அறிமுகம் - ஜோதிஜி திருப்பூர்
எனக்கு
சீனா அய்யா கடிதம் அனுப்பியதும் இரண்டு நிமிடம் வரிகளை படித்து முடித்து விட்டு யோசித்துக்
கொண்டே இருந்தேன். ஏற்கனவே இதே வலைச்சரத்தில்
நாம் ஆசிரியராக இருந்துள்ளோம். பலரும் நம்மை இதே வலைச்சரத்தில் அறிமுகமும் செய்துள்ளார்கள்.
மீண்டும் நாம் வருவதை விட வேறு எவரையாவது பரிந்துரைக்கலாமா? என்று யோசித்தபோது அப்போது வேறு சில நினைவுகளும் வந்தது. நான் பரிந்துரைத்தவர்கள்
நேரமில்லை என்று அப்போது மறுத்து விட்டார்கள்.
சின்ன
வயதில் முயல் ஆமை ஓட்டப்பந்தயம் கதை படித்து இருப்பீர்கள் தானே?
என்
வலைதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு கட்டுரையை வெளியிட்டுக் கொண்டேயிருப்பேன். வாரத்தில்
ஒன்று அல்லது இரண்டு என்று மாற்றுவேன். திடீரென்று ஒரு மாதம் முழுக்க அந்த பக்கமே செல்வதில்லை.
காரணம் தொழில், குடும்பம் என்ற இரண்டு தண்டவாளத்தில் மேல் ஓடினால் தான் இந்த எழுத்து
என்ற பயணம் சுகமாக இருக்கும். தண்டவாளங்கள் சரியில்லை என்றால் வண்டி எப்போதும் கடமுடா
தான்.
குறிப்பிட்ட
சில பதிவுகளை தவிர்த்து மற்ற அத்தனை ஒவ்வொரு பதிவுகளும் 20 நாளைக்கு முன் திட்டமிடப்படுகின்றது
15 நாட்களுக்கு முன் எழுத்தாக மாறுகின்றது. அடுத்த 10 நாளில் அதை மற்நது விடுவேன்.
அதன் பிறகே சமயம் பார்த்து வெளியிடப்படுகின்றது. .பத்து நாளைக்கு முன்பாக என் எழுத்துப் பயணம் இருந்து கொண்டேயிருப்பதால் எந்த எழுத்துப் பயணம் இனிதாக இன்று வரையிலும் இருக்கின்றது.
இதே
போல் தினந்தோறும் கிடைக்கும் ஒய்வு நேரத்தில் ஏதோவொன்றைப் பற்றி அறியத் தொடங்கும் போது
அது குறித்த புரிதலுடன் என் பயணம் தொடங்குகின்றது. புரியாத விசயங்களுடன் சண்டை போட்டு
அதனை எப்படி மற்றவர்களுக்கு புரிய வைக்கலாம் என்பதில் கவனம் செலுத்த நானும் இந்த சமயத்தில்
பலவற்றையும் கற்றுக் கொள்ள முடிகின்றது.
பத்திரிக்கைகள் கட்டுரையில் பக்கம் முக்கியம்.
அதை விட அவர்களின் கொள்கை முக்கியம். எனக்கோ
வலையுலக வாசிப்பில் வந்த விமர்சனங்கள் முக்கியம். எவர் என் தளத்தில் படிக்கின்றார்கள்.
அவர்கள் விமர்சனம் எப்படி இருக்கின்றது என்பதை வைத்து என்னை நானே ஒவ்வொரு முறையும்
மாற்றிக் கொண்டே வருகின்றேன். ஆனால் உண்மைகளை
முடிந்த வரைக்கும் புடம் போட்டுப் பார்கின்றேன். முழுமையாக இல்லாவிட்டாலும் கூட என்
அனுபவ அறிவுக்கு எட்டியவரைக்கும் முயற்சி செய்து கொண்டேயிருக்கின்றேன். என் குடும்ப, தொழில், எழுத்து வாழ்க்கையில் முயலாமை, இயலாமை என்ற வார்த்தைகளுக்கு இடமே இருந்ததில்லை.
தேடல் தான் நம்மை மனிதராக வைத்து இருக்கின்றது.
உண்மையான மனிதராகவும் மாற்ற முயற்சிக்கின்றது.
சீனா
அவர்களை முதன் முதலாக டீச்சர் துளசி கோபால் அவர்களின் மணிவிழா நிகழ்ச்சியில் சந்தித்தேன்.
உள்ளே நுழைந்த நான் முன்னால் அமர்ந்திருந்த அவர் இருந்த இருக்கைக்கு அருகே சென்று அமர்ந்தேன். என்னை அவருக்குத்
தெரியாது. ஆனால் அவரை நன்றாக எனக்குத் தெரியும். என்னுடன் நண்பரும் வந்திருந்தார்.
நண்பரிடம் சீனா அவர்கள் காதில் கேட்கும்படி வலையுகில் நீங்கள் பார்த்தவரைக்கும் நேர்முறை
எண்ணங்கள், அமைதியான ஆர்ப்பபாட்டம் இல்லாத நதி போல ஒரே நேர்கோட்டில் அடுத்தவருக்கு
எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்து எவரையாவது பார்த்து இருக்கின்றீர்களா? என்று கேட்டு
விட்டு அவர் தான் இவர் என்று சீனா அவர்களிடம் கைகுலுக்கி நான் தான் ஜோதிஜி என்றேன்.
ஒரு கணம் திகைத்து நெகிழ்ந்து விட்டார்.
அப்போது
தான் என் முகம் அவருக்குத் தெரிந்தது.
பொறுமை, விடாமுயற்சி, ஆழ்கடல் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை
என்றால் அது எப்படி இருக்கும் என்பதை சீனா அவர்களிடம் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவரின் வயதில் நாம் இப்படி ஆரோக்கியமாக இருக்க முடியுமா? என்று பலமுறை யோசித்துள்ளேன்.
அவரிடம் அவருக்குத் தெரியாமலேயே நான்
நிறைய கற்றுக் கொண்டிருப்பதால் அவருக்கு கொடுக்க வேண்டிய பாக்கிகளை தீர்த்து விடும்
பொருட்டு இந்த வாய்பை எடுத்துக் கொண்டுள்ளேன்.
இந்த
வலைச்சரத்தில் அறிமுகமான, அறிமுகமாகப் போகும் பலருக்கும்
என்னை அறிமுகம் செய்து கொள்வதை விட என்னை இந்த வலைச்சரத்தின் வாயிலாக அறிமுகம் செய்துவைத்த திரு. அப்பாத்துரை அவர்களின் வரிகளை இந்த இடத்தில் இணைத்து விட்டுச் செல்கின்றேன்.
கடந்த நான்கு வருடங்களாக வலைபதிவில் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு கிடைத்த பல அங்கீகாரத்தில்
இந்த இடத்தில் இதைத் தவிர வேறு எதையும் சுட்டிக்காட்ட தெரியவில்லை. இந்த சமயத்தில்
தேவியர் இல்லம் திருப்பூர் என்ற வலைபதிவிற்கு கோடை விடுமுறை. சீனா அவர்கள் கடிதம் அனுப்பிய நாள் முதல் எழுதி வைத்து விட்டேன்.
இந்த வாரம் முழுக்க இங்கே இரவு நேரத்தில் மட்டுமே
இங்கே வர முடியும். ஒவ்வொரு நாளும் என் பதிவில் உள்ள சிலவற்றை ஒவ்வொரு நாளும் தரும் எண்ணமும் உண்டு. என் வலைபதிவு அனுபவங்களையும் தினந்தோறும் எழுதி வைத்து விடுகின்றேன். தினந்தோறும் நான் அறிமுகம் செய்யப் போவது இரண்டு பதிவுகள் மட்டுமே. ஆனால் அதனை என் விமர்சனப் பார்வையில் வைக்கப் போகின்றேன். பஞ்சாயத்தை கூட்ட விரும்பவர்கள் திருப்பூரில் காந்தி நகரில் உள்ள காந்தி வஸ்திராலயம் அலுவலகத்தில் உள்ள ஆலமரத்தடிக்கு அருகே வந்து விடவும்.
உணர்ந்தவர்கள் பெறுவீர்களாக.
வலை
என்றால் இணையம். அதென்ன பதிவுகள் என்றொரு வார்த்தை வருகின்றதே என்று யோசித்து இருக்கின்றீர்களா?
ஒரு
தகவல் நம் மனதில் ஆழ்மனத்தில் பதிவாக படிந்து போய் இருந்தால் அதை எந்த காலத்திலும்
அழித்து விட முடியாது. நவீன விஞ்ஞானம் இதை
மனநல மருத்துவத்தில் வைத்து பிரித்து மேய்ந்து கொண்டிருக்கின்றது. நம் விருப்பங்களை, ஆசைகளை, எண்ணங்களை, நோக்கத்தினை நம்மால் எழுத்துப் பதிவுகளாக மாற்ற முடியும்.
காகிதம் எதிர்காலத்தில் அழிந்தாலும் இந்த வலைபதிவுகள்
இன்னும் பல தலைமுறைகள் கழித்தும் பலரின் கண்களில் பட்டுக் கொண்டேயிருக்கும். இந்த அரிய
வசதியை கண்டு பிடித்து தந்தவர்களுக்கும் இதை
இன்று பரவலாக்கிய கூகுள் என்ற அமைப்பை உருவாக்கித்தந்தவர்களுக்கும், இந்த வலைபதிவுகளை அதன் பரிணாம வளர்ச்சியை தந்தவர்களுக்கும், முதலில் நாம் வணக்கத்தை வைத்து
விடுவோம்.
ஆனால் இந்த தமிழை உலகமெங்கும் கொண்டு
சேர்ந்த ஈழத் தமிழர்களை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
வலைபதிவுகளில்
யார் எழுதுகின்றார்கள்? யாருக்குப் போய்க் சேர்கின்றது? யாருக்கு முக்கியமானது? என்ன பலன்? எப்படி மாறும்?
1. அலுவலகத்தில்
செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல் பாதி நேரம் பயத்தோடு, பல நேரம் உழைக்க அக்கறையின்றி இருக்கும் புத்திசாலிகளுக்கு .....
2. என்
எழுத்தை அங்கீகரிக்க பத்திரிக்ககை உலகம் மறுக்கின்றது. நானே எனக்கு ராஜா. என் திறமையை
இந்த உலகத்திற்கே கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்று நம்பி எழுதுபவர்களுக்கு...........
3. உண்மையான
விசயங்களை பத்திரிக்கை உலகம் பொருட்படுத்துவதே இல்லை. அவரவர் சுயநலம் தான் முக்கியமாக
இருக்கின்றது. போட்டு உடைத்து கிழித்து மேய்ந்து எழுத கற்றுக் கொண்டவர்களுக்கு.........
4. என்
ரசனைகளுக்கு பத்திரிக்கைகள் தீனி போடுவதில்லை. ஒவ்வொருவர் அனுபவங்களையும் அவர்கள் எழுத்தின் மூலமாக நான் அதிகம்
வாசிக்க விரும்புகின்றேன்..........
5. உலகம்
முழுக்க பரவியுள்ள தமிழர்களைப் பற்றி நான் இருந்த இடத்தில் இருந்து கொண்டே அறிந்து
கொள்ள....
6. எனக்கு
வயதாகி விட்டது. ஓய்வு பெற்று விட்டேன். பரபரப்பான உலகில் பேச பழக ஆட்கள் கிடைப்பதில்லை.
நான் வாசிக்கும் புத்தகங்களையும் மீறி எனக்கு ஒரு ஆறுதல் வேண்டும் என்பவர்களுக்கு...
7. பதிவுகள்
என்பதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு எப்போதுமே
ஜாலியோ ஜிம்கானாதான். நானும் நல்ல விசயங்களை
தேடிப்போக மாட்டேன். தேடிவருபவர்களையும் முழு நேரமாக கலாய்த்துக் கொண்டிருப்பதே எனது
முழு நேர தொழில் என்பவர்களுக்கு................
8. எனக்கு
தினந்தோறும் அலுவலகம் முடியும் போது முடிந்த பிறகு ஒரு மணி நேரம் தான் கிடைக்கும்.
அந்த சமயத்தில் எவன் சொல்லும் அறிவுரையும் எனக்குத் தேவையில்லை. நான் எப்போதுமே கும்மி ஆதரவாளன். மொக்கை சங்கத்தின்
பொதுச் செயலாளர். அந்த சமயத்தில் தூள் கிளப்பிட்டு தூங்க போயிடுவேன் என்பவர்களுக்கு.....
9. பெற்ற
அம்மா ஒரு பெண் என்ற போதிலும் உடன் வாழும் மனைவி, கூடப்பிறந்த சகோதரி, பெற்ற மகள்கள்
இருந்த போதிலும் பெண்களை ரசிக்க, ரசித்ததை வார்த்தைகளில் கூச்சமின்றி எழுத அதை பீற்றிக்
கொள்ள கூடவே ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு.....
10. ஆழமான
கருத்துக்கள் அடங்கிய கட்டுரைகளைத் தேடுவேன். அற்புதமான தொழில் நுட்ப வசதிகளை அறிந்து
கொள்ள விரும்புவேன். ரசனையான படங்களை பார்க்க விரும்புவேன். அரசியல், ஆன்மீகம், சமூகம் குறித்த அக்கறையை எழுத்துக்களின்
மூலம் உள்வாங்க விரும்புகின்றேன் என்பவர்களுக்கு......
11. அலுவலகத்தில்
வீட்டில் இணையம் வசதி படைத்தவர்களுக்கு .................. தமிழ்நாட்டில் யூபிஎஸ் வசதி பெறற புண்ணிய ஆத்மாக்களுக்கு...........
12. பொழைக்கின்ற
பொழைப்பை பார்ப்பதை விட்டு விட்டு கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு கண்டதை பார்த்துகிட்டு
இருக்கானே(ளே) என்று திட்டு வாங்கிக் கொண்டும் இந்த உலகில் பயணிக்க ஆசைப்படுவர்களுக்கு..................
13. தற்போது இணையத்தில் அரசாங்கத்திற்கு பிடிக்காத கருத்துக்களை(?) எழுதுபவர்களை அடக்க 66 ஏ என்ற சட்டம் தற்போதைய புனித தலைவியின் ஆட்சியில் குண்டா சட்டமாகவும் மாறியுள்ளது. அய்யோ நாம் எழுதினால் களி திங்க வைத்து விடுவார்களோ என்று மனதளவில் பயந்து கொண்டே வேடிக்கை பார்க்க மட்டும் நினைப்பவர்களுக்கு ......
14. யாருக்கு ஓட்டுப் போட்டால் நமக்கு வந்து போடுவார்கள். யாருக்கு பகிர்வுக்கு நன்றி எழுதி வைத்தால் நம் பதிவுக்கு வருவார்கள் என்ற பிழைப்புவாதிகளுக்கு................
14. யாருக்கு ஓட்டுப் போட்டால் நமக்கு வந்து போடுவார்கள். யாருக்கு பகிர்வுக்கு நன்றி எழுதி வைத்தால் நம் பதிவுக்கு வருவார்கள் என்ற பிழைப்புவாதிகளுக்கு................
எதிர்கால
உலகம் இந்த வலையின் பின்னால் மட்டும் அணிவகுத்து நிற்கும் போது பலருக்கும் பலவிதமான
வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.
தகுதியிருப்பவர்கள்
பிழைப்பீர்களாக.
அடுத்த
வருடம் சந்திப்போம்.
ஜோதிஜி
திருப்பூர்.
படங்கள் 4 தமிழ்மீடியா.காம்