07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 5, 2013

சம்மங்கிப் பூவைத் தொடுக்கிறேன்.

வாசமுள்ள சம்மங்கிப் பூவைப் போல என்றென்றும் ஆன்மிகம் மணம் வீசும் சில வலைப்பூக்கள் இப்போது பார்க்கலாம்.

முதலில் என் அருமை நண்பர் நடராஜ தீக்ஷிதரின் வலைப்பூ.  சிதம்பர ரகசியம் தொடர் எழுதுகையில் அறிமுகம் ஆனவர்.  இன்று வரை நேரில் சந்தித்தது இல்லை.  என்றாலும் இவரிடம் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்திருக்கிறேன்.  வயதில் சிறியவர் ஆனாலும் கீர்த்தி பெரிது.  வலைப்பூ ஆரம்பிக்கையில் தெரிந்தவற்றைச் சொல்லிக் கொடுத்தேன்.  இப்போது 2,3 வருடங்களாக எழுதுவது இல்லை.  நேரப்பற்றாக்குறை என்றாலும் அவ்வப்போது புதுப்பிக்கிறார். இவரின் வலைப்பூ ஒரு தகவல் களஞ்சியம்.

http://natarajadeekshidhar.blogspot.inNATARAJA DEEKSHIDHAR


அடுத்தும் சிதம்பரம் நடராஜரின் பெயரிலேயே வரும் வலைப்பூ.

http://aadalvallan.blogspot.in/ Aadalvallan

ஏதோ தேடுகையில் இந்த வலைப்பூக் கிடைத்தது.  பின்னர் சகோதரர் தி.வா.வும் இதைக் குறிப்பிட்டிருந்தார். சிவபாதசேகரன் என்ற பெயரில் எழுதி வரும் இந்த அன்பர்  முழுக்க முழுக்க சிவன் பற்றியே வலைப்பூக்கள் வைத்திருக்கிறார்.

சிவார்ப்பணம், Shivaarpanam

சிவ க்ருபா,        English Blog

சிவ சங்கர விஜயம், English Blog

சிவ தீபம்,

தெய்வத் தமிழ் Deiva Thamizh

என்ற பெயர்களில் வலைப்பூக்கள் வைத்திருக்கிறார்.  ஒவ்வொன்றும் அருள் அமுதங்கள்.  சிவபுராணங்கள் குறித்த பல சந்தேகங்களைத் தெளிவு செய்து கொள்ளலாம்.

அடுத்து நம் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆன சகோதரர் தி.வா.வின் வலைப்பூ.

http://anmikam4dumbme.blogspot.in/2013/10/blog-post_21.html
ஆன்மீகம்4டம்ப்மீஸ்

அத்வைதத்தில் தோய்ந்து போன இவரின் வலைப்பூவில் பல விஷயங்களையும் பார்க்கலாம்.  கர்மா, ஞானம், பக்தி ஆகியவற்றையும் படிக்கலாம். கல்யாணம், சீமந்தம் போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் தெளிவு செய்து கொள்ளலாம்.  அவ்வப்போது சில குட்டிக்கதைகளும் போனசாகக் கிடைக்கும்.

அடுத்து நம்ம டாக்டர் சங்கர்குமாரின் ஆத்திகம் வலைப்பூ.

http://aaththigam.blogspot.in/
ஆத்திகம்

கந்தர் அநுபூதியை மயிலை மன்னார் மூலம் வெகு சரளமாகச் சொல்லுவார். குழுமத்தில் படிச்சுடுவதால் வலைப்பூவில் பின்னூட்டம் இடுவதில்லை. என்றாலும் இந்த வலைப்பூவும் அரிய தகவல்களைக் கொண்டது. நேரே பேசுவதைக் கேட்பதுபோல் அனைவருக்கும் புரியும் வண்ணம் சொல்லி இருப்பார். இப்போது சில மாதங்களாக அங்கு எதுவும் பதியவில்லை.



அடுத்ததாக சமீபத்தில் அறிமுகம் ஆன இளைய சிநேகிதி பார்வதியின் ஆலோசனைகள் அடங்கிய வலைப்பூ.

http://www.aalosanai.blogspot.in/AALOSANAI

உங்களுக்கு ஏதேனும் விரதம் குறித்து சந்தேகம் இருக்கா?  இவரின் வலைப்பூவைப் போய்ப் பாருங்கள்.  தெளிவாக எல்லா விஷயங்களையும், அந்த அந்த விரதத்துக்கான கதைகளோடு கொடுத்து வருகிறார். இதோடு குவியல்கள் என்றொரு வலைப்பூவிலேயும் பலவற்றையும் தொகுத்து வருகிறார்.

http://www.kuviyalgal.blogspot.in
தொகுப்பு.....

இவரின் தீபாவளிக் கவிதை சுப்புத்தாத்தாவால் பாடப்படும் பெருமையைப் பெற்றது.

அடுத்ததாக இளைய சிநேகிதர் ஜீவாவின் வலைப்பூ.

http://jeevagv.blogspot.in/2013/10/peace.htmlஎன் வாசகம்

என் வாசகம் என்ற பெயரில் எழுதி வரும் ஜீவாவை வலைப்பக்கம் ஆரம்பித்த போதிலிருந்தே அறிவேன். சுவாதி நக்ஷத்திரத்தில் பெய்யும் மழைத் தாரையில் விளையும் அபூர்வ முத்தைப் போல் என்றாவது தான் எழுதுவார். அந்தப் பதிவுக்கு அத்தனை சிறப்பு இருக்கும். சமீபமாக எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆன தி.ரா.ச. அவர்களின் வலைப்பூ.

http://trc108umablogspotcom.blogspot.in
கெளசிகம்

வேலைப்பளு, அடிக்கடி ஊர் சுற்றல் என இவரின் எழுத்தும் இப்போது குறைவாகவே காண நேரிட்டாலும் பல உண்மையான சம்பவங்களையும், அருமையான கர்நாடக சங்கீதப் பாடல்களையும் தொகுத்துத் தருவதில் இவருக்கு ஈடு, இணை இல்லை.


http://vediceye.blogspot.in/2013/10/blog-post_7.html

சாஸ்திரம் பற்றிய திரட்டு

ஸ்வாமி ஓம்கார் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.  தியான மையம் நடத்தும் இவர் சமீபத்தில் நடைபெற்ற கும்பமேளா குறித்து எழுதிய பதிவுகள் மனதைக் கவர்ந்தவை.

http://vediceye.blogspot.in/2012/12/7.html

42 comments:

  1. ஆன்மீகம் பற்றி எழுதுவதற்கு வேண்டிய பரமபக்தியும் தீரா நம்பிக்கையும் இருப்பதால் தான் இவர்களின் எழுத்தில் ஒளி கூடுகிறது.
    மிக நன்றி கீதா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நீங்க சொல்வது உண்மை தான்.

      Delete
  2. ஆன்மீக செய்திகளுடன் கூடிய வலைப் பூக்களைப் பற்றித் தொடுக்கப்பட்ட சம்பங்கி சரம் அருமை..

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு துரை செல்வராஜூ

      Delete
  3. அருமையான அறிமுகங்கள்.

    அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அடையாளம் காட்டி சிறப்பித்துள்ள தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வைகோ சார்,பலரும் ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்களே, அநேகமா நாளைக்குக் கொஞ்சம் புதுசா இருப்பாங்கனு எதிர்பார்க்கிறேன். :)))

      Delete
  4. சம்மங்கிப் பூக்களைத் தொடுத்து
    மணக்க மணக்க அளித்தமைக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி.

      Delete
  5. ஆன்மீகத்தில் தொடங்கிய அறிமுகங்கள் மிக நன்றி. ஸ்வாமி ஓம்கார் பதிவுகள் படிப்பதுண்டு. தில்லி வந்திருந்த சமயத்தில் அவரை மலை மந்திரில் தில்லி பதிவர்களோடு சந்தித்திருக்கிறேன்.....

    மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துகள். படிக்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், ஸ்வாமி ஓம்காரைச் சந்தித்ததில்லை. ஆனால் பதிவு ஆரம்பித்த சில மாதங்களில் இருந்தே தெரியும். அதிகம் பழக்கம் இல்லை. :)))

      Delete
  6. ஆகா ரொம்ப நன்றி ரொம்ப நன்றி. நிறைய படிக்கலாம் போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை, ரொம்ப நன்றி.

      Delete
  7. இன்றைக்கு எல்லா லிங்குகளும் வேலை செய்கின்றன. எப்படியோ இதற்கு தீர்வு கண்டுவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எப்போவும் போலத் தான் லிங்கிலிருந்து கொடுத்தேன் சார். என்னனு புரியறதில்லை. சில சமயம் சரியா வருது; பல சமயங்களிலும் காலை வாருது! :))))))

      Delete
  8. எங்கே டிடி?? இன்னும் காணோமே? :))))

    ReplyDelete
    Replies
    1. கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இது நண்பரின் மடிக்கணினியிலிருந்து)


      அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

      Delete
    2. நண்பரின் மடிக்கணினியில் இருந்து வருகை தந்தமைக்கு நன்றி டிடி. :)))

      Delete
  9. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே நன்றி விய பதி. உங்களைப் பல பதிவுகளின் பின்னூட்டங்களில் பார்த்திருக்கேன். நன்றி.

      Delete
  10. கீதா அம்மா..
    இன்றைய அறிமுகங்கள் அருமை..அனைவருக்கும் வாழ்த்துகள். .

    ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
    www.99likes.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி நவ்சீன் கான். மீள் வருகைக்கும் நன்றி.

      Delete
  11. ஆன்மீக வலைப்பூக்களை அறிந்து கொண்டேன்! அருமையான தள அறிமுகத்திற்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. ஆன்மீகத் தொகுப்பா...தெரிந்த சில... தெரியாத பல...!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், தெரியாத பலவுக்கும் இருப்பதற்கு மகிழ்ச்சி. படிச்சுப் பாருங்க.

      Delete
  13. வணக்கம்
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளிர்கள்.....சிறப்பான வாரமாக அமையட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன். வாழ்த்துகளுக்கும் நன்றி.

      Delete
  14. நான் நிறைய blogs புதுசா தெரிஞ்சுக்கிட்டேன் :) தேங்க்ஸ்

    ReplyDelete
    Replies
    1. நன்றி காயத்ரி தேவி.

      Delete
  15. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. அட!.. நம்ம பாருவும் இருக்காங்க. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அமைதி. பாருவும் இருக்காங்க. :)

      Delete
  17. ரொம்ப சிறப்பா அறிமுகப்படுத்தியிருக்கீங்க 'ஆலோசனை' , 'குவியல்கள்' வலைப்பூக்களை... ரொம்ப ரொம்ப நன்றிம்மா.. சில வலைப்பூக்கள் உங்க மூலம் தான் தெரிஞ்சது.. உடனே போய் பாக்கறேன்.. 'நம்ம பாரு'ன்னு சொன்ன அமைதிச்சாரலுக்கும் ரொம்ப நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி எல்லாம் எதுக்கு பார்வதி! எனக்குத் தெரிஞ்சதைச் செய்யறேன். அவ்வளவே.

      Delete
  18. Valaipookkal A treasure of Golden fishes in NET giving full details DIVINE MATTERS OF ALMIGHTY
    THANKS A LOT
    ESSAR

    ReplyDelete
  19. சம்பங்கி சரம் அருமை..
    சம்பங்கி பூசரத்தில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    சம்பங்கி பூசரத்தை அழகாய் தொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. அருமையானப் பூச்சரத்தில் அடியேனையும் அடுக்கித் தொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி டாக்டர், இது ஒண்ணும் பெரிய விஷயமே இல்லை! :)))))

      Delete
  21. நெஞ்சார்ந்த நன்றிகள். விரைவில் தங்களை நேரில் சந்திக்க வருகின்றேன். என்றும் என் நெஞ்சில் நீங்கா இடம் தங்களுக்கு உண்டு. உங்கள் பதிவுகள் அனைத்தையும் தினமும் படித்துவிடுகின்றேன். தொடரட்டும் உங்கள் ஆன்மீகத் தொண்டு.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது