காதலில் நனைந்த கவிதைப்பூக்கள்
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
(முத்துப்பல் வரிசை, மூங்கிலனைய தோள், மாந்தளிர் மேனி, மயக்கமூட்டும் நறுமணம், மையெழுதிய வேல்விழி; அவளே என் காதலி!)
காதல் கவிதை எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்..
அதை வாங்கி செல்லும் பாக்கியசாலிகளே காதலிக்கிறார்கள்!
- நா. முத்துக்குமார்.
இது எந்த அளவு உண்மையோ தெரியாது, ஆனால் காதல் கவிதைகள் எழுதுபவர்கள் காதலித்துக் கொண்டோ அல்லது, மற்றவர் காதலுக்கு மறைமுகமாக உதவிக் கொண்டோ இருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.. காதல் ஒரு மலரை போன்றது என்றால், அதை மென்மையாக நுகர்வது போன்றது காதல் கவிதை எழுதுவது.
காதலிக்கும் சுகத்தை விட காதல் கவிதை எழுதுவது அதிக சுகம் தரும். காதலில் வெற்றியோ, தோல்வியோ அதை அழகாக வார்த்தைகளில் வடிக்க, காதலை உண்மையாக உணர்ந்தவர்களால் மட்டுமே முடியும். அப்படி காதலை உணர்ந்து கவி வடிக்கும் காதலர்கள் சிலரை இன்று பார்ப்போம்.
அருட்பெருங்கோ:
நான் படித்த முதல் வலைப்பூ இதுதான் என்று நினைக்கிறேன். இரண்டு நாட்களில் தொடர்ச்சியாக அனைத்து இடுகைகளையும் படித்து முடித்தேன். மறுபடி மறுபடி படிக்க தூண்டும் கவிதைகள் இவருடையது.
வரிகளில் எழுத்துக்களை கோர்க்காமல், காதலை கோர்த்து எழுதுபவர்.காதலியின் அழகை வர்ணித்து எழுதுவதில், தபூ சங்கரை நியாபகபடுத்துவார்.. இப்பொழுது அதிகமாக எழுதுவதில்லை, ஏன் என தெரியவில்லை..
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும்
காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை
உறங்குவதேயில்லை.
******
உன் பிறந்த நாளை
தேவதைகள் தினமாய்க் கொண்டாட
தேவதைகளே தீர்மானித்திருப்பது
உனக்குத் தெரியுமா?
இன்னும் இவரது காதல் கவிதைகள், முத்தம், பிறந்தநாள் வாழ்த்து போன்றவை என்னை மிகவும் கவர்ந்தவை..
இதெல்லாம் அவர் கட்டிய காதல் மாளிகையின் சிறு கல் மட்டுமே.. அந்த மாளிகைக்குள் நுழைந்து பாருங்கள்.. எவருக்கும் காதலிக்க ஆசை வரும்..
மறவாதே கண்மணியே (லோகு) :
அவர் பெயரே எனக்கும் இருப்பது எனக்கு பெருமை. காதலின் மகிழ்ச்சியை விட் காதலின் சோகம் நிறைய வலிமையானது. சோகத்தை எழுத்தில் வடிக்கும் ஆற்றல் மிக்கவர். இவர் வரிகளை படிக்கையில் சோகம் கூட சுகமாகும். உங்கள் வரிகளின் சோகம் உங்கள் வாழ்க்கையில் கட்டாயம் தூ என நம்புகிறேன்.
காதல் சோகம் உள்ளவர்களுக்கு இவர் தளம் சொர்க்கம்.. அவரின் கண்ணீர் துளிகள் சில..
என் தனிமை இனிக்க
நல்ல நினைவாய் இருக்கிறாய்..
நான் விழி மூடி ரசிக்க
நல்ல கனவாய் வருடுகிறாய்..
என் மனம் நிறைந்து வாழ
ஒரு நல்ல துணையாய்
இருக்க முடியவில்லையே உன்னால்..
*****
நீ காதலை உணரும் நாட்களில்
ஒரு கருங்கல்லைதான்
காதலித்துக்கொண்டிருப்பாய்
காதல் கடவுள் சாபங்கள் தந்துவிட்டானோ எனக்கு..
இன்னமும் உன்னையே காதலித்துகொண்டிருக்கிறேன்.
இன்னும் இவரது காதல் சாபம், மறவாதே கண்மணியே, போன்ற இடுகைகள் கண்ணீரை வர வைப்பவை.
ஆதலினால் (நவீன் பிரகாஸ்) :
நானாக திருடும் போது
கொஞ்சம் தித்திப்பு அதிகமாகத்தான்
இருக்கின்றது முத்தங்களுக்கு...
*******
நினைவுகள் உனக்கு வருகிறது
எனக் கேட்கிறாய்
எத்தனை முறை
சுவாசித்தேன் என யாரேனும்
கணக்கு வைக்க முடியுமா?
எங்கும் காதல்.. எதிலும் காதல் தான் இவர் தளத்தில். காதலியின் ஒவ்வொரு செய்கைக்கும் ஒவ்வொரு கவிதை. காதலிப்பவர்களும், காதலிக்க துடிப்பவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய தளம். காதலை உணர்ந்து எழுதுகிறார். படிக்கும் போது காதல் என்றால் என்ன என்று காதலிக்காதவர்களும் உணர முடியும்.
இவரது இன்னும் கொஞ்சம் கொஞ்சவா, நீயும் நானும் மற்றும் வெட்கங்களும் போன்ற பல கவிதைகள் காதலை பொழிபவை..
பிரியன் கவிதைகள்:
இவரது தளமும் கவிதைகளால் நிரம்பி இருக்கிறது. பெரும்பாலும் காதல் கவிதைகள்..நான்கு ஐந்து வார்த்தைகளிலேயே காதலியை எப்படியெல்லாம் வர்ணித்திருக்கிறார் பாருங்களேன்..
உனக்கான ஆபரணத்தை
மழைத்துளிகளால் கோர்க்கிறது
வானம்.
*
மழையின்
முதல் துளி நீ
அடுத்த துளி நான்
மற்றவை
நம் பிள்ளைகள்.
*
காதல் தேசத்தின்
தேவதையாய் இருக்ககூடும்
நிலவொளியில் நம்மை
நனைத்து சென்ற
மழை!
*
எவ்வூர் நியாயம்
மழை நனைத்தால்
அணைப்பதும்
நான் அணைத்தால்
தள்ளுதலும்!
*
நீ நனைய
என்னை தாக்குகிறது
அழகின் மின்னல்!
*
எழுத இன்னும் இருக்கிறது
உன்னைப் பற்றியும்
மழைப் பற்றியும்.
காதலை அணு அணுவாய், ரசித்து செதுக்கி இருக்கிறார் இவரது தளத்தில்.. காதலிப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய தளம். படிப்பவர்களை கட்டாயம் போதைக்குள்ளாக்கும் கவிதைகள் நிறைந்த தளத்தின் அழகுக்கு சான்றுகள் சில..
நீ, நான் பின் நமக்கான மழை..
அது, அது மட்டுமே காதல் #8 , #7 , #6 , #5 , #4 , #3 , # 02 , # 01
இனிய காதலனுடன் தொடங்கி இருக்கிறேன். பிடித்திருக்கும் என நம்புகிறேன், அறிவுரைகளையும், கருத்துக்களையும் கட்டாயம் சொல்லுங்கள்..
இன்னும் சில வித்தியாசமான பதிவுகளை அடுத்த இடுகையில் பார்க்கலாம்..
நன்றி..
பி.கு: மேற்சொன்ன நால்வருமே என்னை விட மூத்தவர்கள், அனுபவம் மிக்கவர்கள்... இவர்களை உங்களில் பலருக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருக்கலாம். ஒரு ரசிகனாக அவர்களை பற்றி இங்கு வியந்திருக்கிறேனே அன்றி விமர்சனம் செய்யும் நோக்கில் அல்ல..
|
|
மிகச்சிறந்த தேர்வுகள் லோகு! நானும் இப்பதிவர்களின் ரசிகர்களில் ஒருவன் தான்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துக்கள்..
அன்பின் லோகு
ReplyDeleteஅறிமுகப் படுத்திய அனைத்துக் காதல் கவிஞர்களும் - அவர்களது கவிதைகளும் மிகச் சிறந்த பாராட்டுதலுக்கு உரியவர்களே - உரியவைகளே
நல்ல அறிமுகம்
நல்வாழ்த்துகள் லோகு
வாழ்த்துகள்
ReplyDelete/படிப்பவர்களை கட்டாயம் போதைக்குள்ளாக்கும் கவிதைகள் நிறைந்த தளத்தின் அழகுக்கு சான்றுகள் சில../
ReplyDeleteஉண்மை தான்
கவிதை மழையில் நனைய வைத்துவிட்டீர்கள் லோகு!!
ReplyDeleteகாதல் கவிதை எழுதுகிறவர்கள்
ReplyDeleteகவிதை மட்டும்
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்..
அதை வாங்கி செல்லும் பாக்கியசாலிகளே காதலிக்கிறார்கள்!
- நா. முத்துக்குமார்.
அருமையாக சொல்லி இருக்கிறார்.நீங்கள் எழுதிய விதம் மற்றவர்களையும் படிக்கத் தூண்டுவது போல் உள்ளது.
நன்றி சென்ஷி அவர்களே,
ReplyDeleteநன்றி சீனா அய்யா..
நன்றி திகழ் மிளிர் அவர்களே..
நன்றி தேவன் மாயம் அவர்களே,
நன்றி கிருஸ்ன பிரபு அவர்களே.