07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 11, 2011

என்ன செய்து விட்டோம்..?


ஹாய்...ஹாய்...ஹாய்!

நேற்று காதல் கவிதைகளைப் படித்ததில் இருந்து ஒரே ”ரொமான்ஸ் மூடில்” இருப்பீர்கள். ஓரிடத்திலேயே நின்று விட்டால் எப்படி? நாமெல்லாம் நதி நீர் போல, ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓட்டத்தை ஆரம்பிக்கலாமா?

ரெடி... ஒன்...ட்டூ...த்ரீ....ஸ்டார்ட்!

பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ சாதகமாக இருப்பது இந்த பூமி ஒன்றேதான். இன்றைய நமது தேடல், உழைப்பு எல்லாமே அடுத்த தலைமுறையை இப் பூமியில் விட்டுச் செல்வதற்காக தான்.

ஆனால், அடுத்த தலைமுறையினர் வாழுவதற்கு ஏற்ற நிலையில் இப்பூமியை விட்டுச் செல்ல வேண்டாமா?  இது சிந்திக்க வேண்டிய விசயம் மட்டுமல்ல. செயல்பாட்டைத் துரிதப்படுத்த வேண்டிய தருணம்.! அதற்கு, நாம் என்ன செய்யலாம் என்பதற்கு நம் சக பதிவர்கள் என்ன சொல்கிறார்கள்? கேட்கலாம்... வாருங்கள்!


1). நண்பர் ஈரோடு கதிர் அவர்களின் கண்ணில் சிக்கிய கோடியில் இருவரை  நீங்களும் அவர்களைக் கண்டு வாருங்கள்.

அந்த இருவரைக் கண்டு வந்தவுடன் வாழ்க்கையில் நாமும் ஒரு மரத்தையாவது நட்டு வளர்த்து ஆளாக்கிவிட வேண்டும் என்று ஒரு வேகம் பலருக்கும் வந்திருக்கும். அதில் ஒரு சிலர் உறுதியாக இருப்பீர்கள். உங்களைத்தான் இந்த உலகம் தேடிக்கொண்டிருக்கிறது. மரங்களை எப்படி நடுவது; எங்கு நடுவது? என ஒரு ஐயம் வந்திருக்கும் இல்லையா? 

2).அதற்கான விவரங்களை பசுமை இந்தியா   பகிர்வதைக் கேளுங்கள். 

மரம் வளர்க்க ஆசைதான் இடமில்லையே. நான் என்ன செய்யட்டும் என்பவர்களுக்காகவும் வீடு கட்டுவதற்கே இடத்தைக் காணோம் என்று சாக்கு போக்கு சொல்பவர்களுக்காகவும் இந்தக் கட்டுரையில்  அவரே ஆலோசனை சொல்கிறார்.

3).கவிஞர் நா.சுரேஷ்குமார் , ”மரங்களை வளர்ப்போம்”  என அழைக்கிறார். அதற்கான காரணங்களை அவர் எடுத்துரைக்கும் விதத்தை, கவிதையாய் கேளுங்கள். இவரின் வலைதளத்தில் சமூகத்தின் மீதான அவரது அக்கறையை வெளிப்படுத்தும் கவிதைகள் நிரம்பிக் கிடக்கின்றன.

இதையெல்லாம் இணையத்தில் தேடி படித்துக் கொண்டிருக்கும் போது பசி லேசாக வயிற்றைப் பிராண்டியது. மேசைமீதிருந்த வாழைப்பழத்தைச் சாப்பிடும் போது பிறர் பசியைப் போக்க உழைக்கும் வர்க்கத்தினரைப் பற்றியும், விவசாயம் பற்றியும் தேடிப் படிக்கலாமே எனத் தூண்டப்பட்டேன். கூகிள் துணையுடன் தேடல் துவங்கியது. 

4). பாரதி தம்பியின் “ நடைவண்டி”யைச் சென்று பாருங்கள்.  நாம் உண்ணும் சோற்றுப் பருக்கையை உற்பத்தி செய்ய வேலை இருக்கு...ஆள் இல்லை  எனும் குமுறலில் விவசாயிகள் எவ்வளவுச் சிரமங்களை எதிக்கொள்கிறார்கள் என்பது புரியும். 

விவசாயம் என்றவுடன் நீர் ஆதாரம் பற்றிய எண்ணம் அனிச்சையாய் வந்துவிட்டது. இது உலகில் எதிர்க்காலத்தில் மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தப் போகிறது என்பது கண் கூடாக தெரிந்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ’தேமே’ எனக் கிடக்கிறோம்.

5).பதிவர் பாரதி யின் தீப்பெட்டி-யைத் திறந்து மழை நீர் சேகரிப்பின்  வழிமுறைகளையும், அவசியத்தையும், புள்ளி விவரங்களுடன் புட்டுப்புட்டு வைக்கிறார்.
***

யற்கையைக் காக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே உரியது என்றாலும், துரதிர்ஷ்டவசமாக மொத்தமாக ஏழை விவசாயிகளிடம் மட்டுமே அதைப்பற்றிய கவலை இருக்கிறது. இயற்கையைக் காக்க அரசு ஆயிரம் திட்டங்களை அறிவித்தாலும், துறை சார்ந்த அலுவலகங்களில் வெறும் ஆணைகளாகவே உறங்கிக் கிடக்கின்றன. உரியவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கான உதவிகளை முன்னின்று அரசு ஊதியம் பெறும் அதிகாரிகள் முன்வர வேண்டிய தருணம் இது.  அதை அரசு, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் எல்லோரும் ஒரு கூரையின் கீழ் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி தீர்வை எட்ட வேண்டியது அவசர அவசியமாக இருக்கிறது.

இன்றைய பரபரப்பு வாழ்க்கையில் பணம் பணம் என்று பேயாய் அலைந்துக் கொண்டிருக்கிறோம். காசு கொடுத்தால் இங்கே எல்லாம் கிடைக்கும் என்ற நச்சு எண்ணத்தை இளம் சிறார்களின் மனதில் அவர்களறியாமல் நட்டு மரமாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த எண்ணத்தை அவர்களின் ஆழ்மனதில் இருந்து வேறோடு பிடுங்கி எறிய வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது.

ஒன்றாய் சிந்தித்து, நன்றாய் வாழ்வோம்.!

வாய்ப்பிற்கு நன்றி கூறி, வாழ்த்தியும், பின்னூட்டமிட்டும் உற்சாகப்படுத்திய உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தைச் சொல்லி இப்பணியிலிருந்து இன்றுடன் விடைபெறுகிறேன்.

நன்றி!!!
***
நாளை முதல் புதிதாய் பொறுப்பேற்க இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள். 

18 comments:

  1. ரொமான்ஸ் மூடில் இருந்து சமூக சிந்தனை மூடிற்க்கு வந்தாச்சு நண்பரே...இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  2. நாம் வாழும் இந்த உலகத்தை காக்க சுற்றுச்சூழலை இயற்கைக்கு தகுந்தாற்போல காக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் சமூக ஆர்வமுள்ள பதிவர்களை அறிமுகப்படுத்திய அண்ணன் சத்ரியன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், இந்த வாரம் முழுதும் பல நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகளும் பல.

    மீண்டும் சந்திப்போம் மனவிழி மூலமாக.

    ReplyDelete
  3. இந்த வாரம் முழுதும் சிறந்த பதிவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இந்த வாரம் இனிய வாரம் வாழ்த்துக்கள் சத்ரியன்

    ReplyDelete
  6. ஒரு மரத்தை வெட்டும் முன் இரு மரக்கன்றுகளை நடு என்று கூறினாலும், அதை அரசே செயல் படுத்த வில்லை என்பதால் பொதுமக்களும் அதை பற்றி அக்கறை கொள்வதில்லை.. சும்மாவா சொன்னார்கள், அரசு எவ்வழியோ மக்கள் அவ்வழி..

    ReplyDelete
  7. பயனுள்ள அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. யார் நமக்கு என்ன நல்லது செய்தாங்க என்பதில் கவனம் வைக்காம நாம எல்லாருக்கும் முடிந்தவரை நல்லது செய்தோமா என்பதை யோசித்தால் சட்டுனு எதுவும் கண்டிப்பா நினைவுக்கு வராது....

    ஆனால் பொதுவாக இயற்கையை வளப்படுத்த காக்க மழை வர மரம் நடச்சொல்லி மேம்போக்கா சொல்லாம இதோ இவர் பாருங்க இதைப்பற்றி எவ்ளோ சொல்றாருன்னு

    //நண்பர் ஈரோடு கதிர் அவர்களின் கண்ணில் சிக்கிய கோடியில் இருவரை நீங்களும் அவர்களைக் கண்டு வாருங்கள்.//

    இப்படி சொல்லி நல்லதையும் சொன்னது போலாச்சு... அதே சமயத்தில் அந்த நல்லதை சொன்னவர்களை அறிமுகப்படுத்தினது போலவும் ஆச்சு..

    இது தானே இன்றைய ஜெனரேஷனுக்கு வேண்டியது கூட...

    மெஷின் யுகமாகிவிட்டது.. காலைல எழுந்தோமா குளிச்சோமா சாப்பிட்டோமா ஓடு அலுவலகத்துக்கு... எதையும் யோசிக்க எல்லாம் டைம் வேஸ்ட் செய்வதில்லை....

    அரக்க பரக்க எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு மாலை வீட்டுக்கு வந்தோமா டீ கப்போடு டிவி முன்னாடி உட்கார்ந்தோமா.. அழுது வடியும் சீரியல்கள் பார்த்துக்கிட்டே மனைவி சமைத்து போடும் உணவினை சாப்பிட்டு நைட் தூங்க போயாச்சு....

    இப்படியே இருக்காம நம்மால முடிஞ்ச கொஞ்சம் நல்லதுகளையும் பண்ணுங்க மஹானுபாவர்களே அப்டின்னு நீங்க தேடி நீங்க கண்ட நல்ல விஷயங்களை தேடி அதுவும் பசியோட ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு... (ஏம்பா காலை உணவு ஸ்கிப் பண்ணிட்டீங்களா?)அப்படி செய்தால் உடலுக்கு நல்லதில்லையே?

    அருமையா அசத்தலா ஆரம்பிச்ச பணியை ஏழு நாட்களும் நல்ல நல்ல முத்துக்களான விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து சிறப்பா பதிவர்களை அறிமுகப்படுத்தி....

    அட முடிஞ்சுப்போச்சா.... நாட்கள் போனதே தெரியலை சத்ரியா....

    அருமையா எல்லாரும் நினைவில் வெச்சுக்கிறமாதிரி அசத்திட்டீங்க ஆசிரியரே....


    அன்பு நன்றிகளுடன் கூடிய வாழ்த்துகள் சத்ரியா.... கொடுத்த பணியை விருப்பமுடன் ஏற்று நகைச்சுவையும் கலந்து மிக மிக அருமையா நாட்கள் போனதே தெரியாம செய்தீங்கப்பா...

    அறிமுகப்படுத்தப்பட்ட நல்ல விஷயங்களுடன் கூடிய அறிமுக பதிவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்...

    சீக்கிரம் போய்ருச்சே ஏழு நாட்களும்...

    இனி அடுத்து பொறுப்பேற்கும் ஆசிரியருக்கும் என் அன்பான வரவேற்புகள்...

    ReplyDelete
  9. நீங்கள் நட்டுவைத்தவைகள்
    எங்களுடன் பசுமையாய்,,,,.........
    ரொம்பக் களைச்சுப்போய்
    இருப்பீக,வாறீகளா.....
    முத்துவுக்கு ஊர்வன,பறப்பன,நடப்பன
    எல்லாம் வயிறாரவாங்கிக் கொடுக்கிறேன்.

    ஓஓஓஓ.......
    முத்து இந்த முத்துவுக்கு பிடிக்காதுபோல...
    ம்ம்மம்ம........ சகுந்தலா?பாரு... பாரு சிரிப்பை
    மிக்கநன்றி உங்கள் உழைப்பிலும்.... உழைத்தமைக்கு!

    ReplyDelete
  10. ஓரேழு நாட்கள்
    ஓய்வின்றி பணியாற்றி
    இயம்பிய யாவையும்
    இயல்பாய் இருந்திட
    அறிமுக மேடையிலே
    தேர்ந்தெடுத்த முத்துக்கள்
    யாவுமே மேன்மையாய்
    செவ்வனே பணிமுடித்த
    எம் நண்பரே...
    வாழிய நீவீர்
    வளர்க நின் திறமை...


    அடுத்து வரும்
    பதிவாசிரியரை
    மனமுவந்து வரவேற்கிறேன்....

    ReplyDelete
  11. ஒன்றாய் சிந்தித்து, நன்றாய் வாழ்வோம்.!
    வலைச்சர அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. என்ன செய்து விட்டோம்? – கருத்தாழமிக்க கேள்விதான்.

    இதை இப்படியே விட்டா.. நம்ம பேரபுள்ளங்கெல்லாம், காடு, மரங்கள் எல்லாம் இந்த பூஉலகில் இருந்ததற்கான அறிகுறிகள் பற்றிய ஆய்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலை உருவகிவிடுமோ?? என்ற ஐயப்பாடு எழத்தான் செய்கிறது..

    நம்மால் முடிந்த எதையாவது செய்வோம்...

    சமூக ஆர்வமுள்ள பதிவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் சத்ரியன்..

    ReplyDelete
  13. ஆசிரியர் பணியை சிற‌ப்பாக செய்து முடித்திருக்கிறீகள் சத்ரியன்! மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. vaalthukal sakothara!
    Vetha. Elangathilakam.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் சத்ரியன்.

    ReplyDelete
  16. இவ்வாரம் முழுதும் உறுதுணையாய் இருந்து ஊக்குவித்த அனைத்து வலைச்சர வாசகர்களுக்கும், என் நண்பர்களுக்கும் இருகரம் கூப்பி வணங்கி விடைபெறுகிறேன். நன்றி.

    தொடர்ந்தும் என் கருத்துக்களை “மனவிழி” (http://manavili.blogspot.com) என்னும் வலைதளத்தில் பதிவிடுவேன்.

    சந்திப்போம்...!!!

    ReplyDelete
  17. கடந்த ஒருவார காலமாக வலைசரப்பணியை செவ்வெனச் சிறப்பாக செய்து பல சிறந்த பயனுள்ள மற்றும் புதிய பதிவர்களையும் அறிமுபடுத்தி வலைச்சர மகுடத்திற்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறீர்கள் அருமை...

    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பல...
    சிறப்பாக அறிமுகபடுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  18. வலைச்சரத்தில் இந்த வாரம் தொடங்கும் ஆசிரிய நண்பருக்கு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது