07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 14, 2009

கதைசொல்லிகள்

சிறுகதை எழுதுவதென்பது சற்றே சவாலான விஷயம்.வர்ணனை வரலாம் -வரக்கூடாது ,உரையாடலிலேயே கதையைச் சொல்ல வேண்டும்,ஆரம்பம்தான் முக்கியம்-இல்லையில்லை எப்படி முடிக்கிறோம் என்பதே சுவாரஸ்யம், என்று பல கருத்துக்கள்.வலையுலகத்திலும் உலா வருகின்றன சிறுகதைகள்.பெரும்பாலான சிறுகதைகளில் ஏதாவது ஒரு எழுத்தாளரின் சாயல் வந்து விடும்.அது இல்லாமல் கவனமாக எழுதினோம் என்றால், சமயத்தில் அது காமெடியாகி விடுவதுண்டு.இரண்டுக்கும் உதாரணம் என்னுடய சிறுகதைகள் (நான் மட்டும்தான் அப்படி சொல்லிக் கொள்கிறேன் , துணைக்கு ஆளில்லை).
இதில் முதலில் எழுதிய 'கலை உலக சேவைக்காக ' என்கிற கதை தெரிந்தே தேவனின் சாயலில் எழுதப்பட்டது, 'நான் நான் அவள்' எழுதி முடித்ததும் படித்துப் பார்த்தால் சுஜாதாவின் சாயல் இருப்பது புரிந்தது, மூன்றாவது கதையில் யார் சாயலும் வந்து விடக் கூடாது என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு பார்த்து பார்த்து எழுதினால் சீரியசான கதை காமெடி பீசாகி விட்டது .
பின்னூட்டங்களைப் பார்த்தால் புரியும். சரி இதெல்லாம் வேண்டாம் கட்டுரை எழுதலாம் என்று இந்தக் கட்டுரையை எழுதினால் எஸ் .ரா மாதிரி இருக்கு என்றார்கள். கதையோ கட்டுரையோ ,எதைச் சொல்ல வேண்டும் ,எப்படிச் சொல்ல வேண்டும் என்பதில்தான் சுவாரஸ்யம் இருக்கிறது இல்லையா? இவற்றுக்கெல்லாம் தனியான அளவுகோல் எதுவும் கிடையாது என்பதுதான் சிக்கல்.சரியான பாட்டையைப் பிடித்து விட்டோம் என்றால் அப்புறம் சுலபம் (என்கிறார்கள்).
சைக்கிள் ஓட்டுவது போலத்தான் ,பழகி விட்டால் கையை விட்டு விட்டுக் கூட ஓட்டலாம்.சிறுகதை மற்றும் கட்டுரைகள் எழுதும் என் விருப்பமான வலைப் பக்கங்கள் சில இங்கே ....

  1. அப்பாவி
  2. வால்பையன்
  3. பழமை பேசி
  4. தண்டோரா
  5. செல்வேந்திரன்
  6. தேவன் மாயம்
  7. நையாண்டி நைனா
  8. பொன்னியின் செல்வன்
  9. டக்லஸ் () ராஜு
  10. ஜெய்ஹிந்துபுரம்
  11. கதிர்
  12. ராகவன் நைஜீரியா
  13. அன்பு
  14. தேனி சுந்தர்
  15. தருமி
  16. வண்ணத்துப்பூச்சியார்
  17. சோலை அழகுபுரம்
  18. சொல்லரசன்

தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடுகையைச் சுட்ட நான் விரும்பவில்லை.சீரியசான பதிவுகளோ அல்லது மொக்கைப் பதிவுகளோ எல்லா எழுத்துக்களுக்கும் உழைப்பு ஒன்றுதான். இவர்களை தொடர்ந்து படியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.


14 comments:

  1. அட நாந்தான் பர்ஸ்டா!

    இதுக்கே ட்ரீட் கேக்கனுமே!

    ReplyDelete
  2. நன்றி அண்ணா என் பெயரையும் சுட்டிக்காட்டியமைக்கு..

    ReplyDelete
  3. நன்றி ஸ்ரீ...

    இதுல என் பெயரை பார்த்ததும் எனக்கே அழுக வந்திடுச்சு...

    ஆடிக்கு ஒரு நாள் அம்மாவசைக்கு ஒரு நாள் எழுதுற என்னைப் போய் ரொம்ப நல்லா எழுதற அப்படின்னு சொல்லீட்டீங்களே..

    ReplyDelete
  4. நன்றிங்க நண்பா... வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சொல்லவே இல்லை நீ ஆசிரியர் என்று...

    வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  6. தோழா...

    என்னை அடையாளப் படுத்தியமைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

    சுதந்திர தின வாழ்த்துகள்

    ReplyDelete
  7. அறிமுகங்களுக்கு நன்றி சிலர் புதியோர் எனக்கு
    :)

    ReplyDelete
  8. கண்கள் பனித்தது, இதயம் இனித்தது.

    Nandri Anbare.

    ReplyDelete
  9. இதில் இவ்வளவு சட்ட சிக்கல் இருப்பதால்தான் நான் கதை கட்டுரை எழுதுவதில்லை... ;)

    நன்றி ஸ்ரீ,

    ReplyDelete
  10. ஸ்ரீ!!!
    மிக்க நன்றி!!

    ReplyDelete
  11. ”கொள்ளு ரசம்” வைப்பது எப்படி என்கிற ”தந்திரவாத யதார்த்தவாத” கதையை லின்க் கொடுத்திருக்கலாம்.
    நன்றி ஸ்ரீ...(மாணவனா... ...வாத்தியாரே)

    ReplyDelete
  12. ம்ம்ம்ம்ம்

    அன்பின் ஸ்ரீ

    பல பதிவர்கள் - அறிமுகம் சரி - நெம்பப்பேரு நம்பாளுங்களா இருக்காங்க - வெளியே மத்தவங்களப் படிக்கறது இல்லையா - ம்ம்ம்ம்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  13. அறிமுகம் செய்திருக்கலாம் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது