07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 30, 2013

பண்டைய எகிப்திய மின் விளக்குகளும் விடை தெரியா மர்மங்களும்

அனைவருக்கும் வணக்கம், இன்றைய பதிவில் எகிப்தில் இருக்கும் சுவர் கற்சித்திரம் குறித்த தகவல்.

எகிப்தில் டெண்டீரா வளாகப் பகுதிகளில் நடத்தப் பட்ட ஆய்வின் போது ஆராய்சியாளர்களை  ஆச்சர்யத்தை உண்டாக்கின சுவரில் செதுக்கப் பட்டு இருந்த கற்சித்திரங்கள். நிலவறைகளில், இரகசிய பெரிய அறைகள் மிகவும் பாதுகாக்கப் பட்ட பகுதிகளாகவும், அரசர் மற்றும் மிக முக்கிய மத போதகர்கள் மட்டுமே அனுமதிக்கப் பகுதியாகவும் இருந்திருக்கும் என நம்பப் படுகிறது.

அங்கு அவர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் கொடுத்த செதுக்கப்பட்ட கற்சித்திர (கற்சிலை) வடிவம் ஒன்று,  அது இப்போது நமக்கு பரிசயமான ஒன்றாக இருக்கும் இருந்த பொருளை பிரதிபளிப்பதாக இருந்த  அதை பார்த்த போது மின் விளக்கு போன்று இருந்தது.

அந்த காலத்திய மின்விளக்கு சித்திரங்கள் எப்படி?

எகிப்தியர்கள் மின் விளக்கு பயன் படுத்தி இருப்பார்களா?

இருட்டான நிலவறைகளில் எப்படி வெளிச்சத்தை கொண்டுவந்து இருப்பார்கள்?

டார்ச் போன்ற உபகரணங்களை உபயோகப் படுத்தி இருப்பார்களா?

பக்க சுவர்களில் மட்டுமல்ல கூரைச் சுவர்களிலும் செதுக்கப்பட்ட சித்திரங்கள் காணப்பட்டன.


எகிப்திய பிரமீடுகளின் உட்புற அறைகளுக்கு, மிகப்பெரிய தாமிரக் கண்ணாடி பொருட்களை உபயோகித்து, சூரிய ஒளியை பிரதிபளிக்க செய்து வெளிச்சத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். விளக்குகளையோ மெழுகு வர்த்திகளோ ஏன் சிகர் லைட்டர்களோ கீஸா அறைகளில் எரியவில்லை. அப்படியானால் செயற்கை விளக்குகளை அவர்கள் பயன் படுத்தி இருக்கிறார்கள்.







தெந்தேரா அறைகளில் உள்ள மின்விளக்கு சுவர் செதுக்கு சிற்பத்தை ஆராய்ந்த போது தாமரை வடிவிலான அடிப்பாகமும் அதை சுற்றி பல்பு போன்ற உருவமும், நான்கு பேர் அதை தாங்கி பிடிப்பது போன்றும், பல்ப் உருவத்தின் உள்ளாக பாம்பு உருவமும் செதுக்கப் பட்டு இருந்தது.

அடுத்த கேள்வி சரி மேற்படி செதுக்கல் சிற்பம் ஏன் பிரமீடுகளின் உள் காணப் படவில்லை.  இந்த தொழில் நுட்பம் மிக ரகசியமான ஒன்றாகவும் தெந்தேரா ரகசிய கருவறைப் பகுதி போல அங்கு அமைக்கப் பட்டு இருப்பதற்கான முக்கிய காரணமும் இருந்திருக்கலாம். அடுத்து வரும் வாரிசுகளுக்கு இதை தெரிவிப்பதற்காகவும் இதை செதுக்கி வைத்திருக்கலாம்.

இன்னொரு முக்கிய கருத்து வேற்று கிரக வாசிகள் பிரமிடின் தொழில் நுட்பத்தையும், இது போன்ற பல நுட்ப ரகசியத்தையும் கற்றுக் கொடுத்திருக்கலாம் என்பது, ஆய்வுகள் தொடர்கின்றன. வேற்று கிரக வாசிகள் பூமியோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என அது குறித்து 1968 ல் தொடங்கி இன்னும் களஆராய்ச்சி செய்து நூல்களை (chariots of the gods) எழுதிவருகிறார் பிரபல ஜெர்மன் எழுத்தாளர் எரிக்வான் டேனிக்கன்.


மின்விளக்கு இருந்திருந்தால் மின்சாரம் இருந்திருக்க வேண்டும் அதற்கு மின் கலன்களை உபயோகித்து இருப்பார்களோ ? மின்சாரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப் பட்டதாக சொல்லப்படுவது சரியா?

மின் கலன்கள் எனும் போது பாக்தாத் பேட்டரிகள் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். பாக்தாத் பேட்டரிகளை பற்றி தகவலுடன் சொல்லப்படுவது அகத்தியர் காலத்தில் இது இருந்திருக்க வேண்டும் என்பது ஆனால் இதற்கு இது போன்ற ஆதாரம் கிடைக்கவில்லை (இரசவாத பாடலை மட்டுமே ஒரு சாரர் ஆதாரம் காட்டுகிறார்கள்) பாக்தாத் பேட்டரி பற்றிய விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.

எகிப்தியர்கள், ரோமானியர்களோடு இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வாணிக தொடர்புகள் இருந்திருக்கிறது. இந்த பதிவு குறிப்பாக அக்காலத்திய எகிப்திய மின் விளக்கு பற்றிய ஒரே ஒரு தகவலுக்காக மட்டுமே.

Link for bagdad battery ;

       http://eniyavaikooral.blogspot.in/2013/05/blog-post_19.html
     
                                  * * * * *


பரண்மேல் கிடந்த நான் வரைந்த ஓவியங்களை , மொபைலில் பிடித்து வடிவமைத்து கொடுத்தாள் எனதன்பு மகள்  

உன் கண்ணே உன்னை ஏமாற்றினால் !


இரண்டு பெட்டிகளின் தோற்றம. பார்பதற்கு இரண்டும் வெவ்வேறு நிறங்களில் இருக்கிறது,  அம்பு குறிகாட்டும் பகுதியில் உங்கள் விரலை மறைத்து பாருங்கள்.

பின்புலத்தின் நிறமே தோற்ற பிழைக்கு காரணம். ஆங்கிலத்தில் ஆப்டிகல் இல்யூசன் என்கிறார்கள்.

இனி, இன்றைய பதிவர்களை பார்போம்.

தொலைக்கப்பட்ட தேடல்கள் -சிறுகதை தொகுப்பு புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார் எழுத்தாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களின் வலைப்பக்கம் : அதீத கனவுகள்

இந்த பதிவுகளை படித்து பாருங்கள்

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை  -அறிவியல் தொடர்  

பெண்ணியமும் கன்னியமும் - சிறுகதை 

                                                                     * * * * *

2011 ல் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதிய இவர் அதன் பிறகு தற்போது அக்டோபரில் ஒரு பதிவு எழுதி இருக்கிறார் தொடந்து எழுத உங்களின் பின்னூட்டம் ஊக்கப் படுத்தும் என நம்புகிறேன்.
வலைப்பதிவு பக்கம் : அம்மாக்களின் பகிர்வுகள்.

தொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை


                                                                    * * * * *

பட்டாம்பூச்சி.. என்ற பதிவோடு நிற்கும் ஒரு தளம் அன்பை விட ஆயுதம் ஏதும் இல்லை .  பதிவர் சிவசங்கர்

                                                                   * * * * *

மறக்கமுடியாத நினைவுகள்  தருபவர் கவிப்ரியன் இவரின்
அனுபவபதிவுகள் : கணவா? இது கனவா?! 

பிலிபைன்ஸ் - ஹயானின் கோர தாண்டவம் - புகைப்படங்கள் 

ஃபைலின் புயல் - மறக்க முடியாத அனுபவம்

உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பல் ஒயாசிஸ்

                                                                * * * * *

போகிற வழியெல்லாம் புகைப்படம் எடுத்து போட்டு சம்பவ இடத்திற்கு நம்மை அழைத்து செல்லும் பாணி இவருடையது. அதோடு உணவை சுவைத்து ரசிப்பதோடு நள பாகத்தையும் சொல்லி தருபவர் நண்பர் கோவை நேரம் ஜீவா

பயணம் – சிறுமலை, திண்டுக்கல் மாவட்டம் ( SIRUMALAI, DINDIGUL )

வடுகப்பட்டி - கவிஞர் வைரமுத்து

                                                                * * * * *

ஜஸ்ட் ஐஸ்கிரீம் தானே என்று நினைக்காமல் அதன் ருசியை நம்முள் உணர வைப்பவர் நண்பர்  கடல் பயணங்கள் சுரேஷ்

அறுசுவை - பெர்ரி டி அலைவ், பெங்களுரு

சாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 2)  திரில்லான அனுவத்தை கொடுக்கிறது

இன்னும் நிறைய இருக்கின்றன வலைத்தளத்திற்கு செல்லுங்கள்.

                                                                   * * * * *

அப்பாவின் ஸ்கூட்டி!

இதை படிக்கும் போது சுவாரசிய அனுபவம் நமக்கு, களைப்பின் அனுபவம் அவருக்கு.  பயண அனுபவம் தந்த நண்பர் கோவை ஆவி

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!!  இந்த தொடர் எப்ப முடியும் என யாரும் கேட்பதில்லை, ஏனென்றால் அவ்வளவு சுவாரஸ்யம் உள்ள தொடர் கதை.

கடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)  இது இன்னொரு தொடர் கதை, கதை என்று சொல்வதை விட அனுபவமோ என நினைக்க தூண்டும்.

                                                                  * * * * *

அனுபவ சித்தனின் குறிப்புகள்  (கவிதைகள் ) பதிவர் ராஜா சந்திரசேகர்

                                                                  * * * * *

சோமாலிய கடற்கொள்ளையன் சொறிமுத்து (கதை ) பதிவர் பத்மினியின் வலைப்பக்கம் மின்மினி தேசம்.

                                                                 * * * * *
விரக்தியின் விளிம்பில்... கவிதை பதிவர் கீதமஞ்சரி வலைத்தளம் அவர் பெயரிலே.

                                                                * * * * *

சுட்டிப்பெண் கவிதை அளிப்பவர் அருணாசெல்வம்

                                                               * * * * *
கடந்தும் செல்வது நலமோ............பிரபல பதிவர் கவியாழி

                                                              * * * * *

இணைந்த இதயங்களின் ஓராயிரம் நன்றிகள் ...அருமை பதிவர் கரந்தை ஜெயக்குமார்
                                                             * * * * *

ஊர்ப்பேச்சு  விவரிப்பவர் நண்பர் சே.அரசன் கரைசேரா அலைகளில்.

மின்சார பிரச்சனை காரணமாக பதிவர்கள் குறித்து விரிவாக சொல்ல முடியவில்லை.

நாளை உங்கள் அனைவரையும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அன்புடன்,

கலாகுமரன்.

25 comments:

  1. அறிமுகத்துக்கு நன்றி ஸார்..

    ReplyDelete
  2. அனைத்தும் தொடரும் நல்ல தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. புதியவரை அடையாளம் காட்ட முடியலையே... நன்றி

      Delete
  3. நன்றிங்க நண்பரே ... மற்றவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த தங்களின் வருகையும் வாழ்த்துகளும்...நன்றி நேசன்

      Delete
  5. நல்ல தளங்களின் அறிமுகங்கள்!.. நன்றி. கலா குமரன்!..

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு பதிவிற்கு
      தொடர்ந்த தங்களின் வருகையும் வாழ்த்துகளும்...நன்றி

      Delete
  6. எகிப்திய விளக்கு, கண்ணை ஏமாற்றும் புதிர் இவைகளுடன் கலக்கலான பதிவர்களின் அணிவகுப்பு அருமை! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தளத்திற்கு 2லட்சம் ஹிட்டுகள் பெற்ற நண்பருக்கு வாழ்த்துகள். நன்றி

      Delete
  7. அனைத்து அறிமுகங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. பதிவர் அணிவகுப்பு அருமையிலும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த தங்களின் வருகையும் வாழ்த்துகளுக்கு...நன்றி

      Delete
  9. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. எகிப்தியர் மின்விளக்குத் தகவல் ஆச்சரியமளிக்கிறது. பிரமிட்டையும், மம்மிகளையும் பார்க்கும் போது, அவர்களால் அவை சாத்தியமாகியிருக்கலாம்.
    தங்கள் ஓவியங்கள் மிக அழகானவை!

    ReplyDelete
    Replies
    1. பிரமிடுகள் பல ஆச்சர்யங்களையும் மர்மங்களையும் கொண்டிருக்கிறது உலகளாவிய தொடர்புகள் இருந்திருக்கிறது, ஓவிய புகைப்படம் இன்னொன்றையும் மறைமுகமாக தெரிவிக்கிறது மூடிய திரைசீலை...ஆம் எனது ஓவியங்கள் இப்போது தான் வெளிகாட்டப் பட்டிருக்கு. நன்றி

      Delete
  11. தகவல்கள் அருமை...!
    தங்கள் ஓவியங்கள் மிக அருமை...!

    ReplyDelete
  12. information about egypt is intresting

    ReplyDelete
  13. எனது வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி கலாகுமரன். திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் மூலம்தான் இதை அறிய முடிந்தது. அவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  14. என் வலைப்பூவையும் இங்கு வாசம் வீசத்தந்தமைக்கு மிக்க நன்றி கலாகுமரன். புதிய அறியாத் தகவல்களைத் தொகுத்து வழங்கும் தங்கள் பாணி சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது