07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 3, 2013

காயத்ரி தேவி கீதா சாம்பசிவமிடம் பொறுப்பினை ஒப்படைக்கிறார்

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற காயத்ரி தேவி தான் ஏற்ற பொறுப்பினை ஆர்வத்துடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் பொறுப்புடனும் சரி வர நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                                                         : 011
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்கள்  / தளங்கள்      : 071
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகள்                                 : 056
பெற்ற மறுமொழிகள்                                                             : 270


வந்து  பார்வையிட்டு மகிழ்ந்தவர்கள்                          : 1336

குறுகிய கால அவகாசத்தில் பொறுப்பேற்ற காயத்ரி தேவி சிறப்பாகப் பணியாற்றியமைக்கு பாராட்டி வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க - குறுகிய அவகாசத்தில் - இணக்கம் தெரிவித்த கீதா சாம்பசிவத்தினை வாழ்த்தி வருக ! வருக! என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

இவர் 2005 ஆம் வருடம் நவம்பரில் வலைப்பூ ஆரம்பித்த மூத்த பதிவர்.  1000 பதிவுகளைத் தாண்டியவர்.   எண்ணங்கள் என்ற  வலைப்பூ தான் பிரபலம் ஆன ஒன்று.  அதன் பின்னர் சில வலைப்பூக்களை ஆரம்பித்து எழுதி வந்தாலும், இன்றளவும் எண்ணங்கள் வலைப்பூவுக்குத் தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம். :))  பள்ளிப்படிப்பை முடிச்சுட்டு, D.Com., (மதுரையிலே மட்டும் பெண்கள் பாலிடெக்னிக்கில் இருந்தது) பரிக்ஷைக்குப் படிக்கையிலேயே திருமணம் ஆனதில் படிப்பு கோவிந்தா! 

அதன் பின்னர் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் ஹிந்தியில் பட்டமும், போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா கோர்ஸும் முடித்தவர். பல வருடங்களாக எழுத ஆசைப்பட்டவர்.  அந்த ஆசையைக் குடும்பப் பொறுப்புக்களை ஓரளவுக்கு முடித்த பின்னர் தீர்த்துக் கொண்டவர்.

 ஆனால் இப்போவும் குடும்பம், அதன் வேலைகளுக்கே முதலிடம்.  அதை முடிக்காமல்  இணையத்துக்கு வரதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார். ஏறகனவே 21.04.2008ல்  ஒரு முறை வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்று சிறப்புடன் பணியாற்றி இருக்கிறார். .
தற்பொழுது மீண்டும் பொறுப்பேற்கிறார். 

இவரது தள முகவரி : http://sivamgss.blogspot.in/

நல்வாழ்த்துகள் காயத்ரி தேவி

நல்வாழ்த்துகள் கீதா சாம்பசிவம்

நட்புடன் சீனா 12 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வாங்க வாங்க அம்மா.... எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க முதல்ல

  ReplyDelete
 3. சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்த காயத்ரி தேவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  1000 பதிவுகளைத் தாண்டிய மூத்த பதிவர் கீதா சாம்பசிவம் அவர்களை வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
 4. வணக்கம்
  சிறப்பாக ஆசிரியர் பணியை முடித்த கயத்ரி தேவி அவர்களுக்கு நன்றிகள் பல.அத்தோடு இந்த வாரம் வலைச்சரப் பொறுப்பாக உள்ள ஆசிரியர் ஒரு மூத்த பதிவர் கீதா சாம்பசிவம் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. வரவேற்ற அனைவருக்கும் நன்றி. காயத்ரி தேவி என் ஆசிகள் எப்போதும் உண்டு. வரும் வாரத்தை உங்கள் அனைவரையும் போல் சிறப்பாக ஏற்று முடிக்க எல்லாம் வல்ல இறைவன் அருளை வேண்டுகிறேன். நாளை பார்க்கலாம். வணக்கம்.

  ReplyDelete
 6. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நல்வரவு!..

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் காயத்ரி தேவி சகோதரி. வருக வருக கீதா அம்மா...

  ReplyDelete
 8. ”கீதா சாம்பசிவம்” என்பது எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக உள்ளதே என்று வெகு நேரம் யோசித்தேன் ..... யோசித்தேன் .... யோசித்தேன்.

  ஊஹூம் ..... நினைவுக்கே வரவில்லை.

  இருப்பினும் நாளை முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள். ;)))))

  ReplyDelete
 9. இவரது தள முகவரி : http://sivamgss.blogspot.in/ என்று அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் கொடுத்திருந்தது நல்லதாப்போச்சு.

  அந்த வலைத்தளத்துக்குச் சென்று பார்த்தேன்.

  அடடா, நம்ம கீதா மாமியல்லவா !!

  நம்ம ஊர்க்காரங்க தான்.

  நானும் நம் அன்பின் சீனா ஐயாவும் இவர்களை சமீபத்தில், அவர்கள் வீட்டுக்கே போய் நேரில் கூட சந்தித்திருக்கிறோமே !!

  http://gopu1949.blogspot.in/2013/10/61-2-2.html

  இப்போ நினைவுக்கு வந்து விட்டது !!!

  நமக்கு ரொம்ப வேண்டியப்பட்டவங்க தான் !!!!

  ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது !!!!!

  மீண்டும் வாழ்த்துகள்.

  நாளை முதல் தினமும் வலைச்சரம் பக்கம் எட்டிப்பார்க்க வேண்டும் என என் கைபேசியில் REMINDER வைத்துவிட்டேன். ;)))))

  ReplyDelete
 10. அட இந்த வாரம் நம்ம கீதாம்மாவா..... வாழ்த்துகள் கீதாம்மா....

  சென்ற வார ஆசிரியர் பட்டாம்பூச்சி காயத்ரிக்கு பாராட்டுகள்....

  ReplyDelete
 11. அடேடே.... கீதா மேடமா... வந்துடுவோம்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது