07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 2, 2008

சித்திரமும் வெள்ளந்தியும் அம்மாஞ்சியும்

சதங்கா
சதங்காவின் சித்திரம் பேசுதடி.கட்டங்கள் போட்டு வரைய கத்துத்தருகிறார். சின்ன வயதில் இது போல் கட்டங்கள் போட்டு யானை, புலி பொன்றவௌகளை வரைய கற்றுக் கொண்டது, ஞாபகம் வருதே....
கத்துக்குங்க

காட்டாறு

'சிலுசிலுப்பை குச்சி'--குச்சி ஐஸ் தாத்தா
கிராமத்து தாத்தா டவுனுக்குப் போனபோது கண்ட புதுப் பண்டமான குச்சிஐஸை ஆசையோடு
பேரப்பிள்லைகளுக்கு வாங்கி பையில் வைத்துக் கொண்டு வீடு போய் வெறும் குச்சியை மட்டும் கண்டு வெள்ளந்தியாய் விழித்ததை கவிதை நடையில் சொல்லியிருக்கிறார்.
ரொம்ப ரசிச்சேன்.
ரெண்டு, குச்சி மட்டும் அதிலிருக்க
சிலுசிலுப்பும் அடங்கியிருக்க
திருதிருவென புரியாது
விழி தாழ்த்தி
அயர்ந்தாரே
அப்பாவி தாத்தா!


குச்சி


அம்பி எனும் அம்மாஞ்சி

இவரது 'தகப்பன்சாமி'பதிவு என் போன்று பிள்ளைகளிடம் கணினி உபயோகப்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொண்டதையெல்லாம் ஞாபகப்படுத்தியது.
நம்மோட ப்ளாஷ் பேக்கெல்லாம் தெரியாமல், 'இதுகளுக்கென்ன தெரியும்?' என்று நினைக்கும் இளம்தலைமுறைகளுக்கு கீழ் கண்ட வரிகள் போய்ச்சேரட்டும்.
'பொறுமையாக எனக்கு பயிற்சி அளித்து, திருத்திய அவர்களின் பொறுமையில் தசாம்சமாவது (அய்யோ! படம் இல்லீங்கணா! பத்தில் ஒரு பங்குனு சொல்ல வந்தேன்) எனக்கு வாய்க்காதா என்ன'
சுப்பன்

24 comments:

  1. அருமையான சுட்டிகள். சதங்காவின் பேசும் சித்திரங்களையும், அம்பி 'தகப்பன்சாமி'யும் (பெற்றவர்கள் யாவருக்குமான மரியாதையாக நெகிழ வைத்த பதிவு) நான் அறிந்தது. காட்டாற்றின் கவி வெள்ளம் நான் அறியாதது. வெள்ளந்தி தாத்தா மனதைக் கொள்ளை கொண்டு விட்டார்.

    ReplyDelete
  2. :))! :))! மீ த ஃபஸ்ட் போலிருக்கே! சந்தோஷம். ஆனாலும் இந்த விளையாட்டில் எனக்கு அதிக ஆர்வமில்லை. ஏன்னா எப்பவும் பதிவை நல்லா படிச்சு கமென்ட் போட்டால்தான் எனக்கு திருப்தி. அது தன்னாலே முதல்ல வந்திட்டா கூடுதல் திருப்தி! :)!

    ReplyDelete
  3. நானானி

    மூன்று பதிவுகளுமே அருமை - புதியவை எனக்கு - நெஞ்சை நெகிழ வைத்த பதிவுகள்

    தேடிப்பிடித்து எழுதியதற்கு நன்றி

    தகப்பன்சாமிக்கு ஒரு சுட்டி தரக்கூடாதா

    ராமலக்ஷ்மி - மீ த ப்ர்ஸ்டு எனில் நுனிப்புல் மேய்ந்ததாகப் பொருளில்லை - படித்து ரசித்து வாய்ப்பு கிடைத்தால் மீ த பர்ஸ்ட்தான்

    ReplyDelete
  4. அழகான பதிவுக்காரர்கள்....

    ReplyDelete
  5. ஆமா யாரது வெள்ளந்தி... நம்ம காட்டாறு அக்காவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. சந்தோசம் ராமலஷ்மி!!

    ReplyDelete
  7. அதுவும் சரிதான்! ஆனால் இதில் ஒரு மகிழ்ச்சி அவர்களுக்கு.

    ReplyDelete
  8. அதுவும் சரிதான்! ஆனால் இதில் ஒரு மகிழ்ச்சி அவர்களுக்கு.

    ReplyDelete
  9. நன்றி சீனா!
    தகப்பன்சாமிக்கு சுட்டி தந்துவிட்டேன். முதலில் போட்ட சுட்டி....நிஜமாவே
    சுட்டி போலும் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது. ஹி..ஹி..!

    ReplyDelete
  10. தமிழ்பிரியன்!
    வெள்ளந்தி காட்டாறு அக்கா அல்ல.
    அவரது குச்சிஐஸ் தாத்தா!!

    ReplyDelete
  11. தமிழ்பிரியன்!
    வெள்ளந்தி காட்டாறு அக்கா அல்ல.
    அவரது குச்சிஐஸ் தாத்தா!!

    ReplyDelete
  12. சூப்பர்ப் லிங்க்ஸ். அம்பியின் பதிவுகளில் நகைச்சுவை இழையோடியிருக்கும்.

    ReplyDelete
  13. போன தலைமுறையினர் கொடுத்துவைத்தவர்கள் .

    இன்றய தலைமுறையினருக்கு தாத்தா பாட்டி

    பற்றியெல்லம் கதையில் தான்

    கூட்டுக் குடுப்பம் கலைஞ்சு போச்சு அண்ணாச்சி
    கூப்பிடு தூரம் இப்போ காததூரம் ஆச்ச்சுங்கோ

    உறவுகளெல்லம் உதிந்த மலராய் காற்றில் போச்சு
    உண்மை இப்போ புரிய, வலி உண்டாச்சு

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  14. சித்திரமும் கைப்பழக்கம்
    செந்தமிழும் நாப்பழக்கம்.


    சித்திரம் வரைவதை கைப்பிடித்து சொல்லியது போலுள்ளது

    பாராட்டுக்கள்
    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  15. இரண்டு திருக்குறள் நினைவுக்கு வருகிறது.
    1மகன் தந்தைக்காற்றும் உதவி - இவன்தந்தை
    என்னோற்றான் கொல் என்சொல்

    2.தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete
  16. //நுனிப் புல்//
    அடடா, நான் எல்லோரையும் சொல்லலை. நீங்களே கண்டிப்பா பாத்திருப்பீங்களே. பல பதிவுகளில் "மீ த ஃபஸ்ட்" மட்டும் விளையாட்டு மாதிரி போட்டு விட்டு 'அப்புறம் வாரேன்'னு ஜூட் விட்ருவாங்க. அப்புறம் அவங்க தலயே பின்னூட்டங்களில் தெரியாது. நான் அப்படிப் பட்ட விளையாட்டைச் சொன்னேன். அதில் தவறுமில்லை. நானானி சொல்கிற மாதிரி மக்களுக்கு அதிலும் ஒரு த்ரில், மகிழ்ச்சிதான், வேறென்ன! எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே:)))!

    நானும்தான் சொல்லியிருக்கேனே...
    //அது தன்னாலே முதல்ல வந்திட்டா கூடுதல் திருப்தி! :)!//
    திருப்தி மட்டுமல்ல..சந்தோஷமும்தான் ஹி..ஹி..

    ReplyDelete
  17. கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த்தெல்லாம்
    நமக்கு இன்னும் மறக்க முடியவில்லை. சகோதர உறவுகளே
    வாடி உதிர்ந்து போகக் கூடிய அபாயம்
    இருக்கிறதே? என்ன செய்யப் போகிறோம்? கோவை விஜய்

    ReplyDelete
  18. பாராட்டுக்கு நன்றி! கோவை விஜய்!

    ReplyDelete
  19. அம்பியின் நகைச்சுவை ரசிக்கக் கூடியதுதான், மங்களூர் சிவா!

    ReplyDelete
  20. சீனா! ராமலஷ்மி!....'புலவர்களே!
    சாந்தமாக உரையாடுங்கள்!!!

    ReplyDelete
  21. //நானானி said...
    சீனா! ராமலஷ்மி!....'புலவர்களே!
    சாந்தமாக உரையாடுங்கள்!!!//

    மன்னா...அல்ல அல்ல, மன்னிக்க, மகராணி:)! நான் என் தரப்பு வாதத்தைப் பணிவுடனேதான் கூறியிருக்கிறேன். சீனா சார் அதைச் சரியாகப் புரிந்து கொள்வார் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது:)!

    ReplyDelete
  22. ராமலஷ்மி! அது ச்சும்மா!!டமாசு!!

    ReplyDelete
  23. எனக்குள் கொசுவத்தி சுத்தியதால் அந்த பதிவு, கோவை விஜய்!

    ReplyDelete
  24. பெற்றோர்-பிள்ளைகள் உறவு பத்தி இதில் சொல்லியிருக்கும் விதம் அருமை, கோவை விஜய்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது