07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 4, 2012

My Computer Icon எவ்வளவு ?

என் வாழ்நாளின் மிகப்பெரிய பர்ச்சேஸ் என்னுடைய லாப்டாப் :)

டேய் அந்த பட்டன எதுக்கு அவ்வளவு வேகமா அழுத்துற ?, ஸ்க்ரீன் ல கை வைக்காத டா, அம்மா பீரோகுள்ளார வச்சிருந்த  லாப்டாப்ப எதுக்கு வெளில எடுத்து வச்ச, அப்பா தம்பி கிட்ட என்ன கேக்காம லாப்டாப்ப எடுக்க வேணாம்னு சொல்லு, என்று என் குடும்பத்திற்கு கொலைவெறி தாக்குதல் கொடுத்த காலம் அது !

வெகு சிலர் மட்டுமே லாப்டாப் வைத்திருந்ததால் விளம்பரத்திற்காகவே அடிக்கடி கல்லூரிக்கு எடுத்து சென்றவண்ணம் இருந்தேன், ஆனால் மிகபெரிய  கம்ப்யுடரைலாம் பார்த்து பழம் தின்று கொட்டை போட்டிருந்த டிபார்ட்மென்ட் பென்டிரைவ்  என் லாப்டாப்பை பார்த்து தூ என துப்பிவிட்டது ! 

விளைவு கண்ட்ரோல் பேனலை காணவில்லை ! அய்யா கிணத்த காணோம் கிணத்த காணோங்குற ரேஞ்சுக்கு வகுப்பையே ரெண்டு பண்ணிவிட்டேன். 

என்னை தேற்ற பலரும் முயற்சி செய்து தோற்ற நிலையில், இதை கேள்விப்பட்ட என் நண்பன், 

இதுக்கு ஏன்டா அழற ? மச்சி இங்க வா இவனுக்கு அந்த கண்ட்ரோல் பேனலை நாமக்கல் போயிட்டு வாங்கிட்டு வந்து கொடு இந்தா 200ரூபா, நீ அழாத சூர்யான்னான். அந்த இடத்தில் சிரிப்பதா இல்லை மேல் கொண்டு பீல் பண்ணுவதா என்று குழம்பித்தான் போனேன். ஆனால் ஒன்று முடிவு செய்தேன் பென்டிரைவ் ஸ்கான் பண்ணி தான் போடணும், ஆண்டி வைரஸ் போடணும் இப்படி பல.

இப்படி இன்னும் கூட My Computer Icon எவ்வளவு ? என்று கேட்பவர்களுக்காகவே தான் இந்த பதிவு. 

எல்லாருக்கும் எல்லாம் தெரியவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் தெரிந்து கொள்வதில் தப்பில்லை தானே. 

நேத்து நம்ம அறிமுகத்துக்கும் நாலு பேர் ஓட்டு போட்டு இருக்காங்களே, அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என தேடி கொண்டிருந்தேன், பார்த்தால் தமிழ்மணத்தில் ஓட்டு போட்டது யார்? னு ஒரு பதிவு ! நம்ல மாதிரியே யோசிச்சிருக்காரே! அட நம்ம ப்ளாகர் நண்பன்! இதனால எல்லாருக்கும் தெரிவிப்பது நண்பர் ப்ளாகை பற்றிய ஆராய்ச்சியை முடித்து இப்பொழுது தமிழ்மண ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார் :)

அப்படியே 
வந்தேமாதரம் சசி 
தங்கம்பழனி
டெக் முருகானந்தம் 

எல்லாரும் நம்ம காய்ஸ் தான். சும்மா விசிட் பண்ணுங்க.

இன்றைய அவார்ட் :

இந்த பகுதியில் எனக்கு  பதிவுலகில் கிடைத்த சொந்தங்கள், நட்புக்கள்,பிடித்தவர்கள் இன்னும் பல .


பதிவுலகம் எனக்கு அளித்த உறவு என் அக்கா மனதோடு மட்டும் கௌசல்யா! படிக்க வேண்டிய பதிவுகள் ,
யார் இந்த மாமனிதர் ?! 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!
யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் பார்க்கிறது...!!

அட நமக்கு ஒரு அக்கா கிடைச்சாச்சுனு சந்தோசமா இருந்தா தம்பி எனக்கு ரெண்டுமே பசங்கதான் பொண்ணுங்க இல்லன்னு சொல்லிபுட்டாங்க :( , 
ம்ம் நம்ம கொடுத்து வச்சது அவ்வளவு தான்  

13 comments:

  1. ஹா..ஹா..ஹா... நகைச்சுவையாக இருந்தது. அதுக்குள்ளே பதிவு முடிஞ்சிடுச்சேன்னு வருத்தம்.

    என்னையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பா!

    முக்கியமான ஒருத்தரை விட்டுட்டீங்களே...?

    :D :D :D

    ReplyDelete
  2. நல்ல அறிமுகங்கள்... இவர்களை தெரியாதவர்கள் மிகவும் குறைவு...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. //எல்லாருக்கும் எல்லாம் தெரியவேண்டிய அவசியம் இல்லை, ஆனால் தெரிந்து கொள்வதில் தப்பில்லை தானே. //
    சூப்பர் நா...
    பிளாக்கர் நன்பனின் தமிழ்மணம் ஆராய்ச்சி பயனுள்ளதாக உள்ளது

    ReplyDelete
  4. @ Abdul Basith,

    //முக்கியமான ஒருத்தரை விட்டுட்டீங்களே//

    ஆமா.. தம்பி பிரபுவை அறிமுகப்படுத்தாம விட்டுப்புட்டாரு! :)

    BTW, பதிவு சின்னதா இருந்தாலும் கலக்கல்! :)

    ReplyDelete
  5. நர்மமான எழுத்துநடை
    நல்ல அறிமுகங்கள்
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடருங்கள் தோழரே

    ReplyDelete
  6. @ வரலாற்று சுவடுகள்,
    பாஸ், நானும் கற்போம்ல ஒருத்தன் தானே ஆகையால் பிரபுவ டீல்ல விடவேண்டியதாச்சு :)

    மறுமொழிகள் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  7. அறிமுகத்தளமெல்லாம் கணினி சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றது. புதிய தளமே எனக்கு. நன்றி

    ReplyDelete
  8. அன்பின் பிரகாஷ் - தளத்தினையே அறிமுகப் படுத்துவதை விட - அத்தளத்தில் உள்ள நல்ல் பதிவுகளை அறிமுகப் படுத்தலாமே ! இப்படித்தான் வலைச்சர ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகள் கூறுகின்றன.

    கௌசல்யா அக்கா அறிமுகத்துக்கு மட்டும் விதிமுறைகளின் படி சுட்டி கொடுத்து பதிவுகளை அறிமுகப் படுத்தி இருக்கிறாய் - மற்றவர்களுக்கு மட்டும் தள அறிமுகமா ? அடித்த பதிவில் இருந்து விதி முறைகளைப் பின் பற்று.

    நல்வாழ்த்துகள் பிரகாஷ்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  9. சுவாரசியமான் பதிவு அறிமுகம் அருமை

    ReplyDelete
  10. சிறந்த அறிமுகங்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பேய்கள்ஓய்வதில்லை!பகுதி7
    http://thalirssb.blogspot.in/2012/09/7.html

    ReplyDelete
  11. நல்ல அறிமுகங்கள்... இவர்களை தெரியாதவர்கள் மிகவும் குறைவு...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. இனிமையான துவக்கம்... தொடரட்டும் அறிமுகங்கள்.

    ReplyDelete


  13. அறிமுகத்தோட விருது வேறயா ? சூப்பர். :))

    டபுள் தேங்க்ஸ் சூர்யா.

    (சாரி கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்.)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது