
பிறந்த கணம் தொட்டுக் கதைகளோடு கலந்துவிட்டவர்கள் நாம். சூழவும் சொல்லப்பட்ட கதைகளிலிருந்தே மொழிகளைக் கற்றுக்கொண்டோம் என்பது உண்மையன்றி வேறென்ன ? நமது ஒவ்வொரு செயல்களும் கூடப் பிந்திய கணங்களுக்குக் கதைகள்தானே.வரலாறுகள் புராதனக்கதைகள்.வாய்மொழி, சுவடிகள், புத்தகங்களெனத் தொடர்ந்து இப்பொழுது இணையத்திலும் கதைகள் சொல்லப்படுகின்றன. வேற்று தேசமொன்றின்...
மேலும் வாசிக்க...

கவிதை - ஏகாந்தத்தில், தனிமையில் அல்லது கூட்டத்துக்குள்ளும் , நீரின் சலசலப்பில், தாகத்தில் என எல்லாப் பொழுதுகளிலும், உணர்வுகளிலும், இடங்களிலும் வண்ணத்தைப் போலப் பரந்துகிடக்கிறது.அவ்வண்ணங்களைத் தொட்டு ஓவியமாக்குபவர்கள் பலர். எனினும் ஒரு சிலரது கைவண்ணங்கள் மட்டுமே என்றுமே அழியாதனவாக, வனப்பு நிறைந்த ஓவியமாகப் பலர் மனதிலும் சட்டமிட்டுத்தொங்குகிறது...
மேலும் வாசிக்க...

நண்பர்கள் அனைவருக்குமான இனிய வணக்கங்களைச் சுமந்தவனாக இங்கு வந்திருக்கிறேன் !பேராற்றல் மிக்கவர்கள் பலர் சூழ்ந்திருக்கும் 'வலைச்சரம்' எனும் மேடையில் ஏறத்தயங்கி, ஆறு மாதங்களுக்கும் மேலாகத் திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவனை ஒரு வார ஆசிரியரெனும் கிரீடத்தைச் சூட்டவெனத் தொடர்ந்தும் கைப்பிடித்து இழுத்து இன்று மேடையில் ஏற்றி, அன்பாய்ப் பார்த்து...
மேலும் வாசிக்க...
கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் வெயிலான் என்ற ரமேஷ் புதுமுறையில் பதிவுகளை அறிமுகம் செய்தார். அனைத்துப் பதிவுகளையுமே ஒரு படத்துடன் துவக்கினார். பல பழைய பதிவுகளையும் புதிய பதிவுகளையும் அறிமுகப்படுத்தினார். அவர் அதிகம் படிப்பவர் - அதிகம் உழைப்பவர் என்று அவரது வலைச்சரப் பதிவுகளின் மூலம் தெளிவாகிறது. பலப் பல பதிவுகள் - அதிகம் அறியப்படாத பதிவுகள் - பலவற்றை அறிமுகம் செய்தார். பல்வேறு வகையான பதிவுகளையும் அறிமுகப்படுத்தினார். அவரது...
மேலும் வாசிக்க...

இடைப்பட்ட நாட்களில் சிறிது தடைபட்டாலும், என்னென்ன, எப்படி எழுத வேண்டுமென்று நினைத்தேனோ என்பது நிறைவேறாவிட்டாலும், நண்பர்களின் எதிர்பார்ப்பை சிறிதளவேனும் பூர்த்தி செய்திருப்பேன் என்ற மனநிறைவு ஏற்பட்டிருக்கிறது.
புதிய பதிவர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு அறிமுகமான பழம்பெரும் பதிவர்களின் சுட்டிகளை நிறைய இடத்தில் கொடுத்திருக்கிறேன்.
காசியண்ணன்...
மேலும் வாசிக்க...
கூகிள் படிப்பான் மூலம் தான் பதிவுகளை படிப்பேன். அதிலுள்ள பதிவுகளை படித்து முடித்து விட்டுத்தான் தமிழ்மணம். படிப்பானில் பிடித்துப் போட்டிருக்கும் சுட்டிகளில் தமிழ்மணத்தின் 'தலய்'களின் சுட்டி தவிர்த்து மற்றவற்றை தருகிறேன்.
எட்டயபுரம் - கலாப்ரியாவின் வலைத்தளம். நெல்லை மொழி கொஞ்சி விளையாடும்.
சுதாங்கன் - ஏதாவது ஒரு சுவாரஸ்யமான விசயங்களுடன் இருக்கும் பதிவுகளில்.
மெளளீ - பயணப் பதிவுகள், கிராமர் கிருஷ்ணமூர்த்தி போன்ற பதிவுகளும்...
மேலும் வாசிக்க...

வறுமை தீயை அணைக்க
விறுவிறுப்புடன் வேலை பார்த்தான்
தீப்பெட்டி தொழிற்சாலையில்
குழந்தை தொழிலாளி
ஆவியூர் பிரபு - குழந்தை தொழிலாளி
இளகு மனமுடையவர்கள் ஒளித்துண்டை பார்க்க வேண்டாம்.
குழந்தைகள் என்னென்ன வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என தெரியவேண்டுமானால் - குழந்தைகள்.
எந்தவிதமான குறுக்கீடும் இல்லாமல் அடிக்கடி அந்த போன் நம்பரை உபயோகப்படுத்த...
மேலும் வாசிக்க...

வரலாறு என்பது மனிதர்கள் வாழ்ந்த விதத்தை சொல்வது. வாழ்ந்த விதம் தெரிய, உள்ளே பதிய, வாழும் வழி புரியும்.
அன்போடு இருப்பது தான் ஆன்மீகம். அன்பும் ஒருமுகப்பட்ட அக்கறையும் இணைபிரியாதவை. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு அக்கறை இருக்கிறது, எங்கு அக்கறை இருக்கிறதோ அங்கு அன்பு இருக்கும்.நான் அக்கறை மிகுந்தவர்களைப் பற்றி,...
மேலும் வாசிக்க...

தூங்குகிறபோது நம்முடைய மூளை உறுப்புகளில் சில தூங்காமல் கனவை எழுப்பிக் கொண்டிருப்பது போல, ஒரு எழுத்தாளன் விழித்துக் கொண்டிருக்கும் போதும், அவனுள் 'சிலது' தூங்கிக் கொண்டு ஒருவகையான கனவை எழுப்பிக் கொண்டே இருக்கும்.
அர்த்தஜாமத்திலும் தேனீக்கூட்டில் காது வைத்துக் கேட்டால் வரும் ஓசையைப் போல் அவனுடைய உள்ளத்தில் ஒரு ஓசை உண்டாகிக் கொண்டே இருக்கும். ...
மேலும் வாசிக்க...

ஒரு பன்முக வித்தகர் - சகோதரர் கடந்த மே மாதம் என்னுடைய புனைப்பெயரைப் பற்றி.....
சிகரெட் பிடிக்க விழைந்தேன்.
விரல்களும் உதடுகளும் சிகரெட்டும்தான் இருந்தன.
தீப்பெட்டி இல்லை. சுற்றியிருந்தவர்களும் மனம் திரும்பிய மைந்தர்களாக இருந்தார்கள். என் தவிப்பைப் பார்த்த நண்பர் ஒருவர்,
என்னிடமிருந்த சிகரெட்டை வாங்கி ஜன்னல் வழியாக வெளியே...
மேலும் வாசிக்க...

இன்று வலைக்குள் போட்டுவிட்டால், அது கி.பி.2104 ஆகஸ்டில் கூட யாரோ ஒரு தனியனால் படிக்கப்படலாம். உறைந்த நிரந்தரம் தான் அதன் சிறப்பு. இதனால் வலைப் பதிவுகளை நம் பழங்காலத்துக் கல்வெட்டுகளுக்கு ஒப்பிடலாம். இப்போது புதிதாக பிலாக்ஸ் (blogs) என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிக்கையின் மறு வடிவம்தான்....
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களேஒரு வார காலம் அருமை நண்பர் தாமிரா பல்வேறு தலைப்புகளில் பல பதிவுகள் இட்டு மறுமொழிகளையும் பெற்ரிருக்கிறார். பல சுட்டிகள் கொடுத்து பல பதிவுகளைத் தேடிப் பிடித்து அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவரது டாப்10 மொக்கைகள் உண்மையிலேயே பிரமாதம். நல்ல முறையில் கொடுத்த பணியினைச் சிறப்பாக செய்து முடித்த தாமிரா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.அடுத்த் 22ம்நாள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் வெயிலான் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார்....
மேலும் வாசிக்க...
ஆணாதிக்கம் மற்றும் பெண்விடுதலை குறித்த எனது முந்தைய 'நான் அவனது பக்தன்' என்ற பதிவில் இணைப்பதற்கு விட்டுப்போன சில அற்புதமான பதிவுகளை அதன் தேடல் நீட்சியில் தொடர்ந்து நான் காண்கிறேன். அதில் தோழி புதியமாதவி எழுதிய 'ஊடகங்களும் ஊடறு பெண்களும்' என்ற பதிவும் முக்கிய இடத்தை பெறவேண்டிய பதிவாகும். இந்தப்பதிவு உண்மையில் கவிதையில் ஆரம்பித்து கட்டுரையாக முடியாமல் நிற்கிறது. இதில் பல வழக்குகள் குறித்த செய்திகளும் இருக்கின்றன. இவரது பல பதிவுகளும்...
மேலும் வாசிக்க...
வேறு வழியே இல்லாமல் நண்பர்களிடமே சரணடைந்துவிடுவது என்று தீர்மானம் பண்ணிவிட்டேன். அதுவும் நம்ப செட்டில் மொக்கைகளுக்கா பஞ்சம்.? நேரடியாக விஷயத்துக்குப் போய்விடலாம். டாப்பிக்குக்குள் போவதற்குள் ஒரு ரெண்டு வரி பில்டப் கொடுப்பது வழக்கம். அதைப்பார்த்துவிட்டு ஓவரா முறுக்கு சுத்துராய்ம்ப்பா இவன் என்று கமெண்ட் வர ஆரம்பித்துவிட்டது. இனி சேவாக் ஸ்டைல்தான்.கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் :*சீனியர் பதிவுகள் கணக்கில் கொள்ளப்படவில்லை.*ஒரே நபரின்...
மேலும் வாசிக்க...
அவனுக்கு பக்தனாக இருக்க எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ தெரியாது, ஆனால் நான் அவனது பக்தன். அவன் ஒரு லெஜன்ட். நிஜமான புரட்சி வீரன். ஆழ அகலமான வளமான சிந்தனாவாதி. தத்துவ மேதை. பிற தத்துவ ஞானிகளைப்போல சிந்தனையை சொன்னதோடு நில்லாமல் முடிந்தவரை வாழ்ந்தும்காட்டிய பகுத்தறிவு பகலவன்.அவனை ஒட்டி திரு. ஓவியா சொன்ன ஒரு கருத்தை நண்பர் தங்கவேல் மாணிக்கம் இந்தக்குறும்பதிவில் சொல்கிறார். அற்புதமானது அது. இவரது பிற பதிவுகளை இன்னும் படிக்கவில்லை....
மேலும் வாசிக்க...