07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 26, 2009

வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

வலைச்சர ஆசிரிய பணியில் இன்று மூன்றாம் நாள் . காலையிலேயே பதிவு போட வேண்டும் என்று தான் நினைத்தேன் ஆனால் நேரமின்மையின் காரணமாக மாலை போட வேண்டியதாக ஆனது ( வேறு ஒன்றுமில்லை திருமண வீடு தான் ) .


காலையில் கொஞ்ச நேரம் வெயில் அடித்தால் போதும் தவறாது வருகிறது மழை கூடவே . மழை வந்தவுடனே மண்ணின் வாசனை நம் வாசலை தட்டுகிறது . மழை தவறுகிறதோ இல்லையோ மினாசரம் தவறாமல் தடை படுகிறது தினமும் . மடி கணினியோ ஒன்றரை மணி நேரத்தில் சக்தி குன்றிவிடுகிறது . இந்த நல்ல சூழ்நிலையில் கரண்ட் இல்லையென்றாலும் ஒரு அழகான காதல் கவிதையை பாப்போம் நீ எனது சொர்க்கத்தின் முகவரி இது இரண்டு லட்சத்திற்கும் மேல் ஹிட்ஸ் கொடுத்த கவிதை சாலை என்ற தளத்திலிருந்து படித்தது . மேலும் நான் பரிந்துரைக்கும் இடுகைகள் உன்பார்வை காதலின் கருவறை
மூளை இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்


இவர் குறைவான பதிவுகளே படைத்திருக்கிறார் . புது கவிதை என்ற தளத்தில் எழுதி வருகிறார் புதிய பதிவர் உற்சாகப்படுத்தி மேலும் நல்ல பல கவிதைகளை அவர் படைக்க நாம் வாழ்த்துவோம் . அவர் கவிதைகளில சில தமிழீழ வரலாறு
காத்திரு காலச்சுவடு மாறும் நிலை வரை

இவரும் ஒரு பதிய பதிவர் பா . இனியவன் அவருடைய பெயரிலேயே தளத்தின் பெயரும் இருக்கிறது . கடந்த மாதம் முதல் தான் பதிவுகள் எழுத துவங்கியிருக்கிறார் இவரையும் நாம் வாழ்த்தி மேலும் பல படைப்புகளை தமிழுலகத்திற்கு தர அழைப்போம் . இவருடைய படைப்புகளில் சில
ஒட்டு போட்ட கால்சட்டை
பொம்மைகளோடு
அம்மா

Hishaam mohamed இவர் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டிலிருந்தே பதிவுகள் எழுதி வருகிறார் இவருடைய பதிவுகளை நான் சமீபத்தில் தான் படித்தேன் . நன்றாக எழுதுகிறார் . இவருடைய பதிவுகளில் என்னை கவர்ந்த பதிவுகள் சில உங்களுக்காக
இதுதானா வாழ்க்கை
இது காதலா காமமா

உலக நடப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமா அதற்காகவே ஒரு பிளாக வைத்திருக்கிறார் இந்த நண்பர். உலக நிகழ்வுகள் ஒரு பார்வையில் என்ற தலைப்பில் பதிவுகள் போடுகிறார் . இவருடைய படைப்புகளில் சில

சிறுவனின் உயிரை காப்பாற்றிய சிலந்தி மனிதன்
கணினிகளை தாக்கவுள்ள அதி பயங்கரமான வைரஸ்
புதையுண்ட நிலையில் பாரிய மலைதொடர்

இதுவும் ஒரு புதிய பதிவு தான் தலைப்பே விழிப்புணர்வை உண்டு பண்ணும் அறியாமையை அகற்றுவோம் என தான் இருக்கிறது இவரும் இன்னும் பல விழிப்புணர்வு இடுகைகள் இட நாம் வாழ்த்துவோம் . இந்த நண்பரின் பெயர் பிரதீப் . இவர் இதுவரை குறைவான இடுகைகளே எழுதியுள்ளார் . இவருடைய இடுகைகளில் சில

பார்த்ததும் காதல் மற்றும் நிச்சயிக்க பட்ட திருமணம் - சிறு ஒப்பீடு
1000 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது
தடுமாறும் தாம்பத்யம்

நாளை மீண்டும் சந்திப்பு தொடரும் ...........................

14 comments:

  1. நன்றி நண்பரே நிறைய எளிதிட்டீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க.

    நிறைய வலைப்பதிவுகளை எடுத்து காட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்ல நல்ல பதிவுகள் அண்ணா.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..
    கொக்கு படம் அருமை..

    ReplyDelete
  3. மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியரே

    ReplyDelete
  4. அனைவரும் புது அறிமுகங்கள் எமக்கு

    ReplyDelete
  5. Kesavan said...

    நன்றி நண்பரே நிறைய எளிதிட்டீங்க கொஞ்சம் ஓய்வெடுங்க.

    நிறைய வலைப்பதிவுகளை எடுத்து காட்டியதற்கு நன்றி.
    ///////////////////

    நன்றி நண்பரே உங்கள் ஆலோசனையும் பரிசீலிக்கப்படும்

    ReplyDelete
  6. லோகு said...

    நல்ல நல்ல பதிவுகள் அண்ணா.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..
    கொக்கு படம் அருமை..//////////////////////

    நன்றி லோகு

    ReplyDelete
  7. sakthi said...

    அனைவரும் புது அறிமுகங்கள் எமக்கு//////////////////

    நன்றி சக்தி

    ReplyDelete
  8. அன்பின் சுரேஷ்குமார்,

    முதலில் வலைச்சர ஆசிரியரானதற்கு எனது வாழ்த்துக்கள் !

    எனது வலைப்பூவையும் உங்கள் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். மகிழ்கிறேன்.

    நன்றி அன்பு நண்பரே !

    ReplyDelete
  9. மூன்றாம் நாள் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  10. நல்ல அறிமுகங்கள் தொடரட்டும்

    ReplyDelete
  11. எம்.ரிஷான் ஷெரீப் said...

    அன்பின் சுரேஷ்குமார்,

    முதலில் வலைச்சர ஆசிரியரானதற்கு எனது வாழ்த்துக்கள் !

    எனது வலைப்பூவையும் உங்கள் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். மகிழ்கிறேன்.

    நன்றி அன்பு நண்பரே !
    ////////////

    வாழ்த்துக்கள் மற்றும் நன்
    நன்றிகள் நண்பரே

    ReplyDelete
  12. winner said...

    நல்ல அறிமுகங்கள் தொடரட்டும்/////////////////

    நன்றி நண்பரே

    ReplyDelete
  13. மூன்றாம் நாள் அறிமுகங்களும் அருமை பாராட்டுகளும் நன்றியும்...

    ReplyDelete
  14. அன்பின் சுரேஷ்

    பல புதிய பதிவர்களை அறிமுகப் படித்தியமை நன்று - நல்வாழ்த்துகள் - அனைவரின் வீடுகளுக்கும் சென்று வருகிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது