07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 19, 2009

நலமோடு வாழ, படிக்க வேண்டிய பதிவுகள்.


'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' அந்த குறைவற்ற செல்வம் இப்போது யாருக்கும் கிடைப்பதில்லை. ஊசியே போட்டுக்கொள்ளாத தாத்தா, பாட்டியெல்லாம் இருந்தார்கள். ஆனால் இப்போது மாதத்துக்கு ஒருமுறை மருத்துவமனை செல்லாதவரை பார்ப்பதே அரிதாக உள்ளது.

விஞ்ஞான உலகில் தவிர்க்க முடியாத சுற்று சூழல் சீர்கேடும், தாறுமாறான உணவு பழக்க வழக்கங்களும், மக்கள் தொகை பெருக்கமும் தனி மனித ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கின்றன.

முடிந்த அளவுக்கு சீரான உணவு பழக்கத்தை கையாளுவதும், நோய்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்வதும் நம்மை ஓரளவுக்கு காக்கும்.

இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பொது நல மனப்பான்மையோடு எழுதப்படும் சில பதிவுகளை இந்த இடுகையில் காண்போம்.

பொது சுகாதாரமும், மருத்துவமும் :

மருத்துவர் சுரேஷ் அவர்களாலும், கிராம மருத்துவர் அவர்களாலும் நடத்த படும் தளம். மிக உபயோகமான ஒரு தளம். பல உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வுகளும், ஆலோசனைகளும் தெளிவான முறையில் சொல்லப்பட்டுள்ளன. மேலும் கிராமத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஏற்படும் அனுபவங்கள், பிரச்சனைகள், கிராம மக்களின் அறியாமை ஆகியவற்றை ரசிக்கும் வகையில் மிக அழகாக எழுதி வருகிறார்கள். கிராமத்தில் நடக்கும் சுவையான சம்பவங்கள் படிக்க நன்றாக இருக்கிறது.

மிகுந்த பணி நெருக்கடிக்கு இடையில் பொது நலத்தோடு எழுதி வரும் மருத்துவர்களின் தொண்டு பாராட்ட பட வேண்டியது.

அறியாமையால் தனக்கு போட வேண்டிய ஊசியை ன் குழந்தைக்கு போட்டஅம்மாவை பற்றிய இந்த இடுகை கல்வி அறிவின்மையின் பாதிப்பை உணர்த்துகிறது. கீரைகளின் பயன்களை பற்றிய இந்த இடுகை, மார்பக புற்றுநோய் குறித்த இடுகைகள் என பல பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய தளம்.


மருத்துவம்

சந்திர வதனா செல்வகுமாரன் என்பவரால் நடத்தப்படும் இந்த தளம் முழுக்க முழுக்க மருத்துவ குறிப்புகளால் ஆனது. மனச்சோர்வு, முடி உதிர்தல், தலைவலி, முட்டி வலி என பல பிரச்சனைகளுக்கு பல்வேறு மருத்துவர்களிடம் இருந்து பெறப்பட்ட குறிப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன.

இது தவிர மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளை பற்றியும், காய்கறிகள் பற்றியும் நிறைய இடுகைகள் உள்ளன. தூக்கத்தின் அவசியத்தை பற்றிய இந்தஇடுகை , நோய்க்கான அறிகுறிகளை கொண்டே நோயை அறிய உதவும்இந்த இடுகை என பல சிறப்பான இடுகைகளால் ஆனது.

மிக சிறந்த தளம். தவறாமல் வாசியுங்கள்.

உங்களுக்காக :


மருத்துவ குறிப்புகள் அடங்கிய இன்னொரு வலைப்பூ. கிட்டத்தட்ட 50 இடுகைகள் மருத்துவ குறிப்புகளை கொண்டு உள்ளன. பல்வேறு கோணங்களில், பல பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளும், தீர்வுகளும் இங்கு கிடைக்கின்றன. இதுவும் அனைவருக்கும் உதவிகரமான தளம். தினசரி வாழ்வில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்ல பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்வுக்கு கடைபிடிக்க வேண்டிய பழக்க வழ்க்கங்கள் குறித்தும் பல இடுகைகள் உள்ளன..

இத்தளத்தின் பயனுள்ள இடுகைகளில் சில :

முதுகு வலி குறைய

குழ்ந்தை சாப்பிடாமல் அடம்பிடித்தால்
தெரிந்து கொள்ளுங்கள்
தாய்மையின் அடையாளங்கள் என பல உபயோகமான அரிய தகவல்களை உள்ளடக்கிய நல்ல தளம். படித்து பயன் பெறுங்கள்.


இன்றைய தொகுப்பும், உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் ஆலோசனைகளும், கருத்துகளும் என்னை சிறப்பாக செயல்பட தூண்டும்.

மீண்டும் சில உபயோகமான பதிவுகளோடு அடுத்த இடுகையில் சந்திக்கிறேன்.

நன்றி.

7 comments:

 1. லோகு, இப்போதான் பார்க்கிறேன். நீங்கதானா இது?
  நேத்து பேசும்போதே சொல்வதற்க்கென்ன?
  :-(

  வாழ்த்துக்கள், தொடர்ந்து நல்ல பதிவுகளை அறிமுகம் செயுங்கள்

  ReplyDelete
 2. ஒரு மார்க்கமா இருக்கே இது.

  ReplyDelete
 3. தொடரட்டும் உங்கள் பணி.
  முடிந்தால் எங்கள் பக்கமும் உங்கள் பார்வை படட்டும்.

  ReplyDelete
 4. நன்றிகள் நண்பரே..,

  உங்களால் மீண்டும் ஒரு முறை
  Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும் வலைப்பூ மக்களிடம் அறிமுகம் பெற்று இருக்கிறது.

  ReplyDelete
 5. அன்பின் லோகு

  அருமை அருமை - நல்ல முறையில் வலைச்சரம் செல்கிறது - நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 6. நன்றி ஜமால் அண்ணா..

  நன்றி முரளி அண்ணா..

  நன்றி ராஜூ.. நாமெல்லாம் எப்பவும் வித்தியாசமா யோசிப்பம்ல..

  நன்றி பிரபா அவர்களே.

  நன்றி டாக்டர் சார்.. உங்கள் சேவை பெரியது.. அதற்கு அறிமுகம் தேவையில்லை,,

  நன்றி சீனா அய்யா..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது