07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 8, 2013

ஜாதிப் பூவைத் தொடுக்கிறேன்.

ஜாதிப் பூக்கள் சீக்கிரம் வாடினாலும் அதன் மணம் குன்றாது.  அப்படிச் சில எழுத்தாளர்களின் எழுத்தை நாம் பல நாட்கள் ஆனாலும் அசை போட்டுக் கொண்டு ரசித்து யோசிக்கலாம்.  அப்படிப் பட்ட எழுத்தாளர்களுள் சிலரின் எழுத்துக்களைக் காண்போம்.


அடுத்து அனைவரும் நன்கறிந்த "வல்லமை"மின்னிதழின் ஆசிரியர் திருமதி பவளசங்கரி திருநாவுக்கரசு அவர்களின் வலைப் பூ. பெண்களைக் குறித்தும் அவர்களின் முன்னேற்றங்கள் குறித்தும் அதீத அக்கறை கொண்ட பவளசங்கரியின் எழுத்தும் அதைச் சார்ந்தே இருக்கும்.  அது மட்டுமின்றிக் கவிதை, கதை எனக் கலக்குவார். வல்லமையைச் செம்மையாகச் செலுத்திச் செல்லுவதில் இவரின் வல்லமையும்  பஙக்ளிக்கிறது என்பது இணைய உலகம் அறிந்ததொரு விஷயம். இசைக்கவி ரமணனோடு "கொஞ்சம் கவிதை, கொஞ்சம் தேநீர்" நிகழ்ச்சியில் பொதிகையில் தோன்றித் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டினார்.

இவருடைய நூல்கள் விடியலின் வேர்கள்,  வெண்ணிலவில் ஒரு கருமுகில், நம்பிக்கை ஒளி ஆகியன புத்தகமாக வெளி வந்திருக்கின்றன.. http://coralsri.blogspot.in/2013/10/blog-post_27.html#more நித்திலம்:சித்தன்னவாசல்


அடுத்தவராக மைத்துளிகள் எழுதும் மாதங்கி மாலி.  இவர் எழுதும்போது அந்த எழுத்தில் ஆழம் தெரியும் இவரின் அபாரமான  மன முதிர்ச்சியும் வெளிப்படும்.  ஆனால் நேரில் பார்க்கையில் குழந்தை மாதிரிப் பழகுவார். தான் பார்த்த ஒரு திரைப்படம் குறித்த இவரின் விமரிசனம் இங்கே.

http://maiththuli.blogspot.in/2012/11/omg-oh-my-god.html மைத்துளிகள் ....OMG பட விமரிசனம்

அடுத்ததாகவும் அனைவருக்கும் நன்கு தெரிந்தவரே.  எங்கள் ப்ளாக் ஶ்ரீராம். இவர் கதை, கவிதை, கட்டுரை என அனைத்துத் துறையிலும் கலக்குகிறார். அதீதம் மின்னிதழில் வந்த இவரின் வெங்கிட்டு அனைவரையும் கவர்ந்த ஒன்று.

http://www.atheetham.com/ வெங்கிட்டு/அதீதம்

அடுத்தவர் எனக்குப் புதியவர், பலருக்கும் அறிமுகம் ஆகி இருக்கலாம்.

 http://antharaththottam.blogspot.in/2013/10/co_31.html#gpluscommentsதீபாவளி, C/O ???

ரிஷபன் சாரின் + ஐ பார்த்துத் தான் தீபப் ப்ரியாவின் இந்தப் பதிவுக்குப்போய் அவங்களின் கதைகளைப் படிக்கிறேன்.  இம்முறை அவங்க எழுதிய தீபாவளிச் சிறப்புச் சிறுகதை.  அம்மாடியோவ்!  என்ன ஒரு கற்பனை! சிந்தனை! உண்மையில் முடிவு  நான் எதிர்பாரா ஒன்று. நீங்களும் போய்ப் படிச்சுப் பாருங்களேன்.


அடுத்து திரு க.ரா. அவர்களின் வலைப்பூ.

 க.ரா. அப்பா காணாமல் போனார் http://satturmaikan.blogspot.in/2013/11/blog-post.html#gpluscomments

அடுத்ததாக திரு க.ரா. வின் வலைப் பூ.  இதுக்கும் ஶ்ரீராம் + விட்டிருந்தாரோ? ஆமாம்னு நினைக்கிறேன்.  வெகு சரளமான நடை.  தேர்ந்த எழுத்தாளரைப் போன்ற சிந்தனை.  அம்மாவின் பயமும், அப்பாவின் கண்டிப்பும் கண்ணெதிரே கொண்டு வந்த திறமை. முடிவு அருமையோ அருமை.


அடுத்ததாக நாம் அனைவரும் நன்கறிந்த வலைப்பூவான

http://azhiyasudargal.blogspot.in/  அழியாச் சுடர்கள்

இதில் பல்வேறு  எழுத்தாளர்களின் ஆக்கங்களைக் குறித்த விமரிசனங்கள், பல்வேறு நேர்காணல்கள் எனக் கொட்டிக் கிடக்கின்றன. நமக்கு எது விருப்பமோ அதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.  நீங்களும் நீங்கள் படித்த கதையையோ, கட்டுரையையோ குறித்த விமரிசனங்களை அனுப்பி வைக்கலாம்.

தேர்ந்த எழுத்தாளரான ஜீவி அவர்களின் வலைப்பூ இன்னொரு உதாரணம்.  இதில் இவர் பல எழுத்தாளர்களையும் அவர்களின் முக்கிய ஆக்கங்களையும் குறித்துப் பகிர்ந்திருக்கிறார் என்பதோடு அவ்வப்போது யோசித்து யோசித்து அருமையான கதைகளை எழுதி வருகிறார்.  இது எப்படி எனில் ஒரு சிற்பி தன் மனதுக்குப் பிடித்த சிற்பத்தைச் செதுக்குகையில் எவ்வாறு கொஞ்சம் செதுக்கி விட்டுப் பின்னர் தள்ளி நின்று ரசித்து அதைச் சரி பண்ணி விட்டு மீண்டும் செதுக்கிவிட்டு மீண்டும் ரசனையோடு பார்த்தவண்ணம் செதுக்குவானோ அப்படி யோசித்து யோசித்துச் சொற்களால் பின்னல் போட்டு அதை அழகாக்குக்கிறார். ஒவ்வொரு கதைகளும் ஒரு சிறு குறுநாவல். இப்போதெல்லாம் பத்திரிகைகள் கதைகளே வெளியிடாமல் இருக்கும் காலத்தில் இவ்வாறான கதைகளை இணையத்திலாவது படிக்க முடிகிறதே என்ற திருப்தியும் ஏற்படுகிறது.


பூ வனம்: இனி (பகுதி 14) http://jeeveesblog.blogspot.in/2013/10/14.html

47 comments:

  1. அறிமுகங்கள் அருமை. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி கரந்தை ஜெயக்குமார்

      Delete
  2. அட, என் பெயர்! நன்றி! நன்றி!

    க.ரா வின் அந்தக் கதை மூலமாகத்தான் அவர் எனக்கு அறிமுகம் அதை மட்டும்தான் படித்திருக்கிறேன். மிக இயல்பாக மனதைத் தொட்டது.

    மற்றபடி ஜீவி பக்கமும், அழியாச் சுடர்கள் பக்கமும் நன்கு தெரியும். நித்திலம் பக்கத்துக்கு நீ....ண்ட நாட்களுக்கு முன்னாள் சென்றிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், எங்கள் ப்ளாகைப் பலரும் சொல்லிட்டதாலே உங்கள் கதையை அதீதம் மூலம் அறிமுகம் செய்தேன். :))))

      Delete
  3. விரிவான தகவல்களுடன் - அழகான - ஜாதிப் பூச்சரம் மணக்கின்றது!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை செல்வராஜூ, மிக்க நன்றி.

      Delete
  4. அருமையான பதிவுகள்.சு.ராவின்கதையை இப்பத்தான் பார்த்தேன்.மற்றவர்களைப் பற்றி விவரிக்க எனக்கு தகுதி போதாது. நன்றி கீதா.

    ReplyDelete
    Replies
    1. க.ரா.வை +இல் பலமுறை பார்த்திருந்தாலும் இத்தனை அழகாய்க் கதை எழுதுவார்னு எனக்கும் தெரியாது வல்லி. :) கதையும் அதன் முடிவும் மறக்க முடியாத ஒன்று.

      Delete
  5. மணம் கமழும் தளங்களின் தொடுப்பூ அருமை ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி,

      Delete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. மெதுவா கணினி சரியானதும் வாங்க. ஏதோ பிரச்னைனு தான் எனக்கும் மனதில் பட்டது. வரவுக்கு சிறப்பு நன்றி. :))))

      Delete
  7. ஜாதிப்பூ மலர்ந்து மணம் வீசுகிறது... அருமையான அறிமுகங்கள்.. நிறையத் தளங்கள் தெரிந்து கொண்டேன்.. பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா!!

    ReplyDelete
  8. நன்றிங்க என்னை பற்றிய அறிமுகத்துகுக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி க.ரா. :))))

      Delete
    2. இப்போப் பாருங்க, புரியற மாதிரி மாத்தி இருக்கேன். குழப்பம் நேராது. அவசரமாகத் தொகுத்துப் போடுவதால் சரியாய்க் கவனிக்கலை.

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. http://antharaththottam.blogspot.in/2013/10/co_31.html#gpluscommentsதீபாவளி, C/O ???

      ரிஷபன் சாரின் + ஐ பார்த்துத் தான் தீபப் ப்ரியாவின் இந்தப் பதிவுக்குப்போய் அவங்களின் கதைகளைப் படிக்கிறேன். இம்முறை அவங்க எழுதிய தீபாவளிச் சிறப்புச் சிறுகதை. அம்மாடியோவ்! என்ன ஒரு கற்பனை! சிந்தனை! உண்மையில் முடிவு நான் எதிர்பாரா ஒன்று. நீங்களும் போய்ப் படிச்சுப் பாருங்களேன்.//


      இது தீபப்ரியா பற்றி எழுதியது. அதன் கீழேயே உங்களையும் குறித்து எழுதி இருப்பதால் வந்த குழப்பம். மன்னிக்கவும். :))))


      // க.ரா. அப்பா காணாமல் போனார் http://satturmaikan.blogspot.in/2013/11/blog-post.html#gpluscomments


      அடுத்ததாக திரு க.ரா. வின் வலைப் பூ. இதுக்கும் ஶ்ரீராம் + விட்டிருந்தாரோ? ஆமாம்னு நினைக்கிறேன். வெகு சரளமான நடை. தேர்ந்த எழுத்தாளரைப் போன்ற சிந்தனை. அம்மாவின் பயமும், அப்பாவின் கண்டிப்பும் கண்ணெதிரே கொண்டு வந்த திறமை. முடிவு அருமையோ அருமை.//

      இது உங்களைக் குறித்து எழுதியது. :))))



      Delete

  10. //அடுத்ததாக திரு க.ரா. வின் வலைப் பூ. இதுக்கும் ஶ்ரீராம் + விட்டிருந்தாரோ? ஆமாம்னு நினைக்கிறேன்.//

    Yes.

    வேறு யாரோ நண்பர் comment செய்திருந்ததில் க.ராவின் அந்தக் கதை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. நல்ல நடை. மனத்தைக் கவர்ந்தது. பின்னூட்டமிட்டிருந்தேன்! ப்ளஸ் செய்தேன்.

    ஆனால் ப்ளஸ் செய்வதால் என்ன லாபம் என்று தெரியாது. :)))

    ReplyDelete
    Replies
    1. என் போன்ற சோம்பேறிகளுக்கு + ஒரு வர ப்ரசாதம் ஶ்ரீராம். பல பதிவுகளையும் அங்கே பார்த்துத் தான் படிக்கிறேன். நான் தொடரும் பதிவுகளுக்கோ, என்னைத் தொடர்பவர்களின் பதிவுகளுக்கோ எப்போவானும் தான் போக முடியுது. :)))))

      Delete
  11. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அருமையான தளங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. //தேர்ந்த எழுத்தாளரான ஜீவி அவர்களின் வலைப்பூ இன்னொரு உதாரணம். இதில் இவர் பல எழுத்தாளர்களையும் அவர்களின் முக்கிய ஆக்கங்களையும் குறித்துப் பகிர்ந்திருக்கிறார் என்பதோடு அவ்வப்போது யோசித்து யோசித்து அருமையான கதைகளை எழுதி வருகிறார். இது எப்படி எனில் ஒரு சிற்பி தன் மனதுக்குப் பிடித்த சிற்பத்தைச் செதுக்குகையில் எவ்வாறு கொஞ்சம் செதுக்கி விட்டுப் பின்னர் தள்ளி நின்று ரசித்து அதைச் சரி பண்ணி விட்டு மீண்டும் செதுக்கிவிட்டு மீண்டும் ரசனையோடு பார்த்தவண்ணம் செதுக்குவானோ அப்படி யோசித்து யோசித்துச் சொற்களால் பின்னல் போட்டு அதை அழகாக்குக்கிறார். ஒவ்வொரு கதைகளும் ஒரு சிறு குறுநாவல்.//

    ஆஹா, திரு. ஜீவி அவர்களைப்பற்றி சொல்லியுள்ளது யாவும் அருமை. உண்மை. இனிமை.

    அவர் மிகவும் யோசித்து, அபூர்வமாகப் பிறருக்கு தந்துவரும் பின்னூட்டங்களை வைத்தே, அந்த எழுத்தாளரின் தரத்தினை நாம் சுலபமாக எடை போட்டு விட முடியும்.

    திரு. ஜீவி ஐயா அவர்களைப்பற்றி சிறப்பித்துச்சொல்லியுள்ள தங்களுக்கு என் தனிச்சிறப்பான பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  14. இன்று வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான நல்வாழ்த்துகள். தங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி வைகோ சார்.

      Delete
  15. நன்றி நவ்சீன்கான்.

    ReplyDelete
  16. ஜாதிப் பூக்கள் சீக்கிரம் வாடினாலும் அதன் மணம் குன்றாது. அப்படிச் சில எழுத்தாளர்களின் எழுத்தை நாம் பல நாட்கள் ஆனாலும் அசை போட்டுக் கொண்டு ரசித்து யோசிக்கலாம். //
    உண்மைதான், நீங்கள் சொல்வது.
    ஸ்ரீராமின் வெங்கிட்டு, ஜீவி அவர்களின் இனி கதைகள் எல்லாம் அப்படித்தான்.பலநாட்கள் ஆனாலும் அசை போட வைக்கும்.
    பவளசங்கரியும் நல்ல எழுத்தாளர்.
    அழியாசுடரும் படிப்பேன்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    அருமையாக தொகுத்து வழங்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, கிடைக்கும் கால அவகாசத்தில் வரீங்க என்பதே பெரிய விஷயம். :))) வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      Delete
  17. தாங்கள் இன்று கொடுத்துள்ள தலைப்பு
    ”ஜாதிப் பூவைத்தொடுக்கிறேன்.”

    ’வல்லமை’ ஆசிரியரைப்பற்றியும் சிறப்பித்துக்கூறியுள்ளீர்கள்.
    மிக்க மகிழ்ச்சி.

    நான் எழுதிய சிறுகதை ஒன்றின் தலைப்பு: “ஜாதிப்பூ”

    இது வல்லமையில் வெளிவந்த கதைதான்.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011_09_01_archive.html

    அதற்கு நம் திரு. ஜீவி ஐயா கொடுத்துள்ள பின்னூட்டம் இதோ:

    -=-=-=-=-

    ஜீவி September 30, 2011 at 4:00 AM

    //விளையாட்டாக பூ வியாபரம் செய்ய இங்கு வந்து போன-- தன் சொந்தப்பேத்திக்கு...//

    வழுக்கு சாலையில் வழுக்கிக் கொண்டு போன வாகனக் கதைக்கு இது எதிர்பாராத திருப்பம் தான்!

    அந்த 'மாப்பிளே'யில் கொடுத்திருந்த அழுத்தமும், ஒற்றை வார்த்தையில் கிழவியின் விருப்பத்தைச் சொல்வதாகவும், ரசிக்கக் கூடியதாகவும் இருந்தது!

    எளிய நடையில் எழுதப்பட்ட சிறுகதைக்கு ஏகப்பட்ட நன்றிகள்!

    -=-=-=-=-

    திரு ஜீவி ஐயா என் எவ்வளவோ படைப்புகளுக்குப் பின்னூட்டம் அளித்துள்ளார்கள்.

    இருப்பினும் ’ஜாதிப்பூ’ என்றும், ’வல்லமை’ என்றும், ‘திரு. ஜீவி ஐயா’ என்றும் தாங்கள் இன்று சொல்லிவிட்டதால் இதை மட்டும் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? நான் பார்க்கவில்லை வைகோ சார். போய்ப் படிக்கிறேன். சுட்டிக்கு நன்றி.

      Delete
  18. பல தளங்களை அறிமுகப்படுத்தினீர்கள் ...
    மிக்க நன்றி !!!

    ReplyDelete
  19. அருமை... அருமை...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. அருமையான தளங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. அருமை நண்பர் கோபு சார் சொல்லித் தான் தெரிந்தது. 'வலைச்சர'த்தில் என் தளத்தைப் பற்றிச் சொல்லி மகிழ்ந்திருப்பதற்கு நன்றி. பின்னூட்டங்களில் என்னைப் பார்த்த பொழுது பணிவான
    தலைகவிழ்த்தல் ஏற்பட்டது உண்மை. அது இன்னும் சிறப்பான படைப்புகளைக் கொடுப்பதற்கான உத்வேகத்தை கொடுத்ததும் உண்மை. மிக்க நன்றி கீதாம்மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார், வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றி.

      Delete
  22. அருமையான தொகுப்பு. படிக்கிறது என்றால், இப்படி படிக்கவேண்டும். வாழ்த்துக்கள், கீதா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க "இ" சார், வருகைக்கும் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.

      Delete
  23. அன்பின் கீதாஜி,

    மிக்க மகிழ்ச்சி. மன்னிக்கவும் இன்றுதான் பார்த்தேன். என் வலைப்பூவையும், உங்கள் வலைச்சரத்தில், வண்ண மாலையில் மணம்மிகு ஜாதி மல்லியாக்கியமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தங்களுடைய அன்பான வார்த்தைகள் என்னை உறசாகமாக எழுத வைக்கிறது. மிக்க நன்றிங்க.

    அன்புடன்
    பவளா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி பவளசங்கரி. பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  24. இன்றைக்கு அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது