07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 5, 2010

நவரச ஞாயிறு (வலைச்சரம் - ஏழாம் நாள்)

லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்.
முதலில் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!
வலைச்சர ஆசிரியர் என்ற முறையில் உங்கள் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்! (ஓ! அந்த ஆசிரியர் வேற, இந்த ஆசிரியர் வேறயோ? சாரி!)

இந்த பதிவுல பலதரப்பட்ட பதிவர்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
என்னது நானு யாரா? இவரு இயற்கை மருத்துவத்தைப் பற்றி விலாவரியா எழுதறார். வாழை இலை மருத்துவம்னு ஒண்ணு சொல்றாரு, படிக்கும்போதே நம்ம கெட்ட நீரெல்லாம் போயிடற மாதிரி பீலிங். பால் சாப்பிடாதீங்கன்னும் சொல்றாரு.  படிச்சுப்
பாருங்க, நம்பறதும் follow பண்றதும் உங்க இஷ்டம்!

அருண் பிரசாத் இவரும் பலதரப்பட்ட பதிவுகளை எழுதியிருக்காரு.ஒரு பதிவில் ஊருக்கெல்லாம் சோறிட வைக்கும் இவரின் மனிதாபிமானம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

டெரர் பாண்டியன் இவரோட எல்லா கமென்டுமே பலமா சிரிக்க வைக்கும். ரொம்ப நாள் கழித்துதான் பதிவுகள் எழுத ஆரம்பிச்சாரு. கமென்ட்டுங்கற பேர்ல கும்மி அடிக்கறவங்களை கும்மியிருக்காரு பாருங்க, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!  இவருக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கு அது வெங்கட் ப்ளாக் போய் படிக்க ஆரம்பிச்சா புரியும்.

நவரசம்னு தலைப்பு வச்சுட்டு இயல் தமிழ் மட்டும் சொன்னா எப்படி? இதோ இசைத் தமிழ். கர்நாடக இசைப் பிதாமகரான தியாகராஜரின் கீர்த்தனைகளும் அதன் அர்த்தங்களும் இந்த ப்ளாகில் இருக்கின்றன. ஒரு சாம்பிளுக்கு இதைப் படியுங்க!

ஓகே. ஒரு வழியா ஏழு நாட்களுக்கு ஏழு பதிவுகள் போட்டாச்சு. என்னை அன்போடு அழைத்த சீனா அவர்களுக்கு என் நன்றி! என் பதிவுகளுக்கு யோசனை சொல்லிக் கொடுத்த...........
....................
...................
...................
வேணாம், அவருக்கு புகழ்ச்சி பிடிக்காது. அதுனால கோகுலம் வெங்கட் பேரை சொல்லாமயே உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்!

டிஸ்கி : என் முந்தைய பதிவுகளில் எல்லாம் என் பதிவோட சுட்டிகளும் கொடுத்து பழகிவிட்டதால், என் பதிவுகளிலேயே சிறந்தவை என்று நான் நினைக்கும் சில பதிவுகள் இங்கே:-

என் பெற்றோர் பற்றி

உதவி செய்வதன் மகத்துவம்

வைகுண்ட ஏகாதசி - ஒரு விளக்கம்   

6 comments:

 1. அன்பின் பெசொவி

  அருமை அருமை அத்தனை சுட்டிகளும் அருமை. நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 2. நண்பர் "பெயர் சொல்லவிருப்பமில்லை"!
  என்னையும் நீங்கள் வலைசரத்தின் ஆசிரியராக இருந்து அறிமுகம் செய்து வைத்து விட்டீர்கள்!

  மிக்க மகிழ்ச்சி!

  நண்பர்களே! இயற்கை வாழ்வியல், இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், ஆன்மீக சிந்தனை என்று மனிதன், தன்னை உயர்த்தி கொள்ள வேண்டும்.

  இந்த தலைமுறை மாந்தருக்கு, மேலே சொன்ன நிறைய விஷயங்கள், தெரியாமல் இருப்பது தான் குறையாக இருக்கிறது.

  அந்த குறையை போக்கும் வகையில் தான் இயற்கை வாழ்வியல், இயற்கை மருத்துவம், இயற்கை உணவு என்று பல விஷயங்களை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

  இந்த நல்ல விஷயங்கள் எல்லோருக்கும் சென்று சேரட்டும் என்று அறிமுகம் செய்த "பெயர் சொல்லவிருப்பமில்லை" நண்பர் அவர்களுக்கும், அவருக்கு ஆலோசனை தந்த வெங்கட் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  என் எழுத்துக்களை படித்து பாராட்டிய அன்பு சீனா அண்ணன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 3. அடன்கோயால.. ஒரு வாரம் முடிஞ்சிடிச்சா? பரவாயில்லை.. வலை சரத்தில், வேறு ஒரு ஆசிரியர் வந்து வழக்கம் போல கலக்குவார்னு எதிர்பார்கிறேன்.

  நன்றி. பே.சோ.வி, நன்றி அன்பின் சீனா

  ReplyDelete
 4. வலைச்சர ஆசிரியராய் பணியாற்றி சிறப்பித்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. // அவருக்கு புகழ்ச்சி பிடிக்காது. அதுனால கோகுலம் வெங்கட் பேரை சொல்லாமயே உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்! //

  ஹி., ஹி. ஹி.. !!

  ReplyDelete
 6. என் தனியொருவனுக்கு உணவில்லையெனில்.... பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி பெ.சொ.வி...

  உதவ மனம் இருந்தும் வசதி இல்லாதவர்கள் ஒரு மவுஸ் கிளிக் மூலம் இலவசமாக ஒரு பிடி சோற்றை வழ்ங்கும் வழியை சொல்லியுள்ளேன்.

  இது அனைவருக்கும் தெரிய வேண்டும். பரவ வேண்டும் என இதை வலைசரத்தில் அறிமுக படுத்தியதற்கு நன்றிகள் பல...

  சீனா அய்யா, ஒரு முறை இந்த பதிவை படித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள் பிளீஸ்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது