07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 6, 2013

மகிழம்பூவைத் தொடுக்கிறேன்.

மகிழம்பூ நாள் ஆக ஆக மணம் வீசும் வகை.  அது போல் மலர்ந்து பன்னாட்கள் ஆனாலும் மணம் வீசும் மகிழம்பூவைப் போலவே தமிழும், தமிழ்க் கவிதைகளும்.  எந்நாளும் மணம் வீசிப் பரப்பும் வகையைச் சேர்ந்தவை. அதிலும் மரபுக் கவிதைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அதிலே எனக்கு மிகவும் பிடித்த சில நண்பர்களின் கவிதைகளைப் பார்ப்போம்.

இப்போ சில நண்பர்களின் வலைப்பூக்களைப் பார்ப்போம். தமிழில் கவிதைகள் அதுவும் மரபுக் கவிதைகள் எழுதி வருபவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் தங்கமணி அம்மாள்.  புத்தகம் ஒன்றும் வெளியிட்டிருக்கிறார். என் பணி அரன் துதி என்ற பெயரில். அம்மா அவர்களின் பதிவுக்கு இப்போது அதிகம் போகமுடியவில்லை. சந்தவசந்தத்திலேயே படிச்சுடறேன்.  ஆகையால் பதிவிலே போய்ப் பாராட்டுக்கள் சொல்ல முடியலை. எல்லாம் சோம்பல் தான் காரணம். திடீர்னு ஒரு நாள் நினைச்சுண்டு போய் மறுபடி படிச்சுட்டுப் பின்னூட்டம் போடுவேன்.  என்றாலும் அம்மா அவர்கள் என்னிடம் தனி அன்பு கொண்டவர். சமீபத்தில் படித்ததில் பிடித்தது.

எமது கவிதைகள்http://kavidhaithuligal.blogspot.in/2013/10/3.html

திரு ஆவூர்ப் பசுபதீச்சரம்--5

துடியோ டொலிக்கும் பம்பையுடன்
...சுழன்றே ஆடும் நடம்கண்டு

அந்த முதல் வரியில் சுழன்று ஆடும் நடராஜன் கண்முன்னே தெரிகிறான் இல்லையா?


அடுத்து அருமை மகன் திரு துரை அவர்களின் வலைப்பூ. தூத்துக்குடி இஞ்சினியர் ஆன இவரின் வலைப்பூப் பத்திப் பலதினசரிகளிலும் வந்துள்ளது.

http://marabukkanavukal.blogspot.in/மரபுக் கனவுகள்

இங்கே இவர் இருவரியில் தூதுக்குறள்களைச் சொல்கிறார் பாருங்கள். ஆசான் குறித்த இந்தக் குறள் என்னை மிகவும் கவர்ந்தது.

 ஆசான்
ஏணியாய் நிற்பாராம்; ஏற்றி விடுவாராம்;
தானிருப்பார் தன்நிலைமா றாது [340]

குறளும் காட்சியும் என்ற இந்த வலைப்பூவில்,
குறளும் காட்சியும்
http://visualkural.blogspot.in/

குறளுக்கு விளக்கமாகக் குறளும் அதற்கேற்ற படங்களையும் காட்சியாகக் காணலாம்.  இதைத் தவிர,

 http://duraikavithaikal.blogspot.in/கனவு மெய்ப்பட வேண்டும்

இந்தப் பதிவிலும் தன் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்கிறார்.

அடுத்து புதிதாக அறிமுகம் ஆகி இருக்கும் அன்பு மகள் தமிழ்ச் செல்வி.

http://vinmugil.blogspot.in தமிழ்ச்செல்வி.
விண்முகில்

இவருடன் கடந்த ஆறுமாதங்களாகத் தான் பழக்கம்.  திருவண்ணாமலை செங்கத்தில் வசிக்கும் இவரின் மன உறுதியும், எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொண்டு கடந்து செல்லும் மனமும் அதிசயிக்கத் தக்கது. நீண்டநாள் பழகியவர் போல பாசம் காட்டிப் பழகுவார்.  இவரின் கவிதைத் தொகுதி திரு ஜெயபாரதன் ஐயாவின் முயற்சியால் வெளி வந்துள்ளது என்பது சிறப்பான செய்தி.  இவரின் இந்த வலைப்பூவில்

http://vinmugil.blogspot.in/2013/10/blog-post_242.html

குறிப்பாய் இந்தக் கவிதையில் இந்த வரிகள்

காதல் உயிர் ஊற்றி எனை
உணர்வு ஊட்ட வா
அன்பின் வெற்றிட வறட்சியில்
நீரூற்றாக ஈரப்படட்டும் நம் காதல்

காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதும் இவரின் கவிதைகளின் சில வரிகள் நம்மால் என்றும் மறக்க இயலாவண்ணம் அமைந்திருக்கும். இப்படித் தவிக்க விட்டுப் போன அந்தக் காதலன் வந்து இந்தக் காதலியை மகிழ்விக்க மாட்டானா என்ற எண்ணம் தோன்றும்.

 http://bhageerathi.in/ பாகீரதி

இளைய நண்பர் எல்கே அவர்களின் பதிவு.  ஒரு காலத்தில் கவிதையிலும், கதையிலும் கலக்கிக் கொண்டிருந்தார்.  இப்போது நேரமின்மையால் இணையத்துக்கே வர முடியாமல் தவிக்கிறார். இவர் பதிவிலிருந்து குறிப்பிட்ட கதையையோ, கவிதையையோ கண்டுபிடிக்க முடியவில்லை.

http://maniyinpakkam.blogspot.com/ பழமைபேசியின் வலைப்பூ

எழிலாய்ப் பழமை பேச

எழிலாய்ப் பழமை பேசும் பழமைபேசியின் வலைப்பக்கம்.  கோவைப் பகுதிகளில் பழமை பேசுதல் என்பது அளவளாவுவது என்ற பொருளில் வருமாம்.  கொங்குத் தமிழில் நம்மோடு இனிமையாக அளவளாவும் பழமைபேசியின் கதைகளும் சரி, கவிதைகளும் சரி என்னை மிகவும் கவர்ந்தவை. இவரின் மகள்களின் கொஞ்சு தமிழ் கேட்க மிக இனிமை. இவருக்கு மிகவும் பிடித்தது ஏரிகளும் அதைச் சுற்றிய பசுமைக் காட்சிகளும். :))))

http://maanbu.blogspot.in/

மலர்கள்

பழமையின் இந்த வலைப்பக்கத்தில் உள்ள  நான் யார் பதிவு எனக்கு மிகவும் பிடித்தது

http://maanbu.blogspot.in/2010/11/blog-post.html 


நான் யார்

38 comments:

  1. துரையின் ஆசான் கவிதை அருமை.

    ReplyDelete
  2. அருமையான அறிமுகங்கள். நன்றி.

    ReplyDelete
  3. மகிழம்பூச் சரத்தில் தமிழ்க் கவிதைகள் அருமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜூ

      Delete
  4. இன்று வலைச்சரத்தில் இடம் பெற்றுள்ளவர்களுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வைகோ சார், பாராட்டுக்கு நன்றி.

      Delete
  5. அனைவரும் சிறப்பான அறிமுகங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, நன்றி.

      Delete
  6. மகிழம்புச்சரம் மணக்கிறது ..வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி.

      Delete
  7. இன்றைய அறிமுகங்களில் கார்த்தியும், பழமைபேசியும் தொடர்ந்து படிக்கும் வலைப்பூக்கள்..... மற்றவர்கள் படித்த நினைவில்லை.....

    அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், அநேகமாய்ப் பல வலைப்பூக்களும் புதியவை என நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.

      Delete
  8. கலக்கும் கவிதைகளின் பதிவுகளில் சிலதை எடுத்துக் காட்டியிருந்தீர்கள். அறிமுகங்களுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நன்றி நிஜாமுதீன்.

      Delete
  9. இன்று வலைச்சரத்தில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  10. அன்புகீதா,
    வலைச்சர அறிமுகத்திற்கு நன்றி.
    துரை,மற்றும் அறிமுக அன்பர்களுக்கும் என்
    அன்பு பாராட்டுகள்.

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  11. அருமையான அறிமுகங்கள். நன்றி கீத்தாம்மா.

    ReplyDelete
  12. Replies
    1. எல்கே, இன்னமும் பிசி??? :(

      Delete
  13. அதிகம் அறியாத கற்பூர வாசனை. அழகாக அறியக் கொடுத்திருக்கிறீர்கள். கீதா மிக நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  14. தமிழ்ச்செல்வியின் வலைப்பூ இன்னிக்குத் தான் தெரியும்... மற்ற வலைப்பூக்களையும் கட்டாயம் பாக்கிறேன். ரொம்ப நன்றி அம்மா!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி, தமிழ்ச்செல்வி வலைப்பூவும் வைச்சிருக்கார், வல்லமை, அதீதம் போன்றவற்றிலும், குழுமங்களிலும் கவிதைகளைப் பகிர்கிறார். மற்றவற்றையும் பாருங்கள். நன்றி.

      Delete
  15. நன்றி நவ்சின்.

    ReplyDelete
  16. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. அருமையான மகிழபூச்சரம்.
    அனைவரையும் அறிமுகபடுத்திய விதம் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.
    மகிழபூச்சரத்தில் இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, நீங்க இல்லாமல் பலருக்கும் தகவல் போய்ச் சேரவே இல்லை. என்னாலும் அதிகம் இணையத்தில் அமர முடியலை. ஜி+ இல் பகிர்ந்தேன். :))))

      Delete
  19. அழகாக சரம் தொடுக்கிறீர்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது