07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 15, 2010

வானவில்.. ஏழு ஸ்வரங்களுக்குள்

மருத்துவம்/ ஹெல்த் பக்கம்

பிரபா என்பவர் எழுதும் ஆழ் கடல் களஞ்சியம் என்ற ப்ளாக் பல ஹெல்த் தகவல்கள் சொல்கிறது. இதோ குழந்தை பிறந்த உடன் செய்ய வேண்டியவை பற்றி சொல்லும் பதிவு.. 

சினிமா பக்கம்

திருவாரூரிலிருந்து சரவணன் " இளைய பாரதம்" என்ற ப்ளாகில் எழுதுகிறார். நம்ம தஞ்சை மண் என்பதாலேயே வாசிக்க ஆரம்பித்தேன். அவாபோது சினிமா பற்றிய விமர்சனம், அலசல் கட்டுரை எனவும் இன்னும் பல விஷயங்களும் எழுதுகிறார். ரஜினி பற்றிய இந்த கட்டுரை பாருங்கள்.

கட்டுரை

ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்கள் வெண்பா, கட்டுரை என பல விதமாய் எழுதுகிறார். அவர் எழுதிய இந்த கட்டுரை வாசித்து பாருங்கள்

கவிதை

கலகலப்ரியா கவிதைகள் வாசித்துள்ளீர்களா?  மிக தைரியமான எழுத்து.. கவிதைகளிலும் பின்னூட்டதிலும் தெரியும் இவரின் தைரியம் பார்த்து ஆச்சரிய பட்டுள்ளேன் .

வாசித்து பாருங்கள்.

ஆன்மிகம்

ஜாதகம் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் பார்க்க வேண்டிய பதிவு; நம்பிக்கை இல்லாதவர்கள் பின்னூட்டத்தில் என்னை திட்டாமல் இருந்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் (என்னது புண்ணியத்திலேயே நம்பிக்கை இல்லையா? ரைட்டு !)

எழுதாமல் இருப்பவர்

நண்பர் அனுஜன்யா எழுத்தில் சுஜாதாவின் நகைச்சுவையை காணலாம். பயண கட்டுரைகளும் அலுவலக நடப்புகளும் மிக அங்கதமாய் எழுதுவார். நண்பர் கடைசியாய் எழுதி சில மாதங்கள் ஆகி விட்டது. விரைவில் மீண்டும் எழுதுவார் என நம்புகிறேன்.

புகைப்படங்கள்

இவர் உங்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் தான். ராம லக்ஷ்மி! கட்டுரைகள், கவிதைகள் என கலக்குகிறார். எனக்கு மிக பிடித்தவை இவரின் புகைப்படங்கள். நீங்களும் (மீண்டும் ஒரு முறை) சென்று பாருங்கள்...

**
மீண்டும் நாளை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் மோகன் குமார். .. குமார் .... குமார்

17 comments:

 1. அன்பின் மோகன் குமார்

  வித்தியாசமான முறையில் அறிமுகங்கள் - அருமை

  நல்வாழ்த்துகள் மோகன் குமார்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 2. ஏழு ஸ்வரங்களுக்கு ஒரு ஸ்வரமாக என்னையும் சேர்த்திருப்பதற்கு நன்றி:)! மற்றவருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அருமையான அறிமுகங்கள்.

  ReplyDelete
 4. சிறந்த பதிவர்களின் வரிசை சிறப்பாகவே உள்ளது.

  ReplyDelete
 5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இனிமையான ஏழு சுவரங்கள்.

  ReplyDelete
 6. வித்தியாசமான முறையில் அறிமுகங்கள் - அருமை

  ReplyDelete
 7. வித்தியாசமான முறையில் அறிமுகங்கள் - அருமை

  ReplyDelete
 8. அருமையான அறிமுகங்கள்.

  ReplyDelete
 9. ஓ... ரொம்ப நன்றி மோகன் குமார்.. :)

  சுருக்கமா, சிறப்பா இருக்கு..

  சீனா சார் உங்களுக்கும் நன்றி..

  ReplyDelete
 10. @ மோகன் குமார்

  சினிமா பற்றி நான் எழுதிய பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு நன்றி.

  ReplyDelete
 11. நல்ல அறிமுகங்கள் .

  ReplyDelete
 12. மிக்க நன்றி திரு மோகன் குமார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  அன்புடன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  ReplyDelete
 13. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 14. இன்று தான் உள்ளே வரமுடிந்தது குமார்.

  வித்யாசமான அறிமுகங்கள். மிகவும் சிறப்பு.

  ReplyDelete
 15. அழகான அறிமுகங்கள்......வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. நன்றி நண்பா ( மோகன் குமார் ). என் தளத்தை பற்றி உங்கள் தளத்தில் கூறி என்னையும் என் தளத்தையும் அனைவரும் அறியும் படி அறிமுகம் செய்ததுக்கு மிக்க நன்றி நண்பரே.


  ////மருத்துவம்/ ஹெல்த் பக்கம்

  பிரபா என்பவர் எழுதும் ஆழ் கடல் களஞ்சியம் என்ற ப்ளாக் பல ஹெல்த் தகவல்கள் சொல்கிறது. இதோ குழந்தை பிறந்த உடன் செய்ய வேண்டியவை பற்றி சொல்லும் பதிவு..
  //////


  அதுவும் மருத்துவம்/ ஹெல்த் என்று கூறி அறிமுகம் செய்ததுக்கு மிக்க நன்றி நண்பா.


  மன்னிக்கவும் நண்பரே. இன்று தான் பதில் அளிக்க முடிந்தது. தாமத்துக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 17. நண்பரே! இந்த தளத்தில் சென்று பார்க்கவும். எங்கள் நன்றியை மனமார நீங்கள் ஏற்க்க வேண்டும்.

  http://azhkadalkalangiyam.blogspot.com/2010/09/blog-post_6134.html

  :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது