நன்றி பெ.சொ.வி. ... வருக ! வருக ! மயில் @ விஜி
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் நிறைவடையும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற, அருமை நண்பர்
"பெயர் சொல்ல விருப்பமில்லை", தான் ஏற்ற பொறுப்பினை , மனமகிழ்வுடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ எழுபத்தைந்து மறு மொழிகள் பெற்றிருக்கிறார். புதுமையாக - சுய அறிமுக இடுகையை எல்லா இடுகைகளிலும் கலந்து, தன்னுடைய சொந்த பதிவில் இட்ட இடுகைகளை அறிமுகப் படுத்தி இருக்கிறார். நண்பர் பெ.சொ.வி அவர்களை நல்வாழ்த்துகள் கலந்த நன்றியுடன் விடை அளிப்பதில் வலைச்சர குழுவினர் சார்பினில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
அடுத்து நாளை துவங்கும் வாரத்திற்கு, கோவையினைச் சார்ந்த விஜி அவர்கள் ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார். இவர் "மயில்" என்ற புனைப் பெயரில் எழுதி வருகிறார். மயில், மியூசிக் மிக்ஸ், அம்மாக்களின் வலைப்பூக்கள், பப்பு டைம்ஸ், என் சமையலறையில், தமிழ்நாடு ஐடியா முன்னேற்றக் கழகம் என பல்வேறு பதிவுகளில் எழுதி வருகிறார். கடந்த 18 மாத காலமாக , ஏறத்தாழ 160 இடுகைகள் "மயிலில்" இட்டிருக்கிறார். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பின் தொடர்கின்றனர.
விஜி அவர்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரம் குழுவினர் சார்பினில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் விஜி
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteCongrats
ReplyDeleteவாங்க மயில்...
ReplyDeleteவலைச்சரத்தில் பூத்தொடுக்க...
நல் வாழ்த்துக்கள்.
பேரே அருமையாக இருக்கிறதே! மயில்!
ReplyDeleteவாங்க! ஆசிரியரா இருந்து கலக்குங்க!
வருக மயில்!! வாழ்த்துகள்!!
ReplyDeleteவலைச்சரத்தில் முத்திரை பதிக்க வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் மயில்
ReplyDeleteவிஜய்
வருக...வருக.... மயில்.... மேகத்தைக் கண்ட மயில் போல உவகை பொங்க வாருங்கள்......வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் ஆசிரியப் பண்ணியினைப் பாராட்டிய அன்பின் சீனா அவர்களுக்கும், வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் பெயர் சொல்ல விரும்பவில்லை!!!
ReplyDeleteவருக வருக விஜி
நன்றி குமார்,,
ReplyDeleteநன்றி நானு யாரா? ( நல்ல பேரு )
நன்றி ஸ்டார்ஜன்
நன்றி படைவேழம்
நன்றி குமார்,,
ReplyDeleteநன்றி நானு யாரா? ( நல்ல பேரு )
நன்றி ஸ்டார்ஜன்
நன்றி படைவேழம்
நன்றி நித்திலம் :)
ReplyDeleteநன்றி விஜய் :)
நன்றி சக்தி :)