நான் நானே தான் - கலாகுமரன்
➦➠ by:
கலாகுமரன்
அன்பு மிகு வலைச்சர நண்பர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் இந்த எளியவனின் வணக்கம்.
சில மாதங்களுக்கு முன்னமேயே என்னை வலைச்சரத்தில் எழுத கேட்டுக்கொண்டார் சீனா ஐயா அவர்கள். அப்போதைய பணி சூழ்நிலையில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விட்ட குறை தொட்ட குறையாகி ( இது ஒரு சொல்லாடல்! ) போன வலை சொந்தங்களுடனான பந்தம் இந்த வாரத்தில் வலைச்சர ஆசிரிய பொறுப்புடன் இணைக்கப் பட்டு உள்ளது.
வலைப்பதிவில் நாம் என்ன எழுதப் போகிறோம் தொடர்ந்து எப்படி எழுதப் போகிறோம் என்ற வினாவோடு 103 புகழ் பெற்ற பிரபலங்கள் ஒரே ஓவியத்தில் ! (8 ஆகஸ்ட்2011) என்ற தலைப்பில் ஒரு பதிவை பகிர்ந்தேன். இதற்கு கிடைத்த கமெண்ட் ஒன்று அதுவும் அந்த மாதிரியான தளத்திற்கான லிங்க் " நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் " என்பதை எனக்கு சொல்லியது. இதை தொடந்து எழுதிய நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !! கொஞ்சம் ஹிட் கொடுத்து என்னை தொடர்ந்து எழுத ஊக்குவித்தது.
வலைபக்கத்தில் என்ன என்ன சேர்க்க வேண்டும் இன்னின்ன திரட்டிகளை இணைத்தால் வாசகர்களின் வருகை அதிகரிக்கும் என்பதெல்லாம் நண்பர் அப்துல் பாஸித்தின் பதிவுகளை பார்த்து தான் அறிந்து கொண்டேன். "ப்ளாக் தொடங்குவது எப்படி?" ப்ளாக்கர் நண்பன் வலைத்தளத்தில் தொடராக வந்தது தற்போது மின்னூல் ஆக வெளிவந்து நான்காயிரத்திற்கும் மேலானவர்கள் பதிவிரக்கம் செய்துள்ளார்கள்.
tks to : Venkata Subramanian
மேலே சொல்லியிருக்கும் பொன்மொழி வாழ்க்கையின் உண்மையாக இருக்கிறது.
சின்ன வயசுல என்னோட அப்பா என்னிடம் புத்தகங்களை காட்டி சொன்னார் "இவைகள் தான் நான் உனக்கு கொடுக்கும் சொத்து" வளர்ந்த பின்னாடி யோசிச்சு பார்க்கிறேன். அது உண்மைதான். அந்த புத்தகங்களில் உள்ள நல்ல கருத்துக்கள் எனக்கு கிடைச்சது நான் கிரகித்த விசயங்கள மத்தவங்களுக்கு சொல்கிறேன். அதன் மூலமா அந்த கருத்து சொத்தானது அழியாமல் எங்கோ யாருக்கோ கிடைக்குது. இதுவே வேறு பொருட்களா இருந்தா யாருக்குமே பயனில்லாம போகும் இல்லையா?
நான் வலைப்பதிவு எழுத ஆரம்பிச்ச பின்னாடி கிடைக்கும் சந்தோசத்தை அவரோட பகிர்ந்துக்க நினைக்கிறேன் ஆனா....ஆனால்...
"நான்" என்ற வார்த்தையே தேடுதலுக்கு உட்பட்டது. நானை தொலைக்க வேண்டும் என்பார்கள்; அவர்கள் யோகிகள். நானோ ஒரு சாதாரண மனிதன் எனக்கு அப்படி தோன்ற வில்லை ஆழ்ந்து சிந்திக்கும் போது என்னுள் "வெறுமை" மட்டுமே இருக்கும்.
யாருடைய பிரதியாகவும்,பிரதிநிதியாகவும் நான் இருக்க விரும்பவில்லை நான் நானாக இருக்கவே விரும்புகிறேன்.
என்னுடைய புகைப்படத்தை எனது ப்ளாக் புரோபைலில் வைத்திருக்க வில்லை. படிப்பவர்கள் என் எழுத்தை மட்டுமே படித்துவிட்டு போகட்டும் என எண்ணி இருக்கலாம். அதனால் தானோ என்னவோ பலர் என் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட யோசித்து சென்று இருக்கலாம். பதிவுகள் ஏதும் எழுதாத போதும் என் தளத்திற்கு வந்து வாசித்து செல்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு கடமை பட்டிருக்கிறேன்.
இதை எழுதும் போது கீழ் தெரு வீட்டில் இருந்து ஒரு பாடல் ஒலிக்கிறது. "நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா...தன்னை தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்..."
நான் ஐந்தாவது படிக்கும் வரையிலும் பள்ளிக்கு போவதற்கு அடம் பிடித்தேன். பக்கத்து வீட்டில் யாரேனும் ஒருவர் என்னை குண்டுக்கட்டாக தூக்கி, சைக்கிளில் உட்காரவைத்து பள்ளிக்கு கூட்டி போவாங்க. அதற்கான காரணம் பின்னாளிலேயே தெரிந்தது. மற்ற பிள்ளைகளோடி என்னால் ஓடி விளையாட முடியாததினால் என்பது.
இளையராஜாவின் பாடல் வரிகள் இப்போது என் மனதில் ஒலிக்கிறது " நானாக நானில்லை தாயே...நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம்..." என் தாய் தந்தையரின் வளர்ப்பே என்னை இப்போதும் வழி நடத்துகிறது.
எதிர் காலத்தை பற்றி சிந்தித்து, சிந்தித்து நிகழ்காலத்தை தொலைத்து விடுகிறோம். நிகழ்காலாத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் நான் ரசிக்கின்றேன். ஏனெனில் எதிர் காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாது.
ஒரு புத்தகத்தை படிக்கிறோம் அதில் உள்ள அம்சம் நமக்கு பிடித்து போகிறது. அந்த எழுத்தாளருடன் கை குலுக்கும் சந்தர்ப்பம் நமக்கு வாய்பதில்லை. திரைநட்சத்திரங்களை ரசிக்கிறோம், தொலைவிலிருந்தே அது போல, நான் ரசிக்கும் ஓவியங்களை பற்றி "இனியஓவியாவில்" வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு பெண்மணி ஒருவர் உங்கள் ஓவிய தகவல் என் குழந்தையின் படிப்பிற்கு உதவியது என்றார். கல்லூரி மாணவர் ஒருவர் காளான்களை பற்றி நீங்கள் எழுதியது ஆராய்சி கட்டுரைக்கு உதவியது என்றார். நாம் எழுதும் எதுவோ ஒன்று யாருக்கேனும் பயன் படுகிறதே என்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.
என் பதிவுகளில் சில :
மெட்டாமோர்பிக் ஓவியர் ஓகம்போ
பிகாஸோவின் குவர்னிகா - [Findings]
அஜந்தா எல்லோரா ஓவியங்கள்
"உன்னை நீயே பற்றிக்கொள்"
அடுத்த பதிவில் நாளை உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்,
கலாகுமரன்.
வலைச்சர ஆசிரிய பணியை வழங்கிய சீனா ஐயா அவர்களுக்கு எனது நன்றி. தொழில் நுட்பம், கவிதைகள், அறுசுவைகள் என சிறப்பான பதிவுகளை வழங்கிய முகமது நவ்சின் கானை வாழ்த்தியும் பாராட்டியும் எனது பதிவுகளை துவக்குகிறேன்.
சில மாதங்களுக்கு முன்னமேயே என்னை வலைச்சரத்தில் எழுத கேட்டுக்கொண்டார் சீனா ஐயா அவர்கள். அப்போதைய பணி சூழ்நிலையில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விட்ட குறை தொட்ட குறையாகி ( இது ஒரு சொல்லாடல்! ) போன வலை சொந்தங்களுடனான பந்தம் இந்த வாரத்தில் வலைச்சர ஆசிரிய பொறுப்புடன் இணைக்கப் பட்டு உள்ளது.
வலைப்பதிவில் நாம் என்ன எழுதப் போகிறோம் தொடர்ந்து எப்படி எழுதப் போகிறோம் என்ற வினாவோடு 103 புகழ் பெற்ற பிரபலங்கள் ஒரே ஓவியத்தில் ! (8 ஆகஸ்ட்2011) என்ற தலைப்பில் ஒரு பதிவை பகிர்ந்தேன். இதற்கு கிடைத்த கமெண்ட் ஒன்று அதுவும் அந்த மாதிரியான தளத்திற்கான லிங்க் " நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் " என்பதை எனக்கு சொல்லியது. இதை தொடந்து எழுதிய நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !! கொஞ்சம் ஹிட் கொடுத்து என்னை தொடர்ந்து எழுத ஊக்குவித்தது.
வலைபக்கத்தில் என்ன என்ன சேர்க்க வேண்டும் இன்னின்ன திரட்டிகளை இணைத்தால் வாசகர்களின் வருகை அதிகரிக்கும் என்பதெல்லாம் நண்பர் அப்துல் பாஸித்தின் பதிவுகளை பார்த்து தான் அறிந்து கொண்டேன். "ப்ளாக் தொடங்குவது எப்படி?" ப்ளாக்கர் நண்பன் வலைத்தளத்தில் தொடராக வந்தது தற்போது மின்னூல் ஆக வெளிவந்து நான்காயிரத்திற்கும் மேலானவர்கள் பதிவிரக்கம் செய்துள்ளார்கள்.
tks to : Venkata Subramanian
When I was a child, I used to forget everything. So I was told to "learn to remember" to move ahead in life.
Now, when I'm able to remember... I'm told to "learn to forget" and move ahead in life!"நான் குழந்தையாக இருக்கும் போது எல்லாவற்றையும் மறந்து போவேன். வாழ்கையில் முன்னேறனும்னா "ஞாபகம் வைச்சுக்க கத்துக்கோ" என்று சொன்னாங்க. இப்ப எனக்கு நல்லா ஞாபகம் வெச்சுக்க முடியுது...ஆனா "மறக்க கத்துக்கோ" அப்பதான் வாழ்கையில முன்னேற முடியும்ங்கராங்க !"
மேலே சொல்லியிருக்கும் பொன்மொழி வாழ்க்கையின் உண்மையாக இருக்கிறது.
சின்ன வயசுல என்னோட அப்பா என்னிடம் புத்தகங்களை காட்டி சொன்னார் "இவைகள் தான் நான் உனக்கு கொடுக்கும் சொத்து" வளர்ந்த பின்னாடி யோசிச்சு பார்க்கிறேன். அது உண்மைதான். அந்த புத்தகங்களில் உள்ள நல்ல கருத்துக்கள் எனக்கு கிடைச்சது நான் கிரகித்த விசயங்கள மத்தவங்களுக்கு சொல்கிறேன். அதன் மூலமா அந்த கருத்து சொத்தானது அழியாமல் எங்கோ யாருக்கோ கிடைக்குது. இதுவே வேறு பொருட்களா இருந்தா யாருக்குமே பயனில்லாம போகும் இல்லையா?
நான் வலைப்பதிவு எழுத ஆரம்பிச்ச பின்னாடி கிடைக்கும் சந்தோசத்தை அவரோட பகிர்ந்துக்க நினைக்கிறேன் ஆனா....ஆனால்...
வாழ்க்கையில் எதுவும் நிறந்தரமில்லை
என்ற நிதற்சனம்
என் மனக்கண் முன் பதிலாய்.
"நான்" என்ற வார்த்தையே தேடுதலுக்கு உட்பட்டது. நானை தொலைக்க வேண்டும் என்பார்கள்; அவர்கள் யோகிகள். நானோ ஒரு சாதாரண மனிதன் எனக்கு அப்படி தோன்ற வில்லை ஆழ்ந்து சிந்திக்கும் போது என்னுள் "வெறுமை" மட்டுமே இருக்கும்.
யாருடைய பிரதியாகவும்,பிரதிநிதியாகவும் நான் இருக்க விரும்பவில்லை நான் நானாக இருக்கவே விரும்புகிறேன்.
என்னுடைய புகைப்படத்தை எனது ப்ளாக் புரோபைலில் வைத்திருக்க வில்லை. படிப்பவர்கள் என் எழுத்தை மட்டுமே படித்துவிட்டு போகட்டும் என எண்ணி இருக்கலாம். அதனால் தானோ என்னவோ பலர் என் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட யோசித்து சென்று இருக்கலாம். பதிவுகள் ஏதும் எழுதாத போதும் என் தளத்திற்கு வந்து வாசித்து செல்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு கடமை பட்டிருக்கிறேன்.
இதை எழுதும் போது கீழ் தெரு வீட்டில் இருந்து ஒரு பாடல் ஒலிக்கிறது. "நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா...தன்னை தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்..."
நான் ஐந்தாவது படிக்கும் வரையிலும் பள்ளிக்கு போவதற்கு அடம் பிடித்தேன். பக்கத்து வீட்டில் யாரேனும் ஒருவர் என்னை குண்டுக்கட்டாக தூக்கி, சைக்கிளில் உட்காரவைத்து பள்ளிக்கு கூட்டி போவாங்க. அதற்கான காரணம் பின்னாளிலேயே தெரிந்தது. மற்ற பிள்ளைகளோடி என்னால் ஓடி விளையாட முடியாததினால் என்பது.
இளையராஜாவின் பாடல் வரிகள் இப்போது என் மனதில் ஒலிக்கிறது " நானாக நானில்லை தாயே...நல்வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம்..." என் தாய் தந்தையரின் வளர்ப்பே என்னை இப்போதும் வழி நடத்துகிறது.
பனிபடர்ந்த சிகரத்தின் மீது அன்னையுடன் நான்.
எதிர் காலத்தை பற்றி சிந்தித்து, சிந்தித்து நிகழ்காலத்தை தொலைத்து விடுகிறோம். நிகழ்காலாத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் நான் ரசிக்கின்றேன். ஏனெனில் எதிர் காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாது.
ஒரு புத்தகத்தை படிக்கிறோம் அதில் உள்ள அம்சம் நமக்கு பிடித்து போகிறது. அந்த எழுத்தாளருடன் கை குலுக்கும் சந்தர்ப்பம் நமக்கு வாய்பதில்லை. திரைநட்சத்திரங்களை ரசிக்கிறோம், தொலைவிலிருந்தே அது போல, நான் ரசிக்கும் ஓவியங்களை பற்றி "இனியஓவியாவில்" வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு பெண்மணி ஒருவர் உங்கள் ஓவிய தகவல் என் குழந்தையின் படிப்பிற்கு உதவியது என்றார். கல்லூரி மாணவர் ஒருவர் காளான்களை பற்றி நீங்கள் எழுதியது ஆராய்சி கட்டுரைக்கு உதவியது என்றார். நாம் எழுதும் எதுவோ ஒன்று யாருக்கேனும் பயன் படுகிறதே என்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.
என் பதிவுகளில் சில :
உள்ளுணர்வு விலங்குகளுக்கும் உண்டா?
காத்திருப்பு...சுகமானதா ?
பாடும் பறவைகள் [Song birds]
இரத்த நாளத்தினுள் நுட்ப எந்திரங்கள்
[Nazca Lines] அழியாத கோட்டுருவங்களும்...அழிந்துபோன நாஸ்க்கா இனமும்...
சகுணங்களும் மூட பழக்கவழக்கங்களும் !
தத்துபித்துவங்கள் !!
புது வீட்டிற்கு வந்த விருந்தாளி ! (கதையாக்கம் : கலாகுமரன்)
ஒரு கோப்பை தேனீர்... [கதை]
வேதம் நீ ... [ ஒரு பக்க கதை ]
திபெத்திய குகைகள் ஆய்வு (பகிர்வு)
இனிய ஓவியாவில் சில :
மெட்டாமோர்பிக் ஓவியர் ஓகம்போ
பிகாஸோவின் குவர்னிகா - [Findings]
அஜந்தா எல்லோரா ஓவியங்கள்
"உன்னை நீயே பற்றிக்கொள்"
அடுத்த பதிவில் நாளை உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்,
கலாகுமரன்.
|
|
முதல்ல, வாழ்த்துகள். அப்புறம் இனி ஒவ்வொரு பதிவா படிக்க போறேன்
ReplyDeleteவருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும், நன்றி காயத்ரி தேவி
Deleteஇனிய அறிமுகம்!.. இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது..
ReplyDeleteமூடநம்பிக்கைகளும் மூடிய மனசும் என்ற பதிவில் அரிய புதிய தகவல்கள்!.. அருமை!.. வாழ்த்துக்கள்!..
ReplyDeleteமிக்க நன்றிங்க துரை செல்வராஜூ.
Deleteவணக்கம்
ReplyDeleteஎல்லாம் சிறப்பான அறிமுகங்கள் .... வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன், தொடருங்கள் நன்றி!
Deleteரசிக்க வைக்கும் சுய அறிமுகம் நன்று...
ReplyDelete// "உன்னை நீயே பற்றிக்கொள்" //
மேலும் அசத்த வாழ்த்துக்கள் எனது இனிய நண்பரே...
டச்சிங்கா இருக்கட்டுமேன்னு போட்டேன் உங்களையும் பற்றியதா நன்றிங்க D.D
Deleteஎதிர் காலத்தை பற்றி சிந்தித்து, சிந்தித்து நிகழ்காலத்தை தொலைத்து விடுகிறோம். நிகழ்காலாத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் நான் ரசிக்கின்றேன். ஏனெனில் எதிர் காலம் எப்படி இருக்கும் என்பது தெரியாது.
ReplyDeleteபயனுள்ள பகிர்வுகளை அளிக்கும் தங்களது வலைச்சர வருகைக்கு வாழ்த்துகள்...!
நன்றிங்க இராஜராஜேஸ்வரி மேடம்.
Deleteவலைச்சரம் ஆசிரியர் பணி சிறப்பாக அமைந்திட எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க ஐயா.
Deleteஇயல்பான நடை. தொடருங்கள்.
ReplyDeleteஉங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, நன்றி.
Deleteகலாகுமரன் அம்மா..
ReplyDeleteநன்றி...ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com
//கலாகுமரன் அம்மா.. // பரவாயில்லை நன்றி நவ்சின்கான்.
Deleteஅருமையான சுய அறிமுகமுடன்
ReplyDeleteஉங்களின் இவ்வார வலைச்சர ஆசிரியப் பணியை
ஆரம்பித்திருக்கின்றீர்கள் கலாகுமரன்!
பணி சிறக்க வெற்றி நடை போட
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
வாங்க இளமதி நன்றி !
Deleteதங்களின் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஇனிய அறிமுகம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ஜனா...
Deleteஒன்றுமே தோன்றவில்லை என்று சொல்லிவிட்டு அறிமுகத்திலேயே பின்னீட்டிங்க கலாகுமரன் சார். இந்த வலைச்சர வாரம் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteயோசிப்போமில்ல,.. நன்றி எழில்.
Deleteசிறப்பான அறிமுகம்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஆசிரியர் பணியை சிறப்புற செய்ய என் வாழ்த்துகள் கலாகுமரன்...
ReplyDeleteமிக்க நன்றிங்க..
Deleteஅருமையான சுய அறிமுகமும் பதிவுகளின் அறிமுகமும்.... கலக்குங்க சார்..
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteகலாகுமரன்,
ReplyDeleteவாழ்த்துக்கள்!
தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க வவ்வால்.
Deleteமுதல் சுய அறிமுகப் பதிவே சிறப்பாய் தந்துவிட்டீர்கள். இந்த வாரம் முழுதும் அசத்த வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றிங்க நிஜாமுதீன்...
Deleteவாழ்த்துக்கள்....
ReplyDeleteதொடருங்கள்... தொடர்கிறோம்..
நன்றிங்க குமார்.
Deleteவாழ்த்துக்கள் ஐயா தொடர்கின்றேன் இந்த வாரம் உங்கள் பணிச்சேவையை நுகர்ந்து!
ReplyDeleteவாங்க நேசன், உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
Deleteஅன்பின் கலா குமரன் - நல்ல தொரு துவக்கம் - சுய அறிமுகப் பதிவுகள் பலப்பல - ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும் - செய்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteஇனிமையான அறிமுகம். வாழ்த்துகள் கலாகுமரன்.
ReplyDeleteத.ம. 6
தங்களின் வருகைக்கும் ஓட்டளிப்பிற்கும் நன்றி
Deletegood start. self introduction super kala kumaran. my heartful best wishes to you.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தொடர்ந்து உங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்க்கிறேன்.
Deleteஅருமையான அறிமுகம்
ReplyDeleteஇவ்வார வலைச்சர வாரம் சிறக்க
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி!
Deleteவலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சகோ! என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்கள், துவக்கமே அருமையாக இருக்கிறது !
ReplyDelete