07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 1, 2009

கவிதைகளாக...

கவிதைகளாகவே எனது ஆசிரியப்பணியைத் தொடக்கி முடித்துவிட்டேனோ என்ற உணர்வு இருக்கிறது. வலைத்தளங்களின் அறிமுகமும் அவ்வளவாகக் கொடுத்திருக்கவில்லை. நிறைய வலைஞர்களை நான் பின் தொடர்ந்திருந்தாலும் அவர்களை இங்கு ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்ததாலும், மேலும் புதியதாக வலைச்சரத்திற்கென்றே தேடிப்பிடித்து படித்து அறிமுகப்படுத்துவதைக் காட்டிலும் அதிகம் அறியப்படாத நண்பர்களையே அறிமுகப்படுத்துவோம் எனும் இறுமாப்பின் காரணமாகவும் வலைத்தள அறிமுகம் குறைவாகவே இருந்துவிட்டது. எந்தவொரு துறையையும் நிறைவாக நான் செய்ததேயில்லை. இந்த ஆசிரியப்பணியும் அப்படியொரு நிறைவின்மையை இருத்திவிட்டுச் செல்லுகின்றேனோ என்பது உறுத்திக் கொண்டிருக்கிறது. தவிர எனக்கு எழுதுவதற்கு இன்று நேரம் மிகக் கொடியதாகவும், குறைவாகவும் இருக்கிறது. 

வார்த்தைகள் அல்லாத ஒரு வெற்றிடம் மெளனமாகிறது. வார்த்தைகள் குறைந்த இப்பதிவை எனது மெளனமாகக் கொண்டு விடைபெறக் காத்திருக்கிறேன். பெறுமுன், வலையில் பரிச்சயமல்லாத சில கவிதைகளைப் பகிர்ந்துவிட்டு எனது ஆசிரியப்பணியை முடித்துக் கொள்ளுகிறேன். (மன்னிக்கவும் நண்பர்களே, காலம் என் கழுத்தைச் சுற்றி நெரித்துக் கொண்டிருக்கிறது. என்னென்னவோ நினைத்து எழுதமுடியாமல் போனதைக் குறித்து வருந்துகிறேன்!! )

தினமும் எண்ணில்லா குளியல் 
கறை மட்டும் கரையாமல் 
தாசி

ஆசைக்கு எச்சமாக்கினான் ஒருமுறை 
நாளிதழ்களோ காசுக்குப் பலமுறை
கற்பழிக்கப்பட்டவள்

- ஓவியா

காலப் பிறழ்வு...

ஒளி ஆண்டுகளின்
இடைவெளியில்
நானும் நட்சத்திரமும்
சந்திக்கின்றோம்
எங்களுக்கிடையிலான
பாஷை ஒளியாலானது
அது கடந்த காலத்திலிருந்து
எதிர்காலத்தையும்
நான் நிகழ் காலத்திலிருந்து
கடந்த காலத்தையும்
பார்த்துக் கொள்கிறோம்
இருவருக்குமிடையில்
காலப் பிறழ்வு நிகழ்ந்தேற
உண்மையில்
நான் இருப்பது 
எந்த காலத்தில்

- மயன்

தெருவோரப் புழுதிகளின்
உறக்கத்தை
நீர்த் தெளித்தெழுப்பியதை....

புரண்டுபடுத்து
இழைந்ததில்
விளைந்த வாசத்தினை
நாசிவழி ஏற்றிக் கொண்டதை..

உலர்ந்துபோன
உதடுகள்
நாவின் ஒத்தடத்தில்
பிழைத்துக் கொண்டதை....

விரித்து விட்டிருந்த
கேசத்தில்
வாழ்ந்திருந்தத் திவலைகள்
வழுக்கிக் கொண்டிருந்ததை..

விரல் பிரசவித்த
புள்ளிகள் 
தரைதொட்ட அமிலத்தில்
அழிந்து கொண்டிருந்ததை..

வீதி வந்த
பூசணிப்பூவிடம்
புன்னகை வீசிக் கொண்டிருந்ததை...

தொலைவிலிருந்து
ஓரிணை விழிகளேனும்
விழுங்கியிருக்குமா...

என்
வினாக்களை
அர்த்தமற்றதாக்கிக் 
கொண்டிருந்தது 
என்னைச்சுற்றிப் 
போர்த்தியிருந்த
பனித்திரை!..

- கவிஞர் பூ!

ஆற்றங்கரை

நான் வீசி எறிந்த கல் 
ஆற்று தண்ணீரை கிழித்து
சென்றதை கண்டு மகிழ்ந்த 
என் மனது

சுவாசிக்க வெளியே
எட்டிய
ஒரு மீனை பதம் பார்த்ததை 
கவனிக்க தவறிவிட்டது...

என்னை தொடர்ந்தோ
அல்லது முந்தியோ
என் நண்பர் கூட்டமும்
அந்த மீனை 
காயப்படுத்தியிருக்க வேண்டும்..

அந்த மீன் நீந்தி 
வந்து என்னிடம் 
சொன்னது..

கல்லெறி.. 
எறிவதற்கு முன்
நீரின் வெளித்தோற்றத்தை 
பார்த்த மாதிரி 
குனிந்து உள்ளேயும் ஒருமுறை பார்த்துவிடு.

மீனிடம் மன்னிப்பு கேட்க
மீன் மொழி தேவையில்லைதான்..
மானசீக மன்னிப்பு 
கேட்டும், என் கரைப்பக்கத்தில்
ஒதுங்க அந்த மீன் வரவேயில்லை

கவிஞர் - மன்மதன்

வாய்ப்பளித்த 'வலைச்சரம்' சீனா அவர்களுக்கும், அனைத்து பதிவர்களுக்கும், Blogger.com நிறுவனத்திற்கும் மற்றெந்த உதவிகளுக்கு என் மனமாழ்ந்த நன்றிகள்!!!

அன்புடன்
ஆதவா!!!

15 comments:

  1. கவிதைகள் வாசம் நல்லா வீசியது ஆதவா!

    நன்றி.

    ReplyDelete
  2. நல்ல கவிதைகளோடு வலைச்சரத்தில் வளம் வந்தீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தீபாவளி நெருங்கி வருவதால் உங்களுக்கு வேலைப்பளு அதிகமிருக்கும் என்று அறிகிறேன் நண்பா... தங்கள் கவலைப்பட தேவையில்லை. தங்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு வகித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. கவிதைகளை பகிர்ந்து கொண்ட தங்களுக்கும், இந்த வாய்பை வழங்கிய சீனா அய்யாவுக்கும் வாழ்த்துகள்- நன்றியும்...!

    ReplyDelete
  4. கவிதைகள் அனைத்தும் அருமையாக இருந்தது. அதிலும் கவிஞர் மன்மதனின் கவிதை டாப்!

    ReplyDelete
  5. இந்த ஒரு வாரப் பயணத்தில் நிறைய நல்ல தளங்கள் பயணிக்க கிடைத்தன.
    டிக்கெட் வாங்காமலேயே எங்களை நெடுந்தொலைவு பயணிக்க வைத்த ஆதவனுக்கு நன்றிகள் பல.
    :) நன்றி
    வித்யா

    ReplyDelete
  6. தரமான கவிதைகளோடு நிறைவாக ஆசிரியர் பணியை முடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    இனி குழந்தை ஓவியத்தில் சந்திப்போம்.

    ( மீன் கவிதை சூப்பர் )

    ReplyDelete
  7. //என்னென்னவோ நினைத்து எழுதமுடியாமல் போனதைக் குறித்து வருந்துகிறேன்!! //

    நன்றாக பணியை முடித்துள்ளீர்கள் ஆதவா. வாழ்த்துகள் இனி குழந்தை ஓவியத்தில் பார்க்கலாமே..

    கவிதைகள் அனைத்தும் சுவையாக இருக்கின்றது

    ReplyDelete
  8. /-- காலம் என் கழுத்தைச் சுற்றி நெரித்துக் கொண்டிருக்கிறது. --/

    இருந்தாலும் எழுதறத நிறுத்திடாதீங்க... உங்களுக்கு நல்லா எழுத வருது. நெரிக்கும் காலத்தின் பிடியில் தொலைந்துவிடாதீர்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி ஆதவா.

    ஓவியாவின் கவிதை அருமை.

    ReplyDelete
  9. மிகப்பெரும் வேலைப்பழுவிற்குமிடையில் அழகான கவிதைகளை தொகுத்தளித்ததற்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  10. அன்பின் ஆதவா

    அருமையான இடுகை - பணிச்சுமை காரணமாக ஒரு தினம் முன்னரே விடை பெற்று விட்டீர்கள் - பரவாய் இல்லை

    இவ்விடுகையிலும் அறிமுகப்படுத்திய கவிஞர்கள் - அவர்களது இடுகைகள் - அருமை அருமை

    நன்றி கலந்த நல்வாழ்த்துகள் ஆதவா

    ReplyDelete
  11. அனைத்துமே அருமை. நல்லதொரு தொகுப்பு.

    ReplyDelete
  12. YES ADAVAA, THIS IS NOT YOUR BEST, WE CAN FEEL YOUR BURDEN, BY YOUR WRITING. I THINK AFTER A LONG WHILE, YOU ARE BACK TO BLOGGING EXSEPECIALLY FOR "VALAICHARAM"

    SO, I YOU ARE REALLY DONE GOOD JOB, UNDER A HUGE PRESURE. CONGRATS ADAVAA.

    KEEP WRITING....:-)

    ReplyDelete
  13. அனைவரின் அன்புக்கும் நன்றி!!

    அன்புடன்
    ஆதவா

    ReplyDelete
  14. ஆதவா வாழ்த்துகள்,இன்றுதான் வலைசாரத்தில் உங்களுடைய அனைத்து இடுக்கைகளையும் படித்தேன்,எழுத்து நிறைந்தகாடுவில் என்னை மிகைபடுத்தி
    அறிமுகபடுத்தியிருப்பதாக நினைக்கிறேன்.நானும் உங்களைபோல் கீழ்யிருந்து
    மேல்வந்தவன்,நேரமின்மை காராணமாக சிலநேரங்களில் எனது அலுவலகத்தில் அதுபோல் நடப்பது உண்டு,என்றும் எளியவனே நான்.
    உஙகள் எழுத்துநடை அறிமுகபடுத்திய விதம் அபாரம்.மிக அற்புதமாக‌ பணியை நிறைவு செய்து இருக்கிறீர்கள்,வாழ்த்துகள்

    ReplyDelete
  15. சிறப்பாக தங்கள் வலைச்சர ஆசிரியர் பணியை செய்துமுடித்துள்ளமைக்கு வாழ்த்துக்கள் ஆதவரே...

    மீண்டும் தங்களின் குழந்தை ஓவியத்தில் சந்திப்போம்......

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது