07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 7, 2010

சிறு துளி பெரு வெள்ளம்

இதனால சகலமானவருக்கும் சொல்லிக்கறது என்னன்னா, எங்க வீட்டுக்கு பக்கத்துவீட்டுக்காரர் பேரு அரிச்சந்திரன். அதான் நேற்று சொன்ன மாதிரியே இன்னைக்கு வந்துட்டேன். வலைச்சரம் எழுதுவதற்க்காக நிறைய தேடியும், நண்பர்களிடம் கேட்டும் நிறைய பதிவுகள் வாசிக்க முடிந்தது. வகைப்படுத்தி பதிவிடுகிறேன். இங்கு அறிமுகப்படுத்தும் பதிவுகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் இருக்கலாம். எனினும் என் பார்வையில் இவைகளை அறிமுகப்படுத்துகிறேன்.


வாழ்வியலில் நடைமுறை வாழ்க்கைக்கு எவ்வளவோ தெரிய வேண்டியிருக்கிறது, கதை, இலக்கியம், கற்பனை தாண்டியும் இருக்கும் நிஜ உலகை பிரதிபலிக்கும் எண்ணங்களை தொகுக்கலாம் என்று முடிந்த அளவு சின்ன பதிவாக அதற்குரிய லேபிளில் பதிய முயற்சிக்கிறேன்.

முதலில் ஷேர் மார்கெட் : சொந்த தொழில் செய்வோரோ, மாத சம்பளம் வாங்குபவரோ யாராக இருந்தாலும் நம்முடைய முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும். நாம் அனைவருமே எதோ ஒரு சூழ்நிலையில் பணத்தின் மதிப்பை அறிந்திருப்போம், அதனால சேமிப்பின் இன்றைய காலக்கட்ட அவசியமான பங்குச்சந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் பதிவுகள் இவை.

இந்திய பங்குசந்தைகள் என்ற பெயரில் பதிவும் சரவணபாலாஜி ஒரு தொழில்முறை பங்கு வர்த்தகர், இதன் நெளிவு சுளிவுகளை கேள்வி பதில் மூலம் தெளிவிக்கிறார்.

தகவல் உலகம் திலீப் தேவின் இந்த பதிவுகள் அவரின் மற்ற பதிவுகளைப்போலவே மிக எளிமையாக எல்லாருக்கும் புரியும் வகையில் பங்கு சந்தையின் போக்கை தெரிவிக்கிறது.

தமிழ் வணிகம் இதிலும் மிக எளிமையான பங்குசந்தை விவரங்கள் உள்ளது. மணி கண்ட்ரோல்இதையும் தெரிந்து வைத்துக்கொள்வதில் ஏதும் தவறில்லை.

குட் மணி இன்வெஸ்மெண்ட் என்னும் ஒருகம்பனியே வலைப்பதிவில் தினம் டிப்ஸ் தருகிறார்கள்.


இப்போதைக்கு இது போதும், மேலும் அடுத்த பதிவில் வேறு ஒரு தலைப்பில் சந்திக்கலாமா?

26 comments:

  1. ஆரம்பமே களை கட்டிருச்சி.

    ReplyDelete
  2. கண்டிப்பா படிச்சி அறிய வேண்டிய பயனுள்ள பதிவுகள் இப்ப வெறும் போக்காத்தான் பார்த்திருக்கேன்..உள்ளே போயிட்டு வந்து தனித்தனியா பாராட்டறேன்..வாழ்த்துக்கள் அனைவருக்கும்,,,,,

    ReplyDelete
  3. ரொம்ப உபயோகமான பதிவுகள்..இருங்க எல்லாத்தையும் படிச்சுட்டு வரேன்

    ReplyDelete
  4. அருமையான பதிவு அக்கா

    பலபேருக்கு பயனுள்ளதா இருக்கும்

    :))

    ReplyDelete
  5. ம்..கலக்கல் எனக்கு இதுல நிறைய பேரு புதுசு.... படிச்சிட்டு வாரேன்..

    புதுசா ஷேர் ஆரம்பிக்க போறவங்களுக்கு எளிமையா விளக்குற ஏதாச்சும் பதிவு இருந்தா பின்னூட்டத்துல குடுங்க......

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு

    ReplyDelete
  7. இவை அனைத்தும் புதிய அறிமுகங்கள் எமக்கு. உபயோகமான வலைத்தளங்கள்!!!!

    ReplyDelete
  8. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  9. மொத பதிவே ஷேட் மார்க்கெட் பத்தி போட்டதுக்கு ஏதாவது காரணம் இருக்கா

    ReplyDelete
  10. ஓ. நீங்க பிஸினஸ் உமன் ஆச்சே. மறந்தே போச்சு

    ReplyDelete
  11. வலைச்சர ஆசிரியருக்கு இரெண்டாம் நாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  12. இதெல்லாம் பத்தி எனக்கு எதுவும் தெரியாதுன்னாலும், தேவையானவங்களுக்கு உபயோகப்படும் வகையில் எழுதி இருக்கீங்க.

    சூப்பர் விஜி!

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு ...!

    நேத்தைய கும்மிய கவனிக்காம இருந்துட்டேனே..!;;)

    ReplyDelete
  14. அன்பின் விஜி

    அருமை அருமை பங்கு வணிக அறிமுகம் அருமை. எனக்குப் பங்கு வணிகம் அவ்வளவாகத் தொடர்பு இல்லை. இங்கு அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகளும் இடுகைகளுமே எனக்குப் புதியவைதான். சென்று பார்த்து, படித்து, மறுமொழி இடுகிறேன். சரியா

    நல்வாழ்த்துகள் விஜி
    நட்புடன் சீனா

    ReplyDelete
  15. விஜி,

    பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்களை இரண்டாகப் பிரிக்கலாம் - முதலீட்டாளர்கள் (Investors) மற்றும் வியாபாரிகள்/சூதாடிகள் (Traders/Speculators). BTW, இதை நான் சொல்லவில்லை. Father of Security Analysis என்று கொண்டாடப்படும் பென் கிரஹாம் (Ben Graham) - வார்ரேன் பப்பெட்'ன் (Warren Buffet) ஆசிரியர்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள சுட்டிகள் அனைத்தும் இரண்டாவது வகையினை சார்ந்தவை . ஒரு பங்கின் (அல்லது SENSEX/NIFTY போன்ற) விலையின் ஏற்ற இரக்கத்தை வைத்து வாங்கி விற்கும் Technical Analysis ஐ சார்ந்தவை.

    முதல் வகையினை சார்ந்தவர்கள் ஒரு நிறுவனத்தின் Balance Sheet, P&L stmt and Cash Flow Stmt மற்றும் Annual reports ஐ படித்து அந்த நிறுவனத்தின் மதிப்பை(Intrinsic Value) கண்டுபிடித்து விலை(Price) மதிப்பை விட குறையும் போது வாங்குபவர்கள். இதை Fundamental Analysis என்பார்கள். (என்னுடைய தனிப்பட்ட கருத்து இதுதான் சரியான வழி என்பதாகும்) இந்த முறையில் முதலீடு செய்பவர்களை Value Investor என்று கூறுவார்கள். Examples for Value Investors are: Warren Buffett, Ben Graham, Walter Schloss, Peter Lynch,Bill Miller, Whitney Tilson - இந்தியாவில் Rakesh Jhunjhunwalah, Raamdeo Agarwal, Parag Parikh, Chandrakanth Sampath

    Technical Analysis மக்கள் உடனே சண்டைக்கு வர வேண்டாம் :-) பங்குச்சந்தையின் அறிமுகமாக இந்த பதிவு இருப்பதால், இந்த வேறுபாட்டை குறிப்பிட நினைத்தேன்.

    BTW, பங்குச்சந்தை பற்றிய அந்த குரங்குக் கதை ஒரு ஜோக் - வெகு நாட்களாக உலவிக் கொண்டிருக்கிறது. எந்த விதத்திலும் உண்மையான பங்குச்சந்தையை அது விளக்கவில்லை.

    ப்ரியமுடன்,
    --பாலா அறம்வளர்த்தான்

    ReplyDelete
  16. பகிர்வுக்கு நன்றி!!!

    ReplyDelete
  17. உங்கள் பதிவு வருத்தமளிக்கிறது நண்பரே!

    'தகவல் உலகம்' என்கிற தளத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவுள்ளது திறமையான பதிவர்களை அறிமுகப்படுத்தலாமே!

    http://ethamil.blogspot.com/2010/09/blog-post_05.html
    கட்டாயம் படிக்கவும்.
    நன்றி

    ReplyDelete
  18. ஏனைய தளங்கள் உண்மையானவை என்கிற எண்ணத்தில் விடைபெறுகிறேன்.

    http://pirathu.blogspot.com

    ReplyDelete
  19. நன்றி சித்ரா:)

    தமிழ் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய துறை :)

    நன்றி காயத்ரி :)

    ReplyDelete
  20. நன்றி சிட்டு, உனக்கு ஸ்பெஷலா ரெண்டு நன்றி :)

    தேங்க்ஸ் கண்ணா :)

    நன்றி சக்தி :)

    ReplyDelete
  21. சின்னம்மினி ஏன் ஏன் இந்த விளம்பரம்? :)

    நன்றி ரம்ஸ் :))


    தழிழ் அமுதன் ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க, இன்னைக்கு கண்டினியூ பண்ணுங்க :)

    ReplyDelete
  22. வாங்க பாலா, எதோ எங்களுக்கு பட்டதை எழுதினோமுங்க, உங்களுக்கு இவ்வளவு விசயம் தெரிஞ்சிருக்கே, அப்பறம் ஏன் வெறும் பின்னூட்டபுயலா இருக்கீங்க, அறம்வளர்க்கற மாதிரி அப்படியே கொஞ்சம் எங்க அறிவையும் வளர்க்க எழுதுங்க :)

    ReplyDelete
  23. நன்றி சீனா சார்,

    நன்றி பழமைபேசி :)

    பிராது, வாங்க, இணையம் முழுதும் ஏகப்பட்ட தளங்கள், வலைப்பதிவுகள் உள்ளன, இதெல்லாம் எழுதுகிறார்கள் என்ற அறிமுகமே தவிர அதை கடைபிடிக்க சொல்லும் அறிவுரை அல்ல. எனினும் தகவலுக்கு நன்றி :)

    ReplyDelete
  24. இன்னைக்கு பாடம் சூப்பர் டீச்சர் :))

    ReplyDelete
  25. நன்றி விஜி. சீக்கிரம் எழுத வருகிறேன் :-)

    ReplyDelete
  26. தேங்க்ஸ் சுசி :)

    வாங்க பாலா :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது