07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 7, 2010

உடலே கோவில், உணவே மருந்து

நேற்றைய தொடர்ச்சிதான், அதாவது நம்ம ஊரில் சொல்லும் பழமொழி சுவர் இருந்தாத்தான் சித்திரம்ன்னு, அந்த சித்திரத்தை எப்படி பாதுகாக்கிறோம் என்பது தான் இன்றைய பதிவு. இனிது இனிது மானிடராய் பிறப்பது, அதிலும் இனிது கூன் குருடு செவிடு நீங்கின்னு நம்ம முன்னோர்கள் சொன்னது போல கிடைத்தற்கரிய இந்த உடம்பை நல்லவிதமாக வைத்துக்கொள்வது நம் கடமை. யாருடனும் ஒப்பிடாமல் நம் உடம்பே கோவில், உணவே மருந்து என்பது எப்போதும் நம்க்கு மட்டுமல்ல நம் குடும்பத்துக்கும் நன்மையே.

பதிவுகளில் நிறைய பேர் அவ்வப்போது உணவு முறை, ஆரோக்கியம், மருத்துவம் என்று பதிவிடுகின்றனர், நான் உட்பட. ஆனால் பெரும்பான்மையாக அதை மட்டுமே எழுதும் பதிவர்களில் சிலரை இன்று பார்ப்போம்..

முதலில் என்னது நானு யாரா? , பேரே சுவாரஸியமாக இருப்பதால் அவர் பதிவுகளும் அவ்வாறே இருக்கும் என்று நம்பி படிக்கலாம். எளிய முறையில், வீணான வார்த்தை பயமுறுத்தல்கள் இல்லாமல் எழுதுவது இவரின் பாணி. தொடருங்கள் நண்பரே.

நம் இந்திய மருத்துவம் மிகப்பழமையானதும் நிறைய வகைகளைக்கொண்டதும் என்று உலகமே அறியும், ஆயுர்வேதம், ஹோமியோ, யுனானி, சித்த மருத்துவம், அலோபதி என்று எல்லா கிளைகளிலும் நம் வேர்கள் பரவியுள்ளன. சித்தர்கள் இருக்கிறார்கள் இல்லை என்று மாற்று கருத்து இருந்தாலும் அவர்களின் மருத்துவ முறைகள் மறுக்க முடியாத உண்மை. ஆச்சரியப்படத்தக்க வகையில் சித்த மருத்துவ முறைகளை இந்த வலைப்பதிவில் பாருங்கள்..

மருத்துவம், ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல தேடுதல்களின் பதிலரங்கமாக ஹாய் நலமா இணைய இதழ் இருக்கிறது, பல்வேறு விதமான தலைப்புகளில் ஆரோக்கியமான குறிப்புகள் பயனளிக்கும்.

ஒரு குழந்தை நல மருத்துவரே குழந்தைகள் பற்றிய சிக்கலான பிரச்சனைகளுக்கு பதிலளிக்கிறார். டாக்டர் சார் இன்னும் எழுத ஆரம்பிக்காத வலைப்பதிவுகள் வைத்துள்ளீர்கள், நேரம் அனுமதித்தால் எழுதுங்கள்.

இரு நூறு ஃபாலோயர்களுக்கும் மேல் தொடரும் மருத்துவம் பேசுகிறது என்னும் இந்த வலைப்பதிவு சிறப்பானதாகத்தானே இருக்கும். தமிழில் மருத்துவ பதிவு எழுதும் இவரின் ஆர்வத்தைப் பாராட்டலாம்.


இவை தவிர தமிழ்குடும்பத்தில், பெரும்பாலும் பெண்களே எழுதுவதால் அது நிச்சயமாக அனுபவப்பதிவாகவே இருக்கும், கதிரவன் , கீதம் இரண்டும் தொகுக்கப்பட்ட மருத்துவ, ஆரோக்கிய குறிப்புகள் அடங்கியது.

நண்பர்களின் கவனத்திற்கு, பெரும்பாலும் இங்கு அறிமுகப்படுத்தும் பதிவுகள், தொகுப்பிகள் அனைத்தும் ஒரு அறிமுகத்திற்கு மட்டுமே, அதை அப்படியே நாம் கடைபிடிக்க போவதில்லை, பங்குசந்தையோ, ஆரோக்கியமோ, அழகு குறிப்போ எதுவானாலும் நான் படித்ததை பகிருகிறேன், அவ்வளவு மட்டுமே. ஆதரவிற்கு நன்றி,, மீண்டும் ஒரு தலைப்புடன் விரைவில் சந்திப்போம்.

13 comments:

  1. நல்ல பகிர்வுகள் நன்றி..!

    ReplyDelete
  2. மிக மிக உப்யோகமான பகிர்வு மிக்க நன்றி

    ReplyDelete
  3. சரிங்க டீச்சர்..

    ReplyDelete
  4. அன்பின் விஜி

    அறிமுகங்கள் அருமை - தேர்ந்தெடுத்த துறையும் நன்று - நல்வாழ்த்துகள் விஜி - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. நன்றி மயில்!

    எனது வலைபக்கத்தை அறிமுகம் செய்து வைத்த்தோடு மட்டும் அல்லாமல், மற்ற மருத்துவ வலைபக்கங்களையும் நான் அறியும் வண்ணம் அறிமுகம் செய்து விட்டீர்கள்!

    எல்லா அறிமுகங்களையும் சென்று பார்க்கின்றேன். பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஏற்கனவே மருத்துவம் பேசுகிறது எனக்கு அறிமுகம் ஆன ஒரு தளம் தான். நல்ல நல்ல மருத்துவ தகவல்களை கொடுக்கின்றார் நண்பர்.

    உங்கள் பணி நன்கு தொடர வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  6. பயனுள்ள பகுதிகளையே அறிமுகம் செய்திருக்கிறாய் விஜி...விளையாட்டு தனத்தையும் மீறிய உன் தெளிவு இந்த தேர்வில் தெரிகிறது...வாழ்த்துக்கள் நண்பர்கள் அனைவருக்கும் சீனா அண்ணா சொன்னதையும் வழிமொழிகிறேன்..

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவுகள்! அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  8. சூப்பர்ப் எல்லாரையும் பாலோ பண்ணியாச்சு டாக்டர்ஸ் இத்தனைபேர் இலவசமாக ஆலோசனை சொல்லும்போது அவுங்க சொல்றதை கேட்டுத்தானே ஆகனும்

    அருமையான அறிமுகம்

    ReplyDelete
  9. நன்றி தமிழ் அமுதன் :)

    நன்றி காயத்ரி :)

    நன்றி சுசி :)

    ReplyDelete
  10. நன்றி சீனா சார் :)

    நன்றி நானு யாரா? :)

    நன்றி தமிழ் :)

    ReplyDelete
  11. நன்றி சித்ரா

    நன்றி குமார் :)

    நன்றி சக்தி :)

    நன்றி டாக்டர் :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது