07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 23, 2009

வாய்ப்புக்கு நன்றி!!


அனைவருக்கும் வணக்கம்,

வலைச்சரத்தில் இந்த வாரம் முழுதும் எழுதும் பேறு பெற்றேன். அதைஇயன்ற அளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். இருந்தாலும் இதற்கு முன் எழுதியவர்களுக்கு கிடைத்த பின்னூட்ட எண்ணிக்கையை ஒப்பிடும் போது என் எழுத்தை இன்னும் மேம்படுத்த வேண்டியது நிறைய இருக்கிறது என தெரிகிறது.

இந்த வாரம் முழுவதும், என் எழுத்தை படித்த, கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

எனக்கிந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். சிறந்த வலைப்பூக்களை அறிமுகப்படுத்தும் வலைச்சரத்தின் சேவை இன்னும் சிறப்பாக செயல்படும் என்பதில் ஐயமில்லை. தொடர இருக்கும் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.

விடை பெறுகிறேன்.

நன்றி

அன்புடன்

7 comments:

  1. அன்பின் லோகு

    கவலை வேண்டாம் - சிறந்த வலைச்சர ஆசிரியர்களில் நீயும் ஒருவன். இடுகைகளின் தரம் - செய்யும் தொழிலின் மதிப்பு - உழைப்பின் பரிசு - இவைகள் மறு மொழிகளை வைத்துக் கணக்கிடப் படுவதில்லை. கவலை வேண்டாம்

    நல்வாழ்த்துகள் - லோகு

    ReplyDelete
  2. லோகு, உங்களுடையது தரமான இடுகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பின்னூட்ட வார்த்தையில்லாமல் வாயடைத்து போய்விட்டோம் என்பதே உண்மை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. லோகு சீனா அய்யாவை நான் வழிமொழிகிறேன். ஆனாலும் பின்னூட்டங்களை, கலைஞனுக்கு கிடைக்கும் கைதட்டுகளாக பார்த்தால் நீங்கள் சொல்வது சரிதான். கைதட்டல் கிடைக்காத எந்த கலைஞனும் கவலையுறுவது இயல்புதானே. இருந்தும், உன் எழுத்துக்கள் உன்னை நிச்சயம் நல்ல உயரத்திற்கு கொண்டுபோகுமென்பதில் உன்னைவிட நான் அதிகம் நம்பிக்கை வைத்திருக்கிறேன். நிறைய எழுது லோகு, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. பின்னூட்டங்களை மட்டும் வைத்து பதிவின் தரத்தை முடிவு செய்ய இயலாது.

    தாங்கள் சிறப்பாகவே செய்தீர்கள்.

    ReplyDelete
  5. பின்னூட்டங்களில் பெரும்பாலும் நட்பே முன்னிலை வகிக்கிறது தல..,

    பொதுவாக ஆரோக்கியமான விவாதம் போல பின்னூட்டம் இருத்தலே அழகு

    வளரும் எழுத்தாளர்களுக்கு ஊக்குவிப்பு தரும் வகையில் பின்னூட்டம் இருந்தால் நன்றாக இருக்கும்.

    உங்களுக்கு பல மொக்கைவடிவ பின்னூட்டங்கள் இல்லை அவ்வளவுதான். அந்த மொக்கைப் பின்னூட்டங்களை எடுத்துவிட்டுப் பார்த்தால் உங்களது இடுகைகளும் அதிக பின்னூட்டம் பெற்றவையே...,

    ReplyDelete
  6. நான் உங்கள் பதிவுகளையும் / வலைச்சரத்தில் நீங்கள் இட்ட பதிவுகள்/அறிமுகங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். இருப்பினும் நேரமின்மை காரணமாக பின்னூட்டம் இட முடியவில்லை. :) உங்கள் அறிமுகங்கள் மிக அருமை.அழகான வரிசையில் அடுக்கப்பட்ட கோப்புகள் போல மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. உங்கள் உழைப்பு பாராட்டுக்குரியது.
    வாழ்த்துக்கள்.
    --வித்யா

    ReplyDelete
  7. மீண்டும் ஒரு முறை நன்றி சீனா அய்யா..

    நன்றி பீர் அண்ணா..


    நன்றி முரளி அண்ணா..


    நன்றி ஜமால் அண்ணா..


    நன்றி டாக்டர் சார்..


    நன்றி வித்யா அவர்களே..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது