07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 2, 2013

மனசு பேசுகிறது- சுயம்


எல்லாருக்கும் வணக்கமுங்க...

முதலில் சில நன்றிகள்....

என்னை எழுத்தாளனாக்கிப் பார்க்க ஆசைப்பட்ட எனது பேராசான்... எனது அப்பா... எங்கள் அருமை ஐயா பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு முதல் நன்றி.

வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியர் பணியாற்றும்படி என்னை அழைத்த அன்பின் ஐயா சீனா அவர்களுக்கும் நண்பர் தமிழ்வாசி பிரபாகர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த முறை சீனா ஐயா அழைத்தபோது கொஞ்சம் தடுமாற்றம் இருக்கத்தான் செய்தது. அதற்குக் காரணம் சில குடும்ப சூழல்கள் ஆனாலும் எங்கள் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு ஐயாவிற்கு ஒரு மின்னஞ்சல்தான் செய்தேன். அம்மாவுடன் மதுரையில் இருந்து வந்திருந்து வாழ்த்திச் சென்றார். அந்தப் பாசம்... நட்பு... உறவு எல்லாம் சேர்ந்து வென்றுவிட சரி என்று சொல்லிவிட்டேன்.

எனது எழுத்துக்களைப் படித்து நிறைகுறைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி என்னை மெருகேற்றும் வலைச்சர உறவுகள் அனைவருக்கும் நன்றி.

என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த அத்தனை முன்னாள் வலைச்சர ஆசிரியர்களுக்கும் கடந்த வாரத்தை கலக்கல் வாரமாக்கிய கபீரன்பன் அவர்களுக்கும் நன்றி,

---------

சரியாக மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வலைச்சர ஆசிரியனாய் ஒரு வாரகாலம் உங்களுடன்.... முதல் நாள் வலைச்சர ஆசிரியராய் தன்னைதானே அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். நம்மைப் பற்றி அறிமுகம் செய்யும் அளவிற்கு பெரிய சாதனையாளன் எல்லாம் கிடையாது.... சாதாரண கிராமத்தாந்தான்... இதோ என் அறிமுகம் சற்றே நீளமாக...

* நான்.... சே.குமார், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் இருக்கும் பரியன் வயல் என்ற சிறிய கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். அப்பா - திரு. சேதுராமன், அம்மா - திருமதி. சிவகாமி. என் அன்பு மனைவி நித்யா, மதுரை மண்ணைச் சேர்ந்தவர். ஸ்ருதி, விஷால் என்ற இரண்டு செல்லங்கள்.

* படித்தது எம்.சி.ஏ.,  கடந்த ஐந்து ஆண்டுகளாக அபுதாபியில் கணிப்பொறியை கவனமாய்த் தட்டி வருகிறேன்.ஆரம்பத்தில் தேவகோட்டையில் கணிப்பொறி மையம் + கல்லூரியில் பணி, அப்புறம் சென்னையில் கணிப்பொறியோடு ஓடிய வாழ்க்கை சிலகாலம் தினமணியில் இளைப்பாறியது.

* எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். மூன்று அக்கா, இரண்டு அண்ணன், ஒரு தம்பி என நாங்கள் மொத்தம் ஏழு பேர். நான் ஆறாவதாய் பிறந்தவன் என்பதால் வீட்டில் வைத்த பெயர் குமாரசாமி, பள்ளியில் சேர்க்கும் போது அம்மா கொடுத்த பெயர்தான் குமார். ராமசாமி என்ற அண்ணனை ரவிச்சந்திரனாகவும் உமையாள் என்ற அக்காவை பிரேமா என்றும் மாற்றிய பெருமை அம்மாவுக்கே.

* பனிரெண்டாவது படிக்கும் போது அப்பா படித்தது போதும் பஞ்சுமில்லில் வேலைக்குப் போ என்று அதற்கான ஏற்பாட்டில் இறங்க பெரிய அண்ணனிடம் சொல்லி அழுது அதன் பின் என்னையும் தம்பியையும் கல்லூரி வரைக்கும் படிக்க வைத்த பெருமை எங்கள் அண்ணனுக்கே... அவர் இல்லையென்றால் மில்லில் தொழிலாளியாகத்தான் வாழ்க்கை போய்க்கொண்டிருந்திருக்கும்.

* பள்ளிப் படிப்பு வரை எழுத்து எல்லாம் நமக்குள் இல்லை. கல்லூரி வந்து இரண்டாம் பருவம் ஆரம்பிக்கும் போது ஐயாவின் அறிமுகம், அதன் பின் எழுத ஆரம்பித்து எதோ கிறுக்கினேன்.... அப்ப கவிதை எல்லாம் பெரிதாக... ரொம்பப் பெரிதாக எழுதுவேன். நண்பர்களின் காதலுக்கு நிறைய கவிதைகள் எழுதிக் கொடுத்திருக்கிறேன். தவறாமல் அவர்களது பெயரைக் கீழே போடச் சொல்லிவிடுவார்கள்.

* ஆரம்பத்தில் கதை எழுத ஆரம்பித்தால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சவோ... உரம் போடவோ போகும் அப்பா கண்டபடி திட்டுவார். இடையில் கொஞ்ச நாள் நிறுத்தி.... பின்னர் எழுத ஆரம்பித்து... பின்னர் நிறுத்தி... இப்படி விட்டு விட்டுத் தொடர்ந்த எழுத்துடனான எனது நேசம் வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்ததும் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


* 'கட் அவுட் நிழலுக்கு கீழே' என்ற எனது முதல் கவிதையை ஐயாவே தாமரைக்கு அனுப்பி வைக்க அது பிரசுரமாகி திரு. பொன்னீலன் அவர்கள் பாராட்டியது என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. அதன் பின் பத்திரிக்கைகள் அப்பப்ப நம்ம கதை, கவிதைகள் வர ஆரம்பித்தது. கல்லூரி முடித்து வாழ்க்கைச் சூழல் மாறிய போது எழுத்தும் சிறைப்பட்டுப் போனது. திரு. இறையன்பு அவர்களை தேவகோட்டை கலையிலக்கியப் பெருமன்ற விழாவிற்காக காரில் கூட்டிச் சென்று கொண்டு வந்து விட்ட அந்த ஒரு மழைநாளில் கார் பயணத்தில் அவரது அற்புதமான சிந்தனைகளை எங்களுக்கு வாரிவழங்கியதை மறக்கமுடியாதது.

* கருத்தப் பசு’ என்ற எனது சிறுகதை வம்சி வெளியிட்ட 'காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்’ என்ற தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.

* அதீதம், சொல்வனத்தில் கதைகள் வெளிவந்திருக்கின்றன.

* ஆரம்பத்தில் நான்கு வலைப்பூவில் எழுதினேன்... பின்னர் ஒரு வலைப்பூவிற்கு மாறியாச்சு... ஆமா சொல்லவே இல்லையில்ல என்னோட வலைப்பூவின் பெயர்... 
மனசு பெயர்க்காரணம்.... கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயரே வலைப்பூவின் பெயராய்...

* எனது வலையில் நான் எழுதிய எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். இதில் இது நன்று... அது நன்று என்று தரம் பிரித்து பார்க்க மனமில்லை. இதுவரை 53 சிறுகதைகள், 62 கவிதைகள், 48 சினிமா, 41 படித்ததில் பிடித்தவை, 31 மனதில் பட்டது, 11 கிராமத்துநினைவுகள் இப்படியாக 400க்கும் மேல் எழுதியாச்சு. இருந்தாலும் சில இணைப்புக்கள் உங்களுக்காக இங்கே...

சிறுகதை : கூழாங்கல் 
கிராமத்து நினைவுகள் : கண்மாய் மீன் 
தொடர்கதை : கலையாத கனவுகள் 

* நான் ரசித்து எழுதும் கிராமத்து நினைவுகள் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது என்பது நண்பர்களின் பின்னூட்டத்தின் மூலம் அறிந்து கொண்டேன்.

* என்னைப் பற்றிச் சொல்ல அவ்வளவுதான் இருக்கு... என்னோட வலைப்பூவிற்கு வந்து உங்கள் கருத்தைச் சொல்லிச் செல்லுங்கள்.

சொல்ல மறந்துட்டேன் பாருங்க.... நம்ம சீனா அய்யாவுக்கு இன்று நாற்பதாவது திருமண நாள். ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

ஐயாவுக்காக இந்தப் பாடல்...



எனது பகிர்வு இப்படித்தான் வலம் வரும் என்று நினைத்துள்ளேன்... காத்திருங்கள்...

1
சிறுபகிர்வு
சின்ன பதிவாக ஒரு செய்தி
2
பிரபலம்
நான் பார்த்தவர்களிலல் பிரபலமான பதிவரின் தள அறிமுகம்
3
கதையாசிரியர்கள்
சிறுகதையில் கலக்கும் இரண்டு பதிவர்கள்
4
கவிஞர்கள்
கவிதையில் கலக்கும் இரண்டு பதிவர்கள்
5
பல்சுவை
கலந்து கட்டி ஆடும் ஆட்டநாயகர் ஒருவர்
6
சமையல்
சமைப்பதை ருசிக்கத் தரும் ஒருவர்
7
விவசாயம்
இந்தியாவின் உயிர்நாடி ஒருவர்
8
மருத்துவம்
உடல் நலம் காக்க ஒருவர்
9
தொழில்நுட்பம்
கணிப்பொறிக்கான மருத்துவர் ஒருவர்
10
சினிமா
சினிமாவைப் பற்றி எழுதும் ஒருவர்
11
கவர்ந்த கவிதை
பதிவரல்லாமல் கவர்ந்த கவிதை ஒன்று
12
வீடியோ
தமிழ் சம்பந்தமான வீடியோப் பகிர்வு
13
குறுங்கவிதை
எனது கவிதை ஒன்று

சரி உறவுகளே அடுத்த பதிவு முதல் பதிவுலகில் கலக்கி வரும் நட்புக்களின் பதிவுகள் அறிமுகத்தைத் தொடர்கிறேன். தொடர்ந்து இங்கும்... அறிமுகமாகும் நண்பர்களின் தளங்களுக்கும்... சென்று மறவாமல் உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்...

மனசு இன்னும் பேசும்...
-'பரிவை' சே.குமார்.

42 comments:

  1. மிக அருமையான, அறிமுகம். வாழ்த்துக்கள். சர வெடி வெடிக்கட்டும், தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் க்ருத்துக்கும் நன்றி

      Delete
  2. செம கலக்கலான அறிமுகம் குமார். உங்களது வரும்நாளுக்கான பதிவுபட்டியல் அருமை. இதுவரை நானறியாத குமாரின் இன்னொருமுகம்.

    தொடருங்கள் நண்பரே....படிக்க ஆவலாக இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் க்ருத்துக்கும் நன்றி

      Delete
  3. //எனது பகிர்வு இப்படித்தான் வலம் வரும் ....//
    அடேயப்பா ! Buffet விருந்து, தினம் 13 item; மெனு கார்டு ரொம்பப் பிரமாதம். தொடருங்கள் உங்கள் வாசிப்பின் சுவைக்கு காத்திருக்கோம்.
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் க்ருத்துக்கும் நன்றி

      Delete
  4. அருமையான சுய அறிமுகம்... பட்டியல் அபாரம்... காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் க்ருத்துக்கும் நன்றி

      Delete
  5. நம்ம சீனா அய்யாவுக்கு இன்று நாற்பதாவது திருமண நாள். ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் க்ருத்துக்கும் நன்றி

      Delete
  6. வலைச்சர அறிமுகத்திற்கு
    வாழ்த்துகள்..!

    ReplyDelete
  7. என்னையும் தம்பியையும் கல்லூரி வரைக்கும் படிக்க வைத்த பெருமை எங்கள் அண்ணனுக்கே... அவர் இல்லையென்றால் மில்லில் தொழிலாளியாகத்தான் வாழ்க்கை போய்க்கொண்டிருந்திருக்கும்.\\\\\\\\\\\\\\\\

    என் வாழ்க்கையும் இப்படியே இன்று வரை எங்களுக்காக உழைப்பவர் எங்கள் அண்ணன் \\\\

    செம்ம அறிமுகம் கலக்குங்க

    சீனா ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

    ReplyDelete
  8. உங்கள் சுயம் அருமை.

    ReplyDelete
  9. சுய அறிமுகம் அருமை... வாழ்த்துக்கள்...

    அசத்துங்க...

    ReplyDelete
  10. நண்பர் திரு சீனா அவர்களின் நாற்பதாவது திருமண நாள் இது எனக்கண்டு மனமகிழ்ந்தேன்.

    மண்ணுக்கு, தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் அத்தனை
    பதிவர்களையும் வலைச் சரத்தில் இணையச்செய்து மணம் பரப்பும்
    சீனா அவர்களின் வாழ்வில் எல்லாம் பெறவே

    அவர் வணங்கும் இறையை/ இறைவியை வேண்டி நிற்கின்றேன்.

    தமிழ் வாசி பிரபாகரனையும் நேற்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    நேற்று நீங்கள் மாநாட்டுக்கு வந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

    மா நாட்டின் சிறப்பினைப் பற்றியும் சில வாக்கியங்கள், வர்ணனைகள், உங்கள் வார்த்தைகளில் சொல்ல வேண்டுகிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  11. சுவையான அட்டகாசமான அறிமுகம்.
    ம்ம்ம். தொடர்ந்து அடித்து ஆடுங்கள்.
    நாங்கள் கைதட்டி [ பின்னூட்டம் இட்டு ]
    உற்சாகப்படுத்துகிறோம்.
    சீனா ஐயா அவர்களுக்கு இனிய மண நாள்
    வாழ்த்துக்கள் ! நன்றி !

    ReplyDelete
  12. சுவைகூடிய சுய அறிமுகம். அருமையான பதிவு,

    ReplyDelete
  13. ஐயாவின் நாற்பதாவது திருமண நாளுக்கு வாழ்த்த வயதின்றி வணங்குகிறேன்.
    எதையும் மறக்காது சொன்ன சிறப்பான சுய அறிமுகம்... பெரிய குடும்பத்தில் பிறந்தவர் என்று குறிப்பிட்டதும் என் கிராமத்து வாழ்க்கை நினைவுக்கு வந்தது. தங்கள் பதிவுகளை சென்ற படித்து விட்டு வருகிறேன். தொடருங்கள் தொடர்கிறோம்.

    ReplyDelete
  14. இவ்வார வலைச்சர ஆசிரியப் பணி ஏற்புகண்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் சகோ!
    சிறப்பாக, உங்கள் பணி வெற்றிகரமாக அமையட்டும்!

    சுய அறிமுகம் அசத்தல்!

    சீனா ஐயாவை நானும் வணங்கி வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  15. வணக்கம்
    சே,குமார்

    சுய அறிமுகம் மிக அருமை இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. சீனா ஐயா, வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..


    குமார் அவர்கள், ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்தி இனிவரும் எல்லா பதிவுகளையும் படிக்க ஆவலுமாய் தொடர்கிறேன்..

    ReplyDelete
  17. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் குமார்.
    உங்கள் அறிமுக மலர் மிகவும் அருமை.
    வரப்போவதை பட்டியல் இட்டது மேலும் சிறப்பு.


    சீனா ஐயா அவர்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  18. வாழ்த்து சொல்லும் பாடல் பகிர்வு அருமை.

    ReplyDelete
  19. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள் குமார்
    தங்கள் அறிமுகம் நன்று இனி வரும் தினங்களும் சிறக்கட்டும்

    ReplyDelete
  20. எதிர்வரும் உங்கள் பதிவுகள் ’பலதரப்பட்டவை’ என்பதைப் பட்டியல் சொல்கிறது.

    கலக்குங்கள்.

    படித்துச் சுவைக்கக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  21. அன்பான அறிமுகம்.. நன்று!..வாழ்க.. வளர்க!..

    ReplyDelete
  22. கவிதையாய் அறிமுகம்
    வாழ்கவளமுடன்

    ReplyDelete
  23. சுய அறிமுகத்திற்கு நன்றி,வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!


    சீன ஐயாவுக்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  24. இவ் வாரம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவுள்ள பதிவுகள் தொடர்பான அட்டவணையைப் பார்க்கும் போதே இவ் வாரம் அசத்தலாக இருக்கும் என்று புரிகின்றது.விளையாட்டுப் பற்றி எழுதுபவர்களையும் கொஞ்சம் கண்டுகொள்ளலாமே

    ReplyDelete
  25. சுய அறிமுகம் நன்று குமார். சிறப்பாகச் செல்லும் இந்த வாரம் என்பதில் ஐயமில்லை. தொடருங்கள். வாழ்த்துகள்!

    ReplyDelete
  26. அன்பின் குமார் - சுய அறிமுகம் அருமை - பதிவிட திட்டம் இட்டு 13 பதிவுகளையும் ஏழு நாட்களுக்குள் அடக்கி என்ன செய்யப் போகிறீர்கள் என்பதனை அழகாக எடுத்துரைத்தது நன்று. என்களது நாற்பதாவது திருமண நாள் பற்றிக் குறிப்பிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி - இங்கு மறுமொழி இட்ட பதிவுலக நட்புகளூக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  27. அன்பின் சுப்பு தாத்தா - நாங்கள் தற்போது அயலகத்தில் இருப்பதனால் சென்னை பதிவர் சந்திப்புத் திருவிழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  28. அன்பின் குமார் - லேபிள் இடவில்லையா - லேபிள் இடுக இப்பதிவினிற்கும் இனி வரப் போகும் பதிவுகளுக்கும். நாளை இடப்போகும் பதிவு 2800 வது பதிவு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  29. இரண்டாம் முறையாக ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் சகோதரர் குமாருக்கு நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்! இந்த வாரப்பதிவுகள் அனைத்தும் சுடர் விளக்கின் ஒளியாய் பிரகாசிக்குமென்பதில் ஐயமில்லை!!

    ReplyDelete
  30. சகோதரர் திரு.சீனா அவர்களுக்கும் அவர்களது இல்லத்தரசியாருக்கும் இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  31. சுய அறிமுகம் தந்த உங்களுக்கு
    வாழ்த்துக்கள் ஒரு வாரம் கலக்க!

    ReplyDelete
  32. சீனா ஐயாவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  33. //தமிழ்வாசி பிரபாகர்//
    தமிழ்வாசி பிரகாஷ்

    ReplyDelete
  34. பிரகாஷ் டைப்பிங்கில் பிரபாகர் ஆயிட்டாரா?

    சரி விடுங்க பிரபாகரும் நல்லாத்தானே இருக்கு....

    ஹா... ஹா... மாற்றுகிறேன் நண்பரே... சுட்டியமைக்கு நன்றி...

    ReplyDelete
  35. மிக அருமையான சுய அறிமுகம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது