07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 31, 2008

கதை சொல்லிகள் !

பிறந்த கணம் தொட்டுக் கதைகளோடு கலந்துவிட்டவர்கள் நாம். சூழவும் சொல்லப்பட்ட கதைகளிலிருந்தே மொழிகளைக் கற்றுக்கொண்டோம் என்பது உண்மையன்றி வேறென்ன ? நமது ஒவ்வொரு செயல்களும் கூடப் பிந்திய கணங்களுக்குக் கதைகள்தானே.

வரலாறுகள் புராதனக்கதைகள்.
வாய்மொழி, சுவடிகள், புத்தகங்களெனத் தொடர்ந்து இப்பொழுது இணையத்திலும் கதைகள் சொல்லப்படுகின்றன. வேற்று தேசமொன்றின் யுத்தக்கதைகளென அல்லது பேய்களலையும் கதைகளெனச் சொல்லப்பட்டவற்றின் யுத்தவீரர்கள், மனிதத்தலைக் குதிரை, விளக்குமாறில் பறக்கும் சூனியக்கிழவி, சிறகு முளைத்த தேவதைகள் எல்லாம் இன்னும் மூளையில் பத்திரமாகவும், பாத்திரமாகவும் உள்ளன எனில் அந்தக் கதைகளெல்லாம் சுவாரஸ்யம் மிகுந்தவை அல்லது சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டவை என்றுதானே அர்த்தம்.

அவ்வாறாகத் தங்கள் வலைப்பூக்களில் சுவாரஸ்யம் மிகுந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்பவர்கள் பற்றி இன்று அலசுகிறேன்.

சாந்தினி வரதராஜன் - 'நாளைய உலகம்' எனும் வலைப்பூவில் இவரது நேற்றைய காலங்களில் தோய்ந்த உலகம் சிறுகதைகளாக முழுமை பெற்றிருக்கிறது. அனேகமான கதைகள் தனது தாய்த்தேசத்தைப் பிரிந்த வலிகளை, அம்மாவுடனான நாட்களை, சொந்த மண்ணில் கழிந்த இளமைப்பருவத்தை அசைபோடுகின்றன.ஈழ மொழிநடையைப் பாவித்துக் கதைகள் சொல்லப்படும் விதம் சிறப்பு.

கே.பாலமுருகன் - உண்மை நிகழ்வு, புனைவு, பின்னவீனத்துவம், நகைச்சுவை என எல்லாத்தளங்களிலும் சிறப்பாகப் பயணிக்கின்றன இவரது சிறுகதைகள். மிகவும் வித்தியாசமான நிகழ்விடங்களைக் காட்சிப்படுத்துகின்றன இவர் கொண்டு வரும் எழுத்துக்கள் .

நிலாரசிகன் - அறிவியல், விஞ்ஞானப் புனைகதைகள், அனுபவக் கதைகள், கிராமத்துக் கதைகள், காதல் தொடர்களெனப் பல தளங்களில் தனது எழுத்துக்களை சுவாரஸ்யமாகக் கதை சொல்லவைத்திருக்கிறார் இவர்.

டிசே - மனமதிரச் செய்யும் பால்யத்தின் காலங்களை இவரது 'ஹேமா அக்கா' சிறுகதையில் கண்டேன். ஒவ்வொரு வரிகளும் கண்முன்னே களத்தினையும் அம்மனிதர்களையும் காட்சிப்படுத்துகின்றன. போரின் வன்மப்பொழுதொன்றில் நிகழ்ந்த வன்முறை, பெருங்கோபமொன்றினால் வெளியிட்ட உக்கிரவார்த்தைகளெனக் கதை, வாசிப்பவர்களின் மனதை இழுத்துக் கொண்டு பயணிக்கிறது.

சந்திரவதனா செல்வகுமாரன் - சிறுகதையுலகின் நீண்ட கால எழுத்தாளர். வாழ்வின் எல்லாப்புள்ளிகளையும் இணைத்து சிறுகதைகள், குட்டிக்கதைகளென அழகிய கோலங்களைத் தாங்கி நிற்கிறது இவரது வலைப்பக்கம். தனது சிறுகதைத் தொகுப்பின் கதைகளையும் பதிவிட்டிருப்பது பிடித்திருக்கிறது.

அகிலன் - 'மரணத்தின் வாசனை'யென இவர் முகரச் செய்யும் பக்கங்களில் யுத்தமும் குருதியும் சமமாய்க் கலந்த வாடையடிக்கிறது. சிறுகதைகளெனச் சொல்லியிவர் எழுதவில்லையெனினும் இவரது இந்த இரத்தக்குறிப்புக்களின் தாக்கம் மிக நீண்ட நாட்களுக்கு நெஞ்சில் அதிர்பவை. சொற்களையும் எழுத்துக்களையும் அருமையாகக் கையாளும் திறன்படைத்தவரின் கதை சொல்லும் திறனும் அபாரம்.

சக்தி ராசையா - வாழ்வின் பக்கங்களிலிருந்து இவரது கதைகள் புரட்டப்படுகின்றன. மொழி நடையும் பேச்சு நடையும் இயல்பாக வருகிறது இவரது கதைகளில். மனதில் நிற்கும்படியான கருக்களைக் கொண்டு கதை சொல்ல முயல்வது மிக நன்று. நம்பிக்கையூட்டும் பெண் எழுத்தாளர்களில் ஒருவர்.

பாண்டித்துரை - யதார்த்த வாழ்வின் கணங்களை, அவற்றின் நிகழ்வுகளைத் திறம்படச் சுவாரசியமாக சொல்கின்றன இவரது சிறுகதைகள். இக்கதைகளில் பயன்படுத்தும் வட்டார மொழி வழக்கு, கதைகள் செல்லும் நடை என்பன சிறப்பாக உள்ளன.

 ஆடுமாடு - நாட்டுப்புறக்கதைகளையே அதிகம் சொல்வதாலோ என்னவோ, இவரது புனைப்பெயராக ஆடுமாட்டினை வைத்துக்கொண்டிருக்கிறார். பெயருக்கேற்பவே சொல்லிப்போன கதைகளைப் பலமுறை அசைபோட வைக்கிறார். கிராமத்து வட்டார மொழிவழக்கு இவரது கதாபாத்திரங்களைக் கண்முன்னே காட்சிப்படுத்துகிறது.

ஜி -  மிகச் சுவாரஸ்யமான எழுத்துநடை இவருடையது. வாழ்வின் அனுபவங்களைப் பதிவாக்கும் சாயல் கூட அழகிய சிறுகதையை ஒத்திருக்கிறது. இவரது குறுந்தொடர்களும் அருமையாக உள்ளன.

விக்னேஷ்வரன் - நல்ல தரமான சிறுகதைகளைத் தந்த இவரது தற்போதைய பதிவுகள் ' 60 விரல்களும் ஒரு ஸ்பரிசமும்' எனும் தொடர் நவீனமாக இருக்கின்றன . வாசிக்கும் பொழுது மனதிலே இயல்பாகக் காட்சிகள் விரியும் படி எழுதியிருப்பது இவருக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.

வே.பிச்சுமணி - இக் கதைகள் யதார்த்தக் குறிப்புகள். பெரும்பாலான கதைகள் குடும்பமும் அதன் உறவுகளையும் சார்ந்து சொல்லப்பட்டிருக்கின்றன. கதை சொல்லும் நடை சிறப்பாக இருப்பதோடு பயன்படுத்தும் மொழி, தன்பால் ஈர்க்கிறது.

பாஸ்கர் - அனுபவக் கதைகள், அறிவியல் புனைவுக் கதைகளென்கின்ற வெளிகளில் உலவிவருகின்றன இவரது எண்ணங்கள். சொல்லப்படும் விடயங்கள் சிந்திக்க வைப்பதோடு நல்ல மொழி நடையில் எழுதப்பட்டுமிருக்கின்றன.

கோசலன் - காத்திரமான சிறுகதைக்குச் சொந்தக்காரர், தனது வலைப்பூவில் இதுவரை ஒரு சிறுகதையைத்தான் எழுதியிருக்கிறார் எனினும் தொடர்ந்தும் இது போன்ற தரமான சிறுகதைகளை எழுதுவாரென எதிர்பார்க்கவைக்கும் எழுத்து இவருடையது.

இன்னும் வலையுலகில் நான் அடிக்கடி சென்றுவரும்  பல  பிடித்தமான கதை சொல்லிகள் இருக்கிறார்கள். இன்னுமொரு பதிவில் அவர்களையும் கதைசொல்லச் சொல்கிறேன்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
மேலும் வாசிக்க...

Tuesday, December 30, 2008

இவர்களுக்குக் கவிதை முகம் !

கவிதை - ஏகாந்தத்தில், தனிமையில் அல்லது கூட்டத்துக்குள்ளும் , நீரின் சலசலப்பில், தாகத்தில் என எல்லாப் பொழுதுகளிலும், உணர்வுகளிலும், இடங்களிலும் வண்ணத்தைப் போலப் பரந்துகிடக்கிறது.
அவ்வண்ணங்களைத் தொட்டு ஓவியமாக்குபவர்கள் பலர். எனினும் ஒரு சிலரது கைவண்ணங்கள் மட்டுமே என்றுமே அழியாதனவாக, வனப்பு நிறைந்த ஓவியமாகப் பலர் மனதிலும் சட்டமிட்டுத்தொங்குகிறது ! எனவே காலங்களைத் திசைகளை
அளவிடும் கருவிகளுக்குள் கவிதையும் ஒன்றாக இருக்கிறது எனலாம்.

ஃபஹீமா ஜஹான் - அழகிய சொற்களை ஒவ்வொன்றாய்த் தேர்ந்தெடுத்துக் கோர்த்து, பார்த்துக்கேட்டு அனுபவித்தவைகளை வித்தியாசமான வடிவங்களில் கவிதைகளாகத் தருபவர். இவரது கவிதைகளின் முதல் வரியினை வாசிக்கத் தொடங்கும்பொழுதே, கவிதை குறித்து நிற்கும் விம்பம் மனதிலே உருவெடுத்து எழத் தொடங்குகிறது. கவிதை பூர்த்தியடைகையில் சொல்லொணா உணர்ச்சிகள் மனம் முழுதும் வியாபித்து கவிதையோடு நிரம்பி நிற்கின்றன. சமகால இலங்கைப் பெண் கவிஞரான இவரது கவிதைகளுக்குள்ளும் இலங்கைப் போர் குறித்தான வேதனை வரிகள் பல கலந்தேயிருக்கின்றன.

தமிழ்நதி - இவ் வலைத்தளத்தில் வாழ்வின் தனிமையும், போர் தந்த இடர்களும், இடப்பெயர்வு தந்த வலிகளும் காயங்களுமெனப் பல சுய அனுபவங்கள் புலம்பெயர்ந்து வாழும் சமகால இலங்கைப் பெண் கவிஞரான இவரது எழுத்துக்களில் வடிக்கப்பட்டுக் கவிதைகளாக மின்னுகின்றன. நான் அனுபவித்திராச் சில குரூர உலகங்களை இவரது கவிதைகள் எளிதாக வெளிக்கொணர்ந்து 'பார்' எனக் காட்டுகையில் அதிர்ந்துவிடுகின்றது மனது .

உமாஷக்தி - சிறு சிறு வரிகளுக்குள் பேரர்த்தங்கள் ஒளிந்திருக்கும் வண்ணம் கவிதைகளை மிகச் சிறப்பாக வடித்திருக்கிறார். மன உணர்வுகளையும் அனுபவங்களையும் கவிதைகளாகக் கோர்த்திருக்கிறார். சிந்திக்கவைக்கும் கவிதைகள் இவரது வலைத்தளத்தைப் பூரணப்படுத்துகின்றன.

தீபச்செல்வன் - சமகால யுத்த பூமியின் அத்தனை இன்னல்களையும் பார்த்தும் அனுபவித்தும் வரும் இக்கவிஞரின் வரிகளெல்லாம் குருதி பூசிய வலிகளைச் சுமந்தபடி நம்பிக்கையோடு எழுகின்றன. ஓங்கி ஒலிக்கும் குரலோடு நிகழ்காலத்தைப் புகைப்படங்கள் மற்றும் காத்திரமான கவிதைகளோடு முன்வைக்கிறார்.

சஹாராதென்றல் - ஒவ்வொரு கவிதையிலும் வேறுபட்ட புதுப்புதுச் சொற்கள், ஒரே கருவினைப் பலப்பலப் புது வடிவங்களில் காத்திரமாகச் சொல்லவிழைதல் போன்றவற்றை இவரது கவிதைகளில் காணலாம். ஏதோ ஒரு ஏக்கமும் தனிமையும் கவிதைகளினூடு தெரிகின்றது. வாசிப்பவருக்குத் தன்னை அக் கவிதைகளோடு ஒன்றிப் பயணிக்கவைத்தல் இலகுவாக இருக்கின்றது.

முபாரக் - சிந்திக்க வைக்கும் வரிகளைக் கொண்டனவான இவரது கவிதைகள் மனதிற்குள் சில முடிச்சுகளை விட்டுச் செல்பவை. சமூகக் கருத்துக்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் தொக்கிநிற்கின்றன. அவையே சிந்திக்கவும் வைக்கின்றன.

லக்ஷ்மி சாஹாம்பரி - பெரும்பாலான அழகுணர்ச்சிக் கவிதைகளைக் கொண்டது இவரது வலைப்பூ. துயரத்தைக் கூட மிக மென்மையான ஒரு நளினத்தோடு எழுதவிழைகிறது இவரது பேனா. சொல்லவந்ததை வேண்டாச் சொற்களின்றி அழகுறச் சொல்லிச் செல்கிறது.

இலக்குவண் - எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் மன உணர்வுகளை அப்பட்டமாகக் கவிதைகள் வழியே வெளிக்கொணர்பவர் இவர். பல நேரங்களில், இவரது வரிகளைக் கண்டு வியந்திருக்கிறேன் . தனிமையின் கொடுங்கரங்கள் தன் கழுத்தை நெரிப்பது கண்டு வெகுண்டெழுகிறதிவர் எழுத்துக்கள்.

கோகுலன் - இயற்கை - அது சுமந்து நிற்கும் எழில் , ஈரம், வெப்பம், அழிவு ; வாழ்க்கை - அதில் தோன்றி மறையும் காதல், நேசம், தனிமை, வலிகளெனப் பல வகையான கவிதைகளால் நிறைந்திருக்கிறது இவரது வலைப்பூ. அழகான கற்பனைகள் மனதிலே கருவினைக் காட்சிப்படுத்துகின்றன. இவர் அனேகக் கவிதைகளில் ஒரே படிமங்களைக் கொண்ட, ஒரே சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால், இவர் சொல்வதைப் போல இத் தனிமை நேரப் புலம்பல்களும் கிறுக்கல்களும் அழகாகவே உள்ளன. புதுக்கவிதை, மரபுக்கவிதை, நாட்டார் பாடல்களெனப் பல படைப்புக்களைக் கொண்ட இவரது வலைத்தளம் கவிதை தொடர்பான பலதரப்பட்ட ரசனை கொண்டவர்களையும் தன்பால் ஈர்க்கும்.

ஷிப்லி - 'வாழ்க்கை என்பதும் ஒரு புதுக்கவிதைதான்..என்ன ஒரு புதுமை.. நம்மால் விளங்கவே முடியாத புதிர்க்கவிதை ' எனச் சொல்லும் இவரது கவிதைகளில் யுத்தப் பிரதேசங்கள் இருளச் சூழ்ந்த அடர் மேகங்களின் இருள் கொண்டுவரும் வலிகள் தெரிகிறது. வாழ்வின் தனிமையும் ஏகாந்தமும் தந்த சிறு தவிப்பும் பெருந்துயரமும் வரிகளில் இழையோடுவதானது கவிதைக்கு அழகூட்டுகிறது .

அன்புடன் புஹாரி - அழகிய வலைப்பக்கத்தின் கவிதைகள் சுவாரஸ்யமாக இருக்கிறது. கவிஞர் பல கருக்களைத் தன் கவிதைகளுக்குள் அடக்கியிருக்கிறார். அழகான, எளிமையான சொற்கள் சொல்லவந்த விடயத்தை மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகின்றன. மெல்லிய தூறலாய் மனம் நனைக்கின்றன இவரது கவிதைகள்.

என்.சுரேஷ் - பல கவிதைத் தொகுப்புக்களுக்குச் சொந்தக்காரரான இவரது வலைப்பூவில் நூற்றியைம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களிலும் வீச்சுக்களிலும் உள்ளன. சுவாரஸ்யமான வலைப்பூ இவரது.

முகுந்த் நாகராஜன் - சின்னச் சின்னக் கவிதைகளில் பேருண்மைகளைப் புரியவைத்தலும், அனுபவங்களைப் பகிர்வதுமாக உள்ளது இவரது வலைப்பூ. சில கவிதைகள் மனதைப் பூவாய் விரியவைப்பதோடு, சில முகத்திலறைந்து நிதர்சனம் உணர்த்துகின்றன.

சரவணகுமார் - பெரும்பாலான கவிதைகள் காதல்துயர் குறித்து எழுதப்பட்ட அழகிய கவிதைகளைக் கொண்டது இவரது வலைப்பூ. இவரது கவிதைகளில் அனேகமான முடிவுகள் அதிர்ச்சியைத் தரவல்லன.

அனுஜன்யா - தான் கடந்துவந்த அனுபவங்களையே இவரது அனேகக் கவிதைகள் பாடுகின்றன . வாழ்வின் எல்லாப் பக்கங்களும் அருமையான கவிதைகளாக்கப்பட்டிருக்கின்றன.

கடற்கரய் -ஆழமான கவிதைகளைக் கொண்ட வலைப்பூ இவருடையது. அதிசயிக்கத்தக்க தளங்களில்தான் பயணிக்கின்றன இவரது கவிதைகள். இவரது கவிதைநடையும் மிக அழகாகவும் வித்தியாசமாகவும் உள்ளது.

குட்டிசெல்வன் - அடர்த்தியான தனிமையும், மழைநாட்களும் இவரது எல்லாக் கவிதைகளிலும் எட்டிப்பார்க்கின்றன. துலக்கி விட்டதைப் போல அழகான வரிகள் மின்னுகின்றன. இவரது சில கவிதைகளின் வரிகளினூடு பயணிப்பது இலகுவாக இருக்கிறது.

நிவேதா - அதிர்வைக் கிளறும் வரிகளைக் கொண்டவை இவரது கவிதைகள். பால்யகாலத்தில் கேட்கப்படும் கிழவியின் கதைகளாய் இவர் கவிதைகள் மனதிற்குள் விரிகின்றன.

தேவ அபிரா - மனதின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகள் இவரது பாடுபொருளாகியிருக்கின்றன. 'துயரின் நிழலே படராப் பொழுதாய் நீழும் வாழ்வே நினதாய் ஆக! ' எனச்சொல்லும் இவரது கவிதைகள் துயர்களையும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

ஸ்நேகிதன் - காத்திரமான வரிகளைக் கொண்ட இவரது கவிதைகளுள் புகுந்து வெளிப்படும்பொழுது மீண்டும் மீண்டும் புதையவைக்கிறது இவரது கவிதை மொழி.


இன்னும் அழகிய, காத்திரமான வரிகளைத் தனதாக உடைய நிறையக் கவிஞர்கள் எனதிந்தப் பதிவுக்கு வெளியேயும் இருக்கிறார்கள். இந்த ஒரு வாரத்துக்குள் நேரமும் இணையமும் அனுமதித்தால் இன்னொரு பதிவிலும் பலரைப் பட்டியலிடுகிறேன்.


என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
மேலும் வாசிக்க...

Monday, December 29, 2008

நீண்ட காலமாகத் தப்பித்து ஓடவிழைந்தவன், வந்திருக்கிறேன் !

நண்பர்கள் அனைவருக்குமான இனிய வணக்கங்களைச் சுமந்தவனாக இங்கு வந்திருக்கிறேன் !

பேராற்றல் மிக்கவர்கள் பலர் சூழ்ந்திருக்கும் 'வலைச்சரம்' எனும் மேடையில் ஏறத்தயங்கி, ஆறு மாதங்களுக்கும் மேலாகத் திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவனை ஒரு வார ஆசிரியரெனும் கிரீடத்தைச் சூட்டவெனத் தொடர்ந்தும் கைப்பிடித்து இழுத்து இன்று மேடையில் ஏற்றி, அன்பாய்ப் பார்த்து மகிழும் நண்பர் சீனாவுக்கு நன்றி !

வேலை செய்யும் நிறுவனத்தின் கணனியையும், இணையத்தையும் மட்டுமே நம்பிப் பதிவிட்டும், எழுதியும் வருமெனக்குப் பலராலும் பார்க்கப்படும் ஒரு இணையத்தளத்தில்  ஒரு வாரம் தொடர்ந்தும் பதிவிடுவதாக வாக்குக்கொடுத்துவிட்டு மேற்சொன்ன இரண்டும் அல்லது இரண்டிலொன்றேனும் ஏமாற்றிவிடுமெனில் , வாக்குமீறிவிட்டேனெனும் தவறான புரிதல்களுக்கு ஆளாகிவிடுவேனென்ற அச்சமே ஓடி ஒளிய விதித்தது என்னை.

இருப்பினும் எத்தனை காலம்தான் மறைந்தொளிதல் இயலுமெனக் கேட்டுக்கொண்டேயிருந்த ஆழ் மனதின் கேள்விக்கு துணிச்சலாகப் பதிலிட முனைந்திருக்கிறேன் இன்று..!

முதல் பதிவு என்னைப் பற்றிய அறிமுகம் எனச் சொல்லியிருக்கிறார்கள். பெரிதாகச் சொல்ல என்னிடம் எதுவுமில்லை தாய்த்தேசம் இலங்கையென்பதைத் தவிர..!

நாட்டின் நிலைமையும், எதிர்காலம் குறித்த அச்சங்களும், கனவுகளும் வேறொரு நாட்டினைப் பிழைப்புக்காக நாடச் செய்திருக்கிறது . முதன்முதலாகப் பிரிய நேரிட்ட தாய்மண்ணும், வீடும் குறித்தான பால்ய மற்றும் பழைய நினைவுகள் துரத்திவர அவற்றைத் திசைதிருப்பவென  எழுத்தின் கைப்பிடித்தேன். தனிமையின் கோரக் கரங்களில் நான் சிக்கிவிடாதபடி என்னை இழுத்துக்கொண்டு ஓடுகிறது இப்பொழுது அது.

கவிதைகள், சிறுகதைகள், எண்ணச் சிதறல்கள், விமர்சனக் கட்டுரைகள், புகைப்படங்கள், உலக நிகழ்வுகள் ஒரு பார்வை, சிந்திக்கச் சில படங்கள், ஆங்கிலப்பதிவுகள் என நேரம் வாய்க்கும் தருணங்களிலெல்லாம் எழுதிவருகிறேன். அவ்வளவே !


அடுத்த பதிவு முதல் பதிவுலகில் பிடித்த பதிவுகளை அறிமுகப்படுத்தச் சொல்லியிருக்கிறார்கள். நோக்கும் திசைகளிலெல்லாம் பிடித்த பதிவர்களே நிறைந்திருக்கிறார்கள். எனது சுவாசத்தில் அவர்களது மூச்சுக்காற்றும் வற்றாதவொரு அன்பும் நிறைந்திருக்க, ஒன்றிரண்டு பதிவுகளை மட்டும் அறிமுகப்படுத்துதல் எவ்வாறு தகும்? நேரம் வாய்க்கையில் தமிழ்மணம் காட்டும் எல்லாப்பதிவுகளுக்குள்ளும் ஓடி ஓடிப் போய்வருபவன் நான். அது போலவே எனது பதிவுகளுக்குள்ளும் எல்லா நண்பர்களும் வந்துபோய்க்கொண்டிருக்கிறீர்கள் எனும்பொழுது இன்று பெரும் சவாலை முன்வைத்து உங்கள் முன்னால் நிற்கிறேன். ஏதோவொரு சங்கடம் சூழ்ந்ததாய் நெஞ்சம் துடிக்கிறது. ஒரு வார அவகாசத்துக்குள் என்னாலியன்ற பதிவுகளையெல்லாம் உங்கள் முன்வைக்கிறேன்.

ஏற்றுக் கொள்வீர்களென்ற நம்பிக்கையோடு...

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
மேலும் வாசிக்க...

Sunday, December 28, 2008

வெயிலானுக்கு நன்றி - ரிஷானுக்கு வரவேற்பு

கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் வெயிலான் என்ற ரமேஷ் புதுமுறையில் பதிவுகளை அறிமுகம் செய்தார். அனைத்துப் பதிவுகளையுமே ஒரு படத்துடன் துவக்கினார். பல பழைய பதிவுகளையும் புதிய பதிவுகளையும் அறிமுகப்படுத்தினார். அவர் அதிகம் படிப்பவர் - அதிகம் உழைப்பவர் என்று அவரது வலைச்சரப் பதிவுகளின் மூலம் தெளிவாகிறது. பலப் பல பதிவுகள் - அதிகம் அறியப்படாத பதிவுகள் - பலவற்றை அறிமுகம் செய்தார். பல்வேறு வகையான பதிவுகளையும் அறிமுகப்படுத்தினார். அவரது ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஒரு வார கால ஆசிரியர் பொறுப்பு போதாது. இன்னும் பல வாரங்கள் பொறுப்பில் அமர்த்தலாம்.

நண்பர் வெயிலான் என்ற ரமேஷிற்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றியினை மனமார வலைச்சரக் குழுவினர் சார்பினில் தெரிவித்து விடை அளிப்பதில் பெருமை அடைகிறோம்.
-------------------------------------------------------------------------------------------------

டிசம்பர்த் திங்கள் 29ம் நாள் துவங்கும் வாரத்திற்கு இனிய நண்பர் எம்.ரிஷான் ஷெரீப் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். இவர் அன்புடன், பண்புடன் போன்ற பல குழுமங்களிலும் பத்துக்கு மேற்பட்ட வலைப் பூக்களிலும் எழுதி வருகிறார். அயராது இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறார். கீற்று, வார்ப்பு, அதிகாலை மற்றும் திண்ணண போன்ற இணைய இதழ்களிலும் கதை கவிதை எனக் கலக்குகிறார்.

ரேடியோஸ்பதியின் சிறப்பு நேயராகவும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அட்லாஸ் சிங்கமாகவும் ஜொலித்திருக்கிறார். வ.வா.சவில் ஒரு மாத காலத்தில் 20 பதிவுகள் இட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறுமொழிகள் பெற்றவர். கலக்கு கலக்கு என கலக்கியவர். கும்மி அடிப்பதில் சிறந்தவர் என நிரூபித்தவர்.

அவரை அதிகமாக அன்பாக வற்புறுத்தி இவ்வார ஆசிரியராகப் பொறுப்பேற்க வைத்திருக்கிறோம். அவர் இவ்வாரம் முழுவதும் கலக்க, அவரி வருக வருக என வரவேற்கிறோம்.

நல்வாழ்த்துகள் ரிஷான் ஷெரீப்

சீனா
மேலும் வாசிக்க...

மகிழ்வும் - மனநிறைவும்

 
இடைப்பட்ட நாட்களில் சிறிது தடைபட்டாலும், என்னென்ன, எப்படி எழுத வேண்டுமென்று நினைத்தேனோ என்பது நிறைவேறாவிட்டாலும், நண்பர்களின் எதிர்பார்ப்பை சிறிதளவேனும் பூர்த்தி செய்திருப்பேன் என்ற மனநிறைவு ஏற்பட்டிருக்கிறது.

புதிய பதிவர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு அறிமுகமான பழம்பெரும் பதிவர்களின் சுட்டிகளை நிறைய இடத்தில் கொடுத்திருக்கிறேன்.
காசியண்ணன் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல, 

நாம் சொல்வது புதிதாகவே இருக்கவேண்டும் என்று அவசியமில்லையே. எத்தனையோ பழைய செய்திகளும் முதல்முறை பார்ப்பவருக்குப் புதிதுதானே! (அந்த நம்பிக்கையில தானே இங்க வண்டியே ஓடுது!)

நானும் நினைத்து என் மனதை தேற்றிக் கொள்கிறேன் :-) .

நான் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறேன்.  கண்டுபிடிக்கவே முடியாத, இதுவரை எங்கேயுமே அறிமுகமில்லாத ஒரு பதிவரின் பதிவை படித்து விட்டு, பின்னூட்டப்பெட்டிக்கு போனால் 98 சதவீதம் துளசி டீச்சரின் பின்னூட்டம் இருக்கும்.  இல்லையேல் முத்துலட்சுமி கயல்விழி, இப்போது நண்பர் காக்டெய்ல் கார்க்கி.  நிறைய படிக்கிறார்கள்.  வாழ்த்துக்கள்!!!!


முடிக்கவே முடியாத ஒன்றை
முடிக்கத் தெரியவில்லை
முடிவற்று நீளும்
முடிவற்றவைகளால்
முடியப்பட்டிருக்கின்றன
முற்றும்.

என்ற கவிஞர் மகுடேசுவரனின் கவிதையுடனும், அடுத்து வரும் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்களோடும், நன்றி கூறி விடைபெறுகிறேன்.

 
அன்புடன் - வெயிலான்.
http://veyilaan.wordpress.com
மேலும் வாசிக்க...

படிப்பானில் படிப்பான்

கூகிள் படிப்பான் மூலம் தான் பதிவுகளை படிப்பேன். அதிலுள்ள பதிவுகளை படித்து முடித்து விட்டுத்தான் தமிழ்மணம். படிப்பானில் பிடித்துப் போட்டிருக்கும் சுட்டிகளில் தமிழ்மணத்தின் 'தலய்'களின் சுட்டி தவிர்த்து மற்றவற்றை தருகிறேன்.

எட்டயபுரம் - கலாப்ரியாவின் வலைத்தளம். நெல்லை மொழி கொஞ்சி விளையாடும்.

சுதாங்கன் - ஏதாவது ஒரு சுவாரஸ்யமான விசயங்களுடன் இருக்கும் பதிவுகளில்.

மெளளீ - பயணப் பதிவுகள், கிராமர் கிருஷ்ணமூர்த்தி போன்ற பதிவுகளும் நன்றாக இருக்கும்.  இப்போது பதிவுகள் ஏதும் வருவதில்லை.

திரைப்பார்வை - உலகத்திரைப்படங்களின் விமர்சனம்.

நடிகர் - நடிப்பனுபவங்களையும், மற்றவைகளையும் எழுதுகிறார்.

அஞ்சறைப்பெட்டி - பெயரை விட வேறு விளக்கங்கள் தேவையில்லை.

அத்துவானவெளி - அந்தாரவின் கவிதைகள்.

ஆதலினால் - காதல் கவிஞன்

ராம் - கற்றது தமிழ்

இயற்கை நேசி - இயற்கை வினோதங்கள்

ஈ தமிழ் - பாபா

உருப்படாதது - நரேனின் தளம்

என்னைச்சுற்றி - மனோகரின் தளம்

ஒருபக்கம் - ஸ்ரீதர் நாராயணன்

மணற்கேணி - பிரபு ராஜதுரை

வினையான தொகை - வளர்

கிருஷ்ணமூர்த்தி - பெயரற்ற யாத்ரிகன்

ஞாயிறு தபால் - ஏவிஎஸ்

தமிழ்மகன் - சினிமா பற்றியது

தம்பி - அபுதாபியிலிருந்து

தேசிகன் - சுஜாதா பற்றிய பதிவுகள்

நாடோடி - தஞ்சாவூரிலிருந்து

நேர்நிறை - நாகராஜன்

பட்டாம்பூச்சி - ரெஜோவாசன்

மரியாகேண்டீன் - பாபு

மருதன் - எழுத்தாளர்

மா.சி - உள்ளதை எழுதுகிறேன்

தங்கள் அன்புள்ள - முரளிகண்ணன்

ரவி - நெதர்லாந்திலிருந்து

வீணாப்போனவன் - கவிதைகள்

வேணுவனம் - சுகா
மேலும் வாசிக்க...

பாதரசம்



வறுமை தீயை அணைக்க
விறுவிறுப்புடன் வேலை பார்த்தான்

தீப்பெட்டி தொழிற்சாலையில்
குழந்தை தொழிலாளி



இளகு மனமுடையவர்கள் ஒளித்துண்டை பார்க்க வேண்டாம்.

குழந்தைகள் என்னென்ன வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என தெரியவேண்டுமானால் - குழந்தைகள்.

எந்தவிதமான குறுக்கீடும் இல்லாமல் அடிக்கடி அந்த போன் நம்பரை உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டால், "ஸ்வீட்ஸ் ஆர்டர் செய்ய அர்ச்சனாவுக்கு போன் போடு" என்று சொல்வீர்களானால், அர்ச்சனா ஸ்வீட்ஸ் போன் நம்பர் உங்களின் நினைவுப் பகுதியில் நிரந்தரமாக இனித்துக் கொண்டிருக்கும். (இதைத்தான் sweet memories-னு சொல்றாங்க போலிருக்கு)

முத்துராமனின் - உங்களுக்குள்ளே சில புதிர்கள் - மறதி

வீதியில் நடந்து போகும் போது, அழகான வீட்டை கடக்க நேர்கையில், கட்டினால் இது போலத் தான் கட்டணும், அப்படினு ஒரு எண்ணம் வருமே? ச.ந. கண்ணன் வலைத்தளத்தை பார்க்கும் போதும், அதே எண்ணம் எனக்குத் தோன்றும். மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் தளம்.

புலிக்கலைஞன் – தமிழின் மிகச்சிறந்த சிறுகதை – அசோகமித்திரன்


36 வலைப்பூக்கள் வைத்திருக்கும் மூத்த வலைப்பதிவர் சந்தரவதனா


கிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு மாறும் அனுபவங்களை சொல்கிறார்.

நான் கல்லூரியில் படிக்கும் காலம் வரை ஷூ சொந்தமாக வாங்கி அணிந்ததில்லை.....நானே எனது ஷூவை பலமுறை பார்த்துக்கொண்டேன். எல்லோரும் எனது முகம் பார்த்து பேசாமல் என் ஷூ பார்த்துதான் பேசுகின்றனரோ என்று எனக்குள் பல குழப்பங்கள்... - முதல் பகுதியிலிருந்து...

ஸ்பென்சர் பிளாசா - பாதரசம் போல, எனது கிராமத்து ஸ்டைல் உடைகளும் செருப்பு அணிந்த கால்களும், அங்கே இருந்த மனிதர்களுடன் ஒட்டாமல் தான் இருந்தன... - இரண்டாம் பகுதியிலிருந்து...

பிளாசாவுலயே நீ ஒருத்தன் தான் தனியா தெரியிற.. அது தாண்டா என்னால் உன்னை ரொம்ப ஈசியா அடையாளம் கண்டுபிடிக்க முடியுது என்றான். அவன் குத்தி காட்டுறானா, இல்லை மனசுல பட்டதை சொல்றானான்னு - மூன்றாம் பகுதியிலிருந்து...

சீக்கிரம் அறையை காலிசெய்துவிடுங்கள் என்று கடிதம் வந்தது. சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். - நான்காம் பகுதியிலிருந்து...

பக்கத்தில் வந்தபோது அந்த சோடியம் வேப்பர் விளக்கில் இடது பக்க வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்து காய்ந்து கிடந்தது. நாங்கள் அதைபார்த்து அதிர்ச்சியில் நின்றிருந்தோம். - ஐந்தாம் பகுதியிலிருந்து

கையெழுத்தை போட்டுவிட்டு "இந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் எங்கேயோ இதை தொலைத்து விடப்போகிறீர்கள்" என்றார் சாபுசிரில் சிரித்துகொண்டே.. – ஆறாம் பகுதி



வடுவூர் குமார்உணர்ச்சிகள்



லேகா - பல புத்தக விமர்சனங்கள்


பாரிஸ் - தமிழ் மணத்திலிருந்து.....விகடனுக்கு




மனோதத்துவ மருத்துவர் ருத்ரன் அவர்களின் வலைத்தளம் நமக்கு தெரியும்.

இன்னொரு மனோதத்துவ மருத்துவரின் வலைத்தளம் – அதில்
கமலஹாசனைப் பற்றி எழுதிய பதிவு.


திரைப்படமெடுக்கும் வலைப்பதிவர் - அருண்

குறும்படங்கள் இயக்கிய இவரின் முதல் திரைப்படம்.


செவ்வாய்கிழமை கவிதைகள் - மனிதர்கள் – கொலை செய்யப்பட்ட ரவுடி




வானவில் வீதி - ஒரு சின்ன விசயத்தைக்கூட அக்கா என்ற அழகான பதிவாக்கியிருக்கிறார்.

வாரம் ஒரு முறை தான் கணிப்பொறி பக்கம் வருகிற ராம் சாக்கடை
மனிதர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். தாய்மையைப் பற்றி சிறு பதிவு
எழுதியிருக்கிறார்.

திருநெல்வேலியிலிருந்து கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கும் கார்த்திகாவின் வலைத்தளம்.



மேலும் வாசிக்க...

Saturday, December 27, 2008

தெரிந்ததும் / யாததும்


வரலாறு என்பது மனிதர்கள் வாழ்ந்த விதத்தை சொல்வது. வாழ்ந்த விதம் தெரிய, 
உள்ளே பதிய, வாழும் வழி புரியும். 
அன்போடு இருப்பது தான் ஆன்மீகம். அன்பும் ஒருமுகப்பட்ட அக்கறையும் இணைபிரியாதவை.  எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு அக்கறை இருக்கிறது,  எங்கு அக்கறை இருக்கிறதோ 
அங்கு அன்பு இருக்கும்.
நான் அக்கறை மிகுந்தவர்களைப் பற்றி, அக்கறையோடு இருக்க வேண்டும் என்பதை பற்றி, அக்கறையோடு எழுதுகிறேன் அவ்வளவே.  அங்கு அன்பு தானாக இருக்கும்.  
அன்புதான் ஆன்மீகம்.        

நமக்கு தெரிந்த பதிவர்களின் தெரியாத வலைத்தளங்களை சென்ற பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.  இப்போது தெரிந்த பதிவர்களின் பதிவுகளில் எனக்குப் பிடித்த பதிவுகளை கொடுத்திருக்கிறேன்.

பாலகிருஷ்ணன் - ஊடகங்களில் செய்தி வருவதற்கு முன் இவர் பிரசுரித்த படங்கள் இவரின் தளத்தில் காணக்கிடைத்தது.

நான் இத்தளத்தில் வெளியிடப்படும் படங்களின் ரசிகன்.  படம் மட்டுமல்லாது பிற விசயங்களைப் பற்றியும் பதிவிடுவார்.

இவரும் ஒரு சிறந்த புகைப்படக்காரர்.  அவரைப்பற்றிச் சொல்ல இந்தப் படமொன்றே போதும்.


பல வகை முகமூடிகளை வரைந்திருக்கும் இந்த ஓவியரின் கேன்வாஸ் ஓவியங்களும் நன்றாக இருக்கும்.  பெரும்பாலான ஓவியங்கள் பறவைப் பார்வையிலேயே இருக்கும்.

நண்பர் பிரபு தான் எப்போதுமே அனைவருக்கும் பிடித்த பாடல்களை பதிவிடுவார்.

பாலா'ஜி' - பல தளங்களில் எழுதிக் கொண்டிருந்தாலும், தற்செயலாக இத்தளத்தை காண நேர்ந்தது.  பாடல்களை துல்லியமான ஒலித்தரத்தில் கேட்கலாம்.   தரவிறக்கமும் செய்யலாம்.

கேட்பதற்கரிய பாடல்கள் பலவிருக்கும் இத்தளத்தில் எனக்கு பிடித்த பாடல்.

கதைகளினூடாடும் வாழ்க்கை யில் தொடங்கிய இவரின் அறிமுகம் ஒரு புத்தக விமர்சனப் பதிவின் மூலம் எனக்கு கிடைத்தது.  பின்னூட்டத்தில் புத்தகத்தை கொடுத்தால் படித்துவிட்டு பதிவுக்கு கருத்து சொல்கிறேன் என சும்மா சொன்னேன்.  உண்மையாகவே புத்தகத்தை எடுத்து கொண்டு வந்து கொடுத்தார்.


எழுத்தாளர் கே.பி.கேவை, அவர் மசால் தோசை சாப்பிடும் போது :) முதன் முதலில் சந்தித்ததாலோ என்னவோ, ஈ.வெ.சா மற்றும் கே.பி.கேவுடனான என் சந்திப்புகள் பெரும்பாலும் உணவகங்களில் தான்.

இந்த எழுத்தாளர் கதை எழுதுவாரென்று நமக்குத் தெரியும்.  அவருடைய கவிதையை படித்திருக்கிறீர்களா? - ரயில் பயணம்

அனுபவப் பதிவுகள், கும்மி், மொக்கையுமாக வலையுலகத்திலிருந்த இந்த நண்பர் தற்போது பிரபல பத்திரிக்கையில் பொறுப்பாக கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்.  இவர் பதிவுகளிலிருந்து எனக்கு பிடித்த சில.

மிருகதேசம், மாநகரம், கோக்

எழுத்தாளர் வண்ணதாசனை (கல்யாண்ஜி) நமக்கு தெரியும்.  அவருடைய தந்தையுடன் ஒரு நேர்காணல் நடத்தியிருக்கிறார்.

எப்பவுமே கோக்கு [கோக் இல்லை :) ] மாக்காக எழுதும் குட்டபுஸ்கி, தன் அனுபவம் ஒன்றை நகைச்சுவையாக தந்திருக்கிறார்.


ஜகஜ்ஜால கில்லாடிகள் என்ற பெயரில் விளம்பர உலகத்தைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.
பகுதி 1, 2, 3, 4, 5, 6
சமீபத்தில் (நெசமாவே சமீபத்தில்...) கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில், யுவகிருஷ்ணாவின் புத்தக அறிமுகத்தின் பின் நடந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட விளம்பரம் - அமுல்.  இந்த விளம்பரம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

குருவிகளுடன் ஒரு பயணம் - எச்சரிக்கை - ஆங்கிலப்பதிவு.
பதிவை விட பதிவரை கும்மு, கும்மென்று கும்மிய நம் தமிழ் பதிவர்களின் கருத்துக்களையும் படிச்சிடுங்க.


ஒரு கொள்ளை அன்புக்கும்
சின்னச்சின்ன அன்புகளுக்கும்
வித்தியாசம்
ஒரு மலைமுகட்டிலிருந்தும்
சிலபல உரையாடல்களிலிருந்தும்
குதிப்பதுதான்.

குந்தவை எழுதிய ஒரு பதிவு.
பயண ரசிகன் நான்.  பயணப்பதிவுகளை விரும்பிப் படிப்பேன்.  அந்த வரிசையில் இந்தப் பயணப்பதிவு நல்ல படங்களுடன் இருக்கிறது.

பயணப்பதிவுகளைச் சொல்லும் போது இவரைத் தவிர்த்து பார்க்க முடியாது.

பெரும்பாலான பயணப்பதிவுகள் அதிகமான படங்களோடு, குறைவான விசயங்களோடு முடிந்து விடுகிறது.  ஆனால் இந்த நண்பரின் பதிவும்   அவர் கொடுத்த பயண விவரங்கள், தங்குமிட தொடர்புகளுடன்  என் படகுப்பயண வீட்டுப்பயணம் நிறைவேறியது.
மேலும் வாசிக்க...

Wednesday, December 24, 2008

வலைப்பதிவர்கள் தினம்


தூங்குகிறபோது நம்முடைய மூளை உறுப்புகளில் சில தூங்காமல் கனவை எழுப்பிக் கொண்டிருப்பது போல, ஒரு எழுத்தாளன் விழித்துக் கொண்டிருக்கும் போதும், அவனுள் 'சிலது' தூங்கிக் கொண்டு ஒருவகையான கனவை எழுப்பிக் கொண்டே இருக்கும்.


அர்த்தஜாமத்திலும் தேனீக்கூட்டில் காது வைத்துக் கேட்டால் வரும் ஓசையைப் போல் அவனுடைய உள்ளத்தில் ஒரு ஓசை உண்டாகிக் கொண்டே இருக்கும்.  செம்மை செய்யப்படாத, முழுதும் பூர்த்தியடையாத ஆபரணங்கள் பொற்கொல்லனின் பட்டறையைச் சுற்றி கிடப்பது போல, பூர்த்தியாகாத எண்ணற்ற கதைக்கருக்கள் அவனுடைய மன அறைக்குள் அங்கங்கே சிதறிக் கிடக்கும்.


வேர்ட் பிரஸ்ல இருக்கிற பல பதிவுகள் நிறைய பேரால் படிக்கப்படுவதில்லை.  நானும் வேர்ட்ப்ரஸ்க்காரன் தான்.

நனவுகள் என்ற பெயரில் மலேசியாவிலிருந்து பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கும் இவர் முன்னாள் அரசு ஊழியர்.

உழைப்பு முயற்சி, வாழைப்பழம், திருமறை

சொல்ல மறந்த கவிதை

பொங்கல் மறந்து
பீட்ஜா சாப்பிடும் பீடைகள்

பச்சை அட்டைக்காக
பலவும் துணிந்த பாவிகள்

மானமிழந்து தூதரகம் முன்னர்
விசாத் தவம் கிடந்த வீணர்கள்

நுனி நாக்கு ஆங்கிலம் பேசி
பொழுது போக்கு தமிழ் வளர்ப்பவர்கள்

தன்னையே அடகு வைத்து
டாலருக்கு சோரம்போன டாம்பீகர்கள்

கோக் பெப்சி குடித்து
காளிமார்க் தூற்றும் கபோதிகள்

திரைகடலோடி டமில் மழலைச்
செல்வங்கள் சேர்த்த ஓடுகாலிகள்

புரியாமல் வசைகள் பாடியிருப்பேனோ?
புலம் பெயரா விட்டால்...

எனக்கவிதை கூறுமிவர் முன்பு நிறைய எழுதிக் கொண்டிருந்தார்.  இப்போது எழுதுவதில்லை.  அவருடைய சிறுகதை.

சாரு, திருப்பூரிலிருந்து  எழுதிக் கொண்டிருக்கும் ஆர்.பி.இராஜநாயகம்மலைவாசி போல மும்பையிலிருந்து எழுதும் இவருடைய எழுத்துக்கள் கொஞ்சம் எசகுபிசகாக இருக்கும்.  படித்து விட்டு எனக்கு கண்டன கடிதம் அனுப்ப வேண்டாம்.

ஆகஸ்டு 1997ல் சென்னையில் வலைப்பதிவர் பட்டறையில் இவரைப் பார்த்த போது, மிகவும் சுறுசுறுப்பாக களப்பணியிலிருந்தார்.  ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தவரென்றாலும், பதிவர் பட்டறை என்றால் என்ன?  எப்படி நடந்தது என கேட்கும் புதியவர்களுக்காக அவருடைய பதிவு - பதிவர் பட்டறை.

நந்தாவின் கிறுக்கல்கள்

வலையுலக கி.ரா என பட்டம் கொடுத்திருக்கிறேன் இவருக்கு.  அடிக்கடி என்னிடம் தொலைபேசுபவர்.  தொழில் நிமித்தமாக எப்போது கோவைப் பக்கம் வந்தாலும், பேசுவதுண்டு.


வேறு தளத்தில் சாமிகளைப் பற்றியும், ஆடாக வாழ்தலைப் பற்றியும் இவரின் கவிதைகள்.

நந்தா, வலையுலக கிராவுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.   செப்டம்பர் 1 வலைப்பதிவர் தினம் என்று சொல்கிறார்கள்.  அதையொட்டி வந்த ஒரு பதிவில் எங்கள் மூவரின் சுட்டியும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது - வலைப்பதிவர்கள் தினம்.
மேலும் வாசிக்க...

Tuesday, December 23, 2008

பிழிஞ்ச துணி


ஒரு பன்முக வித்தகர் - சகோதரர் கடந்த மே மாதம் என்னுடைய புனைப்பெயரைப் பற்றி.....

சிகரெட் பிடிக்க விழைந்தேன்.
விரல்களும் உதடுகளும் சிகரெட்டும்தான் இருந்தன.

தீப்பெட்டி இல்லை.  சுற்றியிருந்தவர்களும் 
மனம் திரும்பிய மைந்தர்களாக இருந்தார்கள்.
என் தவிப்பைப் பார்த்த நண்பர் ஒருவர், 
என்னிடமிருந்த சிகரெட்டை வாங்கி
ஜன்னல் வழியாக வெளியே நீட்டினார்.
சிகரெட் பற்றிக்கொண்டது. சென்னை!
உங்கள் புனைபெயரின் மேல் அன்பு வருமா..?

என வெயிலைப் பற்றியும், வெயிலானைப் பற்றியும் தனிமடல் எழுதிய இந்த சகோதரர் இப்போது......


பிழிஞ்ச துணிபோல் ஊரே மழையால் ஊறிப்போச்சப்பா
நனைஞ்சு காய்ஞ்சு நனைஞ்சு காய்ஞ்சு நாறிப்போச்சப்பா

என ஆரம்பிக்கும் இவர்

தாரு ரோடெல்லாம் முழுங்கின பெறகும் தாகம் தீரலையா
வருணன், இந்திரன் மழைக்குச் சாமியாம் போதும் போங்கையா
வெயிலுக்குக் கடவுள் யாரோ எவரோ வெளியில வாங்கையா
யப்பா போதுமப்பா என்று வெயிலுக்கான கடவுளை இப்படி அழைக்கிறார்.


இந்தக் கவிஞரின் பாசத்திற்குரிய தம்பி

முதல்வர் வருகிறார்

"சீக்கிரமா
ரோடு போட்டு
முடிங்கப்பா...
நாங்க பந்தல் போட
தோண்டனும்ல..."
என சொல்லும் இவர்....
ஏற்கனவே அறிமுகமானவராய் இருந்தாலும்,

இவருடைய இன்னொரு இடமான
மூ.... சந்திலிருந்து பத்திரிக்கையாளர்களுக்கு பத்து கட்டளைகள் சொல்கிறார்.


இந்த மூ.ச வலைத்தளத்தை பின்பற்றும் ஒரே ஒருவர் - கோவையில் வக்கீல் தொழில் நடத்திக் கொண்டிருக்கும் ஓவியரென அவருடைய பதிவுகளினூடே அறிய முடிகிறது.

மிகப் பிரபலமானவர்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.  நேற்று தான் வலைத்தளத்தை பார்த்தேன்.  அத்தனை பதிவுகளையும் ஒரேடியாக படித்து முடித்தேன்.
  
ஏழாவது மனிதன்

இன்னும் நிறைய.....


பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான இவர் மழைச் சென்னையை அனுபவித்து சில குறிப்புகள் எழுதியிருக்கிறார். 

கவிதைகளும், பட, புத்தக விமர்சனங்களும் எழுதியிருக்கும் இவரின் ஆட்டோவில் பயணித்த அனுபவங்களையும் எழுதியிருக்கிறார்.

இந்தக் கவிதாயினியும் மழையைப் பற்றி ஒரு சிறு கவிதை எழுதியிருக்கிறார்.  
இவரது வீட்டிலிருக்கும் ஒரு  ’பூ’வைப் பற்றி பல கவிதைகளை தினமும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

கற்பனைகளும், பள்ளி நண்பர்களும், கேள்விகளும், தூக்கத்தில் கனவுகளும் நிரம்பியதாயிருக்கிறது அவளது நாட்கள்!!!
ஒரு காலத்தில் அம்பா!..  பைய்ய்ய்!... உர்!.... கா!...  இப்படி ஒரு ஒரு வார்த்தையில் பேசிட்டிருந்தவங்க, 

இப்போ ஏன் என்னைக் குழந்தைனு சொன்னே? னு செல்லச் சண்டை போடறாங்க.

இன்னும் நிறைய சுட்டிகளை இணைப்பதற்குள் ப்ளாக்கர் மக்கர் பண்ணுகிறது. எனவே அடுத்த பதிவில் சந்திப்போம்.
மேலும் வாசிக்க...

Monday, December 22, 2008

உறைந்த நிரந்தரம்


இன்று வலைக்குள் போட்டுவிட்டால், அது கி.பி.2104 ஆகஸ்டில் கூட யாரோ ஒரு தனியனால் படிக்கப்படலாம். உறைந்த நிரந்தரம் தான் அதன் சிறப்பு. இதனால் வலைப் பதிவுகளை நம் பழங்காலத்துக் கல்வெட்டுகளுக்கு ஒப்பிடலாம். இப்போது புதிதாக பிலாக்ஸ் (blogs) என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிக்கையின் மறு வடிவம்தான். ‘இதோ பார் என் கவிதை’, ‘இதோ பார் என் கருத்து’, ‘இதோ பார் உலகுக்கு என் உபதேசம்’ என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது! பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்.
வலைப்பதிவுகள் பற்றி எழுத்தாளர் சுஜாதா இப்படி சொல்லியிருக்கிறார்.


என்னை நம்பி?! வலைச்சர ஆசிரியர் பொறுப்பை கொடுத்ததற்கு நன்றி சீனா ஐயா!


வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் தினமலர் நாளிதழ் மூலம் எனக்கு கிடைத்தது. ஏதோ ஒரு சுட்டியை அறிமுகம் செய்திருந்தார்கள். அந்த சுட்டியின் வழியாக சென்று படிக்க ஆரம்பித்து, இப்போது எந்த விசயத்திற்கும் நான் எடுக்கும் முடிவுகளை கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்துமளவுக்கு மிகப்பெரிய நட்பு வட்டத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. 


இரண்டு நாட்கள் தொலைபேசாதிருந்தால் கூட வாஞ்சையோடு எனை அழைத்து நலம் விசாரிக்குமளவு என்னுள்ளே கலந்து விட்டார்கள். 


வலைப்பதிவால் என்ன கிடைக்கிறது? கிடைத்தது? என கேட்கும் பலர்  என்ன இழந்தீர்கள்? என சொன்னால் நன்றாயிருக்கும்.


எனக்கு பல நண்பர்கள், சகோதரர்கள் கிடைத்திருக்கிறார்கள்.  வேறென்ன வேண்டும்?


முதலில் பின்னூட்டத்திற்காக ஒரு வலைத்தளம் ஆரம்பித்தேன்.


பின் எழுத ஆரம்பிக்கலாம் என்ற ஆசை வந்த போது, ப்ளாக்கரை கையாள்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.  இடையில் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் என் ஆராய்ச்சிக்காக :) தொடங்கப்பட்டது.


http://nilalpadam.blogspot.com/


http://veyilaan1.blogspot.com/


உண்மையைச் சொன்னால், பயனர் கணக்கின் பெயர் மற்றும் கடவுச்சொல்லை மறந்து விட்டேன்.


அந்த நேரம் பல வலைப்பதிவர்கள் ப்ளாக்கரிலிருந்து, வேர்ட் பிரஸ்க்கு தங்களின் தளத்தை மாற்றிக் கொண்டிருந்தார்கள். விடாத வேதாளமாக வேர்ட் பிரஸ்ஸில் ஒரு வலைத்தளம் ஆரம்பித்தேன்.


திரும்பவும் முயற்சித்ததில் ப்ளாக் ஸ்பாட் பற்றி கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது. ஆனால் வேர்ட் பிரஸ் மிக இலகுவானதாக தோன்றியது. அதனால் வேர்ட் பிரஸ் தளத்திலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.


சாதாரணமாக ஒரு பதிவு எழுதி விட்டு பல தடவை எனக்கு திருப்தி ஏற்படும் வரை திருத்திக் கொண்டே இருப்பேன். அதனால் மிகவும் அரிதாகத் தான் என்னுடைய பதிவுகள் இருக்கும்.


மே 2007ல் எழுத ஆரம்பித்தேன். தொடர்பு கொண்ட, சந்தித்த முதல் வலைப்பதிவர் இவர் தான்.


என்னைப்பற்றிய அறிமுகம் இது.


எழுத ஆரம்பித்த சில நாட்களிலேயே எல்லோரும் திருந்துங்கனு அறிவுரை சொல்லி ;) முதல் செங்கல் எடுக்கிறேன் என்று ஒரு பதிவு. இந்தப் பதிவை இப்போது படித்தாலும் அதிலுள்ள கருத்துக்கள் பொருந்தும்.


பின் தமிழ் மணத்தின் பூங்கா இதழுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாங்க ஆங்ஞான் என்ற பதிவு.


சற்றுமுன் செய்தித்தளம் நடத்திய செய்தி விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பதிவு கனியா கனிகளும், கண்ணாடி கனவுகளும்.


சுருட்டுக்கடை - எனக்கு மனநிறைவளித்த ஒரு பதிவு.  இப்பதிவு மதி கந்தசாமி அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, பின் போர்ச்சுக்கீசிய மொழியிலும், ஸ்பானிஷ் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது.


ஆங்கிலம் - The Cheroot Store


போர்ச்சுகீசியம் - O armazém de Charuto


ஸ்பானிஷ் - La tienda de Puro


ஆகஸ்டு 2007ல் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவராக இருந்த போது எழுதியதில் ஒரு பதிவு.


பிரம்மராயரும், சீராளனும்.


பல பதிவர்களையும், பதிவுகளையும் இனி வரும் பதிவுகளில் எனக்குத் தெரிந்த வரையில் அறிமுகப்படுத்துகிறேன். ஒவ்வொரு பதிவும் கோர்வையாக இருக்காது. கரிசக்காட்டில் மனம் போன போக்கில் காலாற நடந்து போற மாதிரி இருக்கும் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
மேலும் வாசிக்க...

Sunday, December 21, 2008

தாமிராவிற்கு நன்றி - வெயிலானுக்கு வரவேற்பு

அன்பின் சக பதிவர்களே



ஒரு வார காலம் அருமை நண்பர் தாமிரா பல்வேறு தலைப்புகளில் பல பதிவுகள் இட்டு மறுமொழிகளையும் பெற்ரிருக்கிறார். பல சுட்டிகள் கொடுத்து பல பதிவுகளைத் தேடிப் பிடித்து அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவரது டாப்10 மொக்கைகள் உண்மையிலேயே பிரமாதம். நல்ல முறையில் கொடுத்த பணியினைச் சிறப்பாக செய்து முடித்த தாமிரா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.



அடுத்த் 22ம்நாள் துவங்கும் வாரத்திற்கு நண்பர் வெயிலான் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். விருதுநகரில் பிறந்து திருப்பூரில் ஒரு தனியார் நிறூவனத்தில் பணி புரிகிறார். தனக்குப் பிடித்தவைகள் பற்றி தன்னுடைய சுய அறிமுகத்தில் அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.



நல்வாழ்த்துகள் வெயிலான் - நல்ல பதிவுகளைத் தருவதற்கு.
மேலும் வாசிக்க...

பெண்ணியம் : துளி பார்வை

ஆணாதிக்கம் மற்றும் பெண்விடுதலை குறித்த எனது முந்தைய 'நான் அவனது பக்தன்' என்ற பதிவில் இணைப்பதற்கு விட்டுப்போன சில அற்புதமான பதிவுகளை அதன் தேடல் நீட்சியில் தொடர்ந்து நான் காண்கிறேன். அதில் தோழி புதியமாதவி எழுதிய 'ஊடகங்களும் ஊடறு பெண்களும்' என்ற பதிவும் முக்கிய இடத்தை பெறவேண்டிய பதிவாகும். இந்தப்பதிவு உண்மையில் கவிதையில் ஆரம்பித்து கட்டுரையாக முடியாமல் நிற்கிறது. இதில் பல வழக்குகள் குறித்த செய்திகளும் இருக்கின்றன. இவரது பல பதிவுகளும் ஆழமான கருத்துகளைக் கொண்டுள்ளன. பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் இன்னொரு அதிர்ச்சிகர விஷயத்தைப்பற்றி தோழர் மாதவராஜின் இந்த இணைப்புக்கும் தொடர்ந்து அதில் தரப்பட்டுள்ள‌ இணைப்புக்கும் செல்லுங்கள். இவரின் பிற நல்ல பதிவுகளையும் வாசியுங்கள். இவர்கள் இருவரையும் என் பதிவில் அறிமுகம் செய்வது நான் பெருமை கொள்வதற்காகத்தான் என்பதை அறிவீர்கள்.
திரும்பவும் சீனா சாருக்கு ஒரு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் (சொதப்பலுக்கான மன்னிப்பையும் கோரிக்) கொண்டு, அடுத்து வரும் அன்பு நண்பர், இந்த இடத்துக்கான தகுதி நிறைந்த படிப்பாளி வெயிலான் அவர்களை வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி. அனைவரும் அப்பப்போ நம்ப கடைக்கும் வந்துபோய் இருங்க.. பை.!

மேலும் வாசிக்க...

Saturday, December 20, 2008

மொக்கைப்பதிவுகள் 2008: டாப் 10.!

வேறு வழியே இல்லாமல் நண்பர்களிடமே சரணடைந்துவிடுவது என்று தீர்மானம் பண்ணிவிட்டேன். அதுவும் நம்ப செட்டில் மொக்கைகளுக்கா பஞ்சம்.? நேரடியாக விஷயத்துக்குப் போய்விடலாம். டாப்பிக்குக்குள் போவதற்குள் ஒரு ரெண்டு வரி பில்டப் கொடுப்பது வழக்கம். அதைப்பார்த்துவிட்டு ஓவரா முறுக்கு சுத்துராய்ம்ப்பா இவன் என்று கமெண்ட் வர ஆரம்பித்துவிட்டது. இனி சேவாக் ஸ்டைல்தான்.

கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் :

*சீனியர் பதிவுகள் கணக்கில் கொள்ள‌ப்படவில்லை.
*ஒரே நபரின் பல பதிவுகள் பரிசீலனையில் இருந்தாலும் 10க்குள் ஒன்றுக்கு மேற்பட்டவை வந்தால் ஒன்று மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*தேர்வுக்குழுவில் நான் மட்டுமே இல்லை, எனினும் ரிஸ்க் கருதி பிறரது பெயர்கள் வெளியிடப்படமாட்டாது.
*இதில் லஞ்ச லாவண்யங்களுக்கு இடம்தரப்படவில்லை.
*சுமார் 30க்கும் மேற்பட்ட பதிவர்களின் 100க்கும் மேற்பட்ட பதிவுகள் இந்தப்போட்டியில் கலந்துகொண்டன. இறுதிச்சுற்றில் நடுவர்களுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.

இனி டாப் 10..


10. ப‌த்தாவ‌து இட‌த்தில் அண்ண‌ன் த‌மிழ் பிரிய‌ன். சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்பு வெளியான‌ இந்த‌ப்ப‌திவு ஆனந்தவிகடனில் வெளியாக இருந்து கடைசி நேரத்தில் சுயமறுப்பாக வேண்டாம் என்று இருந்த பதிவு. சமீபத்தில் இதன் ரீமிக்ஸ்ஸாக‌ இன்னொரு ப‌திவு அவ‌ர் இட்டிருந்தாலும் ஒரிஜின‌லுக்கான‌ ம‌திப்பே த‌னி.

9. அடுத்த‌ இட‌த்தை வெல்ப‌வ‌ர் தோழ‌ர் ப‌ரிச‌ல். இந்த‌ப்ப‌திவில் த‌ன‌க்காக‌ இல்லாம‌ல் த‌ன‌து ச‌க‌ ப‌திவர் தோழர் அதிஷாவுக்கு உதவும்பொருட்டு‌ மென‌க்கெட்டு செய்த‌ சேவை புல்ல‌ரிக்க‌வைப்ப‌தாக‌ இருந்த‌து.

8 . அடுத்த‌ இட‌ம் கார்க்கிக்கு செல்கிறது. இவ‌ரின் தலைசிறந்த ப‌ல‌ ப‌டைப்புக‌ளில் தேர்ந்தெடுப்ப‌து சிர‌மாக‌ இருந்த‌தால் கும்ஸாக‌ இது த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ருக்கிடையே நிக‌ழ்ந்த‌ ராபிட் ப‌ய‌ர் இன்ட‌ர்வியூவை த‌ந்திருக்கிறார்.

7. சீட்டு விளையாட்டைப்பற்றி அண்ணன் வால்பையன் எழுதிய இந்த ஆராய்ச்சிப்பதிவு பெரும் புரட்சியை கிளப்பியது அப்போது. நீங்களும் இதைப்படித்து சூது பற்றி அறிந்துகொள்ளுங்கள். இல்லையெனில் யாராவது உங்களைப்பார்த்து சூது வாது தெரியாதவன் என்று சொல்லிவிடக்கூடும்.

6. தான் பெண் பார்த்த அழகை எல்லோருக்கும் மெயில் அனுப்பி விதவிதமாக வாங்கிக்கட்டிக்கொண்ட அண்ணன் சஞ்சய்யின் இந்தப்பதிவு பிடிக்கிறது ஆறாவது இடத்தை.

5. எல்லோரும் ரொம்ப‌ சீரிய‌ஸா திங்க் பண்ணி ப‌தில் சொன்ன‌ ஒரு முக்கிய‌மான‌ தொட‌ர் ப‌திவில் தைரியமாய் முடிந்த‌ வ‌ரை மொக்கை போட்ட‌ வீராங்க‌னை அக்கா ஸ்ரீம‌தி வெல்கிறார் ஐந்தாவ‌து இட‌த்தை.!

4. உடல் நலமில்லாத ஒரு நேரத்தில், டாக்டரை பார்க்கச்செல்கிறார் நமது அனைவரின் அன்புக்குரிய அண்ணந்தம்பி அப்துல்லா. அப்போது அந்த டாக்டரை கலாய்த்த அனுபவம் பெறுகிறது அழகான இந்த நான்காவது இடத்தை.

3. ஆர‌ம்ப‌த்திலேயே அகிலாண்ட‌ நாய‌க‌னுக்கு அருமையாக குரல் கொடுத்து நமது அன்பை சம்பாதித்துக்கொண்ட அதிஷா அடுத்த இடத்தைப்பிடிக்கிறார். இதில் தெறிக்கும் JKR ஆத‌ர‌வுக்குர‌லை க‌வ‌னியுங்க‌ள்.

2. நமது கலாய்த்தல் திலகம் குசும்பன் அவர்கள் சக பதிவர்களை வைத்தே நமது அருமைத் தல.. நர்சிமை கலாய்த்த (இது கீழ்க்கண்ட மொக்கை இலக்கணத்தில் அடங்காவிட்டாலும்) இந்தப்பதிவு பெறுகிறது இரண்டாம் இடத்தை.! வாழ்த்துகள் குசும்பரே..

1. ஒரு மொக்கைக்கே அர‌ண்டு போகும் உங்க‌ளுக்கு ஒரு மொக்கை விருந்தே வைத்த‌ இந்த‌ப்ப‌திவுக்கே முத‌லிட‌ம் வ‌ழ‌ங்கி நானும் ர‌வுடிதான் என்ப‌தை பெருமையோடு ஒப்புக்கொள்கிறேன்.


பி.கு 1: நல்ல மொக்கைப்ப‌திவுக‌ள் எப்ப‌டி இருக்க‌வேண்டும் என‌ ச‌மீப‌த்தில் ஒரு மூத்த ப‌திவ‌ர் சொன்ன‌போது இந்த‌ விள‌க்க‌ம் கேட்க நேர்ந்த‌து. படித்தவுடன் வாசகர்களுக்கு ஏற்படும் உணர்ச்சியில் சிரிப்பு 5%, எரிச்சல் 40 %, கோபம் 5%, வாழ்க்கையின் மீதே வெறுப்பு 15%, டல் 8%, ஷாக்2%, ஆவ்வ்வ் 25% ஆகிய‌ன‌ ஏற்ப‌ட‌வேண்டுமாம். ஏற்ப‌ட்ட‌தா?

பி.கு 2: இந்த லிஸ்ட்டில் இடம்பெறாதவர்கள் ச்சு..ச்சு.. அழக்கூடாது.! இடம்பெற்றவர்கள் வரிசைப்படுத்தலை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.. சும்மனாச்சுக்கும் போட்டது.

பி.கு 3: அத்தனை இணைப்புகளையும் படித்து மீண்ட வீரன் யாராவது இருப்பானாயின் அது போற்றத்தக்கது. உடன் தொடர்பு கொள்ளவும். 'மொக்கைகொண்டான்' என்ற பட்டமும், சிறப்புப்பரிசும் காத்திருக்கிறது.

மேலும் வாசிக்க...

Thursday, December 18, 2008

ஆனால், நான் அவனது பக்தன்.!

அவனுக்கு பக்தனாக இருக்க எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ தெரியாது, ஆனால் நான் அவனது பக்தன். அவன் ஒரு லெஜன்ட். நிஜமான புரட்சி வீரன். ஆழ அகலமான வளமான சிந்தனாவாதி. தத்துவ மேதை. பிற தத்துவ ஞானிகளைப்போல சிந்தனையை சொன்னதோடு நில்லாமல் முடிந்தவரை வாழ்ந்தும்காட்டிய பகுத்தறிவு பகலவன்.

அவனை ஒட்டி திரு. ஓவியா சொன்ன ஒரு கருத்தை நண்பர் தங்கவேல் மாணிக்கம் இந்தக்குறும்பதிவில் சொல்கிறார். அற்புதமானது அது. இவரது பிற பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. ஆனாலும் ஒரு சோறு பதம்தானே. இந்த நேரத்தில் வலைச்சர வாய்ப்பை வழங்கிய திரு. சீனா அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் கிடைக்கும் குறைந்த நேரத்திலும் நான் நினைக்கும் டாப்பிக்கில் பதிவுகளைத்தேடும் பணியில் ஒன்றின் பின் ஒன்றாக சுட்டிகளின் மூலமாக பயணிக்கும் அனுபவம் புதிது. வழியெங்கும் வித விதமான பதிவுகள். அதில் பல முத்துக்கள்.

புதிய‌ க‌லாச்சார‌ம் இத‌ழில் வெளியான‌ ஒரு க‌ட்டுரை 'வின‌வு' வ‌லைப்பூவில் அனும‌தியுட‌ன் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து. ஆரோக்கிய‌மான‌ சிந்தனை, அதே நேர‌ம்அது வ‌ள‌மான‌ மொழிநடையில் சொல்ல‌ப்ப‌ட வேண்டும். இப்ப‌டித்தான் என‌து எழுத்துக‌ள் இருக்க‌வேண்டும் என‌ நான் விரும்புகிறேன், அதை நோக்கியே ப‌ய‌ணிப்பேன். ஆணாதிக்கம் எங்கே துவங்குகிறது, அறியாமலே அதில் இருபாலரும் உழல்வது குறித்த‌ ஒரு சிறு பார்வை.‌ என்னை சமீபத்தில் மிக‌வும் க‌வ‌ர்ந்த‌ ஒரு க‌ட்டுரை இது. இது குறித்து மூத்த பதிவர் சேவிய‌ரின் அழ‌கான‌ ந‌டையில் லைட்டான‌, ஆனால் சிந்த‌னைக்குரிய‌ ப‌திவு ஒன்றையும் காணுங்க‌ள்.

பெண்விடுதலை குறித்து எழுதியிருக்கிறாரா என‌ தெரிய‌வில்லை எனினும் வேறு சில பிரமாதமான விஷ‌ய‌ங்க‌ள் TBCD யின் ப‌திவுக‌ளில் அழ‌கான‌ ந‌டையில் க‌ண்டேன். கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய மேலும் ஒரு ம‌திப்புக்குரிய‌ க‌ட்டுரையை த‌மிழ் ஓவியாவின் இந்த‌ப்பக்க‌த்தில் காண‌லாம்.

மேலும் தேடிய‌றிவோம் அறிவுச்செல்வ‌த்தை.! பெண்க‌ளுக்கான‌ ச‌ம‌ உரிமையும், சுத‌ந்திர‌மும் பெரிய‌ ம‌ன‌தோடு நாம் வ‌ழ‌ங்குவ‌து என்றோ, அவ‌ர்க‌ள் போராடிப்பெற‌வேண்டிய‌து என்றோ அல்லாம‌ல் கால‌ங்கால‌மாய் அதைச்செய்த‌ ஆண்க‌ள் ம‌ற்றும் அதை ஒப்புக்கொண்ட‌ பெண்க‌ள் இருவ‌ர‌து த‌வ‌றேயென‌ அறிந்து அன்பும் ஒழுக்க‌மும் ஆன‌ அற‌வாழ்வை ச‌ம‌வாழ்வை வாழ்வோம்.. (ஹைய்ய்ய்யா.. ரொம்ப‌ நாள் க‌ழிச்சு ஒரு அறிவுரை சொல்லிட்டீனே..‌‌) வாழ்த்துக‌ள்.. நாளைக்குச்ச‌ந்திப்போமா?

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது