07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 3, 2013

ஆரம்பம் - விடைப்பெறுவது உங்கள் பட்டாம்பூச்சி


ஹாய் ஹாய் ஹாய்... நான் தாங்க, பட்டாம்பூச்சி வந்துருக்கேன். ஒருவாரமா உங்க எல்லோரோட தோட்டத்துலயும் சுத்திட்டு இனி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப் போறேன்..

உண்மைய சொல்லணும்னா என்கிட்ட வந்து நீங்க பொறுப்பு எடுத்துக்குறீங்களானு கேட்ட நேரம் நான் ரொம்ப பிசி. காலேஜ்ல ப்ராஜெக்ட் நேரம். எனக்குன்னு ஆறு ஸ்டுடென்ட்ஸ். எப்படியும் அந்த வாரத்துல தீசிஸ் வச்சே ஆகணும். அந்த நேரத்துல நான் ஆன்லைன் வரதே கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணத்தான். பெரும்பாலும் யார் கூடவும் சாட் பண்ண மாட்டேங்குரதால கிடைக்குற கொஞ்ச நேரத்துல வந்து ஏதாவது கலாட்டா பண்ணிட்டு ஓடிடுவேன்.

அப்படி இருக்கும் போது தமிழ்வாசி பிரகாஷ் அண்ணாவுக்கு எப்படி தான் என்னை இதுல ஆசிரியரா போடலாம்னு தோணிச்சுன்னு தெரியல, ஆனா கேட்டுட்டாங்க. இனி வர வாரங்கள்ல ரெண்டு வாரம் ரொம்பவே ப்ரீயா இருப்பேன், அப்போ பாத்துக்கலாமான்னு கேக்க நினச்சேன், அப்புறம் தான், கேட்டுட்டாங்க, முடியாதுன்னு சொல்றது சரியில்லன்னு தோணிச்சு. அதோட ஏற்கனவே மீரா அம்மா வேற என்கிட்ட லைட்டா இத பத்தி சொல்லி வச்சிருந்தாங்க, சதீஷ்சங்கவி அண்ணா என்னை பத்தி வலைசரம் சார்பா எதோ விசாரிச்சார்ன்னு. இப்போவரை நான் அவர் கிட்ட பேசினதில்ல, ஆனாலும் எல்லோரும் என்கிட்ட என்னவோ இருக்குன்னு தான் கேக்குறாங்க, சோ, கண்டிப்பா கொஞ்சம் இதுக்காக நேரம் ஒதுக்க முடியும்னு நினச்சு சரின்னு தலையாட்டிட்டேன்.

தலையாட்டிட்டேன், சரி தான், ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு உதறல் லைட்டா இருந்துட்டு தான் இருந்துச்சு. இனியாவது கொஞ்சம் இந்த ப்ளாக்ஸ் எல்லாம் படிக்கணும்னு முடிவு பண்ணினேன். நான் நினச்ச மாதிரி கண்டிப்பா அது ஈசியா இருக்கலங்க... அது எனக்கு புது அனுபவமா  இருந்துச்சு. அப்போ தான் தமிழ்வாசி பிரகாஷ் அண்ணா கொஞ்சம் ஊக்கம் குடுத்தாங்க. ஸ்கூல் பையன் அண்ணா எனக்கு நிறைய லிங்க்ஸ் எல்லாம் அனுப்பி தந்தாங்க.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேடி தேடி பதிவுகள் படிச்சேன், காரணம், நாம எதயும் படிக்காம எதையாவது போட்டுட்டு போய்ட்டா அப்புறம் அது நல்லா இருக்காதே. நிறைய படிச்சிருந்தாலும், நான் சிலரோட பதிவுகள அதிகமா இங்க மேற்கோள் காட்டினதில்ல, காரணம் அதெல்லாம் எல்லோருக்கும் ரொம்ப நல்லா தெரிஞ்ச பதிவர்களோட பதிவுகள். அவங்களோட எழுத்துக்கள இங்க நான் எடுத்து சொல்ற அளவு நான் இன்னும் வளரலங்குறது தான் அதுக்கு காரணம். ஆனாலும் அவங்க எல்லோரோட பதிவுகளையும் நான் தொடர்ந்து படிச்சுட்டு தான் இருக்கேன், இன்னும் தொடர்ந்து படிப்பேன்.

நான் தொடர்ந்து படிச்ச பதிவுகள் இதெல்லாம்...  


இந்த நேரத்துல திண்டுக்கல் தனபாலன் அண்ணாவுக்கும் தம்பி மகேஷ்க்கும் என்னோட நன்றிய கண்டிப்பா நான் தெரிவிச்சாகனும், காரணம், இவங்க ரெண்டு பேரும் தான் நான் இங்க ரீ-என்ட்ரி ஆக காரணம்.

கடைசியா எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த சீனா ஐயாவுக்கு என்னோட நன்றிய தெரிவிச்சுக்குறேன். என் மேல அவர் வச்ச நம்பிக்கைக்கு பெரிய தேங்க்ஸ்.

சரி, என்னை நான் ஏன் பட்டாம்பூச்சினு சொல்றேன்னு இதுவரைக்கும் நான் சொல்லவே இல்லையே... இந்த பட்டாம்பூச்சி இருக்கே, இதோட ஆயுள் ரொம்ப குறைவு தான். ஆனா அது வாழுற காலம் வரை சுதந்திரமா அது மனசுக்கு தோணுற மாதிரி வாழ்ந்துட்டு போயிடுமாம். நானும் ஒரு வகைல அப்படி தாங்க, எனக்கு பிடிச்ச விசயங்கள மட்டும் தான் பண்ணுவேன். சுதந்திரமா இருக்கணும்னு ஆசைப்படுவேன். என்னோட அம்மா என்னை சின்ன வயசுல இருந்தே அப்படியே வளத்துட்டாங்க. நான் இப்படி இருக்குறதுக்கு காரணம் என்னோட அம்மா... அவளும் ஒரு பட்டாம்பூச்சி தான். ஒரே ஒரு வித்யாசம், அவ என்னை சுதந்திரமா பறக்க விட ஆசை பட்டு அப்படியே பறக்க விட்டுட்டு அவ ஒரு கூட்டுப் புழுவா மாறிட்டா. இந்த நேரத்துல நான் அவளுக்கும் கண்டிப்பா தேங்க்ஸ் சொல்லியே ஆகணும்ல.

இந்த ஒரு வாய்ப்பால என்னோட உலகத்த நான் இன்னும் கொஞ்சம் பெருசாக்கிகிட்டேன். இங்க வந்ததால நிறைய பேர என்னால தெரிஞ்சுக்க முடிஞ்சுது. இங்க நான் நிறைய கத்துக்கிட்டேன். இப்போ எதோ கோச்சிங் கிளாஸ்ல இருந்து கிளம்புற பீல். கண்டிப்பா இங்க கத்துகிட்டத வச்சு என்னை நானே இன்னும் மேம்படுத்திப்பேன். வாய்ப்பு குடுத்தவங்களுக்கும், எனக்கு ஆதரவு குடுத்தவங்களுக்கும் மறுபடியும் நன்றி... இது என்னோட ஆரம்பம்ங்க....

அடுத்ததா வலைச்சரம் ஆசிரியரா பொறுபேற்க போறவங்களுக்கும் என்னோட வாழ்த்துகள்... ரொம்ப சிறப்பா வரும் வாரங்களை அவங்க கொண்டு போவாங்கங்குற நம்பிக்கை இருக்கு.

நான் வரேங்க... இங்கயே தான் சுத்திட்டு இருக்கப் போறேன்...  

19 comments:

  1. வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்புற முடித்தமைக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா... எல்லாம் உங்கள மாதிரி இருக்குறவங்களோட ஆசிர்வாதம்

      Delete
  2. ரசணையா வெளிப்படையா எழுதுவது எல்லோராலும் முடியாது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்க பாராட்டுக்கு நன்றி. எதோ என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணியிருக்கேன்

      Delete
  3. உன்னோட கடமையை சரிவர முடித்த திருப்தியோடு விடைபெறுகிறாய்... உனக்கும் அடுத்து பொறுபேற்க போகும் ஆசிரியருக்கும் என் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியதுக்கு தேங்க்ஸ் மேடம்

      Delete
  4. இந்த வார வலைச்சரத்தை அழகாக, சிறப்பாக தொடுத்த காயத்ரிக்கு மிக்க நன்றி...

    உங்களின் எளிய வரிகளே உங்களை அழைக்க தூண்டியது சகோ.....

    மேலும் தொடருங்கள் உங்கள் வலை பணியை....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணா, கண்டிப்பா தொடர்வேன்

      Delete
  5. ஒருவார வலைச்சர ஆசிரியர் பணி அருமையாக செய்து முடித்தீர்கள்... என்னால் சில பதிவுகளைப் படிக்க முடியவில்லை... படிக்கிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தினதுக்கு தேங்க்ஸ்.... கண்டிப்பா படிங்க...

      Delete
  6. அன்பின் காயத்ரி தேவி..வாழிய பல்லாண்டு!...பட்டாம்பூச்சி எனப் பறந்து திரிந்து - ஆசிரியப் பணியினை நல்ல முறையில் செய்து முடித்தீர்கள்.. தங்களின் பணி மேலும் தொடர வேண்டும்.. நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு தேங்க்ஸ் :) கண்டிப்பா தொடர்வேன்

      Delete
  7. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தமைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பல... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் அண்ணா.... எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம்

      Delete
  8. வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்புற முடித்தமைக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் பட்டாம்பூச்சி!

    ReplyDelete
    Replies
    1. ஹஹா கண்டிப்பா.... வாழ்த்துக்கு நன்றி

      Delete
  9. சிறப்பான வாரம்...... வாழ்த்துகள்.....

    பட்டாம்பூச்சி தொடர்ந்து பறக்கட்டும் - உங்கள் தளத்தில்.....

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்..இயல்பான நடையில் நிறைய அறிமுகங்களைத் தந்தமைக்கு...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது