07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 21, 2009

பூமியை காப்போம்..


இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வனசீவராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றுச் சூழலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச் சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.

மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள் மரங்கள் தறித்து வீழ்த்தப்படுவதற்கு எதிராகப் பெரும் இயக்கங்களை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். மனிதர்களினால் செய்யப்படக்கூடிய மிகவும் மூர்க்கத்தனமான செயல்களில் ஒன்று மரங்களையும் காடுகளையும் அழித்து அதன் மூலம் பூமியை ஒரு பாலைவனம் ஆக்குவதுதான். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் விட்டால் இந்த வனப்புமிகு முதுசத்தின் பெரும்பகுதி இப்போது இழக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ள காடுகளும் மிகவும் மோசமாகச் சீரழிக்கப்பட்டு வருகின்றன. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். (நன்றி : thatstamil.com)

இயற்கை வளங்களின் இன்றியமையாமையையும், அவற்றை பாதுக்கக்க வேண்டிய அவசியத்தையும் அடுத்த தலைமுறைக்கும் சொல்லி கொடுக்க வேண்டும். முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இயற்கையின் அருமை குறித்தும், அவற்றை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எழுதப்படும் பதிவுகளை இந்த இடுகையில் காண்போம்.


மண், மரம், மழை, மனிதன்:

சுற்று சூழல் குறித்த ஒரு சிறந்த தளம். புவி வெப்பமடைதல், மரம் வளர்த்தல், தண்ணீரின் அவசியம் என பல தளங்களில் கட்டுரைகள் இப்பதிவில் உள்ளன.
அது மட்டுமின்றி அரிய வகை மரங்கள் குறித்தும் கட்டுரைகள் உள்ளன. வனவிலங்குகள் அழிப்பு குறித்தும், அவற்றின் பாதுகாப்பு குறித்தும் தகவல்கள் உள்ளன.

வேளாண்மை செய்திகள், விவசாய குறிப்புகள் போன்றவற்றையும் அடக்கியுள்ள இத்தளத்தின் குறிப்பிடத்தக்க இடுகைகள் சில.

எளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்

புவி பந்தை காப்போம்
சுற்று சூழலும் பருவ மழையும்


இது நம் பூமி :

நாமும், நம் தலைமுறையும் நன்றாக வாழ நம் பூமியை காப்பது நம் கடமை என சொல்லும் தளம். இயற்கை சீர்கேடு குறித்த பல புதிய தகவல்களை புள்ளி விபரத்துடன் குறிப்பிட்டுள்ளனர். இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பட்டாசுக்களை வேண்டாம் என்கிறது இந்த இடுகை . இரட்டை குவளை முறையை விட மிக கொடுமையானது பிளாஸ்டிக் குவளைகள் பயன்படுத்துவது என்கிறது இந்த இடுகை. நீரின் மகத்துவத்தை சொல்லும் இடுகை என பயன் மிக்க தளம் இது.

பூவுலகின் நண்பர்கள் :

சமூக செயல்பாட்டுக்கான ஒரு வலைப்பூ என்று சொல்லப்பட்டிருக்கும் இத்தளத்தில் சுற்று சூழல் ஆர்வம் கொண்ட அனைவரும் எழுதலாம் என்று குறிப்பிட பட்டிருக்கிறது. சுற்று சூழல் சீர்கேடு குறித்த பல கட்டுரைகள் இங்கு உள்ளன. துல்லியமான புள்ளி விபரத்துடனும், தெளிவான அலசலுடனும் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை அனைவரும் படிக்க வேண்டும். நம் பூமி இருக்கும் அபாயத்தினை மிக வருத்தத்துடன் அனைவருக்கும் புரியும் படி விளக்கி இருக்கிறார்கள்.

இந்த இடுகை புவி வெப்பமடைவதால் தனி மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அலசி இருக்கிறது. நதி நீர் எவ்வாறு பாசனத்துக்கு பயன்படாமல் வீணாக்க படுகிறது என்பதை இந்த இடுகை அலசுகிறது. இயற்கை வளத்தின் அடையாளமான யானைகளின் அழிவு குறித்து ஆதங்க கட்டுரை இது. இப்படி இன்னும் பல அதிர்ச்சியூட்டும் செய்திகளை சொல்கிறது இந்த தளம்.

இந்த தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பார்க்கும் போது, நாகரீகம் என்ற பெயரில் நம்மை நாமே எப்படி அழித்து கொண்டிருக்கிறோம் என்பது தெரிகிறது.

நம்மால் முடிந்த அளவுக்கு இயற்கையை காப்போம், மரம் வளர்ப்போம்.. மீண்டும் அடுத்த இடுகையில் சந்திக்கலாம்.

நன்றி.

11 comments:

  1. வலைச்சரத்திலே இது ஒரு வித்தியாசமான தொகுப்பு

    (நான் அறிந்தவரை)

    அருமை லோகு.

    ReplyDelete
  2. வலைச்சர வரலாற்றில் முதல் முறையாக வித்யாசமான அறிமுகங்கள்

    வாழ்த்துக்கள் லோகு.....

    ReplyDelete
  3. அன்பு லோகு,நல்லதொரு சமூக அக்கறையுள்ள பகிர்வு.

    தாங்கள் குறிப்பிட்டுள்ள தொடர்பு பதிவுகளும் அருமை.

    ReplyDelete
  4. மேல இருக்குற ரெண்டு கமெண்ட்ஸுக்கும் ரிப்பீட்டு.

    ReplyDelete
  5. லோகு, மிக மிக அருமையான இடுகைத் தொகுப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. "பூமியை காப்போம்.." - உண்மையிலேயே நல்ல பதிவு. சாலை விரிவுபடுத்த வேண்டி அரசு கையகப்படுத்தி வெட்டி சாய்க்கும் மரங்கள் சாலையையே மூளிகள் ஆக்குகின்றன.

    நல்ல பதிவு தொடருங்கள்...

    ReplyDelete
  7. அன்பின் லோகு

    அருமை அருமை - சமூக உணர்வினைத் தூண்டும் இடுகைகள் - அறிமுகத்திற்கு நன்றி

    உண்மையிலேயே நல்ல இடுகை இது

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. மிகவும் அருமையான பதிவு.

    ReplyDelete
  9. நன்றி ஜமால் அண்ணா..

    நன்றி வசந்த் அண்ணா,,

    நன்றி ராஜா அண்ணா..

    நன்றி ராஜூ..

    நன்றி கிருஷ்ண பிரபு அவர்களே.

    நன்றி சீனா அய்யா...

    நன்றி செவரல் டிப்ஸ் அவர்களே..

    ReplyDelete
  10. // நட்புடன் ஜமால் said...
    வலைச்சரத்திலே இது ஒரு வித்தியாசமான தொகுப்பு
    (நான் அறிந்தவரை)//

    எனது கருத்தும் இதுவே ! நன்று. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. This post has helped me to write a speech. Thanks a lot logu.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது