நட்புக்களோடு கைகுலுக்கலாம் வாங்க
இனிய காலை வணக்கம் அனைவருக்கும்
உடைந்துப் போகாதிருக்க உடைகிறேன் நாளும்குடைந்து கொண்டே குழைகிறேன் குமுறும்
எரிமலையாய் அடக்கி அடக்கி வெடிக்கிறேன்எனக்குள் நானே என்னை எரிக்கிறேன்.
நெஞ்சுக் கூடு இக்கவிதையில் பிரிவின் துன்பத்தை அழகாக எழுத்துக்களால் வடித்திருப்பார். இதில் வரும் ஒவ்வொரு வரியும் மனதின் வலியை எடுத்துரைக்கும். எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை
தேனாக இனித்து விட்டு
தேனீயாய் கொட்டும் இரகசியம்
---------------------------------------------------------------------------------------------
4. குமார்
என்மேல் ரொம்ப அக்கறையுள்ள நண்பன், சகோதரன். என்ன கிறுக்கினாலும் பாராட்டு மட்டும் தான் கிடைக்கும். ஒரு அண்ணன் இருந்து இருந்தால் குமார் போல் தான் அக்கறையா இருந்து இருப்பார் . இவரின் கதைகள் எனக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தாலும் இவரது கவிதையைத் தான் இங்கே பகிர விரும்புகிறேன்.
கண்ணீரில் கரையும் காதல் இக்கவிதையில் திருமண வாழ்வில் எப்போதாவது ஏற்படும் சண்டையையும், அதன் வலிகளையும் விவரித்த விதம் மிகவும் அருமை. பிடித்த வரிகள்
எப்போதும் இப்படி
பார்வையின் பயணம். பேருந்து பயணத்தில் நடக்கும் சம்பவத்தை அழகாக சொல்லி இருப்பார். பிடித்த வரிகள்
சன்னலில் தலை நீட்டிப்
பார்க்கிறேன்...
திரும்பிப் பார்த்து
கையசைக்கிறாய்
அன்னையின் கைபிடித்தபடி...
மனதுக்குள்
மகள் சிரிக்கிறாள்.
---------------------------------------------------------------------------------------------------------------
5. சுமன்
எனது எழுத்துக்களின் வாசகனாக அறிமுகமாகி நல்ல நண்பனாக மாறிவிட்டவர். எனது எழுத்துக்களை பாராட்டும் முதல் ஆள் சுமன். எந்த புதுமுயற்சி செய்தாலும் ஊக்கம் கொடுத்து துணை நிற்கும் நல்ல நண்பன்.
நீர்குமிழி வாழ்க்கையை அழகாக எடுத்துரைத்து இருப்பார். எனக்கு பிடித்த வரிகள்
கனவுக்குள் வாழ்ந்து
இன்று எனது நட்புகளின் வலைப்பக்கத்தை உங்களோடு பகிர இருக்கிறேன். எல்லோரும் நல்ல எழுத்தாளர்களென்பதால் பெரும்பாலானவர்களுக்கு அவர்களை தெரிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் நட்புக்களின் எழுத்துக்களை எனது கண்ணோடத்தில் பதிய விரும்புகிறேன். அதற்கு முன் நாம் 50- 60 வயது (முதுமை காலம்) பார்த்துவிடலாம் வாங்க.
கடமைகளையெல்லாம் முடித்துவிட்டு அமைதியாக “தான்” என்ற தேடலைத் தொடரும் பருவம். ஆன்மீக சிந்தனைகளை மனது விரும்ப ஆரம்பிக்கும். பேரக்குழந்தைகளுடன் நாட்கள் மகிழ்ச்சியாக நகரும். நமது விழுதுகள் வேர்விட்டு நம்மை தாங்க பெருமிதத்துடன் வலம் வரும் காலம்.இனி என் நட்புக்களை பார்க்கலாம் வாங்க...
“நண்பர்கள்” என்ற சொல்லே மகிழ்ச்சியை மனதில் இட்டு நிரப்புகிறது.
சிறுவயது முதல் கடைசி சுவாசம் வரை நண்பர்கள் மட்டுமே எந்த எதிர்பார்ப்பும் இன்றி தோளோடு
தோள் சேர்த்து நிற்பவர்கள். எனக்கு பள்ளி நட்புகளென்று சொன்னாலே புனிதா நியாபகம் தான்
வரும். எனக்கு நேர் எதிர் குணங்களை கொண்டவள். ஸ்ங்கீத் பிறந்த போது ஏதேச்சையாக மருத்துவமனையில்
நிறைமாத கர்ப்பினியாக புனிதாவைப் பார்த்தது. பல ஆண்டுகள் கழித்து பார்த்த போதும் சில
நொடிகள் கூட பேசமுடியவில்லை. உடல் நல விசாரிப்புகள், சிறு புன்னகையுடன் முடிந்துவிட்டது
எங்களது சந்திப்பு. எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க பிராத்தனைகள் புனிதா.
கல்லூரி என்றாலே நட்புகளின் உலகமாகத்தான் இருக்கும். பெரிய
நட்புவட்டம் என்னோடது. எப்போதும் சிரித்துக்கொண்டே கழித்த நாட்களவை. ஆனா 6 மாதத்திற்கு
ஒருமுறை செமஸ்டர் வச்சு நம்மள டென்சன் பண்ணலைனா அவங்களுக்கு தூக்கம் வராதே...யாரை திட்டரேனு
பாக்கரீங்களா????? இந்தப் பரிச்சையை தொடங்கிவைத்த புண்ணியவான் முதல் கொண்டு, பரிட்சை
ஹால்ல பேப்பர் கொடுக்கர பேராசிரியர் வரை எல்லோரையும் தான். ஆனா ஒன்னுங்க பரிட்சை எழுதரப்ப
கூட இத்தன டென்சன் இருக்காது.....மதிப்பெண்கள் வரும் போது இதயம் துடிப்பு எகிறும் பாருங்க....எங்க
இதயம் வெளிய வந்து விழுந்துடுமோனு பயந்த நாட்களும் உண்டு.என்னடா யார் பேரையும் சொல்லலைனு
பாக்கரீங்களா???? என்னோட நியாபக சக்தி அபாரங்க......எங்காவது ஒருத்தர் பேர் விட்டுப்போனாலும்
மனசு அப்புறமா வருத்தப்படும்.
எம்.சி.ஏ படிக்கும் போது வெறும் 7 பெண்கள்தான் 25 பேரில்.
7 பேரும் நல்ல தோழிகளா இருந்தோம். சுஜா, கவிதா, சுகன், குணா, ஸ்நேகா, சித்து, நான்
எல்லோரும் சேர்ந்தா அந்த இடம் அவ்வளவுதான். தமிழார்வத்தில் நானும் சுகனும் ஒரே மாதிரி.
சேர்ந்து பார்த்த “இருவர்” படம் மறக்கமுடியாத ஒன்று.
மும்பையில் கிடைத்த நட்புகள் மிகப்பெரிய வரமென்று சொல்லலாம்.
நளினி, வனஜா. எல்லா நேரங்களில் நான் கேளாமலே உதவி செய்து மிகப் பெரிய சப்போர்ட்டாக
இருந்தவர்கள். இங்கேயும் சிறிய நட்புவட்டம் இருக்கிறது. தினமும் சில மணித்துளிகளை ஒன்றாகக்
கழித்துவிடுவோம்.
நினைவடுக்குகளில் நட்பின் அடுக்குகள் மட்டும் நெகிழவைக்கும்
நிகழ்ச்சிகளை அடக்கியதாக இருக்கும்.
இணையம் வாயிலாக முகம்தெரியாமல் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு
நல்ல நண்பர்களான பின் சந்தித்துக் கொள்வதும் நன்றாகத்தான் இருக்கிறது. இப்படி நட்பானவர்கள்
சிலரை உங்களுக்கு அறிமுகப்படுத்தரேன். இருங்க அறிமுகப்படலத்துல சொன்ன 2 நட்புகளை முதல்ல
பார்த்துடலாம்.
1. தமிழ்க்காதலன்.
ஜாலியா அரட்டை அடிச்சுட்டு
இருந்த என்னை எழுதவைத்த பெருமை இவருக்குதான். வலைப்பக்கத்தை ஆரம்பிக்க சொல்லி இவர்
கொடுத்த டார்சர் தான் இப்ப உங்களுக்கெல்லாம் தண்டனையா போச்சு. என்ன தண்டனைனு யோசிக்கரீங்களா???
ஒரு வாரமா என்னோட கிறுக்கல்களை வாசிக்கரதை சொன்னேங்க. ஆனா நான் வலைப்பக்கத்துக்கு பேர்
வைக்கரதுகுள்ள இவர் ஒரு வழி ஆகிட்டார். தினமும் 4 பேர் சொல்லி அது நான் பிடிக்கலைனு
நிராகரிச்சு ஒரு வழியா “எண்ண ஓவியம்”னு பேர் வைச்சுட்டு போய் சொன்னா.....அங்க மெளனம்
மட்டுமே பதில்.
இதயச்சாரல்னு வலைப்பக்கத்தில் இவரது கவிதைகள் வலம் வருகிறது.
நிறைய சொற்களை அங்கே இருந்துதான் கத்துக்கிட்டேன். தூய தமிழில் கவிதைகள் பிரமிக்க வைக்கு
நம்மை. சில கவிதைகளுக்கு விளக்க உரை கேட்டும் இருக்கேன். இவரின் சில பதிவுகள் பார்க்கலாம்
.
கண்ணீர் உளி கண்ணீர்த்துளியை உளியாக்கி அனுபவ சிலைவடிக்கும் இவரது எழுத்துக்கள் நம்முள் ஆழ்ந்த சிந்தைனையை விதைத்து செல்கிறது.என்னை மிகவும் கவர்ந்த வரிகள்
எரிமலையாய் அடக்கி அடக்கி வெடிக்கிறேன்எனக்குள் நானே என்னை எரிக்கிறேன்.
நெஞ்சுக் கூடு இக்கவிதையில் பிரிவின் துன்பத்தை அழகாக எழுத்துக்களால் வடித்திருப்பார். இதில் வரும் ஒவ்வொரு வரியும் மனதின் வலியை எடுத்துரைக்கும். எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை
புழுவுக்கு எப்படி புரியும்....?
புரியாத புதிராய் காலங்கள்...!
குருவிக் கூடு பற்றற்ற எனத் தொடக்கும் இக்கவிதையின் விளக்கத்தை நீங்களே படித்து தெரிஞ்சுக்கோங்க. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதியதாய் ஒரு விளக்கம் தோன்றும். என்னைக் கவர்ந்த வரி
மாடத்தில் ஏற்றிய மாடவிளக்கு எரிகிறது
மாடம் விட்டு மாடம் விட்டு
மாடங்கள் மாறும் விளக்குகள் மாறவில்லை
மாற்றமிலா சோதியில் ஏற்றிய தீபங்கள்.
மாடம் விட்டு மாடம் விட்டு
மாடங்கள் மாறும் விளக்குகள் மாறவில்லை
மாற்றமிலா சோதியில் ஏற்றிய தீபங்கள்.
இவர் மேன்மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்
-------------------------------------------------------------------------------------------------------
2. ஈரோடு கதிர்
கதிரின் எழுத்துக்களுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தனது எழுத்துக்களால் அனைவரையும் ஓர் நிமிடம் கட்டிப்போட்டுவிடும் ஆற்றல் உள்ள் கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு பாய்ந்த வேர் இவர். “மெருகேத்து” என்று கொடுமைபடுத்தர நண்பர் இவர்.
சகிக்க முடியா சகிப்புதன்மை இக்கட்டுரையில் தொடர் வண்டிகளின் மூன்றாம் வகுப்பு கழிவறையோரம் பயணச்சீட்டு வாங்காமல் வாழும் ஆசையோடு கண்களில் நம்பிக்கையோடு பயணம் செய்பவர்களை பற்றி வேதனைப்பட்டு இருப்பார். இக்கட்டுரை படித்த பின அப்படி பயணம் செய்பவர்களை இளக்காரமாக பார்க்க மனம் வராது
கசியும் மெளனம் இக்கவிதையில் மெளனத்தை உடைக்க முயலும் சமூகத்தின் சூழல்களை படம்பிடித்து காட்டியிருப்பார். பிடித்த வரிகள்
மௌனத்தின்
இறுக்கத்தில்
மூச்சுத்திணறிப்
பிதுங்கும் சொல்
மரணத்தில் மூழ்கி
உதித்து
வெளியேறலாம்
அப்பா இந்த சிறுகதையை படித்து முடித்தவுடன் மனம் கனத்து போவதை தடுக்கயிலாது. இதை நான் ஒலிவடிவம் செய்து இருக்கிறேன். அதை உங்களுக்காக இங்கே பகிர்கிறேன்.
அப்பா - சிறுகதை ஒலிவடிவம் மேலும் சில சிறுகதைகளையும் ஒலிவடிவமாக்க உள்ளேன்.
----------------------------------------------------------------------------------------------------
3.காயத்ரி வைத்தியநாதன்
நல்ல தோழி. இவரது படைப்புகள் உணர்ச்சிக்குவியலாக இருக்கும். இருவரின் பார்வைகளும் நேரெதிர் என்றாலும் இன்றும் இனிமையான தோழி இவர். நான், காயத்ரி, தமிழ் மூவரும் இணைந்து “தமிழ்க்குடில் அறக்கட்டளை” அமைத்து கடந்த ஒரு வருடமாக எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.
குருவிக் கூடு இந்தக்கவிதையில் ஏமாற்றியது அறிந்தும் ஏற்றுக்கொள்ள இயலா பெண்மனம் பற்றி அழகாக சொல்லி இருப்பார்.
குருவியின் குரல் கேட்ட எனக்கு..
தேனீக்களின் ரீங்காரம்...
என் கூட்டில் தஞ்சமடைய
எவரிடம் கேட்க அனுமதி...?
கூட்டிடமா...?
வந்து செல்லும் பறவைகளிடமா..??
தேனீக்களின் ரீங்காரம்...
என் கூட்டில் தஞ்சமடைய
எவரிடம் கேட்க அனுமதி...?
கூட்டிடமா...?
வந்து செல்லும் பறவைகளிடமா..??
கரம்பிடித்து
சுற்றித்திரிந்த வீதிகளில்
என்கரம் அழுத்தி
நின்கரம் உணர்த்தும்
அன்பைத்தேடி...
என் மௌனத்தை
மொழிபெயர்க்கும்
உன் உணர்வில் இருக்கும்
அன்பைத்தேடி..
மரப்பாச்சி இக்கதையில் மரப்பாச்சியை உவமையாக வைத்து பெண்ணின் உணர்வுகளை சொல்லி இருப்பார். ரேணு கதாபாத்திரத்தை அழகாக சொல்லி இருப்பார்.சுற்றித்திரிந்த வீதிகளில்
என்கரம் அழுத்தி
நின்கரம் உணர்த்தும்
அன்பைத்தேடி...
என் மௌனத்தை
மொழிபெயர்க்கும்
உன் உணர்வில் இருக்கும்
அன்பைத்தேடி..
---------------------------------------------------------------------------------------------
4. குமார்
என்மேல் ரொம்ப அக்கறையுள்ள நண்பன், சகோதரன். என்ன கிறுக்கினாலும் பாராட்டு மட்டும் தான் கிடைக்கும். ஒரு அண்ணன் இருந்து இருந்தால் குமார் போல் தான் அக்கறையா இருந்து இருப்பார் . இவரின் கதைகள் எனக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தாலும் இவரது கவிதையைத் தான் இங்கே பகிர விரும்புகிறேன்.
கண்ணீரில் கரையும் காதல் இக்கவிதையில் திருமண வாழ்வில் எப்போதாவது ஏற்படும் சண்டையையும், அதன் வலிகளையும் விவரித்த விதம் மிகவும் அருமை. பிடித்த வரிகள்
எப்போதும் இப்படி
என்றால் பழகிவிடும்...
எப்போதாவது இப்படி
என்னும்போதுதான்
வலியின் உச்சம்
பழகிக் கொள்ள மறுக்கிறது...
சன்னலில் தலை நீட்டிப்
பார்க்கிறேன்...
திரும்பிப் பார்த்து
கையசைக்கிறாய்
அன்னையின் கைபிடித்தபடி...
மனதுக்குள்
மகள் சிரிக்கிறாள்.
---------------------------------------------------------------------------------------------------------------
5. சுமன்
எனது எழுத்துக்களின் வாசகனாக அறிமுகமாகி நல்ல நண்பனாக மாறிவிட்டவர். எனது எழுத்துக்களை பாராட்டும் முதல் ஆள் சுமன். எந்த புதுமுயற்சி செய்தாலும் ஊக்கம் கொடுத்து துணை நிற்கும் நல்ல நண்பன்.
நீர்குமிழி வாழ்க்கையை அழகாக எடுத்துரைத்து இருப்பார். எனக்கு பிடித்த வரிகள்
கனவுக்குள் வாழ்ந்து
கனவுக்குள் செத்து
கதை சொல்லுமுன்னர்
குமிழாகி யுடைவோம்
ஓடத்தின் மேல் குருவி இக்கவிதையில் நடக்காததை நடக்குமென காத்திருக்கும் குருவி போல் நம் வாழ்க்கையில் நிறைய பேர் நடக்காததிற்கு நாட்கணக்கில் காத்திருக்கிறோம். பிடித்த வரிகள்
ஓடாத ஓடத்தின்மேலமர்ந்து
ஒரு நாளும் ஊர்குருவி
காதலிக் கடலை
அடைய இயலாதென
யார் இனி
எடுத்து சொல்லப் போகிறார்கள்?
------------------------------------------------------------------------------------------------
இத்துடன் பகிர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடைபெறும் படலத்தில் சிறிது நேரத்தில் உங்களிடம் இருந்து விடைபெறப்போகிறேன்....நன்றி.....வணக்கம்
|
|
நல்ல நட்புகளின் கைகளைப்பிடித்துக் கொண்டு நடந்ததைப் போன்ற உணர்வு.
ReplyDeleteஅருமையான - அழகான வலைத்தளங்களின் அறிமுகங்கள்..
அன்பின் பகிர்வில் - நல்வாழ்த்துக்கள்!..
நன்றிங்க துரை செல்வராஜ். இங்கு விடைபெற்றுக் கொள்கிறேன். வலைப்பக்கத்தில் இணைந்து பயணிப்போம்
Deleteநட்பின் மேன்மையில் பெருமைக்குறியவனானேன். நன்றி தோழி. நெகிழ்வுடன்....!
ReplyDeleteசுமன்.........எனக்கு கிடைத்த மதிர்ப்பிற்குரிய நட்பு நீங்கள். தொடந்து பயணிப்போம்......
Deleteவாழ்த்துகள் சுமன்..உங்கள் வலைப்பூ எமக்கு புதிது..பார்வையிடுகிறேன்..:)
Deleteநன்றி தோழி
Delete:)
Deleteஅனைத்தும் தொடரும் நல்ல தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிங்க தனபாலன்
Deleteஎனது அருமை நண்பன் சிலம்பூர்க் கவிஞனையும்
ReplyDeleteஎன் அக்கா காயத்ரி அவர்களையும்
அழகிய எழுத்தின் சொந்தக்காரர் அண்ணன் கதிர் அவர்களையும்
சொல்லிய இடத்தில் என்னையும் சொல்லிச் சென்ற
அன்புத் தங்கைக்கு நன்றிகள்...
சுமன் படித்ததில்லை... இன்று பார்க்கிறேன்...
அழகாகச் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்....
இங்கே என் நண்பர் என்ற தகுதி மட்டுமே போதும் குமார்.......
Deleteநன்றி நண்பரே
Deleteஎல்லோரையும் நானும் போய் பாத்துட்டு வந்தேன், எல்லோருமே திறமையானவர்கள். எல்லோருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteநன்றிடா .....தினமும் வந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தியதிற்கு.....
Deleteதாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள நட்புக்களின் பதிவுகள் சிலவற்றை முன்பே படித்திருந்தாலும் தாங்கள் தொகுத்து வழங்கியிருக்கும்விதமானது மீண்டும் படிக்க தூண்டுகிறது.நட்புக்களின் பதிவுகளில் நான் படிக்காத சிலவற்றையும் இன்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள் படித்து மகிழ்ந்தேன். இன்றய சரத்தில் இடம்பெற்ற நட்புக்களுக்கும், தொகுத்து வழங்கிய அனிதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஆனந்த.....உங்களது கருத்துக்கள் பெரிய ஊக்கமாக இருக்கின்றது.
Deleteநட்புப்படலம் மிகவும் சுவாரசியப்பகிர்வு!
ReplyDeleteநன்றிங்க தனிமரம்
Delete