07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 18, 2012

அசைந்தாடும் அனுபவங்கள்



பழைய நினைவுகளை அசைபோடுவதே ஒரு ஸ்வாரசியம் தான்.

முதல் நாள் பள்ளி, முதல் நாள் காலேஜ்,முதல் நாள் வேலை, பண்டிகைகள்,வெளியூர் செல்ல டிக்கட்டுக்காக அலையா அலைந்தது பள்ளி, கல்லூரி என கட் அடிச்சிட்டு ஊர் சுற்றியது,சொந்த ஊருக்கு பயணம் சென்றது எல்லாமே பின்னாட்களில் நினைத்து பார்த்தால் என்ன ஒரு ஸ்வாரசியம்.நினைத்தாலே இனிக்கும் இல்லையா?






பசுமை நிறைந்தநினைவுகளே – அப்படியே இந்த பாட்ட கேட்டு கொண்டே பதிவ படிங்க..
படம்- நன்றி கூகிள் அக்கா

1.  தன் முதல் நாள் பள்ளிகூடம் ஒன்னாங்கிளாஸ் அனுபவத்த சொல்கிறார் நம்ம வலைச்சர தல அவர்கள்.
பள்ளியில் சேரும் வைபவம் மறக்க முடியாது. புதுச் சட்டை, புது டிராயர், புது சிலேட்டு, புது குச்சி ( இப்போ பல்பம்னு சொல்றானுங்க சென்னைலே), புதுப் பை (ஜமக்காளப் பை) எல்லாம் மொத நாளு எங்க தாத்தா வாங்கிக் கொடுப்பாங்க

//ம்ம்ம் வாங்க நாமும் அப்படியே நாமும் பின்னோக்கி ஒன்ன்னாப்புக்கு படிச்சத நினைத்து பார்த்தா ஆஹா எப்டி இருக்கும், அதே போல உங்கள் பிள்ளைகளை முதல் முதல் பள்ளிக்கு சென்று விடும் போது நீஙக பட்ட பாடு நினைவுக்கு வருதா. எல்லாமே ஒரு சுவாரசியமான அனுபவம் தானே//






2 .
   தகவல் மலரிலிருந்து பழைய சாத்தின்மகிமையை அழகுற பகிர்ந்து இருக்கிறார் ஷாகுல் வெயில்காலத்துக்கு ஏற்ற அருமையான சாப்பாடு இது.பழைய சோறு : அந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம் அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட காண முடியவில்லை. இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்படுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான். பழைய . ஆனால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. 


//பழையசாதமா என்று நினைக்க வேண்டாம் எண்ணையில்லாத அருமையான காலை நேர உணவு வயிற்றுக்கு இதமானது அதுவும் பழைய சாத்துடன் மோர் , வெங்காயம் பச்சமிளகாவ குருவலாக அரிந்து சேர்த்து கொத்து மல்லி தழையில் சேர்த்து பிசைத்து தொட்டுக்கொள்ள நார்த்தங்காய் ஊறுக்காய் ஆஹா ருசி சொல்லவா வேணும்..//.




3.பள்ளிகூடம் கட் அடிச்சிட்டு சினிமா, அருவியில் போய் குளிப்பது
அறை நன்பர்களுடன் கூட்டாக சேர்ந்து அடித்த லூட்டி அப்ப அப்பா இவ்வளவு வருடம் ஆகி நினைத்து பார்த்தாலும் மனதில் என்ன ஒரு குதூகலமுன்னு சொல்லுகிறார் யாரு வந்து பாருங்கள் இது என்னோட இடம் ...என் டீன் ஏஜ் ஆரம்பமே அலப்பறையா தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஆரம்பம் மட்டும் தான்... டவுசரில் இருந்து அப்ப தான் மாமா, அண்ணன்களின்பேண்ட்டுக்கு மாறிய காலம்




 படம்- நன்றி கூகிள் அக்கா

4. மோகன் குமார் அவரக்ளின் வெளியூர் போகிறீர்களா?
முதலில் செய்ய வேண்டியது ரயில் டிக்கெட் புக் செய்வது தான்இப்போது 120 நாள் முன்பே டிக்கெட் முன் பதிவு செய்யலாம் என்பதால் ரயில் டிக்கெட் மிக சீக்கிரம் புல் ஆகி விடுகிறது. சுவையான தன் அனுபவத்தை மற்றவர்களுக்கு பயன் படும் வண்னம் எழுதி இருக்கிறார்.








5.  ரோட்டில் கிரிக்கட், கோலி கில்லி ,ஐஸ்பாய், நொண்டி எல்லா பள்ளி பருவத்தில் விளையாடி இருப்பீங்க ஏதாவது ஞாபகம் இருக்கா?? 

 எல்லா மறந்து போயிருப்பிங்க வாங்க கில்லி விளையாடலாம. நடந்து சென்று,  கடந்து செல்லும்போது கிரிகெட் விளையாடிக் கொண்டிருந்த சில வாண்டுகளைத் தாண்டிச் சென்றேன். மரியாதை நிமித்தம் நான் கடந்து செல்லும்வரை ஆட்டம் நிறுத்தப் பட்டது.
 என்ன கில்லி ந்னா எல்லாருக்கும் விஜய் படம் ஞாபகம் வருதா?? அந்த கில்லி இல்லங்க  







6.நோன்பு காலசுவாரசியத்த பற்றி பாத்திமா என்ன சொல்றாங்கன்னு கேளுங்கள்.

முதலில் ஊர்.அடியேன் இராம்நாட் அல்ல,இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் எனும் ஊரை சொந்த ஊராகக் கொண்டவன்.முஸ்லிம்கள் அதிகம்.அதே அளவு ஹிந்து சகோதரர்களும் இருக்கிறார்கள்..

எங்க ஊர் நான்கு பள்ளிகளை தன்னகத்தே கொண்டது..ஊர் பெரிய பள்ளிவாசல்,எனக்கு தெரிந்து சுற்றுவட்டாரத்தில் இத்தனை பெரிய இரட்டை மனரா(Tower??) உள்ள பள்ளி இதுவாகத்தான் இருக்கும்.


7. கண்ணில் வைத்தியம் முடிந்து  கறுப்புக் கண்ணாடியும் நானுமாக ஒருநாள் வீட்டுப்  பலசரக்குப் பொருட்கள் வாங்கப் போயிருந்தோம்.கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் பழக்கம்
காரண்மாக  வேண்டும் என்ற பொருட்களைத் தள்ளுவண்டியில்
போட்டுக் கொண்டு எண்ணெய்   பாக்கெட்டை எடுக்க நிற்கும் போது
திடீரென்று பின்னால் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
எவ்வளவு நாள்;ஆச்சு?''
முதுமையும் கண் மருத்துவமும்
 நம்மை நாமே தான் பார்த்துக்கனும் தன் கையே தனக்குதவி







8. எங்களூரின் தெற்குப்பகுதி முழுக்க தென்னந்தோப்புகள் சூழப்பெற்ற கடற்பகுதி,பசேல் என்று இருக்கும் தென்னை மரங்கள்,குலை குலையாக காய்த்துக்குழுங்கும் தென்னைகள் முக்கிய விவசாயமாக உள்ளது.
வழக்கம் போல் இந்த முறையும் ஊர் சென்று இருந்த பொழுது பிக்னிக் செல்ல தவறவில்லை. என்னதான் பிஸ்ஸா பர்கர் என்று மேற்கத்திய உணவுக்கலாச்சாரம் தொற்றிக்கொண்டாலும் சுட்ட பனங்கிழங்கு,நுங்கு,தவன்,பனம்பழம் போன்ற தின்ன தின்ன சலிக்காத இயற்கை உணவு வகைகள் கடற்காற்றுடன் சேர்ந்து கலக்கும் தென்னைமரத்தின் சலசலத்த காற்று, செல்வந்தர் வசிக்கும் ஊர் நீங்களும் அது எந்த ஊருன்னு வந்து பாருங்களே




9. ஊர் சென்று திரும்பி வந்து அலமாரியை ஒதுங்க வைத்த பொழுது தான் அந்தக் கட்டுக்கடிதங்கள் என் கண்ணில் பட்டது. ஐந்து வருடங்கள் பின்னோக்கி சென்றன. நினைவுகள்.2C
நான் நினைத்து கூடப் பார்க்காத அந்தப் பணி செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ஒரு சிறிய கதை எனலாம்.
அபுதாபியில் எங்கள் வீடு இருந்த இடம் சுற்றி பள்ளிக்கூடங்கள் வரிசையாக இருக்கும். எதிர் வீட்டு சிந்து டீச்சர், 



வீட்ல மொத்தப் பேரும் டிவி நிகழ்ச்சியோட சுவாரஸ்யத்துல மூழ்கியிருக்காங்க. நீங்க இந்த நேரத்துல வந்ததை அவங்க விரும்பலைங்கறதை அவங்க முகமே காட்டிக் கொடுக்குது//
 கோடி ரூபா கொடுத்தாக் கூட உன்னை மதிக்காதவர் வீட்டுக்குப் போகாதே,  அவங்க அன்பில்லாம கொடுக்கறது அமிர்தமேயானாலும் அதைச் சாப்புடாதேன்னு நம்ம நாவப்பழப் பாட்டி, அதாங்க ஔவையாரே பாடி வைக்கலையா,..
ஆமாங்க இப்ப எல்லாம் சீரியல் டைமில் அல்லது டீவி பார்க்கும் டைமில் வீட்டில் இருப்பவர்கள் தண்ணி கேட்டாலே எடுத்து கொடுக்க பெரிய வேலையா நினைக்கிறாங்க  அப்ப எப்படி வருகிறவர்களை வரவேற்க??/ 





11. அந்த காலத்து தலைதீபாவளி கொண்டாட்டத்த பார்க்கனுமா?

வாங்க பார்க்கலாம் தீபாவளி கொண்டாட்டம் , பழைய காலத்து போட்டோக்கள் எல்லாம் பார்க்க பிரமாதமாக இருக்கும். அப்படியே இங்கு இவர்கள் தீபாவாளியில் நடந்த ஸ்வாரசியத்தையும் இங்கு வந்து பாருங்கள்.





12.மின்மினி அவங்க பஸ்பய அனுபவத்த என்ன சொல்றான்னு பாருங்க 

"எப்பா டாப்புல எதாவது லக்கேஜ் வச்சிருக்கீயா"
"
இல்லியே அண்ணே எதுவும் சாமான் இல்லையே"
"
அப்படியா மேல எதோ இருக்கிறமாதிரி தெரியுதே"
அப்படியா அண்ணே என்றவாறு டிரைவரும் சிலஆட்களும் மேலே ஏறிப்பார்த்தால் ஒரு பத்து பதிமூன்று வயதில் ஒரு சிறுவன் கம்பியை பிடித்தபடி பம்மிபோய் படுத்துகிடந்தான்.



13. என் பார்வையில் மாணவர்களின் உடலசைவு மொழிகளுக்கு நான் புரிந்துகொண்ட பொருள்களை என்னைப் போன்ற கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கும் பயன்தருமே என்பதற்காக வரிசைப் படுத்தியுள்ளார்.

மாணவர்கள் செய்யும் படிக்கிறது போல் செய்யும் பாவணைகளை நாள்தோறும் படித்தால் மட்டுமே அவர்களைப் புரிந்துகொள்ளமுடியும் என்பது என் அனுபவம்



என்ன பாடலுடன் அசந்தாடும் அனுபவம், மலரும் நினைவுகள் எல்லாம் நல்ல இருந்ததா? நாளைக்கு பார்ப்போம்



பழைய சாதத்துடன் அப்பாவின் நினைவுகள்.. இவ்வளவு பார்த்தீங்க என் நினைவுகளையும் பாருங்கள்.இப்ப எங்க வாப்பா எங்களுடன் இல்லை இது போல் பழைய ஞாபகங்களை தான் அப்ப அப்ப அசை போட்டு கொள்வது.

இப்படிக்கு
ஜலீலாகமால்

24 comments:

  1. நல்ல அறிமுகங்கள்.. சிலர் அறிந்தவர்கள்..சிலர் அறியாதவர்கள்! ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அறிமுகப்படுத்திய விதம் அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அனைத்தும் சுவாரஸ்யம். என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  4. அறிமுகங்கள் அழகாக இருந்தது.

    ReplyDelete
  5. அனைத்தும் சிறந்த தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. அருமையான அறிமுகங்கள்.
    அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. எங்கள் பதிவு, 'கில்லி' பற்றிக் குறிப்பிட்டதற்கு எங்கள் (ஆசிரியர்களின்) உளம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  8. சுவாரசியமான அனுபவப் பகிர்வு. அருமையாக பகிர்ந்திருக்கீங்க,ஜலீலா.
    என் மணித்துளி வலைப்பூவை
    நீங்க தான் முதன் முதலாக வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கீங்க.மிக்க நன்றி.

    ReplyDelete
  9. ஜலீலா என்பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அன்பு ஜலீலா சுவாரஸ்யமான பதிவுகள்.அறிமுகமான அனைவரையும் தெரிந்திருந்தாலும் எல்லாவற்றையும் படித்ததில்லை. இப்போ படிக்கலாம். என் பதிவையும் அறிமுகம் செய்தது மனசுக்கு ரொம்ப சந்தோஷம்.
    நன்றியும் வாழ்த்துகளும்மா.

    ReplyDelete
  11. ஆசிரியர் பதவி பெற்றதற்கு வாழ்த்துகள் அக்கா.

    முதல் பதிவே அசத்தலா இருக்கு. சில பதிவுகள் வாசித்தவை; ஆனா சில புதியவை, வாசிச்சப்போ அருமையா இருந்தன. ரொம்ப நன்றிக்கா.

    ReplyDelete
  12. அழகு அறிமுகங்கள்

    வலைச்சர ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ஒவ்வொருவரையும் அழகாய் அறிமுகப்படுத்தி ,,பழைய நெஞ்சில் நிற்கும் நினைவுகளை மீட்டு தாலாட்டி /வெளியூர் அழைத்து சென்று !!!
    அருமையான அறிமுகங்கள் மற்றும் பதிவு ..

    பி கு ....அப்பாவுடன் பழைய நினைவுகள் டாப் !

    ReplyDelete
  14. அறிமுகங்கள் அருமை.என்னையும் இணைத்ததுக்கு மிக்க நன்றி ஜலி.

    ReplyDelete
  15. அறிமுகப் படுத்திய ஜலீலாகமால் அவர்களுக்கும், அதை எங்களுக்கு அறிவித்த தனபாலனுக்கும் எங்கள் நன்றி! அறிமுகங்களில் எங்களுடன் உடன் அறிமுகமானவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. அழகாக வழங்கியுள்ளீர்கள்.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. பதிவு அருமையாகவுள்ளது.
    எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  18. இன்றையப் பதிவில் பின்னூட்டம் இட இயலவில்லையே ??

    ReplyDelete
  19. எல்.கே என்ன பிராப்ளமுன்னு தெரியலையே.

    என்ன செய்வது??

    ReplyDelete
  20. என் தளத்தை அறிமுகப்படுத்திய ஜலீலாக்காவும் அதனை எனக்கு அறிவித்த தனபாலனும் நூறாண்டு வாழ்க :-)))

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் ஜலீலா.
    குடத்துக்குள் இட்ட விளக்கு போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும் வலைப் பதிவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் இந்தத் தளத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. அசைந்தாடும் அனுபவங்கள் எல்லாம் அருமை.நீங்கள் சொல்வது போல் பழைய நினைவுகளை அசை போடுவதே ஸ்வாரசியம் தான்.நீங்கள் உங்கள் அப்பாவைப்பற்றி எழுதியதை படித்து நெகிழ்ந்து போய் இருக்கிறேன்.

    ReplyDelete
  23. நல்ல அறிமுகங்கள்:)

    ReplyDelete
  24. அருமையான அறிமுகங்கள்.. பசுமையான நினைவுகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது