சப்தப்ராகாரம் - ஆகாயம்
➦➠ by:
ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள்
ஸ்ரீரங்கம் கோவில் உட் பிராகாரங்களில் மேலே வரையப்பட்ட அந்த நாளைய ஓவியங்கள் பிரமிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் உரியவை.
கீழே வைத்து வரைந்தாலே சொதப்புகிற எனக்கு எப்போதுமே ஆச்சர்யம் அவற்றைப் பார்க்கும்போது... எப்படித்தான் அளவு தப்பாமல்.. துல்லியமாய்.. வரைந்தார்களோ.. அதுவும் அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கிக் கொள்ளும்.. சாரம் கட்டி.. ஊஞ்சல் போல.. படுத்த வாக்கில் தான் வரைந்திருக்க வேண்டும்.. என்ன அழகு.. என்ன அழகு..
பராமரிப்பின்றி பல ஓவியங்கள் மறைந்து வருகின்றன.. அந்த நாள் சரித்திரம் அவற்றில் பதிவாகி இருக்கும்.. நிறைய விஷயங்களை நாம் இழந்து வருகிறோம்.. இப்படித்தான்..
இனி இன்றைய பதிவர்களைப் பார்ப்போமா..
சிட்டுக்குருவி விமலனின் கைவண்ணத்தில் சிறகடிக்கிறது.. கவிதை.. சிறுகதை என்று இவரும் தனித்துவமாய் தமக்கென்று ஒரு பாணி வைத்துக் கொண்டு எழுதி வருகிறார்..
கரை சேரா அலை அரசன் - அரியலூர் என்று பார்த்ததும் எனக்குள் ஒரு உற்சாகம். என் ஒண்ணாப்பு அங்கே பக்கத்தில் விக்கிரமங்கலத்தில் தான் ஆரம்பித்தது. அம்மா இல்லா வீடு கவிதையில் என்ன அழகாய் மனசைத் தொடுகிறார் பாருங்களேன்.
என். உலகநாதன் நிஜமாகவே என் உலகநாதன் தான் ! எப்படி என்று கேட்கிறீர்களா. என் சிறுகதைக்கு அவரது வாசகர் கடிதம் விகடனில் முன்பு பிரசுரம். அப்புறம் அவரே பெரிய எழுத்தாளராகி தொகுப்பும் போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்.
என் மனதில் இருந்து ப்ரியா ஓவியமும் அழகாய் வரைகிறார்.. உடனே போய்ப் பாருங்க..
சிவகுமாரன் கவிதைகள் இந்த கவிச்சித்தனின் மனசு கவிதை மயமாய் நிற்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது..
இந்திராவின் கிறுக்கல்கள் விளையாட்டா எழுதற மாதிரி காட்டிகிட்டு சட்டுனு சீரியசா எழுதி அசத்தற இவங்க சொல்லிக்கிறது ‘இம்சிக்கிறேன்னு’..
மனதில் ரசனை இருந்தால் காண்பதெல்லாம் ரம்யம்தான் என்று சொல்கிற மாதேவி பதிவுகளில் தான் ஸ்ரீலங்காவின் அழகிய பகுதிகளை பார்த்தேன்..
பழனி.கந்தசாமி அவர்களின் கருத்துக்களோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்களோ இல்லையோ.. மனதில் பட்டதி துணிச்சலாய் எழுதும் அவர் எழுத்துக்களுக்கு ஒரு வசீகரம் இருக்கவே செய்கிறது.
வானம் வெளித்த பின்னும் ஹேமாவின் கவிதைகளில் ஈர்க்கப்படாதவர்கள் யார்.. பதிவர்களில் கவிதைக்கென்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் நிச்சயம் இவங்க பேரும் உண்டு. இன்னொரு தளமான உப்பு மடச் சந்தியில் சீரியசான பதிவுகள்..
ப.தியாகு வின் கவிதைகள் வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகையில் கொட்டிக் கிடக்குது.. கவிதை ரசிகர்களுக்கு நல் விருந்து நிச்சயம்..
வசந்த மண்டபம் வைத்திருக்கும் மகேந்திரனின் கவிதைகள் வார்த்தைகளில் எளிமை.. கருத்திலோ ஆழம்..மண்வாசனையோடு மணக்க மணக்க எழுதும் இவர் பதிவுகளில் ரசனை தன்னால் வரும்.
பூசலம்பு எழுதவே மாட்டேங்கிறாங்கன்னு சிலரை நினைச்சு வருத்தப்பட்டேன்ல.. அதுல இவங்களும் உண்டு..
இந்த ஆசிரியர் பொறுப்பு எடுத்ததில் தான் தெரிய வருகிறது.. நான் படித்துக் கொண்டிருந்த பலர் எழுதுவதை நிறுத்தி பல மாதங்களாகி விட்டது..
எதனால் இப்படி நேர்ந்ததோ.. சிலர் ரொம்ப ஆர்வமாய் தினம் ஒரு பதிவு போடும் அதே வேளையில் சிலர் எழுதுவதே அபூர்வமாகிற இந்த விசித்திரம் வாழ்வில் ஒரு வேடிக்கைதான்.
சிலரின் வலைப்பகுதிக்கு போகவே முடியவில்லை.. ஏதேதோ கேட்டு மிரட்டுகிறது.. பவர் கட் நடுவில், சுற்றிக் கொண்டே இருக்கும் அவஸ்தை..
இதனால் என் நினைவில் பதிந்த சிலரின் பதிவுகளைப் பற்றி எழுத முடியவில்லை..
விளையாட்டு போல ஐந்து நாட்கள் ஓடிவிட்டன.. இன்னும் இரண்டே நாட்கள் தான்.. அதற்குள் இன்னும் கொஞ்சம் பேரைப் பார்க்கணும்..
பார்ப்போம்..