத்தோட மையப் பகுதியில இருந்தது. கரிய நிறத்துல ஒருத்தர் முழுக்கை சட்டையோட. கூட வந்த வழிகாட்டி தெளிவா சொன்னாரு, ‘He is a representative of Thamizh!.

உடனே எனக்கு, உலகின் ஆதி மொழிகள் சீனம், இலத்தீனம், கிரேக்கம், இப்ரூ, தமிழ், சமசுகிருதம் ஆகியவைன்னு எங்கோ படிச்சதை உறுதிப்படுத்திக்க முடிஞ்சது. இப்ப அதுக்கு என்ன வந்ததுன்னு நீங்க கேட்கலாம். அதுல ஒரு நியமக்கூறு இருக்குது இராசா, இருக்குது!

நேற்றைய இடுகையில உண்மைக்கு எதிர்ப்பதம் இன்மைன்னு சொல்லவே, நண்பர்கள் ஒன்னு ரெண்டு பேர் அதை ஏத்துக்க மூளை ஒத்துழைக்க மாட்டேங்குதுன்னு குறிப்பிட்டு இருந்தாங்க.

நான் என்னோட முந்தைய இடுகைகள்ல சொன்னதுதான், ஆதி மொழிகளில் ஒன்னான தமிழ்ல எந்த உணர்வு, செய்கை மற்றும் பொருளையும் தனித்துக் குறிப்பிடும்படியான சொற்கள் கிட்டத்தட்ட கி.பி 1900ம் ஆண்டு வரையிலும் இருந்தது. அதற்குப் பின்னாடி, தமிழ் மொழிய விஞ்ஞானம் மற்றும் இதர துறைகளின் வளர்ச்சிக்கு இணையாக் கொண்டு போகாம விட்டுட்டாங்க.

அது மட்டுமா? இருந்த மொழியின் பயன்பாடும் குறைஞ்சு போச்சு, அதனோட விளைவுதான் இன்றைக்கு இன்மைங்ற சொல்லை, உண்மைக்கு எதிர்ப்பதமா ஏற்றுக் கொள்ள முடியலை! அந்த பின்னணியில விபரத்தைப் பாக்கலாம் வாங்க!

இன்மை, இல்லை, இன்றி, இல்லாதது இதெல்லாம் non existanceஐ குறிக்கிறது. உண்மை, உள்ளது, உள, உளல் இதெல்லாம் existanceஐ குறிக்கிற சொல். ஆக, உண்மைக்கு எதிர்ப்பதம் இன்மைதான்!

உண்மை: இருப்பதை இருப்பதாகக் குறிப்பிடல்
இன்மை: இல்லாததை இல்லாததாகக் குறிப்பிடல்
பொய்: இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் குறிப்பிடல்

மெய்: இருப்பதை இருப்பதாகவும், இல்லாததை இல்லாததாகவும் குறிப்பிடல்

ஆக, உண்மை X இன்மை, பொய் X மெய் என்பதே பொருத்தமாக இருக்கும். ஆனா, நடைமுறையில இதெல்லாம் சாத்தியமா? ஆனா இதாங்க சரியானது. மெய்யுரை, பொய்யுரை கேள்விப்பட்டு இருப்பீங்க. உண்மையுரை கிடையாது. உண்மை(யை) உரைன்னு வேணுமானா சொல்லலாம்.


சரி, சரி, வாங்க இன்னும் சில பதிவர்களை அறிமுகப்படுத்தலாம்.

என்றென்றும் அன்புடன்ன்னு சொல்லிட்டு, ஆவலோட பதிவுலகத்துக்கு வந்திருக்கிறார் அன்பர் ஆரூரன் விசுவநாதன்.
எத்தனை பெரியார் வந்தாலும் இவனுங்களைத் திருத்த முடியாது! இது இவரோட சமீபத்திய இடுகை, நல்லா எழுதியிருக்கார். இன்னும் நிறைய இடுகைகள் இட வாழ்த்துகள்!

தஞ்சையி்ல் பிறந்து, குடந்தையில் வளர்ந்து, (சென்னை) தாம்பரத்தில் வாழ்ந்து வருபவன்னு சொல்லிட்டு பதிவுலகத்துக்கு வந்து, இரு வேறு பதிவுகளை வெச்சி நடத்திட்டு வர்றாரு அன்புத் தம்பி அன்பு மணி. அவரோட நிறைய கவிதைகள் இரசிக்கும்படியா இருக்கு. சமீபத்துல வெகுசன மக்கள் இதழில்கூட இடம் பிடிச்சிருக்காரு அன்பு மணி!

தீப்பெட்டி, முனியப்பன் பக்கங்கள், சூரியன் இவங்கெல்லாம் எழுத வந்திருக்காங்க, ஆனாலும் தொடர்ந்து எழுதுறதுக்கு கால அவகாசம் கிடைக்கிறதில்லை போலிருக்கு. இருந்தாலும், அவகாசம் வாய்க்கும் போது தொடர்ந்து எழுத அவங்களை வாழ்த்தலாமுங்க!


பணிவுடன்,
பழமைபேசி.


பல் போனா சொல் போச்சு!
சொல் போனா மொழி போச்சு!!
மொழி போனா இனமே போச்சு!!!

6 comments:

 1. கோசல நாட்டு வளமான வாழ்வை வருணிக்கும் இடத்தில்,
  கம்பர் ஒப்பற்ற கற்பனையில் ஈடுபடுகிறார்.

  வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
  திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்
  உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
  ஒண்மை இல்லை பல் கேள்வி ஓங்கலால்.

  தம்பி
  கம்பர் கூறுவதுவதைப் படித்தால் உண்மைக்கு எதிர்பதம் பொய் போல தெரிகிறது. தயவுக்கூர்ந்து விளக்கம் தரவும்.
  உங்கள் தமிழ்ச் சேவை வளர வாழ்த்துக்கள்
  அன்பு அண்ணன்
  நாஞ்சில் பீற்றர்

  ReplyDelete
 2. @@naanjil

  வாங்க அண்ணே, வணக்கம்! ஆசான் அவர்களுக்கு இந்த கடைநிலை மாணாக்கன் விளக்கம் அளிப்பதா....

  அண்ணே, நான் ஒரு எளியவன்.... தவறுதலா எதனா இருந்தா பொழச்சிப் போறேன் விட்டுடுங்க....

  ஆனாலும் கம்பர் சரியாகவே சொல்லி இருக்கிறார்.... அவரது வர்ணனை எதிர்ப்பதங்களை வைத்து வடிக்கப்பட்டது அல்ல... தாழ்வான ஒன்று இல்லாததால், உயர்வான ஒன்றுக்கு அங்கே இடமில்லை என்கிறார்....

  அதாவது வறுமை இல்லாத இடத்தில் கொடையும், போர் இல்லாததால் வீரத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பும் இல்லை;

  இருப்பதை இல்லாமலும், இல்லாததை இருப்பதுமாக மொழியும் பொய்யானது இல்லாமையால், இருப்பதை இருப்பதாகக் கூறலுக்கு இடமில்லை என்கிறார். எனவே அது முரணாகாது.  ஆக பொய் என்ற தாழ்வில்லை ஆதலால், உண்மை என்கிற உய்ர்வானதுக்கும் இடமில்லை என்றே பார்க்க வேண்டும். மற்ற மூன்று ஒப்பீடும் அவ்விதமே உள்ளதையும் தாங்கள் கருத்தில் கொள்க!

  ReplyDelete
 3. வாழ்த்துகள் நண்பரே

  ReplyDelete
 4. /இன்மை, இல்லை, இன்றி, இல்லாதது இதெல்லாம் non existanceஐ குறிக்கிறது. உண்மை, உள்ளது, உள, உளல் இதெல்லாம் existanceஐ குறிக்கிற சொல். ஆக, உண்மைக்கு எதிர்ப்பதம் இன்மைதான்!

  உண்மை: இருப்பதை இருப்பதாகக் குறிப்பிடல்
  இன்மை: இல்லாததை இல்லாததாகக் குறிப்பிடல்
  பொய்: இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் குறிப்பிடல்
  மெய்: இருப்பதை இருப்பதாகவும், இல்லாததை இல்லாததாகவும் குறிப்பிடல்

  ஆக, உண்மை X இன்மை, பொய் X மெய் என்பதே பொருத்தமாக இருக்கும். ஆனா, நடைமுறையில இதெல்லாம் சாத்தியமா? ஆனா இதாங்க சரியானது. மெய்யுரை, பொய்யுரை கேள்விப்பட்டு இருப்பீங்க. உண்மையுரை கிடையாது. உண்மை(யை) உரைன்னு வேணுமானா சொல்லலாம். /

  அற்புதமான விளக்கம்

  ReplyDelete
 5. ஆரோக்கியமான விவாதங்களும்,அதற்கு தங்களுடைய விளக்கங்களும் அருமை தோழரே...

  என்னையும் அறிமுகம் செய்த தங்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 6. @@naanjil
  @@திகழ்மிளிர்
  @@குடந்தை அன்புமணி

  மிக்க நன்றிங்க மக்களே!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது