07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, February 22, 2013

5. வலைச்சரம் ஐந்தாம் நாள்: கருத்துரைகள்



நாம் நமக்கு கிடைத்த எழுத்து சுதந்திரத்தில் நமக்கு பட்டதை எழுதுகிறோம். வலைப் பதிவில் பத்திரிகைகளில் செய்யும் தணிக்கை முறை இங்கு இல்லை. எனவே நாம் சொன்ன கருத்துக்கள் சரியா தவறா என்று நமக்கு தெரியாது. இதை சுட்டிக் காட்ட மற்றவர்கள் கருத்துரைகள் நமக்கு அவசியம் தேவை. வலைப் பதிவை எழுதத் தொடங்கியதுமே கருத்துரைப் பெட்டியில் ( COMMENTS BOX ) அடுத்தவர்கள் கருத்து உடனே எதிர்பார்க்க கூடாது..  நாம் நன்றாக எழுத எழுத,  மற்றவர்கள் பதிவுகளில் நமது கருத்தைச் சொல்லச் சொல்ல நமக்கும் கருத்துரைகள் வந்து சேரும்.

இன்றைய  எனது அறிமுக வலைப்பதிவுகள்:

.
வவ்வால் தனது பதிவுகளில் A to Z எல்லாவற்றையும் அக்கு வேறு ஆணி வேறாக காட்டுவார். நான் எனது பதிவில்புதிய பதிவர்களே! பின்னூட்டம் பற்றி கவலைப் படாதீர்கள்!http://tthamizhelango.blogspot.com/2011/10/blog-post_25.html என்று எனது வலைப் பதிவு அனுபவத்தை வைத்து ஒரு கட்டுரை தந்தேன். அப்போது  //சாரே கவலைப்பட்டாதிங்க நான் உங்களுக்கு ஆதரவு தரேன்.(பின்னூட்டம் கிடைக்காம ரொம்ப நொந்து போயிருப்பிங்க போல தெரியுது)  இப்படி மரங்களை காப்போம், மண் வளம் காப்போம் , விவசாயிகள் பாவம்னுலாம் பதிவுப்போட்டா யாரும் எட்டிப்பார்க்கமாட்டங்க(அனுபவம்) சினிமா விமர்சனம்(கில்மா படமா இருந்த டபுள் ஓகே) அடல்ட் ஜோக், கிசு..கிசு எழுதீனா கல்லா கட்டலாம்! :-)) // என்று ஆதரவு தந்தவர் இவர்.  தனது கட்டுரைகளில் பல விவரங்களை புள்ளி விவரங்களோடு சொல்கிறார். இடையிடையே நகைச் சுவையும் நையாண்டியும் இழையோடும். சினிமா, அரசியல், ஊர், உலகம் என்று எல்லாவற்றிலும் வலம் வருகிறார்.
பெட்ரோல் விலை ரகசியம்! என்ற பதிவில் பெட்ரோல் வில உயர்வுக்கான காரணங்கள் என்று சில புள்ளி விவரங்களைத் தருகிறார். http://vovalpaarvai.blogspot.in/2011_12_08_archive.html

இன்வெர்ட்டர் (Inverter ) குறித்து இவர் எழுதிய மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி சேமகலன் . என்ற கட்டுரையில் நிறைய விவரங்கள். http://vovalpaarvai.blogspot.in/2012_02_12_archive.html


பதிவின் பெயர் : வீடு திரும்பல் 
http://veeduthirumbal.blogspot.com ( மோகன்குமார் )

வீடு திரும்பல் மோகன்குமார் அவர்களின் பதிவுகளைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தமிழ்மணம் தர வரிசையில் முதல் இடத்தில் உள்ளவர். இவருடைய பதிவுகளில்  இவர் தரும் புகைப்படங்களே போட்டோகிராபியில் இவருக்குள்ள ஆர்வத்தைக் காட்டும். சென்ற ஆண்டு சென்னையில் நடந்த பதிவர் மாநாடு குறித்து இவர் தந்த பதிவுகள் மூலம் ( பதிவுலக நண்பர்கள் )
பல பதிவர்களின் முகங்களைக் காண முடிந்தது.
நீடாமங்கலத்தைச் சேர்ந்த வீடு திரும்பல் மோகன்குமார் அவர்கள் தனது சொந்த ஊரைப் பற்றி  நீடா நினைவுகள்(12).என்ற தலைப்பில் எழுதியுள்ளவை மிகவும் அருமை. உதாரணத்திற்கு...

இந்த பதிவர் ராமலக்ஷ்மி ஒரு சிறந்த போட்டோகிராபர். இவரது வலை முழுக்க வண்ண மயமான புகைப் படங்களைக் காணலாம். நானும் போட்டோகிராபியில் ஆர்வம் உள்ளவன். அவரது நெல்லை கோயில் பற்றிய பதிவினை படங்களுடன்  காணலாம்.

இறையும் கலையும் - நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் புகைப்படங்கள்.http://tamilamudam.blogspot.com/2010/12/blog-post_09.html

இவர் அங்கத்தினராக இருக்கும்  PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை என்ற வலைத்தளம் புகைப்படக் கலையை எளிய தமிழில் இனிமையாகத் தருகிறது. பதிவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வலைத்தளம்.

பதிவின் பெயர் : gmb writes
 http://gmbat1649.blogspot.in   (G M பாலசுப்ரமணியம்)

உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும். -  என்று சொல்லும் இவர், தன்னை 74 வய்து நிரம்பிய இளைஞராகவும் , திறந்த ஒரு புத்தகமாகவும் சொல்வதிலிருந்தே இவரது தன்னம்பிக்கையையும் உறுதியையும் தெரிந்து கொள்ளலாம். பதிவுகளிலும் அவை எதிரொலிக்கக் காணலாம்.  கீழே பாம்புகளைப் பற்றி ஒரு இடத்தில் சுவையாகச் சொல்லுகிறார்.

என்ற பதிவில் //  இந்தியாவில்  ஒரு இடத்தில்  ராகு காலம் இன்னொரு  இடத்தில்  வேறு நேரத்தில் அல்லவா இருக்கவேண்டும்.. இந்தியாவில் ,ஜப்பானில், அமெரிக்காவில்  ராகு காலங்கள்  ஒரே  நேரத்தில்  இருக்க  சாத்தியமில்லையே...//  என்று கேட்கிறார்.

பதிவின் பெயர் : அரசர் குளத்தான்

இவர் எழுதும் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து படிப்பேன். பெரும்பாலும் அரசியல் என்பதால், நான் கருத்துரைகள் அதிகம் தந்ததில்லை. இது நியாயம்தானா? நீங்களே சொல்லுங்கள் ஒரு பதிவரின் ஆதங்கம் www.rahimgazzali.com/2011/11/beware-copy-paste-blogger.html என்ற கட்டுரையில் தனது பதிவுகளை நகல்/ஒட்டு வேலை (COPY &  PASTE) செய்பவர்களைப் பற்றி எழுதியுள்ளார்.

பதிவின் பெயர் : முகம்மத் ஆஷிக் citizen of world 

நான் வலைப் பதிவு தொடங்கிய சமயத்தில் எனது பதிவு ஒன்றிற்கு கருத்துரை தந்து ஊக்கப் படுத்தியவர்களில் இவரும் ஒருவர். இவரது பதிவுகளை தமிழ் திரட்டிகளில் படித்துள்ளேன்.  இவர் எழுதிய ஒரு பதிவு எனக்கு உபயோகமாக இருந்தது. அந்த பதிவு இது..

பதிவின் பெயர் : மதுரை சரவணன்

கல்விப் பணியோடு சமூக சேவைகளையும் செய்து வரும் மதுரை சரவணன் அவர்கள் வலைப்பதிவிலும் அச் செய்திகளைத் தருகிறார். அண்மையில் பள்ளி மாணவர்களைக் கொண்டு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு தெரு நாடகங்களை மதுரையில்  நடத்தினார் இவர்களையும் புறக்கணிக்கலாமா?   என்ற தலைப்பில்   http://veeluthukal.blogspot.in/2011/12/blog-post.html  மாற்றுத் திறனாளிகள் குறித்த சமூகப் பார்வை கட்டுரை ஒன்றை தந்துள்ளார்.

பதிவின் பெயர் : சந்திரகௌரி  

சகோதரி சந்திரகௌரி அவர்கள் கதை, கட்டுரை, கவிதை என்று ஆர்வத்தோடு எழுதி வருகிறார்.
தமிழர் கலாசாரத்தில் தாலி என்ற தலைப்பில் ஒரு வரலாற்றுத் துறை பேராசிரியர் போன்று விளக்கமாக எடுத்துரைக்கிறார். http://kowsy2010.blogspot.in/2011/10/blog-post_13.html
துடக்கு என்ற தலைப்பில் தீட்டு என்றால் என்ன என்பதை விளக்குகிறார். அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது. http://kowsy2010.blogspot.in/2011/10/blog-post_21.html

மேலும் இவர், பெண்களுக்குத் தேவையான குறிப்புகளை கீழே சொல்லப்பட்ட தனது வலைப பதிவில் வழங்குகிறார்.

பதிவின் பெயர் : கவியாழி
http://kaviyazhi.blogspot.in (கவியாழி கண்ணதாசன்)

உணர்ச்சி வெள்ளத்தை உள்ளத்தின் உள்ளே வைக்காமல் வெளியே கவிதை வரிகளைக் கொட்டுகிறார். இவர் எழுதிய கவிதைகளில் என்னைக் கவர்ந்த கவிதை அம்மா.....வருவாயா? (மீண்டும் )அன்பை .....தருவாயா? என்ற தலைப்பில்.

உயிர் பிடித்து உடல் கொடுத்து
உள்ளத்தில் நல் அன்பை விதைத்து
நல்பிள்ளையாய் நாளும் வளர்த்து-என்னை
செல்லமாய்  நன்கு  சீராட்டி வளர்த்தவளே

பதிவின் பெயர் : வரலாற்று சுவடுகள்
 
சுற்றுப்புறச்சூழல், அறிவியல், வரலாறு, மருத்துவம் என்று இவரது பதிவுகளில் காணலாம். பல பதிவர்களின் பக்கங்களில் கருத்துரைப் பெட்டியில் (Comments Box) இவருடைய கருத்துரைகளைக் காணலாம். உலகின் முதல் பல்கலைக்கழகம் ...  பற்றி ஒரு பதிவு.

பதிவின் பெயர் : "நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை" www.eraaedwin.com  (இரா.எட்வின்)

ஆசிரியர் பணியில் இருக்கிறார். இவருடைய பதிவில் சமூக சாடல்களையும் ஆதங்கத்தினையும் காணலாம். நடந்தாய் வாழி காவேரி என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். இவரோ


பதிவின் பெயர் : இதமான அலைகள்
http://yashothakanth.blogspot.com (யசோதாகாந்த்)

யசோதாகாந்த் - நல்ல பெண் கவிஞர் இவர். இயல்பாகவும் அதேசமயம் ஆவேசத்துடனும் சமூகக் கொடுமைகளை சாடுகிறார்
கருணை இல்லா கற்புக்கரசி என்ற தலைப்பில் http://yashothakanth.blogspot.in/2011/10/blog-post_7728.html
//பத்தினிபெண் நீ என்பதால்
  உன்னை தலை வணங்குகிறேன் //
என்று தொடங்கிய வரிகள்
//புத்தகங்கள் வேண்டுமானால் உனை புகழட்டும்
  எனக்கு உன் மேல் என்றென்றும் கோபமே! //
என்று முடிகின்றன.


சமயத்தில் மாடர்னாகவும் சமயத்தில் கட்டுபெட்டியாகவும் இருக்க பிடித்த ஒரு பெண்ணின் பார்வை தான் இது.என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்கிறார்.  ஈரோடு கௌரி! இளம் பதிவர் இவர். எது கவிதை ? என்ற தலைப்பில்
http://sadharanamanaval.blogspot.in/2012/08/blog-post_8.html  கவிதையைப் பற்றி பேசுகிறார்.

மடக்கி எழுதினால் கவிதை
மடக்காமல் எழுதினால் கட்டுரை
என்கின்றனர் ஒரு சாரார்
மடக்கி மடக்கி எழுதினால் அது மடக்கி
கவித்துவமாக எழுதினால் அது கவிதை
என்கிறார்கள் இன்னொரு சாரார்


பதிவின் பெயர் : கன்னம்.காம்
http://www.kannam.com (சதிஷ் பிரபு)

பல்வேறு தலைப்புகளில் பல கவிதைகள். இக் கவிதைகளை எழுதும் பதிவர் ஒரு வழக்குரைஞர். அவர் தந்த கவிதைகளில் ஆரம்ப காலத்தில் நான் படித்து ரசித்த ஒரு கவிதையில் சில வரிகள்...
// எத்தனை பேர் வந்தாலும்
அவன் அலுவலகத்தில்
வெளியே கிடக்கும் செருப்பு
அவனுடையது மட்டும்தான்..!//

கன்னத்தில் கத்தி போடும் போது கவிஞர் கனிவாக கண்ட காட்சி கவிதையாக வந்துள்ளது. மற்ற கவிதைளும் வார்த்தைகளால் விளாசுகின்றன.

பதிவின் பெயர் : நிஜாம் பக்கம்...
http://nizampakkam.blogspot.in                ( அ.முஹம்மது நிஜாமுத்தீன் )

ஆனந்தவிகடன், கல்கி இதழ்களில் இவரது படைப்புகள் வந்துள்ளன. இயல்பான நடையில் எழுதுகிறார். சிதம்பரத்தில் கூரியர் சர்வீஸ் அறிமுகமான சமயம் அங்கு ஒரு சர்வீஸில் பணியாற்றி இருக்கிறார். அப்போது பணி முழுவதும் ரெயிலில்தான். அந்த நினைவோடைகளை  ரயில் வரும் நேரமாச்சு! என்ற பதிவில் சொல்லிச் செல்கிறார்.

// என்னைக் கவர்ந்த பாடல் இது. உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். // என்று பழைய பாடல்களின் வரிகளைத் தந்துள்ளார். இதோ ஒரு பாடலின் வரிகள் அனைத்தும்
எனக்கும் இந்த பாடலும், படமும் பிடிக்கும். ரங்கராவ் நடிப்பு கண்ணில் நீரை வரவழைக்கும்.

பதிவின் பெயர் :  திருமதி பக்கங்கள்

சகோதரி கோமதி அரசு அவர்கள். ஆர்வத்துடன் நிறைய பதிவுகள் தந்து இருக்கிறார்.

தனது தங்கை பேரனின் ஆயுசுஹோமம், முடிஇறக்குதல், காதுகுத்துதல் ஆகிய விழாக்களில் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சியை இந்த பதிவில் அழகிய படங்களுடன் விவரிக்கிறார்.


பதிவின் பெயர் : ரிஷபன்

ரிஷபன் அவர்கள் பத்திரிகை எழுத்தாளர் மற்றும்  வலைப்பதிவர் ஆவார். திரு. VGK ( வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களின் நண்பர். ரிஷபன் அவர்கள் தனது வலையில் சிறுகதை, கவிதைகள், ஆன்மீகம் என்று பல தலைப்புகளில் எழுதி வருகிறார். நான் ரசித்த அவரது நீங்களும் நானும்   என்ற கவிதையிலிருந்து சில வரிகள்:
கை குலுக்கிக் கொள்ளலாம்..
இருக்கை பற்றிய அவஸ்தை இல்லை..
... ... ... ... ...
கை குலுக்கல் என்றால் மனதின் இழைதல்..
முரண்பாடற்று..
நாளை இன்னொரு இடம்.. இன்னொரு கவனிப்பு..
வாழ்க்கையை அதன் போக்கில்
ரசிப்பதை..யார் தடுத்தார்கள் இப்போது ?


55 comments:

  1. என்னை இந்த தளத்தில் அறிமுகம் செய்த உங்களுக்கு எனது நன்றிகளும் ,பாராட்டுகளும்.இதுவரை இவ்வளவு அதிகமான நபர்களை அறிமுகப்படுத்திய பெருமை உங்களையே மட்டுமே சாரும்.பணிசிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகச் சிறந்தப் பதிவர்களை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  3. இன்றைய அறிமுகத்தில் பலர் எனக்குப் புதியவர்கள்!

    இடையில் நிறைய விட்டுட்டேன் போல இருக்கே:(

    போய்ப்பார்க்கிறேன்.

    அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  5. என் ’உறவோடு உறவாடி’ பதிவை நீங்கள் குறிப்பிட்டு பகிர்ந்து கொண்டதற்கு முதலில் நன்றி.

    திரு பாலசுப்ரமணியம் சார், திருமதி. ராமலக்ஷ்மி, திரு. கவியாழி கண்ணதாசன் திரு,ரிஷபன் ஆகியோர் பதிவுக்கு அடிக்கடி போய் இருக்கிறேன். நன்கு எழுதுவார்கள். மற்ற பதிவர்கள் பதிவுகளை படிக்கவேண்டும். எல்லோரும் நன்கு எழுதுகிறார்கள், இன்று நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    இவ்வளவு பேர் பதிவுகளை படித்து அதை பகிர்ந்து கொண்டதற்கும்,
    கொடுத்த வலைச்சர ஆசிரியப்பணியை சிறப்பாக செய்வதற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இதமான அலைகள் தளம் புதிது - நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. அறிமுகமான அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  8. அறிமுகமான அத்துணை பேருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  10. 22.02.2013
    மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
    மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
    மறுமொழி > துளசி கோபால் said...
    மறுமொழி > மோகன் குமார் said...
    மறுமொழி > கோமதி அரசு said...
    மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    மறுமொழி > அமைதிச்சாரல் said...
    மறுமொழி > rajalakshmi paramasivam said...
    மறுமொழி > ஸ்கூல் பையன் said...

    வலைச்சரம் வந்து கருத்துரை தந்த அன்பு பதிவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  11. அறியாத பல பதிவர்கள். அறிமுகத்துக்கு நன்றி.
    கவியாழி - பெயரே கவிதையாக இருக்கிறதே!

    ReplyDelete
  12. இன்றைய அறிமுகத்தில் எனக்குப் பலர் புதியவர்கள். இரவு அனைவருடைய தளத்திற்கும் சென்று படிக்கிறேன்.

    சிறப்பான அறிமுகங்களுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  13. அருமையான பதிவுகளை கொடுத்து அமர்கள படுத்திய நண்பருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. உன் நண்பனை காண்பி . உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள் . அது போல உங்கள் வலைச்சர அறிமுகங்களே உங்கள் மீது மரியாதையையும் , பிரியத்தையும் ஏற்படுத்துகின்றது .
    நன்றிகள் உங்களுக்கு ....
    வாழ்த்துக்கள் அறிமுகங்களுக்கு ...

    ReplyDelete

  15. வலைச்சரத்தில் என் பதிவுகள் சிலவற்றைக் கூறி அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  16. முதலில் ஒவ்வொரு பக்கமும் சென்று அனைத்தையும் பார்வை இட்டு சில பதிவுகளை அடையாளம் காட்டி உங்கள் பணியைத் தலைமேல் கொண்டு செய்தமைக்குப் பாராட்டுக்கள். அடுத்து எனது பதிவுகளை எடுத்துக் காட்டியமைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. என்னையும் இங்கே குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி சகோ.தி.தமிழ் இளங்கோ. எனது நல்லதொரு அனுபவ பகிர்வு பிறருக்கும் உபயோகமாக அமைந்தது அறிந்து மிக்க மகிழ்ச்சி. தங்களின் வலைச்சர ஆசிரியப்பணி மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் சகோ.

    ReplyDelete
  18. என்னையும் இங்கே குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  19. மறுமொழி > அப்பாதுரை said...
    மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    மறுமொழி > கோவை மு சரளா said...
    மறுமொழி > ஜீவன்சுப்பு said...
    மறுமொழி > G.M Balasubramaniam said...
    மறுமொழி > சந்திரகௌரி said...
    மறுமொழி > ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
    மறுமொழி > ரிஷபன் said...

    வீடடைவிட்டு வெளியே சென்று இருந்தபடியினால் மறுமொழிகளை தனித்தனியே சொல்ல இயலவில்லை. வலைச்சரம் வந்து கருத்துரை தந்த அன்பு பதிவர்களுக்கு நன்றி!


    ReplyDelete
  20. முத்துச்சரம் அறிமுகத்துக்கு மிக்க நன்றி. தங்களைக் கவர்ந்த பதிவர்களாக இங்கே இடம் பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    PiT, புகைப்பட ஆர்வமுள்ள நண்பர்கள் ஒரு குழுவாக இணைந்து நடத்தி வருகிற தளம். எனது தனிப்பட்ட வலைப்பூ அல்ல என்பதை ஒரு தகவலாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

    வலைச்சர வாரத்துக்குத் தங்களுக்கும் என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  21. மறுமொழி > ராமலக்ஷ்மி said...

    சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // PiT, புகைப்பட ஆர்வமுள்ள நண்பர்கள் ஒரு குழுவாக இணைந்து நடத்தி வருகிற தளம். எனது தனிப்பட்ட வலைப்பூ அல்ல என்பதை ஒரு தகவலாகப் பகிர்ந்து கொள்கிறேன். //

    தவற்றினை சுட்டி காட்டியமைக்கு நன்றி! மன்னிக்கவும்!

    ReplyDelete
  22. மறுமொழி ( 2 ) > ராமலக்ஷ்மி said...
    தாங்கள் சுட்டி காட்டிய தவற்றினை சரி செய்து விட்டேன். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  23. வணக்கம் சகோதரர் திரு .தமிழ் இளங்கோ அவர்களே .. உங்கள் அறிமுக பதிவில் என்னையும் உள்படுத்தி என்னை அறிமுகம் செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .. வலைச்சரம் நான் தொடர்ந்து வாசிக்கும் வலை தளமே .. இங்கு எனது பெயரையும் காண்கையில் மகிழ்ச்சி அடைகிறேன் ..உங்கள் அனைவரது ஆதரவும் மேலும் எனது ஆக்கங்களை சிறப்பாக்கும் என்பதில் ஐயமில்லை .. மனமார்ந்த நன்றிகளோடு

    அன்புடன்
    யசோதா காந்த்

    ReplyDelete
  24. ஐயா, வணக்கம்.

    சற்றே உடல்நலக்கோளாறுகளால் என் வருகையில் இன்று தாமதம். நேற்றும் அது போலவே இருந்ததால் தான் சற்றே சுருக்கமாக முடித்துக்கொள்ளும் படியாகிவிட்டது.

    இன்றைய தங்களின் முதல் அறிமுகத்தைப் படித்ததுமே வாய்விட்டுச் சிரித்தேன். உடனே நோய் விட்டுப்போனது.

    குறிப்பாக அவர் தங்களுக்கு எழுதியிருந்த ஆதரவான வரிகளான

    //சாரே கவலைப்பட்டாதிங்க நான் உங்களுக்கு ஆதரவு தரேன்.(பின்னூட்டம் கிடைக்காம ரொம்ப நொந்து போயிருப்பிங்க போல தெரியுது) இப்படி மரங்களை காப்போம், மண் வளம் காப்போம் , விவசாயிகள் பாவம்னுலாம் பதிவுப்போட்டா யாரும் எட்டிப்பார்க்கமாட்டங்க(அனுபவம்) சினிமா விமர்சனம்(கில்மா படமா இருந்த டபுள் ஓகே) அடல்ட் ஜோக், கிசு..கிசு எழுதீனா கல்லா கட்டலாம்! :-)) //

    என்பதை பலமுறை திரும்பத்திரும்ப படித்து மகிழ்ந்தேன்.

    கல்லாக்கட்டத்தெரியாமல் இப்படி ஏமாளியாக இருக்கிறோமே எனவும் எனக்கு வெட்கம் ஏற்பட்டது. ;)))))

    >>>>>>>>

    ReplyDelete
  25. வணக்கம் சகோதரர் திரு .தமிழ் இளங்கோ அவர்களே .. உங்கள் அறிமுக பதிவில் என்னையும் உள்படுத்தி என்னை அறிமுகம் செய்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .. வலைச்சரம் நான் தொடர்ந்து வாசிக்கும் வலை தளமே .. இங்கு எனது பெயரையும் காண்கையில் மகிழ்ச்சி அடைகிறேன் ..உங்கள் அனைவரது ஆதரவும் மேலும் எனது ஆக்கங்களை சிறப்பாக்கும் என்பதில் ஐயமில்லை .. மனமார்ந்த நன்றிகளோடு

    அன்புடன்
    யசோதா காந்த்

    ReplyDelete
  26. இன்று தங்களால் அடையாளம் காணப்பட்டு, வலைச்சரத்தில் தொடுக்கப்பட்டுள்ள, அனைத்து பதிவர்களுக்கும், என் மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள்.

    தங்களுக்கும் என் நன்றிகள்.

    >>>>>>

    ReplyDelete
  27. அறிமுகமான அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  28. உடனடியாகத் திருத்தம் மேற்கொண்டதுடன் தெரிவித்ததற்கும் நன்றி.

    ReplyDelete
  29. உடனடியாகத் திருத்தம் மேற்கொண்டதுடன் தெரிவித்ததற்கும் நன்றி.

    ReplyDelete
  30. //ரிஷபன் அவர்கள் பத்திரிகை எழுத்தாளர் மற்றும் வலைப்பதிவர் ஆவார். திரு. VGK ( வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களின் நண்பர்.//

    திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களின் நண்பன் நான், என பிறரிடம் நான் சொல்லிக்கொள்வதில் தான், எனக்கு அதிகப்பெருமை ஏற்படுகிறது ஐயா.

    அவர் எனக்கு வெறும் நண்பர் மட்டுமல்ல.

    நல்லதொரு வழிகாட்டியும் கூட.

    அவரின் நட்பு மட்டும் எனக்குக் கிடைக்காமல் போய் இருந்தால் என்னை யாருக்குமே தெரிந்திருக்காது.

    என்னை அவ்வப்போது ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தி, மேலும் மேலும் எழுதச்சொல்லி அன்புத்தொல்லைகள் பல கொடுத்து, பல பத்திரிகைகளில் என் பெயரும் ஒரு ஓரத்திலாவது வருமாறு செய்து உதவியவரும் அவரே.

    இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள் என்னால் வெளிடப்படடதற்கும் அவரே மூல காரணம்.

    சும்மா இருந்த என்னை, பதிவுலகுக்கு அறிமுகம் செய்து வைத்து, வலைப்பூ ஒன்றினை உருவாக்கித்தந்தவரும் அவரே.

    அவர் எழுதாத எந்த ஒரு வார / மாத இதழ்களும் தமிழ்நாட்டில் இல்லை என்ற பெருமைக்கு உகந்த ஒரே நபர் [எனக்குத்தெரிந்து] அவர் மட்டுமே தான்.

    என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்களைப்பற்றி இதுபோல என்னால் ஆயிரம் பின்னூட்டங்கள் தர முடியும்.

    உங்களிடம் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலம் ஏற்கனவே இவரைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன் என்பதாலும், இங்கு மற்றவர்களை போரடிக்க வேண்டாம் என்பதாலும் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

    "Mr. RISHABAN IS A PERFECT GENTLEMAN IN ALL RESPECTS."

    VGK

    >>>>>>

    ReplyDelete
  31. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    சிலர் புதியவர்கள் கண்டுகொள்கின்றேன்.

    அறிமுகப்படுத்திய உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  32. மறுமொழி > pragathi.pragathi pragathi said... ( யசோதா காந்த் )
    சகோதரியின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  33. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...(1,

    // சற்றே உடல்நலக்கோளாறுகளால் என் வருகையில் இன்று தாமதம். நேற்றும் அது போலவே இருந்ததால் தான் சற்றே சுருக்கமாக முடித்துக்கொள்ளும் படியாகிவிட்டது.//

    உடல் நலம் பேணவும்!

    // இன்றைய தங்களின் முதல் அறிமுகத்தைப் படித்ததுமே வாய்விட்டுச் சிரித்தேன். உடனே நோய் விட்டுப்போனது. //

    //கல்லாக்கட்டத்தெரியாமல் இப்படி ஏமாளியாக இருக்கிறோமே எனவும் எனக்கு வெட்கம் ஏற்பட்டது. ;))))) //

    நானும் உங்களில் ஒருவன்தான்.

    ReplyDelete
  34. மறுமொழி > Raya durai said...

    தம்பி ஆட்டோதமிழன் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  35. மறுமொழி > ராமலக்ஷ்மி said...

    // உடனடியாகத் திருத்தம் மேற்கொண்டதுடன் தெரிவித்ததற்கும் நன்றி. //

    சகோதரியின் நன்றிக்கு நன்றி!

    ReplyDelete
  36. பலர் எனக்கு புதியவர்கள்! அவர்கள் பக்கம் சென்று வருகிறேன்! தொடருங்கள் உங்கள் பணியை சிறப்புடனே! நன்றி!

    ReplyDelete
  37. திரு. ரிஷபன் அவர்களைப்பற்றியும், எனக்கும் அவருக்கும் உள்ள தூய்மையான நட்பு பற்றியும் மேலும் சில விஷயங்கள் அறிய விரும்புவோர் கீழ்க்கண்ட என் பதிவுகளுக்கு சென்று பார்க்கலாம்:

    [1]

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html

    ஐம்பதாவது பிரஸவம்
    [”மை டியர் ப்ளாக்கி” + குட்டிக்குழந்தை “தாலி”]

    [2]

    ”முன்னுரை என்னும் முகத்திரை”

    http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_21.html

    [3]

    http://gopu1949.blogspot.in/2011/07/1.html

    நல்லதொரு குடும்பம்

    [4]

    http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html

    தாயுமானவள் சிறுகதை [இறுதிப்பகுதி]


    அன்புடன்
    VGK

    ReplyDelete
  38. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...( 2 )

    // திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களின் நண்பன் நான், என பிறரிடம் நான் சொல்லிக்கொள்வதில் தான், எனக்கு அதிகப்பெருமை ஏற்படுகிறது ஐயா. //

    உங்களுக்கு நண்பர் மற்றும் வழிகாட்டி! எனக்கு நம்ம ஊர்க்காரர். அதாவது திருச்சியில் வசிப்பவர்.
    உங்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  39. மறுமொழி > s suresh said...

    அன்புடன் வந்த சுரேஷுக்கு நன்றி!

    ReplyDelete
  40. மறுமொழி > மறுமொழி >

    வை.கோபாலகிருஷ்ணன் said...( 3 )
    மறுபடியும் படிக்கிறேன். நன்றி!

    ReplyDelete
  41. எட்வின், யசோதாகாந்த் இருவரைப் பற்றி அறிந்ததில்லை இனி அறிமுகப் படுத்திக் கொள்கிறேன்.
    வௌவால் பற்றி எனது பதிவில் எழுதி இருந்தேன்.நீங்களும் குறிப்பிட்டிருந்தீர்கள் மகிழ்ச்சி.

    ReplyDelete
  42. அறிமுகத்திற்கு நன்றி .. அனைவரும் படிக்க வேண்டியவர்கள் .. நல்ல இடுகைகளை தேர்ந்தெடுத்து தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. ஒரே நாளில் இத்தனை பதிவர் அறிமுகங்களா!
    வியக்க வைத்துவிட்டீர்கள்.
    அசராத உழைப்பு தெரிகின்றது.

    ReplyDelete
  44. //பதிவின் பெயர் : நிஜாம் பக்கம்...
    http://nizampakkam.blogspot.in ( அ.முஹம்மது நிஜாமுத்தீன் )

    ஆனந்தவிகடன், கல்கி இதழ்களில் இவரது படைப்புகள் வந்துள்ளன. இயல்பான நடையில் எழுதுகிறார். சிதம்பரத்தில் கூரியர் சர்வீஸ் அறிமுகமான சமயம் அங்கு ஒரு சர்வீஸில் பணியாற்றி இருக்கிறார். அப்போது பணி முழுவதும் ரெயிலில்தான். அந்த நினைவோடைகளை ரயில் வரும் நேரமாச்சு! என்ற பதிவில் சொல்லிச் செல்கிறார்.
    http://nizampakkam.blogspot.in/2010/04/rayilvarumneram.html

    // என்னைக் கவர்ந்த பாடல் இது. உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். // என்று பழைய பாடல்களின் வரிகளைத் தந்துள்ளார். இதோ ஒரு பாடலின் வரிகள் அனைத்தும்
    முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... (பாடல்...
    http://nizampakkam.blogspot.in/2009/10/muththukkumuththaakasong.html
    எனக்கும் இந்த பாடலும், படமும் பிடிக்கும். ரங்கராவ் நடிப்பு கண்ணில் நீரை வரவழைக்கும்.//

    என்னுடைய தளத்தை
    இரசித்து, அதிலிருந்து
    உங்களுக்குப் பிடித்த
    இரு பதிவுகளை இங்கு
    பகிர்ந்துகொண்டமைக்கு
    மிக்க நன்றி!!!

    ReplyDelete
  45. என் பதிவுகளையும் தேர்வு செய்தமைக்கு நன்றி அய்யா

    ReplyDelete
  46. தி.தமிழ் இளங்கோ சார்,

    உடனடியாக பதில் அளிக்க முடியாத நிலையாகிடுச்சு, கடந்த இரண்டு ,மூன்று நாட்களாக சொல்லி வச்சாற்ப்போல அலைச்சல் ஆகிடுச்சு, கைப்பேசியில் பயணத்தின் நடுவிலேயே உங்கள் பதிவுகளை ,பின்னூட்டம் உட்பட படிச்சாச்சு.


    இதற்கு முன்னர் சுமார் ஆரேழு முறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளேன், எனக்கு நினைவு தெரிஞ்சு,நான் இட்ட பின்னூட்டம் முதற்கொண்டு எடுத்தாண்டு ,அறிமுகப்படுத்தியது நீங்கள் மட்டுமே,அபார நினைவாற்றல் சார், எப்போவோ போட்டது ,எனக்கே மறந்துவிட்டது, மேலும் முதல் நாளே நாளை உங்களைப்பற்றி கருத்துரை இடப்போகிறேன் என முன் தகவல் கொடுத்ததும் , சிறப்பான வலைச்சர ஆசிரியராக உங்களை தனித்துக்காட்டுகிறது,நன்றி!

    அறிமுகப்படுத்தி சிறப்பித்தமைக்கு நன்றி!

    பலப்பதிவர்களை ஒரே மூச்சில் அறிமுகப்படுத்தி அசத்தி இருக்கீங்க, ஒரு சிலரை தவிர மற்றவர்களின் பதிவுகளை முன்னரே வாசித்துள்ளேன், சிலருக்கு பின்னூட்டமிடாமல் இருந்துள்ளேன், அது தவறு என உங்கள் கருத்துரை மூலமாக உணர்கிறேன், போகிறப்போக்கில் நாம் இடும் பின்னூட்டங்களை கூட கவனமாக நினைவில் வைத்திருப்பார்கள் என்பதை புரியவைத்தது.

    நம்ம பின்னூட்டத்தையும் ரசித்து ,சிரித்த திரு.வை.கோ அவர்களுக்கு நன்றி!
    --------

    ஆசிரியர்.இரா.எட்வின் அவர்கள் பதிவுகள் யதார்தமாக இருக்கும், நம்ம வாசிப்பு ரேடாரில் இருப்பர்.

    # ரிஷபன் இன்டிபிலாக்கரில் பயங்கர ஆக்டிவா தினம் பதிவ போட்டு முன்னாடி நிற்பார், படித்துவிட்டு பின்னூட்டம் போடாமல் எஸ்கேப்பாகிடுவேன் ...ஹி...ஹி கவித எழுதுறவங்களை சீண்டக்கூடாதுன்னு தான் :-))

    #மதுரை சரவணன் அவர்களின் சமணர் படுகை, கல்வெட்டுக்குறித்தப்பதிவுகள் படிப்பதுண்டு,அவ்வப்போது படித்துவிடுவேன்.

    -----------

    முரளி சார்,

    நன்றி!

    உங்க கடைக்கு வந்து மற்றதை பேசிப்போம் :-))

    ReplyDelete
  47. அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  48. அன்பு நண்பர் இளங்கோ ,
    வவ்வால் அவர்களின் அறிமுகம் மனதை லேசாக்கியது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்துப் பதிவர்களும்
    முத்தானவர்கள். என்னால் தான் நிறையப் பதிவுகளைப் படிக்க முடிவதில்லை.
    அருமையான நட்போடு நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் நெகிழ்விக்கின்றன. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  49. மறுமொழி >T.N.MURALIDHARAN said...
    // எட்வின், யசோதாகாந்த் இருவரைப் பற்றி அறிந்ததில்லை இனி அறிமுகப் படுத்திக் கொள்கிறேன். //

    அறிமுகம் செய்து கொள்ளுங்கள். வலைபதிவர் அறிமுகம் போன்று வாசகர்கள் அறிமுகமும் தேவைதான். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  50. மறுமொழி >மதுரை சரவணன் said...
    மறுமொழி >NIZAMUDEEN said...
    மறுமொழி >ரஹீம் கஸாலி said...

    அன்புள்ள வலைபதிவின் நண்பர்களின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  51. மறுமொழி (2) >ரஹீம் கஸாலி said...
    அரசியலாக இருந்தாலும் உங்கள் பதிவில் வந்து இனி கருத்துரை எழுதலாம் என்று இருக்கிறேன்.

    ReplyDelete
  52. மறுமொழி >வவ்வால் said... (1)

    // கைப்பேசியில் பயணத்தின் நடுவிலேயே உங்கள் பதிவுகளை ,பின்னூட்டம் உட்பட படிச்சாச்சு.//
    உங்களுக்கு நான் சொல்லும் வார்த்தை “நன்றி”யை அன்றி வேறு ஒறும் இல்லை.

    // சிலருக்கு பின்னூட்டமிடாமல் இருந்துள்ளேன், அது தவறு என உங்கள் கருத்துரை மூலமாக உணர்கிறேன், போகிறப்போக்கில் நாம் இடும் பின்னூட்டங்களை கூட கவனமாக நினைவில் வைத்திருப்பார்கள் என்பதை புரியவைத்தது.//

    நாம் செய்யும் எந்த செயலுக்கும் எதிர்வினை (Reaction) என்ன என்பதை மனிதமனம் அறிய துடிக்கும். அந்த வகையில் வலைப்பதிவில் கருத்துரை தருபவர்களின் மனதும் எதிர்பார்க்கும். எனவே முடிந்தவரை நான் எனது பதிவுக்கு வரும் அனைத்து கருத்துரைகளுக்கும் இன்றில்லை என்றாலும் ஒருநாள் மறுமொழி எழுதிவிடுவேன்.

    வலைப்பதிவர்கள் வை.கோ, இரா.எட்வின், ரிஷபன், மதுரை சரவணன் ஆகியோர் பற்றிய தங்கள் மேலான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  53. மறுமொழி >வவ்வால் said... ( 2 )

    // அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்! //

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  54. மறுமொழி >வல்லிசிம்ஹன் said...

    // நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்துப் பதிவர்களும்
    முத்தானவர்கள். என்னால் தான் நிறையப் பதிவுகளைப் படிக்க முடிவதில்லை.//

    உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இந்த உணர்வுதான். சகோதரியின் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்து சொன்னமைக்கும் நன்றி!

    ReplyDelete
  55. அறிமுகத்திற்கு மிக்க நன்றி இளங்கோ ஐயா, தாமதமாக வந்து கருத்தளித்தமைக்கு வருந்துகிறேன்!

    அறிமுகம் பெற்ற ஏனையோர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது