07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 16, 2013

நான் வியக்கும் பதிவர்கள் (பாகம்-1)



நான் வியக்கும் பதிவர்கள் பாகம்-1

சில பேருடைய எழுத்துக்களை வாசிக்கிற போது,அவர்களின் எழுத்துத்திறமை மட்டுமின்றி அவர்களை நினைத்தும் எனக்கு வியப்பு ஏற்படுவதுண்டு.நான் வியக்கும் என் மனங்கவர்ந்த பதிவர்களுக்காக இன்றைய சரத்தை அர்பணிக்கிறேன்.
1.     ரஞ்சனி அம்மா: ரஞ்சனி நாராயணன், சென்னை பதிவர் சந்திப்பின் போது இவரின் முகமும் வலைப்பூவும் எனக்கு அறிமுகமானது.இவரது எண்ணங்களின் இளமையை எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன.இவர் தனது வலைப்பூவில் எண்ணங்களை எழுத்துகளாக்கி, தொய்வில்லாமல் வார்த்தைகளை கோர்த்து வாக்கியமாக வார்த்து தனது சிந்தனைகளை சேர்த்து சிறப்பாக பறிமாறுகிறார். இப்பதிவில் இவர் தனது  சொந்த கதையை சுவைபட சொல்கிறார்.

அறிவியல் பதிவுகளிலும் கூட அசத்துகிறார். இந்த பதிவை     பாருங்களேன்..

இவரது கட்டுரைகளும் கதைகளும் சில பல வார,மாத இதழ்களில் வந்துள்ளன.வலைபூ அரசி என்றும் வாகை சுடியுள்ளார்..



ரஞ்சனி அம்மாவின் முன்பு "தலைமுறை இடைவெளிகள்" தள்ளி நிற்கின்றன...

2.     ஹுசைனம்மா :  தனது சமீபத்திய கட்டுரையான குழந்தையும் தெய்வமும் எனும் கட்டுரையில் குழந்தைகளிடம் இருக்கும் அழகிய அறியாமை அழிந்துபோகிறது என்று வருத்தப்படுகிறார்.அற்புதமான ஆராய்ச்சி கட்டுரைகளை அழகிய நடையில் வழங்குவது ஹுசைனம்மா அவர்களின் தனி சிறப்பு.வசீகரிக்கும்..எழுத்து நடை.. ,நான் வலைப்பூ துவங்குவதற்கு முன்பே இவர் தளத்தை மேய்ந்திருக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.அக்கா தனது கட்டுரைகள் மற்றும் கதைகளுக்காக சில பல பரிசுகளும் பெற்றுள்ளார்.அனுபவம்,அரட்டை,சிந்தனை,விஞ்ஞானம் என சகல தளங்களிலும் இவரது எழுத்து பயணிக்கிறது...!
உங்கள் பார்வைக்கு சில

விதியின் மாய சதி  ...இது ஒரு சமையல் பதிவு.பதிவுக்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரி தோன்றுகிறதா, பதிவை படித்து முடித்தால் அப்படி சொல்ல மாட்டீர்கள்.படித்து,ரசித்து,சிரியுங்கள்...மறக்காமல் இந்த சமையலை முயற்சி செய்யுங்கள்!

ஈயம் பித்தளை  இந்த கட்டுரையில் பெண்ணியம் பேசுகிறார்.

(தமிழ் வழி (தாய் மொழி) கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தும் கட்டுரை


டிரங்குப் பொட்டி என்ற தலைப்பில் தனக்கு தெரிந்த தேர்ந்த விஷ்யங்களை பகிர்ந்து கொள்கிறார்.இந்த பொட்டியில் ரசிக்க, வியக்க, சிந்திக்க நிறைய தகவல்கள் இருக்கின்றன.
  
3.    கண்மணி: கண்மணி அன்போடு என்ற வலைப்பூவில் தனது கருத்துக்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,கதைகள் என பல விசயங்களை எழுதி வருகிறார்.சிவகாசிக்கார பெண், சின்ன வயதில் பெரிய சிந்தனைகள் செய்கிறார்.இந்த பதிவை படித்து பாருங்களேன்
கடவுளும் கண்மணியும்! (எனக்கு இவரது பதிவுகளில் மிகப்பிடித்த பதிவு)

 ஒரு பதிவில் இப்படி கேட்கிறார்
ஆசிரியருக்கு இவர் எழுதியுள்ள கடிதத்தை மறக்காமல் படியுங்கள்!
இவர் வலைப்பூ துவக்க தனது தமிழார்வம் தான் காரணம் என்று சொல்கிறார்..ஆங்கிலத்திலும் ஒரு வலைப்பூ எழுதுகிறார்.ஆங்கில பூவில் தனது படிப்பான பயோடெக் சம்பந்தமான கட்டுரைகளை தருகிறார்.

4.    லஷ்மி பாட்டி :குறைஒன்றுமில்லை, மற்றும் தமிழ்விரும்பி என்ற தலைப்புகளில் இரண்டு வலைப்பூக்கள் வைத்துள்ளார்.பெரும்பாலும் இவரது அனுபவங்களை பதிவுகளாக தருகிறார்,(இவர் போன்றவர்களின் அனுபவ பதிவுகள் இளைய தலமுறைக்கு தேவை).சென்னை பதிவர் சந்திப்பிற்கு வந்திருந்தார்.(இவர் வலைப்பூவின் பெயரான குறையொன்றுமில்லை... எம்.எஸ் சுப்பலட்சுமி அவர்கள் பாடிய பாடலை நினைவுறுத்துகிறது...இந்த பாடல் வரிகள் என் கண்களை கலங்க செய்து,மெய் சிலிர்க்க வைக்க தவறியதே இல்லை...).இந்த வயதிலும் பதிவுகள் செய்யும் லக்ஷ்மி பாட்டிக்கு எனது சல்யூட் !



5.    பாட்டி சொல்லும் கதைகள் :  ருக்மணி பாட்டி அவர்களின் வலைப்பூ,இங்கு குழந்தைகளுக்கான கதைகளை கூறுகிறார் பாட்டி, தெனாலிராமன்,மரியாதைராமன்,பஞ்சதந்திரக்கதைகள் என பல கதைகள் உள்ளன .வலைப்பூக்கள் பெரும்பாலும் பெரியவர்களுக்கானதாகவே உள்ளன,குழந்தைகளுக்காக எதுவும் இல்லை என்ற,காரணத்தாலும்.குழந்தைகளுக்கு பெரியவர்கள் கதைகளை சொல்ல,கதைகளை தொகுத்து தரவும் தான் வலைப்பூ துவங்கியதாக கூறுகிறார்.இவர் ஒரு ஓய்வு பெற்ற தமிழாசிரியர்.உங்கள் குழந்தைகளுக்கு பாட்டி சொல்லித்தரும் கதைகளை சொல்லிக்கொடுங்கள் !

அனைவருக்கும் எனது சல்யூட் ...! 

12 comments:

  1. அன்புள்ள விஜயன்,
    இன்றைய வலைச்சரத்தில் என் வலைச்சரத்தைப் பற்றி வெகு சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    உங்களையும், அன்புக் கண்மணியையும், திருமதி லக்ஷ்மி, திருமதி ருக்மிணி அவர்களையும் பதிவர் விழாவில் சந்தித்தது என் வாழ்வில் மிகப் பெரிய மறக்க முடியாத நிகழ்வு.

    திருமதி ஹூசைனம்மாவையும் இன்று
    போய்ப் பார்க்கிறேன், படிக்கிறேன்.

    உங்களைப் போன்ற இளைய தலைமுறைக்கு என் எழுத்துக்கள் பிடித்திருப்பது எனக்கு மிகவும் உற்சாகமளிக்கும் விஷயம்.

    நீங்கள் மேலும் மேலும் பதிவு உலகில் சாதனை படைக்க ஆசிகள்!

    நன்றியுடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
  2. mikka nandri amma!.ungalin anbirku nandri

    ReplyDelete
  3. ஆஹா... அனைத்தும் விரும்பிப் படிக்கும் தளங்கள்... ஹுசைனம்மா தவிர மற்ற அனைவருடனும் பேசி உள்ளேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. adutha pathivil neengal irukkireerkal anna!

    ReplyDelete
  5. அனைவரும் சிறப்பானவர்கள்! மூத்தவர்கள்! எனது வணக்கங்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்களை அறிமுகப்படுத்தி சிறப்பித்த உங்களுக்கு! மிக்க நன்றி!

    ReplyDelete
  6. பல அற்புதமான வலைத்தளங்களை அறிமுகப்படுத்தயிருக்கின்றீர்கள்.ஹுசைனம்மாவின்தளம் என்னை மிகவும் கவர்ந்தது.

    ReplyDelete
  7. அனைவரும் மரியாதைக்குரிய மூத்த பதிவர்கள்.சிறப்பாக எழுதி வருபவர்கள். ஏற்கனவே அவர்களைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. சிறப்பான மூத்த அறிமுகங்கள். அருமை நண்பரே!

    ReplyDelete
  9. reply @ s suresh said... && T.N.MURALIDHARAN said... &&
    S.டினேஷ்சாந்த் said... &&
    வே.சுப்ரமணியன். said..
    கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  10. தம்பி விஜயன், எதிர்பார்க்கவே இல்லை, எனது அறிமுகமும் இருக்குமென்று!!

    மிக்க நன்றி!!

    ரஞ்சனிம்மா, லக்ஷ்மிம்மா ஆகியோரின் தொடர் வாசகி நான். நான் ரசிப்பவர்களோடு, என்னையும் அறிமுகப்படுத்தியது ஆனந்த அதிர்ச்சி. மிக்க நன்றி.

    ரஞ்சனிம்மா, உங்களை என் வலைப்பதிவுக்கு வரவேற்கிறேன்.

    ReplyDelete
  11. விஜயன், இன்று நீங்கள் குறிப்பிட்ட ரஞ்சனி அவர்கள் வியக்க வைக்கும் பதிவர் தான் எவ்வளவு வலைத்தளங்கள் வைத்துக் கொண்டு அசத்துகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ஹுஸைனம்மா, எனக்கு மிகவும் பிடித்தபதிவர். பன்முக வித்தகி, அவர் பதிவு போட்டவுடன் சென்று கருத்து தெரிவித்து விடுவேன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    கண்மணியும் படித்து இருக்கிறேன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    லஷ்மி அக்கா ஊருக்கு போய் இருக்கிறார்கள் போலும் இல்லையென்றால் வலைச்சர ஆசிரியர் எல்லோருக்கும் முதல் வாழ்த்து அவர்களிடமிருந்து தான் வரும். அருமையாக தன் அனுபவங்களை எழுதுபவர்கள்.அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    ருக்மணி அவர்களின் பாட்டி சொல்லும் கதைகள் படித்து இருக்கிறேன். குழந்தைகளுக்கு அருமையாக கதை சொல்வார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அருமையான பதிவர்களை குறிப்பிட்டதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நன்றி விஜயன் :) பெரியவர்களோடு சேர்த்து என்னையும் அறிமுகம் செய்து இருக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி எனக்கு. மிக்க நன்றி...

    கடவுளும் கண்மணியும் பதிவு உங்களுக்குப் பிடித்த பதிவா? :)

    வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்றமைக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது