07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 8, 2010

கற்க கசடற, கற்ற பின்.........

இணையம் ஒரு அமுத சுரபிதான், என்ன தகவல்கள் கேட்டாலும் அள்ளித்தர எப்போதும் தயாராக இருக்கிறது. தமிழில் கல்வி, வேலைவாய்ப்பு, அறிவியல் பதிவுகள் தரமானதாகவே உள்ளது. இந்த பதிவு அதைப்பற்றி..

கணிதம் நிறைய பேருக்கு கசப்புதான், திரு.செல்வகுமாரின் மின்னல் கணிதம் மிக எளிமையாக கணிதத்தை வசப்படுத்தும் விதம் பற்றி விளக்குகிறது. இவருக்கு இதை எழுதும் அனைத்து தகுதிகளும் உள்ளது, ஏனெனில் இவர் மாஸ்டர் மைண்ட் ஈ அகாடமியின் சி.இ.ஓ. மற்றும் திரைப்பட இயக்குனர்.

எரிமக்கலன் என்னும் பெயரில் எழுதும் இவர்களின் பதிவுகள் இயற்பியல், வேதியியல் என்று கலந்து இருக்கிறது. நிச்சயம் உபயோகமான பதிவுகள். ராமநாதன், மா.சிவக்குமார் சேர்ந்து எழுதும் இந்தபதிவுக்கு இன்னும் ஆதரவு அதிகமானால் நல்ல தரமான பதிவுகளை அவர்கள் தர உதவும்.

மேலிருப்பான் பதிவுகள் எழுதும் பத்மஹரி புற்றுநோய் ஸ்டெம்செல் ஆய்வு மாணவர். அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், உளவியல், மர்மம், அமானுஷ்யம், செக்ஸ் விழிப்புணர்வு மற்றும் அனுபவம் எல்லாம் கலந்து செய்த கலவையாக அவர் தளத்தை வர்ணிக்கிறார். அது உண்மையும் தான். நிறைய ஆய்வுகள் அவற்றின் பலன், முடிவு என்று தகவல்களால் நிரம்பிய வலைப்பூ.

நம் அனைவருக்கும் அறிந்த S.K, ஜெர்மனிலிருந்து நம்ம ஊருக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும், சிறிய வயதில் பெரிய சிந்தனைகள் கொண்ட ஆராய்ச்சி மாணவன். அவரின் ஏணிப்படிகள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு, கல்வி பற்றிய தகவல்களை கொண்டது. வேலைப்பளு காரணமாக குறைவாக எழுதுகிறார், விட்டுடாதே குமார், தொடர்ந்து எழுதுப்பா.

வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் நண்பர் செந்தழல் ரவியின் இந்த வலையிதழ் பற்றி நான் அறிமுகப்படுத்த தேவையேயில்லை, எனினும் இந்த வகையில் வருவதால் சேர்த்துள்ளேன்.

கல்விதகவல் வேண்டுவன எல்லாம் தரும் ஒரு தகவல் களஞ்சியம் தான் இந்த வலைப்பூ ஒரு இணையத்தள கல்வி நாளிதழ். அறிவியல், முல்லா கதைகள், தெனாலி ராமன் கதைகள், இலவச இணைய புத்தகங்களில் நாம் தேடிக் கொண்டு இருக்கும் ஏராளமான புத்தகங்கள் இருக்கிறது. சமகால இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், ஆத்திசூடி, எல்லாம் சென்னை லைபரரி டாட் காமில் இருந்து இலவசமாகவே படிக்கலாம். இது நிச்சயமாக ஒரு சிறந்த வலைப்பூதான்.

தமிழில் கல்வி ஒரு சிறந்த தளம்தான். பல்வேறு தலைப்புகளில் புவியியல், மானிட புவியியல், பௌதீக, உயிரின புவியியல், கணிணி கல்வி, தமிழ் மொழி, இலக்கியம், அறிவியல், சமூகவியல் என்று தேவையான தலைப்புகளில் தகவல்கள் தொகுத்தளிக்கப்படுகிறது.

இந்திய கல்வி செய்திகள் இத்தளம் கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரியப்படுத்துகிறது. தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் அனைத்து மாநில கல்வி செய்திகளையும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது.


இது தவிர Stevespangler , science , blog to learn , English போன்ற ஆங்கில பதிவுகளையும் சும்மா தெரிஞ்சு வச்சுக்குங்க. ( தமிழ் பதிவுகள் மட்டும் தான் அறிமுகப்படுத்தனுமா என்று சீனா சாரிடம் கேக்கனும். )

இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் வேறு ஒரு தலைப்பில் சந்திக்கலாம், நன்றி

18 comments:

  1. எனக்குத் தோன்றிய சில தளங்கள்:

    1. எளிமையாக தமிழ் இலக்கணத்தை கற்றுத்தரும் வெண்பா எழுதலாம் வாங்க - http://venbaaeluthalaamvaanga.blogspot.com/
    2. புகைப்படம், கேமரா பற்றிய குறிப்புகளுடன் அடிக்கடி போட்டிகளும் நடத்தும் தமிழில் புகைப்படக் கலை - http://photography-in-tamil.blogspot.com/

    ஆங்கில தளங்களை அறிமுகப் படுத்தலாம் என்றால் , நான் விரும்பிப் பார்க்கும் கான் அகாடமி - http://www.khanacademy.org/ (பில் கேட்ஸ் தானும் தன் குழந்தையும் விரும்பிப் பார்க்கும்/படிக்கும் தளம் என்று போன வாரம் சொன்னவுடன் பலரும் வந்து குவிகிறார்கள்) கணிதம், உயிரியல் மட்டுமல்லாமல் வணிகம், முதலீடு என்று பல விஷயங்களை இந்த ஒற்றை மனிதன் தன் வீட்டுக்குள் இருந்து கொண்டு பத்து நிமிட you tube வீடியோக்களாக பதிவிடுகிறார்.

    ReplyDelete
  2. எரிம‌க்க‌ல‌ன் ஒரு க‌ள‌ஞ்சிய‌ம் ப‌ல‌ரும் ப‌டித்து ப‌ய‌ன் பெற‌ வேண்டும்.

    ReplyDelete
  3. நண்பரே

    தாங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனை பதிவுகளும் மிக பயன் உள்ள பதிவுக்ள,

    நல்வாழ்த்துகள்,

    ReplyDelete
  4. அருமை ஆசிரியரே அசத்தலான தொகுப்பு

    ReplyDelete
  5. இத்தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சொல்லியெ ஆகவேண்டும் விஜி....

    ReplyDelete
  6. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  7. நல்ல அறிமுகங்கள்

    வாழ்த்துக்கள் சகோ

    விஜய்

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவுங்க!

    ReplyDelete
  9. வலைச்சர ஆசிரியருக்கு மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. தொகுப்பு வழக்கம்போல் அசத்தல்தான்!

    ReplyDelete
  11. பயனுள்ள அறிமுகங்கள்..!

    ReplyDelete
  12. அன்பின் விஜி

    அருமை அருமை கற்க கசடற - அறிமுகங்கள் அருமை - சென்று பார்க்க வேண்டும் - செல்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  13. அன்பின் விஜி

    அருமை அருமை கற்க கசடற - அறிமுகங்கள் அருமை - சென்று பார்க்க வேண்டும் - செல்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. பத்மஹரிThu Sep 09, 11:58:00 AM

    உங்க வலைச்சர தொகுப்பு ரொம்ப அருமைங்க விஜி! எல்லா இணைப்புகளுமே தரமானவை! கலக்கிட்டீங்க. அதுல எனக்கும் ஒரு சின்ன இடம் கொடுத்ததுக்கு மீண்டும் நன்றிகள்!
    பத்மஹரி.
    http://padmahari.wordpress.com

    ReplyDelete
  15. நன்றி பாலா, உங்கள் ஆர்வத்திற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி :)

    நன்றி வடுவூர் குமார் :)

    நன்றி ஜோதிஜி :))

    ReplyDelete
  16. நன்றி சித்ரா :)

    நன்றி சக்தி :)

    நன்றி தமிழ் :)

    ReplyDelete
  17. நன்றி சின்னம்மினி :)

    நன்றி விஜய் :)

    நன்றி வாலு :)

    ReplyDelete
  18. நன்றி ரம்ஸ் :)

    நன்றி தமிழ் அமுதன் :)

    நன்றி சீனா சார் :)

    நன்றி பத்மஹரி :)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது