07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 13, 2010

வலைச்சரத்தில் வானவில் - எனது பதிவுகளில் பிடித்தவை

அன்பு நண்பர்களே

வணக்கம். கொஞ்ச நாளாக இணையம்/ ப்ளாக் பக்கம் அதிகம் வர முடியாத படி வேலை/ சூழல். இருந்தும் சீனா சாரின் அன்பிற்காக இந்த வாரம் முழுக்க உங்களை சந்திக்க உள்ளேன்.

இவ்வாரம் பெரும்பாலும் நான் ரசித்த பதிவர்/ பதிவுகளை அறிமுகம் செய்ய உள்ளேன். அவற்றில் உங்களுக்கு தெரிந்தவர்களும் இருக்கலாம்.  புதியவர்கள் சற்று குறைவாக இருந்தால் .. பொருத்தருள்க.

****

நாம் எதிலுமே ஒரு வெரைட்டி எதிர் பார்ப்பவர்கள் (குடும்பம் தவிர)! நம் விருந்தில் தான் எத்தனை வித ஐட்டங்கள்!! போலவே சினிமா என்றாலும் கூட காமெடி, கதை, நல்ல பாடல்கள் என கலந்து கட்டி இருந்தால் தான் ரசிப்போம் நாம்.     என்னை பொறுத்தவரை வாழ்க்கையும் இப்படி தான் உள்ளது. மகிழ்ச்சி, சோகம், வெற்றி, ஏமாற்றம், முன்னேற்றம், நம்பிக்கை துரோகம் என அனைத்தும் கலந்து உள்ளது நாம் வாழும் வாழ்வு.

வானவில் என நான் எழுதும் வாரந்திர பதிவுகளில் இப்படி ஏழு வண்ணங்கள் கலந்து எழுதுவது வழக்கம். வலைச்சரத்தில் இந்த வாரம் ஒவ்வொரு நாளும் இப்படி கவிதை, கதை, காமெடி என கலந்து கட்டி எழுத போகிறேன்.

முதல் நாளான இன்று எனது படைப்புகள் சில அறிமுகம்...

கவிதை

எழுத துவங்கும் பலரும், பள்ளி/ கல்லூரி காலத்தில் காதல் கவிதைகளில் துவங்குவர். நானும் கூட தான். இன்னமும் கல்லூரி காலத்தில் எழுதிய பல கவிதைகளையே பிரசுரம் செய்கிறேன். சில நன்றாக இருப்பதாக தான் தோன்றுகிறது. உதாரணத்திற்கு சிறு கவிதைகள் வாசித்து பாருங்கள் 

சிறு கதை

சிறு கதை ஆசை யாரை விட்டது? வீட்டருகில் நடந்த ஒரு மரணம். அதனை போலிஸ் எப்படி பார்க்கிறார்கள், அக்கம் பக்கத்தினர் எப்படி பார்க்கிறார்கள்.. ஆனால் உண்மை இவை தாண்டி எங்கோ உள்ளது.. நிஜத்திற்கு மிக அருகில், கற்பனை மிக குறைவான கதை இது..ஒரு தற்கொலை மூன்று கோணங்கள்லை
 - 
புத்தக விமர்சனம்

எவ்வளவோ நல்ல புத்தகங்கள் வாசித்துள்ளோம்; வாசிக்கிறோம், நமது பதிவில் படித்து முடித்த பின் அதனை பகிர்ந்தால், பிறருக்கும் பயனாகும்; பின்னர் வாசிக்க நமக்கும் உதவும். புத்தக விமர்சனம் இதோ:

ராஜாராமின் கருவேல நிழல்- புத்தக விமர்சனம்

பயண கட்டுரை

"வருடத்திற்கொரு முறை இது வரை செல்லாத புது இடத்திற்கு சென்று வாருங்கள்" என்பார்கள். இதனை ஓரளவு நானும் பின் பற்றுகிறேன். ப்ளாக் ஆரம்பித்த பிறகு பயணங்களை பதிவும் செய்கிறேன்.

யானைகளுடன் 1 நாள்- கூர்க் அனுபவம்


சினிமா பக்கம்

கேபிள், உண்மை தமிழன் மட்டும் தான் சினிமா விமர்சனம் எழுதணுமா? நாங்களும் எழுதுவோமில்ல? வந்த புதிதில் ஆர்வ கோளாறில் சில படங்களை முதல் சில நாட்களில் பார்த்து விமர்சனம் எழுதினேன்.அப்படி ஒரு விமர்சனம்.. 



மலரும் நினைவுகள்


நாம் பிறந்து வளர்ந்த ஊரை மறக்க முடியுமா? 


தஞ்சையின் மறக்க முடியாத இடங்கள்

புகைப்படங்கள் எடுப்பது இன்னொரு ஹாபி. பத்தாம் வகுப்பு ஒன்றாய் படித்த நண்பர்கள் 25 வருடங்கள் கழித்து சந்தித்த நெகிழ்வான சந்திப்பின் படங்கள் ....

25 ஆண்டு கழித்து ஒரு நெகிழ்வான சந்திப்பு

பிடித்த கட்டுரைகள்

தற்போது கட்டுரை என்கிற வடிவம் தான் கருத்துகளை சொல்ல மிக பிடித்தமாய் உள்ளது. உங்களிடம் பேசுவது கூட அந்த வடிவில் தானே? நான் எழுதிய கட்டுரைகளில் பிடித்த சில  ..

100-வது பதிவு: குடும்பம் Vs வேலை

வேலைக்கு செல்லும் பெண்கள் 

தொடர்கள் 


வானவில் என கலவையான வார செய்திகளும்    வாங்க ..முன்னேறலாம்  என்ற தன்னம்பிக்கை தொடரும் எழுதினேன். தற்சமயம் சிறு இடைவெளி; நிச்சயம் பின்னர் தொடர்வேன். 
***
வாசித்தமைக்கு நன்றி நண்பர்களே.. மீண்டும் நாளை சந்திப்போம்..  

22 comments:

  1. வாழ்த்துகள் மோகன்!

    ReplyDelete
  2. வாழ்த்துகள் மோகன்குமார்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஜி

    ReplyDelete
  4. வாழ்த்துகள் மோகன்குமார்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மோகன்குமார்

    ReplyDelete
  6. வாங்க மோகன்.. கலக்குங்க... தொடர்கிறோம்.

    ReplyDelete
  7. வாழ்த்துகள் மோகன்குமார்:)

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் மோ.கு.

    ReplyDelete
  10. சிறப்பான வாரமாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. வலைச்சரத்தில் வானவில்.

    ஏழு நாட்களும் ஜொலிக்கும் ஏழு வண்ணங்களைப் போலவே பதிவுகள் அமைந்திட அசத்திட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  13. புதிய எண்ணங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் மோகன்குமார்.

    ReplyDelete
  14. வாங்க மோகன் சார், கொஞ்சம் அலுவலக பணி நெருக்கடி. மன்னிக்கவும். :-)

    ReplyDelete
  15. வாழ்த்துகள் மோகன் அண்ணா

    எம்.எம்.அப்துல்லா

    ReplyDelete
  16. ரவிச்சந்திரன்
    சின்ன அம்மிணி
    காவேரி கணேஷ்
    Kumaar
    மயில்
    Chitra
    பின்னோக்கி
    வானம்பாடிகள்
    Asiya Omar
    வரதராஜலு
    சைவகொத்துப்பரோட்டா
    Aathimoola Krishnan
    ராமலக்ஷ்மி
    சத்ரியன்
    முரளிகுமார் பத்மநாபன்
    TV Radha Krishnan Sir
    MM Abdullaa

    அனைவருக்கும் மிக மிக நன்றி;

    ReplyDelete
  17. பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. அன்பின் மோகன் குமார்

    அருமையான துவக்கம் - நல்ல இடுகைகள் அறிமுகம் - சூப்பர்

    சிறுகதை சுட்டி சரியாக வேலை செய்ய வில்லையே மோகன் குமார்

    எல்லாமே சென்று படித்து மறுமொழி இட்டு .... அப்பப்பா ஒரே வேலைப்பா

    நல்வாழ்த்துகள் மோகன் குமார்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  19. வாழ்த்துகள் மோகன்! கலக்குங்க. :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது