07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 3, 2013

வாங்க, வந்து கைக்குலுக்கிக்கோங்க...


ரெண்டு நாளா தீபாவளி கொண்டாடின டையர்ட்ல இருப்பீங்க நீங்க எல்லாம்... கடைசி கடைசியா நான் நேத்து பிளாக்ல போஸ்ட் போட்டுட்டு கிளம்புனதுக்கு அப்புறம் தான் ரெண்டு பேர் தீபாவளி பத்தி போஸ்ட் போட்டுருந்தத கவனிச்சேன். சரி, அவங்க எல்லாம் பெரிய ஆட்கள், இதுல தமிழ்வாசி பிரகாஷ் அண்ணா எப்படி எல்லாம் தீபாவளி கொண்டாடுவோம்னு கண்ணுக்குள்ள ஒரு காட்சியையே ஓட விட்ருந்தார். படிச்சி வச்சுட்டு அடுத்த தீபாவளிக்கு மறக்காம நியாபகத்துக்கு கொண்டு வாங்க.

நான் இங்க இருந்து கிளம்புற நேரம் வந்தாச்சு. என்னோட இந்த ஒரு வார அனுபவத்த கிளம்புறதுக்கு முன்னாடி கண்டிப்பா சொல்லிட்டு போறேன். காரணம் என்னன்னா

ஸ்கூல் படிக்குறப்பவே புக் எடுத்து படிக்கணும்னா ரொம்ப சோம்பல் எனக்கு. இதுல ஒருவாரம் நிறைய பதிவுகள் படிக்கணும்னு ஒரு கட்டாய சூழ்நிலை (அவ்வ்வ்வ்) வந்ததும் ரொம்ப திணறி தான் போனேன். அப்புறமா தான் பேஸ் புக்ல நமக்கு தான் ஏகப்பட்ட அண்ணாஸ் இருக்காங்களே, அவங்க கிட்ட கேக்கலாமேன்னு கேட்டேன். அப்படி நிறைய பேர் அவங்களுக்கு தெரிஞ்ச பிளாக்கர்ஸ் லிங்க் எல்லாம் எனக்கு குடுத்தாங்க. அப்படி சாதிக் அலி அப்துல்லா அண்ணா எனக்கு சில பேர எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாங்க... அவங்கள பத்திதான் நாம இப்போ பாக்க போறோம்.

வெய்ட் வெய்ட் வெய்ட்... ஒரு குட் மார்னிங் கூட சொல்லாம, ப்ளாக்ஸ் பாக்க கிளம்பிட்டா எப்படி? அதனால முதல்ல ஒருத்தருக்கொருத்தர் குட் மார்னிங் சொல்லிப்போம்.

அப்புறமா, இப்போ நாம யார பாக்க போறோம் தெரியுமா?

ஜெசிக்காவின் கிறுக்கல்கள்னு சொல்லிட்டு மனசுல தோணுறத அழகா செதுக்கி இருக்காங்க இவங்க. உங்கள்ள பலபேருக்கு இவங்கள தெரிஞ்சிருக்கும். ஆனாலும் நான் இப்போ தான் பாக்குறேன். 2005-லயே ப்ளாக் எழுத ஆரம்பிச்சுருக்காங்க, நிறைய பேர் இவங்க பதிவுகள படிக்கவும் கமன்ட் பண்ணவும் செய்துருக்காங்க. ஆனா அப்புறம் படிப்படியா இவங்க பதிவுகள் ரொம்பவே குறைஞ்சு போய் இந்த வருஷம் மொத்தமே ரெண்டு பதிவு தான் எழுதியிருக்காங்க. எந்த விசயத்த எடுத்துகிட்டாலும் அத தனி ஸ்டைல்ல சொல்றது இவங்களோட சிறப்பா இருக்கு. நிறைய எழுதியிருக்காங்கன்னாலும் வேற்றுமொழி படங்களுக்கு இவங்க குடுத்துருக்குற திரைவிமர்சனம் பத்தி நாம பாக்கலாமே

எங்கிருந்தோ வந்தான்

அடுத்து நாம பாக்குறவங்களுக்கு ஏகப்பட்ட ப்ளாக்ஸ் இருக்குன்னு இப்போ தான் எனக்கே தெரியும். எல்லா ப்ளாக்லயும், தங்கள் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கானு தான் ட்ரைலர் ஓடுது. இதுல நாம அவங்களோட கலைச்சாரல் பத்தி தான் பாக்கப்போறோம். இதுல அவங்க நிறைய டிப்ஸ் குடுத்துருக்காங்கங்க. படிச்சு பாருங்க, கண்டிப்பா உங்களுக்கு யூஸ் புல்லா இருக்கும். அதிலயும் நாம நார்மலா சாப்பாடு சாப்ட்ட பிறகு என்னவெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கார். அதெல்லாம் ரொம்ப ரொம்ப உண்மை தெரியுமா.

சாபிட்டப்பின் செய்ய கூடாதவை

எண்ணப்பறவை சிறகடிக்க வண்ண வண்ண கனவுகளோடு விண்ணில் இதமான அலைகளா பறக்குறாங்களாம் இவங்க. நிறைய கவிதை எழுதியிருக்காங்க. அதோட தன்னோட மனக்குமுறலையும் பதிவு செய்துருக்காங்க. அப்படி என்ன மனக்குமுறல்னு கேக்குறீங்களா? ஒரு பெண் எப்படி எல்லாம் இந்த உலகத்துல வஞ்சிக்கப்படுறான்னு தன்னோட மனசுல வர்ற ஆதங்கத்த கொட்டித் தீத்துட்டாங்க. நீங்களே அவங்க சொல்றது சரி தானேன்னு பாத்துக்கோங்க

பெண்மை சாபமோ?

புதுசா எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஒரு மொட்டு மாதிரி தான். அத விரியும் பூக்களா மாத்துற திறமை அந்த நூலை ஆய்வு செஞ்சு ரசிகர்களோட கைகள்ல குடுக்குற ஆய்வாளர் கைல இருக்கு. நான் சொல்றது சரிதானே? அப்படி தான், நூலாசிரியர்கள் பலரும் எழுதின நூல்கள ஆய்வு செய்து இங்க பதிவு பண்ணியிருக்காங்க இவங்க. இவங்களோட யதார்த்தம் எப்படி பட்டதுனா வானத்தைப் பார்த்து உருவாகும் கற்பனைகளை விட மண்ணில் உருவாகும் யதார்த்தங்கள் சிறப்பானவைன்னு சொல்றார். அப்படி இவர் ஆய்வு செய்த ஒரு மொட்டை பத்தி பாப்போமா?

நூலாய்வு

சமையல் வீட்ல பெண்கள் மட்டும் தான் செய்யணுமா என்ன? ஆண்களும் சமைக்கலாம் தானே. இந்த காலத்துல ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் சமையல் சொல்லிக் குடுக்க ஆள் இல்லனா அவ்வளவு தான். அதுக்கு தான் Thenu’s Recipies சொல்லிக் குடுக்க இவங்க இருக்காங்களே. இது இவங்களோட இரண்டாவது வசந்த காலமாம். எந்தவகையான சமையலா இருந்தாலும் ஈசியா நாம எப்படி பண்ணனும்ன்னு இவங்க தமிழ்லயும் இங்கிலீஷ்லயும் சொல்லிக் குடுக்குறாங்க. அதுலயும் பிரட் பக்கோடா எப்படி போடுறதுன்னு சொல்லி தராங்க பாருங்க, கண்டிப்பா படிச்சுட்டு வீட்ல போய் செஞ்சு சாப்ட்டு பாருங்க.

ப்ரெட் பகோடா

இப்போதைக்கு இது போதுங்க. கைக்குலுக்கி கைக்குலுக்கி டயர்ட் ஆகிட்டேன். பகோடா வேற சாப்ட்டேனா, இனி ரெஸ்ட் தான். எப்படியும் சாயங்காலத்துக்குள்ள மறுபடியும் வந்து உங்கள எல்லாம் மீட் பண்ணி டாட்டா சொல்றேன்... அதுவரைக்கும் நீங்க ரெஸ்ட் எடுக்காம எல்லா பிளாக்க்கும் போய் பாருங்க...

14 comments:

  1. நல்ல பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.. வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. உங்க தேங்க்ஸ்க்கு என்னோட பெரிய தேங்க்ஸ் :)

      Delete
  2. KALAIMAHEL HIDAYA Risvi அவர்களின் தளம் புதியது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... அண்ணா... ஒவ்வொரு பதிவுலயும் ஒருத்தரையாவது உங்களுக்கு புதுசா தெரிய வச்சேனே, அதுவே எனக்கு சக்சஸ் தான்

      Delete
  3. ஜெசிக்காவின் கிறுக்கல்கள் பதிவு மிகவும் சிறப்பு.

    குறிப்பிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நல்ல பதிவுகள் எல்லோரோட பார்வைக்கும் படனும்னு தானே வலைச்சர குழு விரும்புறாங்க... ரொம்ப தேங்க்ஸ்

      Delete
  4. ஜெஸிலாவின் கிருக்கல்கள்..எங்கே அவள் ஒரு சுவாரசியமான கதை படிக்க கிடைத்தது நன்றி. இதில்கதை ஓட்டம், காட்சிகள் மனதில் பதிகிறது .

    ReplyDelete
    Replies
    1. நானும் படிச்சேன், நல்ல கதை

      Delete
  5. நல்ல அறிமுகங்கள். கண்டிப்பா படிச்சு பார்த்து தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா படிங்க...

      Delete
  6. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. வந்தேன்...
    கைகுலுக்க வந்தேன்...
    அழகிய சிறுமி வரவேற்கிறாள் என்னை!!!
    யாருங்க காயத்ரி அந்தப் பாப்பா?

    ReplyDelete
  8. நன்றி காயத்ரி தேவி .. என்னோட ப்ரெட் பக்கோடாவை அறிமுகம் செய்ததுக்கு :) நன்றி வலைச்சரம் & சீனா சார் அண்ட் தனபாலன் சகோ :)

    ReplyDelete
  9. நன்றி நன்றி நன்றி ....

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது