07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, November 14, 2013

அதிசயமலர்களை அறியலாம் வாங்க

எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்

நெடுநாள்களாக எழுத வேண்டும் என்று நினைத்த விடயத்தை இன்று உங்களோடு பகிர ஆசைப்படுகிறேன். அதற்கு முன் 20 - 30 இளமைப் பருவத்தை பார்த்துட்டு வந்துடலாம் வாங்க.

வாழ்க்கையை திசைதிருப்பும் அல்லது தீர்மானிக்கும் எல்லாமே இந்த பருவத்தில் நடந்துவிடும். வேலை, திருமணம், குழந்தைகள் என்று பொறுப்புகள் கைவரப் பெறும் காலகட்டம். இளைஞர்கள் பலர் சமூக சேவையில் ஈடுபட்டு இருப்பது மனதிற்கு பெரும் மகிழ்ச்சியைத்தருகிறது. மாற்றங்களை கொண்டுவரும் அக்னிக் குஞ்சுகளாகத்தான் இளைஞர்கள் என் பார்வைக்கு தெரிகிறார்கள்.

இவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் சமூகத்தில் பெரும் அலையை ஏற்படுத்த முடியும் என்பதில் சிறு சந்தேகமுமில்ல.  இப்போது விடயத்திற்கு போகலாம் வாங்க

ஆட்டிசம்,ஏடிஹெச்டி, டிஸ்லெஸ்சியா போன்ற வார்த்தைகள் இப்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை “சிறப்புக் குழந்தைகள்” என்று குறிப்பிடுகிறார்கள். இன்று நாம் ஆட்டிசம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளப்போகிறோம். எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள் எங்களுக்கு இது தேவையில்லை என்று நினைக்கிறீர்களா... எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விகிதம் எதிர்காலத்தில் மிக அதிகமாக இருக்கக்கூடும் என்பது ஆய்வு. உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவரை அவர்கள் வாழ்நாளில் சந்திக்கக் கூடும். இது பற்றிய விழிப்புணர்வு  நமக்கும் நம் குழந்தைகளுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தை ஆட்டிச விழிப்புணர்வு மாதமாகவும் ஏப்ரல் இரண்டை ஆட்டிச நாளாகவும் கடைபிடிக்கின்றனர் உலகம் முழுவதும். இப்பொழுது ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் ஏற்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியதே. வட இந்தியாவில் இருப்பது போன்ற வசதிகள் (ஸ்பீச் தெரபி,ஆக்குபேசனல் தெரபி) அதே தரத்தோடு இங்கே இல்லையென்பது வருத்ததுக்குரியது.

தமிழகத்தில் சில இடங்களில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தரும் சிகிச்சைகளைக் கேள்விப்பட்ட போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சென்னை, கோவை போன்ற பெரும் நகரங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் சிகிச்சைகள் என்ற பேரில் குழந்தைகளை அடிப்பதும், திட்டுவதும் சகஜமாகவே இருக்கிறது. இது தீயில் தத்தளித்து கொண்டு இருக்கும் குழந்தை மீது பெட்ரோலை ஊத்துவதற்கு சமம். முதலில் நாம் அந்தக் குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பட்டாசு சத்தத்திற்கு இந்தக்குழந்தைகள் பயப்படும் என்பது மட்டுமே தெரிந்த நமக்கு அந்த சத்தம் அந்தக் குழந்தைகளின் செவி வழியாக மூளைக்கு பதிவு செய்யும் போது அனுகுண்டு சத்தம் அளவிற்கு இருக்கும் என்பது தெரியுமா??
கைகளை ஆட்டுகிறார்கள் என்பதை பார்க்கும் போது அவர்கள் மூளைக்கு கைகளின் இருப்பை பதிவு செய்யவே செய்கிறார்கள் என்பதையும் சேர்த்தே யோசித்தால் அந்தக் குழந்தைகளை நிராகரிக்க தோன்றுமா??????

பெரும்பாலான மனிதர்களைப் போல் இல்லாமல் அவர்களின் சில செயல்கள் முற்றிலும் வேறுபாடாக இருக்கும் என்பதால் அவர்களை பள்ளியில் இருந்து நிராகரிக்கவோ, சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கவோ எந்த உரிமையும் நம்மிடத்தில் இல்லை. இப்பூமியில் வாழ நம்மைவிட அவர்களுக்கு உரிமை அதிகம். செக்குமாடு போல் இல்லாது அவர்களது சிந்தனை முற்றிலும் வேறானது. அவர்களை ஊக்குவித்தால் ஓவியம், இசை போன்ற துறைகளில் சிகரம் தொட அவர்களால் முடியும். அவர்களின் பெற்றோர்களுக்கும் அந்தக் குழந்தைகளுக்கும் நம்மாலான பெரும் உதவி ஒரு புன்னகையும் சில அன்பான வார்த்தைகளுமே. அதைக்கூட தரமுடியாத ஏழைகள் அல்ல நாம்.

ஆட்டிசம் குறித்து வலைப்பக்கத்தில் இருக்கும் செய்திகளைப் பார்ப்போம்

1)யெஸ்.பாலபாரதி

தமிழில் ஆட்டிசம் பற்றி ஒரு நூலை வெளியிட்டு, அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வரும் யெஸ்.பாலபாரதிக்கு மனமார்ந்த பாராட்டுகள். இவர் தன் வலைப்பக்கத்தில் ஆட்டிசம் குறித்தும் அதற்கான சிகிச்சைகள் குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.

சிறுவயதிலேயே இந்த குறைபாட்டை கண்டறிந்தால் தகுந்த சிகிச்சைகள் மூலம் அக்குழந்தைகள் நார்மல் வாழ்க்கை வாழமுடியும். கண்டறிவதற்கான வழிகளை அழகாக விளக்கியுள்ளார்  பாலபாரதி.

விரைவாக அறிந்து கொள்ள சில எளிய வழிகள்

அதற்கான சிகிச்சை முறைகள்

சிகிச்சை முறைகள் - 1
சிகிச்சை முறைகள் - 2

பெற்றோர்களுக்கும் சில யோசனைகளைக் கூறியுள்ளார்.

பெற்றோர்களுக்கு சில யோசனைகள்
பத்து கட்டளைகள்

கண்டிப்பாக அனைவரும படிக்கவும்

------------------------------------------------------------------------------------------------------------
2) விழியன்

குழந்தைகளுக்கான கதைகளை எழுதுபவர். சமீபத்தில் எழுதிய “பென்சில்களின் அட்டகாசம்” பெரும் வரவேற்பை பெற்றது குழந்தைகளிடம்
இவர் தனது வலைப்பக்கத்தில் குழந்தைகள்  பள்ளியில் அல்லது சமூகத்தில் சந்திக்கும் சிறப்பு  குழந்தைகளுக்கு எந்த வகையில் உதவ முடியுமென்று சிறப்பாக எழுதியிருந்தார்.

சிறுவர்களாகிய நாம் எப்படி உதவிவது

------------------------------------------------------------------------------------------------------------

3) டாக்டர். சிவராமன்

சித்தவைத்தியன் எனும் வலைப்பக்கத்தில் நோய்களைப் பற்றியும், அதற்கான சித்த மருத்துவம் குறித்தும் எழுதி வருகிறார். இவர் ஆட்டிசம் குறித்து ஒரு சிறப்பு கட்டுரை எழுதி இருக்கிறார்.

ஆட்டிசம்

-----------------------------------------------------------------------------------------------------------

இப்பொழுது ஆட்டிசம் பற்றி ஒரு விழிப்புணர்வு வந்திருக்கும் என்று நம்புகிறேன். இங்கே சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சிறப்பு பெற்றோர்களுக்காக :

அ) நீங்கள் சிகிச்சைக்காக ஒரு நாளில் அதிகபட்சமாக 3 மணிநேரம் செலவிடநேரும். ஆனால் அந்த நேரத்தில் சொல்லிக்கொடுப்பது மட்டும் குழந்தைக்கு போதுமானதாக இருக்காது. வீட்டில் விளையாட்டு முறையில் நீங்கள் சொல்லிக்கொடுங்கள்.

(எ-டு) இப்போது உங்கள் குழந்த ஆப்பிள் சொல்லிக் கொடுக்க போகிறீர்கள் என்றால் அதற்காக முதலில் உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். உங்கள் மனதில் நீங்கள் உருபோட வேண்டியது இரண்டுதான்

1) எந்த இடத்திலும் கோபமோ, சலிப்புதன்மையோ காட்டக்கூடாது

2) குழந்தை கற்றுக்கொள்ளவில்லையென்றால் அது குழந்தையின் தவறில்லை.. புரியும் அளவு சொல்லிக் கொடுக்காதது தான் பிழை.  வேறுவிதமாக சொல்லிக் கொடுக்க முயலுங்கள்.

தயாராக வைக்க வேண்டியது :

ஆப்பிள் , ஆப்பிள் படம்(Flash card) வெள்ளைத்தாளில் 10 ஆப்பிள் வரைந்து இடையிடையில் மற்ற பழங்களையும் வரைந்து வைத்துக் கொள்ளவும்

1)முதலில் ஆப்பிளை காண்பித்து 5 முறை சொல்லுங்கள். உங்கள் குழந்தையை சொல்ல ஊக்கப்படுத்துங்கள். அவன் முயற்சிக்கும் போது கைதட்டி உன்னால் முடியும் என்று கூறுங்கள்.

2)பிறகு படத்தில் உள்ள ஆப்பிளைக்காட்டி அதே முறையை பின் பற்றவும்

3) பிறகு ஆப்பிள் - படம் இரண்டையும் காட்டி இரண்டும் ஒரே பொருள் தான் என்று விளங்கவைக்க வேண்டும்

4) வெள்ளைத்தாளில் வரைந்த ஆப்பிளை ரவுண்ட் பண்ண சொல்லுங்கள். குழந்தைக்கு தெரியவில்லையென்றால் அவன் கைபிடித்து நீங்கள் செய்யுங்கள்

இவ்வாறு பலமுறைகளில் முயல்வதன் மூலம் குழந்தைக்கு இச்சொல் மனதில் பதிந்துவிடும். இதே போல மற்றவற்றிக்கும் பின்பற்றலாம்.
----------------------------------------------------------------------------------------------------------

ஆ) குழந்தைக்காக நீங்கள் பேசுங்கள். உங்கள் அம்மாவை பாட்டி என்று குழந்தை அழைக்கவேண்டுமென்றால் நீங்களும் மற்றவர்களும் குழந்தையின் முன்னிலையில் அவரைப் பாட்டியென்றே அழையுங்கள்.மற்ற உறவுமுறைகளையும் அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்தே அழையுங்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------

இ) காலை முதல் இரவு வரை நடக்கப் போவதை புகைப்படத்துடன் அட்டவணை இட்டு குழந்தைக்கு விளக்குங்கள். அதில் எந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதையும் படத்துடன் விளக்குங்கள். இன்று நீங்கள் ஹோட்டல் போக போகிறீர்கள் என்றால்....குழந்தைக்கு எப்போது, யாருடன், எங்கே என்று படத்துடன் விளக்கிவிட்டு அழைத்துச்செல்லுங்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------
ஈ) மற்ற குழந்தைகளுடன் பழக விடுங்கள். உங்கள் உறவினர் அல்லது தோழிகளிடம் இதே வயதொத்த சிறுவர்கள் இருந்தால் அவர்களிடன் உங்கள் பிரச்சனையை விளக்கி உதவி கேளுங்கள். மற்ற சிறுவர்களிடம் இருந்து விரைவாக கற்றுக் கொள்வார்கள். சொல்லித்தருவதை குழுவாக சொல்லிக் கொடுக்கும் போது மிகவும் ஈடுபாடு கொள்வார்கள். உதவிக்காக போய் நின்றால் அவமானம் நேரும்தான்..... ஒரு உதவி கிடைக்குமென்றால் 100 கதவுகளையும் தட்ட தயங்காதீர்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------
 உ) அவர்களால் உங்களுக்கு அவமானம் என்றோ... வாழ்க்கையே வெறுத்துவிட்டது என்றோ தயவு செய்து கோபத்தில் கூட அவர்கள் முன் பேசிவிடாதீர்கள். உலகமே அவர்களுக்கு நீங்கள்தான். சோகம் என்ற வார்த்தையை உங்கள் அகராதியில் இருந்து நீக்கிவிடுங்கள்

------------------------------------------------------------------------------------------------------

வாழ்நாள் இப்படியே கழிந்துவிடுமா என்று லேசாக அலுப்பு எட்டிப்பார்க்கும் போது இதை நினைவில் கொள்ளுங்கள்

“இவர்கள் கணிணி போன்றவர்கள். ஒரு முறை சிரமப்பட்டு ஃப்ரோகிராம் செய்துவிட்டால் போதும். அவர்கள் ஆற்றல் கண்டு வியந்து போவீர்கள்”

“சிறிது கூட களங்கமில்லாத அன்பு கொட்டிக் கிடக்குமிடமிது”

“நம்மால் முடியாவிட்டால் வேறுயாராலும் முடியாது”

---------------------------------------------------------------------------------------------------

சுமக்கக்கூடிய அளவு தான் பாரமிருக்கும். மகிழ்ச்சியாக சுமப்போம்.. ஏணியாக நின்று அவர்களை சிகரம் தொட வைப்போம். அனைத்து சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இங்கே நான் எழுதிய கதையை பகிர விரும்புகிறேன். படித்துவிட்டு கருத்து பகிருங்கள்.

இருளின் வெளிச்சத்தில்

-------------------------------------------------------------------------------------------------------------

மீண்டும் நாளை சந்திக்கிறேன். நன்றி. வணக்கம்


 

24 comments:

  1. நல்ல அறிமுகங்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விழியன். உங்கள் பயணம் சிறப்புற அமைய வாழ்த்துக்கள்

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இணையப்பிரச்சினை காரணமாக தொடர்ந்திட இயலவில்லை. இன்றைய உன்னுடைய பதிவு மிகவும் வித்தியாசமானதாகவும், பயனுள்ளப் பகிர்வாகவும் அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும். அறிமுகமாகியிருக்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தங்களது எழுத்துப்பணி சிறக்கட்டும்.

    குழந்தைகள் தினமாம் இன்று குழந்தையுள்ளத்தை தொலைத்து வரும் இன்றைய குழந்தைகள் அனைவரும் குழந்தைப்பருவத்தை, குழந்தையின் இருப்பில் இருந்து குழந்தையாய் அனுபவித்து மகிழ மனமார்ந்த வாழ்த்துகள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி காயு....உன்னோட ஸ்டைல குழந்தைகள் தின வாழ்த்து......நான் மயக்கம் போட்டாச்சு

      Delete
  4. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் சிறப்பான அறிமுகங்கள் தொடருகிறேன் பதிவுகளை

    தீபாவளிக் கவிதைப் போட்டியின் முடிவு பார்வையிட இதோ முகவரி வாருங்கள் வாருங்கள்
    http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்...பார்க்கிறேன்

      Delete
  5. இவ்வளவு நேரம் ஆகிடுச்சுக்கா, எல்லாம் படிக்க...
    ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்...
    இந்த மாதிரி குழந்தைகள் கிட்ட நமக்கு கிடைக்குரதுன்னு ஒண்ணு இருக்கு, அது எதிர்பார்ப்பே இல்லாத அன்பு.
    இந்த குழந்தைகளோட கொஞ்ச நேரம் இருக்குற ஒரு வாய்ப்பு எனக்கு ஒருநாள் கிடச்சுது. அப்போ எதுவுமே புரியாம மிரண்டு போய் தான் வீட்டுக்கு வந்தேன். யோசிச்சு பாக்கும் போது, ஆண்டவன் படைப்புல எவ்வளவு விசித்திரம் இருக்குன்னு தோணிச்சு. நாம எல்லாம் நிறைய பக்குவப்படனும்னு புரிய ஆரம்பிச்சுது. அவங்க கிட்ட மறுபடியும் போகணும்ங்குற எண்ணத்த இந்த பதிவுகள் எல்லாம் தெளிவு படுத்திடுச்சு.

    நான் அவங்கள போய் பாத்த அனுபவத்த இதுல சொல்லியிருக்கேன். அவங்களுக்கு ஒண்ணுமே செய்யாம அப்படியே திரும்பி வந்துட்டேன் :(

    http://gayathrid.blogspot.com/2013/09/blog-post_26.html

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா போய் பார்த்துட்டு வாடா.

      Delete
  6. அருமையான பகிர்வு, வாழ்த்துகள்

    ReplyDelete
  7. அனைத்துமே அருமை அனிதா.

    வலைச்சர ஆசிரியரே! , நல்வரவு.

    ReplyDelete
  8. ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அணுகுமுறை. எல்லாமே அழகு, ஆக்கப்பூர்வமான பதிவுகள், குழந்தைகள் தினத்தில், சிறப்புக் குழந்தைகள் பற்றி சிறப்பான பார்வை. அவர்கள் நலமுற்றிருக்க மனதிலும், செயலிலும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். நன்றி

    ReplyDelete
  9. குழந்தைகள் பற்றி சிறப்பு அக்கறையுடன் பதியப்பெற்ற பதிவுகளின் தொகுப்பாய் இன்றைய வலைச்சர அறிமுகப் பதிவு... உண்மையாகவே பயனுள்ள தொகுப்பு...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நிஜாமுதீன்

      Delete
  10. குழந்தைகள் தினமான இன்று குழந்தைகளை நோய் நொடியின்றி கவனித்துக்கொள்ளும்விதம், ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு, குழந்தைகளை ஊக்குவிக்க பெற்றோர்கள் செய்யவேண்டிய விசயங்கள் பற்றியும் மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் தங்களின் இன்றய பதிவானது நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ள ஓர் பதிவு. வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் நற்பணி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆனந்த். தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துவதற்கு.

      Delete
  11. மிக அருமையான பகிர்வு.
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. சிறப்பு குழந்தைகளை பற்றிய சிறப்பான பதிவு .... சிறப்பு குழந்தைகளுக்கான பல்வேறு முகாம்களில் பங்கேற்ற அனுபவத்தில் அக்குழந்தைகளை பெற்றவர்களின் சிரமம், அவர்கள் நாள்தோறும் கடந்து வரும் கடினமான பாதையை அறிந்தவன் என்ற முறையில் போலியோ நோய் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் வளர்ந்த அளவிற்கு பாதி அளவு கூட சிறப்பு குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் வரவில்லை. அந்த உண்மை உணர்ந்தோ என்னவே சிறப்பு குழந்தைகள் பற்றி நல்ல தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்.. மிக்க நன்றி - வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. என் தோழி மும்பையில் “ஸ்பெசல் எஜுகேட்டராக” இருக்காங்க. அவங்க கூட சிறிது காலம் “வாலண்டியர்” போன போது தோன்றியது இப்போது தான் எழுத்துவடிவத்தில் கொண்டு வர முடிந்தது. வட இந்தியாவில் சிறப்பு பெற்றோர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் இடம் வாங்கி ஒரு காலணியாக உருவாக்கி சிறப்புகுழந்தைகளின் எதிர்காலத்துக்கு(பெற்றோர் காலத்திற்கு பின்) திட்டம் போட்டு செயல்படுத்தி வருகின்றனர்.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது