07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 29, 2013

உலகின் கைவிடப்பட்ட இடங்களும் அற்புத காட்சியும்

 அனைவருக்கும் வணக்கம்,  உலகில் கைவிடப்பட்ட மக்கள் இருக்கிறார்கள், மதங்கள் இருக்கின்றன, அதுபோல இவை கேட்பாரின்றி நிராகரிக்கப் பட்ட அல்லது கைவிடப்பட்ட பகுதிகள்...பதிவிற்குள் செல்வோம்.

நீருக்கடியில் ஒரு  நகரம்

                                                 Image credits: china.org.cn

பழமையான ஒரு நகரம் ஷீசங் (Shicheng) இது புலி நகரம் எனவும் அழைக்கப்படுகிறது, இது கிழக்கு சைனா ஜீஜியங் மாகானத்தில் (Zhejiang province )இருக்கு.   இதன் ஒரு பகுதி 1959 ல் ஹைட்ரோபவர் ஸ்டேசன் உருவாக்கத்திற்காக பெரிய ஆற்றின் அடியில் மூழ்கடிக்கப் பட்டது. நீரினுள் அமிழ்ந்திருக்கும் நகரத்தின் ஒரு பகுதியை புகைப்படம் சுட்டுகிறது " வாழ்ந்து கெட்ட மனிதர்களின் சாட்சியாய்"

கப்பலில் முளைத்த மரம்



             இடம் :ஹோம்புஸ் குடா ,ஆஸ்திரேலியா Image credits: Bruce Hood

எஸ்.எஸ் ஐர்பீல்ட் (SS Ayrfield) எனும் நீராவி கப்பல் இரண்டாம் உலகப் போரின் போது பயன் பாட்டில் இருந்தது.  காட்டு பகுதியில், இது போன்ற கப்பல்கள் பயன்பாடின்றி அப்படியே விடப் பட்டன. ஏதோ காரணங்களால் இவற்றை அழிக்காமல் விட்டுவிட்டார்கள்.  "புகைப்படத்தை பார்க்க ரம்யமாக இருந்தாலும் அமானுஸ்யமாகவும் இருக்கு."


அழகிய ரயில் நிலையம்

                                image credits: John Paul Palescandolo & Eric Kazmirek

சினிமா செட்டிங் போல அழகிய வேலைப்பாடுடன் இருக்கும் இந்த இடம் நிலத்தடி ரயில் நிலையம்.   நியூயார்க் நகரத்தில் கட்டப் பட்ட மெட்ரோ ஸ்டேசன்.  இதன் அழகிற்காக இதை இடிக்காமல் வைத்திருக்கிறார்கள் போலும்.  கட்டிட வடிவமைப்பு பிற்பாடு  உருவாக்கப் பட்ட ரயில்களுக்கு பொருந்தி வரவில்லை, பாதுகாப்பு கருதி 1945 ல் இது மூடப் பட்ட, சுற்றுலா இடமாக மாறிப்போனது.

பேய்தீவு

                                          Image credits: hashima-island.com

பார்பதற்கு போர் கப்பல் தோற்றதில் இருக்கும் குட்டித் தீவு ஹாஷிமா (ஜப்பான்).  இங்கு 18 - 19 நூற்றாண்டு கால கட்டங்களில் மக்கள் நடமாட்டம் இருந்தது. அப்போது கடலடி நிலக்கரி சுரங்கத்திற்காக இத்தீவு உபயோகத்தில் இருந்தது.  நிலக்கரியில் இருந்து பெட்ரோலிய உபயோகத்திற்கு அரசின் கவனம் திரும்பியதால் இது அப்படியே விடப்பட்டது. "பேய் தீவாகிப் போனது."

ராஜாக்களின் மயானம்

                                                  Mount Nemrut, Turkey

இது அந்த கால ராஜாக்களின் மயானம், முதலாம் நூற்றாண்டை(கி.மு )சேர்ந்தது. துருக்கியில் உள்ள மவுண்ட் நெம்ரட் என்ற இடம்.
சுடுகாடும் அழகாய்த்தான் இருக்கு...

இனி பார்க்கப்போகும் இவைகள் தலைப்பிற்கு சம்பந்தமில்லாத தகவல்கள்.


 ஸ்வீடனை சேர்ந்த போர் கப்பல் வாசா 1628 ல் கடலில் மூழ்கிய இதை 1961ல் மீட்டெடுத்தார்கள்.  1600 களில் தயார்க்கப் பட்ட இது ஒன்றுதான் முழுமையாக மீதம் இருப்பதாக சொல்கிறார்கள். ஸ்டாக்ஹோமில்  இதை அப்படியே வைத்து அதை சுற்றி மியூசியம் (Vasa Museum )கட்டி வைத்திருக்கிறார்கள்.


சூரிய கடிகாரம்

மிக அரிதான பொருள் இது 16 ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க மோதிரம்.இது சூரிய ஒளியில் காட்டி விழும் நிழலை வைத்து நேரம் பார்க்கலாம். அதோடு திசைகாட்டி.  ஜெர்மனியில் இருக்கலாம் என்கிறார்கள்.


மத்திய சீனப்பகுதியில் இந்த புதைப் படிவம் இருக்கிறது. கிழக்கத்திய ஜூஹூ வம்சத்தை சேர்ந்தது( Eastern Zhou dynasty ). அந்த காலத்தில் அதிகார வர்கத்தை சார்ந்தவர்களின் சமாதியில் அவர்கள் உபயோகித்த ரதம் மற்றும் குதிரைகளோடு புதைத்திருப்பார்கள் என்கிறார்கள் தொல்லியல் துறையினர்.
இது போல ஐந்து ரதங்களும், 12 குதிரைகளும் இருக்கின்றன.
படத்தில் கல்லாகி போன படிவத்தை தண்ணீர் அடித்து சுத்தம் செய்கிறார் ஒருவர்.

இனி இன்றைய பதிவர்கள்

கூர்வாள் எனும் வலைப்பூவில் தன் எண்ணங்களோடு சிறப்பான கவிதைகளை படைத்து வருகிறார்  கயல்விழி சண்முகம், அதில் ஒரு கவிதை;

நதியாகிறாய்
அதில் உருளும் கல்லாகிறேன்
கூர்மழுங்கி
மென்மையாய்
வழவழத்துப் போனதன்
வருத்தங்களிருந்தது
ஆசையாய் அக்குழந்தையின்
கைசேரும் வரை... 

கவிதையின் தலைப்பு : கூழாங்கற்கள்


பொன்வண்ணக்காரிளை  : இது இன்னொரு கவிதை வார்த்தையின் வர்ணஜாலங்களை ரசிக்கலாம்.

பரிபோன தமது கிராமத்து வீட்டின் நினைவுகளை நம்மோடு பகிர்கிறார்

என் (கிராமத்து) வீடு

                                                                *****
ஜீவ நதி வலைத்தளம் பதிவர்  தங்கராசா ஜீவ ராஜ்
பண்டைய சோழர் வரலாற்றை பேசுகிறது இந்த பதிவு;

திரிகோணமலையிற் சோழர்கள் -பகுதி 1


                                                                *****
வலைத்தளம் :  அன்பின் வாசல்  பதிவர் : சுசிலா மாரிஸ்

வண்ண மீன் வளர்க்கறீங்களா?  இது போல பயனளிக்கும் பதிவுகள்.

                                                                *****

"நமத்துப் போய்விடாமல்
உலர்த்திக் கொண்டிருக்கிறது வெயில்
மழையின் நினைவுகளை"

கவிதை விருந்தளிப்பவர் இரா.எட்வின் அவர்கள்  நோக்குமிடமெல்லாம் நாமன்றி என்ற தளத்தில்.

கவிதைகளோடு நிலைத்தகவல்கள் ஒவ்வொன்றும் ரகசியம் பகிர்கின்றன நம்மோடு

                                                               *****
பதிவர் முட்டாநைனா வலைப்பதிவில் நகைச்சுவையாகவும் மர்மமாகவும் சென்று கொண்டு இருக்கிறது தலை இல்லா முண்டம் ... தொடர்கதையாக.

                                                              *****


அந்த தலையில்லா முண்டம் இந்த கவிதையிலும் இருக்கு

உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த உலகமா 

பிரபல பதிவரின் அம்பாளடியாள் வலைத்தளத்தில்.

                                                            *****
இவங்க கவிதை வாசித்து முடிக்கும் போது ஒரு புயலின் சீற்றம் (சமூக சாடல் ! ) நம் உள்ளத்தினுள் கடந்து போவதை உணர முடியும்

பெண் எனும் புதுமையில்

உடல் மூடும் திரை  :

மெளனத்தின் இரைச்சல் புத்தக எழுத்தாளர்  கோவை மு சரளா

                                                            *****
உரசலின் காயங்கள்
இறுக்கம் சூழ்ந்த அந்த இதயத்தின் 
மௌனத்தை உதறவைத்து  
வலியின் வார்த்தைகளைக்  
காற்றுவெளி எங்கும் பரப்ப
மகிழ்வாய் ஒடுங்கியது அது
மீண்டும் தேகத்தின் கணப்புக்குள்...
<<<<சின்ன சின்ன சிதறல்கள்  புத்தக எழுத்தாளர்  அகிலா  >>> பல்துறை வித்தகர் பலரும் அறிந்த பதிவர்.

வார்த்தைகள் இவங்களுக்கு வசப்பட்டது அவங்க சொல்படி கேட்கும் மத யானை.

கலங்கரை...  

எஞ்சியது ஒன்றுமில்லாமல்...

                                                            *****


பலபேர் பதிவே எழுதுவதில்லை இந்த பாழும் மின்வெட்டு பெருந்தொல்லை 

நான் சொல்ல நினைத்ததை கவிதையாக்கி தந்திருக்கிறார் புலவர் ஐயா இராமாநுசம் அவர்கள்.

                                                           ******

தென்றலாய் தவழ்கிறது கவிதைகள் இவர் தளத்தில் ..
  

பதிவர் : சசிகலா அவர்கள்.

பணியும் பனியும் !  

 


மீண்டும் நாளை பிரிதொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்,

அன்புடன்,

கலாகுமரன்.

                                           =====================

43 comments:

  1. அருமையான தகவல்கள் நன்றி

    ReplyDelete
  2. அனைவருக்கும் என் வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. கயல், Susila Marees - இந்த இரு தளங்களும் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நன்றி தோழர்.. :)

    ReplyDelete
  6. எனது வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல...!
    மிக்க நன்றி நண்பரே...!
    இச்செய்தியை எனது கவனத்திற்குக் கொண்டு வந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி...!

    ReplyDelete
  7. அழகான விவரங்களை சொல்லியிருக்கிறீர்கள்....நன்றி கலாகுமரன் என்னையும் என் தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு...

    ReplyDelete
  8. மனிதர்களையே மறந்து விட்டுப்போகும் இந்த காலத்தில் மனித முகங்கள் பார்க்காத இடங்களைப்பற்றி அழகா சொன்னிங்க. தென்றலின் அறிமுகமும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  9. இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைத்து உள்ளங்களுக்கும்
    வாழ்த்துக்கள் .என் தளத்தையும் அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கும்
    என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் தோழி !!

    ReplyDelete
  10. சுவையான தகவல்களும்...
    சுவைமிகுந்த பதிவுகள் தந்திடும் பதிவர்களும்...
    இன்றைய தங்கள் தொகுப்பு மிக அருமை....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க கலை.

      Delete
  11. வலைச்சரத்தில் அறிமுகமான அனைத்து உள்ளங்களுக்கும்
    வாழ்த்துக்கள் .

    ஜீவநதி தளத்தை அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கு
    என் நன்றிகள்.

    அறியத்தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவராஜ் தொடர்ந்து வாங்க..நன்றி.

      Delete
  12. என்னையும் அறிமுகப்படுத்தினீர்! நன்றி! அன்பரே!

    ReplyDelete
    Replies
    1. ஐயா நீங்க இல்லாமலா நன்றிங்க.

      Delete
  13. செய்திகளின் தொகுப்பு அருமை. வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வியக்க வைக்கும் தகவல்களைத்
    தொகுத்துத் தந்தீர்கள் சகோ!. படங்களும் அற்புதம்!

    இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும்
    உங்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாங்க நன்றி இளமதி

      Delete
  15. இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நேசம் மிகக் கொண்டேன்.

      Delete
  16. வணக்கம்

    எல்லோரையும் வியக்க வைக்கும் பதிவு அருமை வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. கடிகாரமோதிரம் பார்த்துள்ளேன். சூரியக் கடிகார மோதிரத்தைப் படத்தில் இப்போதே பார்கிறேன். இது நிச்சயம் ஐரோப்பாவில் இருக்கும், இப்படியானவற்றைச் சேகரித்துப் பாதுகாக்கும் பழக்கம் இவர்களுக்கே உண்டு. இதன் பெறுமதி இவர்களே அறிவார்கள். நம்மவர்கள் தங்கமானபடியால் அழித்து கம்மல் செய்து காதில் போட்டிருப்பார்கள்.
    தகவலாக இச் சூரியக் கடிகாரத்தின் முன்னோடிகள் சீனர், தொடர்ந்து இந்தியர்கள் பின்பே ஐரோப்பியர்கள் ஈடுபட்டதாக இங்குள்ள இதைச் சேகரித்துக் கண்காட்சி நடத்துபவர் கூறினார். அவர் இணையப் பக்கம்
    www.cadransolaire.info, www.cadrans-solaires-yves-guyot.com
    இப்படத்திலுள்ள கல்லறையில் வண்டி, குதிரை எலும்புகள் உள்ளன. அந்த மனித மிச்சங்கள் எங்கே?
    எகிப்திய மம்மிகளுடன் புதைக்கப்படும் அவர் உபயோகித்த பொருட்களுடன் உடலும் கிடைக்கிறது.
    தென் அமெரிக்க மாயா மக்களுடைய கல்லறையில் மனித எச்சத்துடன் அவர்கள் உபயோகித்த உலோக
    மண் பாண்டங்கள், நகைகள் செல்லப்பிராணிகள் எச்சங்கள் கிடைக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. தளத்தை பார்த்தேன் அருமையான கலக்சன். பாசை தான் புரியல. புகைப்படம் மற்றும் தகவல் தான் படித்திருந்தேன் ஆராய்சி கட்டுரையை பற்றிய தெரியல. நீங்க சொன்னத நானும் கவனிச்சேன். ஐந்து ரதம் இருக்குன்னு போட்டிருக்கேன் அந்த படத்தில் ஏதும் இருக்குமே. இடம் புதையுண்டு போயிருந்தாலும் மனித எலும்பு படிமம் இல்லையே !. விரிவான தகவலுக்கு நன்றிங்க யோகன். தொடர்ந்து வாங்க.

      Delete
  19. அற்புதமான படங்களும் அறிய செய்திகளும் உள்ளடக்கிய சிறப்பான பகிர்வு அதனோடு என் தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  20. பலர் எனக்கு புதியவர்கள்....

    த.ம. 5

    ReplyDelete
  21. அருமையான படங்கள்... அழிந்து கொண்டிருக்கும் இவை உலக வரலாற்றின் சின்னங்கள்!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது