07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 4, 2013

நன்றிகளோடு தொடங்குகிறேன்

புதிய இடம், புதிய சூழல், புதிய நண்பர்கள், புதிய பணி
தயக்கத்துடன் ஒப்புக் கொண்டிருந்த பணி, மற்றவர்கள்
அற்புதமாய் செய்து வருகின்ற சங்கிலித் தொடர் நம்மால்
அறுபட்டு விடக்க்கூடாதே என்ற சிறு அச்சம், இத்தனைக்கும்
மத்தியில் நேற்று இரவு முதல் குவிந்து கொண்டிருக்கிற
வாழ்த்துச் செய்திகள் எனக்கு உற்சாகம் அளித்துள்ளது.

வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பை அளித்த
நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் உற்சாகமூட்டிய
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறி எனது பணியை
தொடங்குகிறேன்.

முதலில் என்னைப் பற்றி

அதிகார பீடத்தின் உச்சத்திற்கு மிக விரைவில் செல்ல
வேண்டும் என்ற கனவோடு எல்.ஐ.சி நிறுவனத்தில்
உதவியாளாராக சேர்ந்த எனக்கு வாழ்க்கை பற்றியும்
எல்லோரும் இன்புற்றி இருக்க என்ன செய்ய வேண்டும்
என்பதைப் பற்றியும் கற்றுக் கொடுத்த ஆசானாக எனது
அமைப்பான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தைப்
பார்க்கிறேன். 

அந்த மகத்தான பல்கலைக் கழகத்திடம் கற்று வரும்
பாடங்கள்தான் எனது வலைப்பக்கமான 
ஒரு ஊழியனின் குரல்   க்கு அடிப்படை. 

எனது தொழிற்சங்க, அரசியல்  பணிகளுக்கும் எழுத்து
வேலைகளுக்கும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வரும்
எனது மனைவி ஜி.ராதா, மகன் ரகுநந்தன் ஆகியோருக்கும்
இத்தருணத்தில் சிறு நன்றி.

இது வரை எண்ணூறு பதிவுகள் எழுதியிருந்தாலும்
இப்போது உங்களிடம் இரண்டு பதிவுகளை மட்டும்
அறிமுகம் செய்கிறேன்.

சற்று நீண்டு நெடிய ஒன்றுதான். ஆனால் இன்றைய
அரசியல் தலைவர்கள் குறிப்பிட்ட ஒரு பிரச்சினையில்
எப்படியெல்லாம் தடுமாறினார்கள் என்பதை உங்களுக்கு
சொல்லும். தலைவனுக்கு ஓசிச் சோறு  எனது 
நூறாவது பதிவும் கூட.

அமெரிக்கா ஒன்றும் சொர்க்கபுரியல்ல  என்பதைச்
சொல்ல இந்த பதிவில் முயன்றுள்ளேன்.

இன்னமும் கூட சில உள்ளது. அவை வரும் நாட்களில்.

நான் ரசித்த பதிவர்கள் பற்றி, பதிவுகள் பற்றி
என் முன் உள்ள கேள்விகள் 

அனைத்தோடும் மாலை சந்திக்கிறேன்.



 

11 comments:

  1. இரு பதிவுகளின் அறிமுகங்களோடு, சிறு உரை கொண்டு அழகாய் ஆரம்பம்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நல்ல சுய அறிமுகம்... உங்கள் தளம் புதிது... குறிப்பிட்ட பதிவுகளை படிக்கிறேன்... வாழ்த்துக்கள்... (தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சி...)

    ReplyDelete
  3. வங்கியில் பணிபுரிந்தபோது தொழிற்சங்கப் பணிகளில் பங்கேற்றவன் என்ற முறையில் உங்கள் ஊழியன் குரலைப் படித்து வருகிறேன். சில கருத்துரைகளும் பதிந்து இருக்கிறேன்.
    வலைச்சரம் ஆசிரியர் பணி பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அன்பு வாழ்த்துகள்....

    ReplyDelete
  6. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்!
    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஐயா! எனக்கும் நீங்கள் புதியவர்! உங்களின் வலைப்பக்கம் சென்று வருகிறேன்! நன்றி!

    ReplyDelete
  8. அன்பின் S ராமன் - வலைச்சர விதிமுறைகளீல் ஒரு விதிமுறை :

    தங்கள் பதிவுகள் "ராமன் " என்றோ அல்லது தங்களுக்குப் பிடித்த முறையிலோ லேபிள் இடப்பட வேண்டும். நாளை இந்த லேபிளைச் சொடுக்கினால் தங்களின் இடுகைகள் வரவேண்டும். அதற்காகத்தான்.

    இப்பதிவினிற்கு லேபிள் இட வேண்டுகிறேன்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  9. ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர் ஒருவர் வலைச்சரத்தின் ஆசிரியராக இருப்பது கொண்டு பெருமிதம்
    அடைகிறேன்.

    உங்கள் பதிவுகளிலே ஏ.ஐ.ஐ.இ.ஏ யின் சிம்மம் கர்ஜிக்கிறது என்றால் மிகையல்ல.

    வாழ்த்துக்கள். இயன்றால் தங்கள் கைப்பேசி எண்ணைத் தெரியப்படுத்துங்கள்.

    சுப்பு ரத்தினம்.
    meenasury@gmail.com

    ReplyDelete
  10. வாழ்த்துக்களை தெரிவித்த ஒவ்வொருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது