07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 21, 2010

ஜெய்லானி டிவியில் இன்று ஒரு கவிதை --இரண்டாம் நாள்

            வணக்கம் நேயர்களே  ஜெய்லானி டீவியில இன்னைக்கு சில முக்கிய நண்பர்களை நாம பார்க்கப் போறோம்  நமக்கு பொதுவா கவிதைன்னு சொன்னா  அந்த காலத்தில பாரதியார் , கவிக்குயில்  சரோஜினி நாயுடு இப்படி விரல் விட்டு என்னக்கூடிய ஆளைதான் தெரியும்..அதுக்கு பிறகு சினிமான்னு ( மீடியா ) ஒன்னு வந்ததும் தான் கொஞ்சம் பரவலா எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சது  யப்பா யாராவது சித்தர் அப்படி இப்படின்னு சொல்லி சண்டைக்கு வந்துடக்கூடாது .எற்கனவே டீவி நஷ்டத்துல ஓடுது.. ((ஒரு மாசம் கரண்டு கட் --இது எதிரிகளின் சதி ))


         கவிதை என்பது  எல்லாருமே  அத்தனை ஈஸியா எழுதிட முடியாது ..ஆனா சிலருக்கு வாயை திறந்தாலே  கவிதை கொட்டும் ....காரணம்  ரசிக்கத் தெரிஞ்சவங்களுக்கு கவிதை ரொம்ப ஈஸியா வருது. அது யாரை , எதைன்னு சொன்னா தவளை தன் வாயால கெடும்ன்னு சொல்றமாதிரி  என்னை நீங்க கேள்வி கேக்க ஆரம்பிச்சிடுவீங்க அனுபவம் அப்படி ஹி..ஹி..

       இன்னைக்கி சில கவிஞர்களை இங்கே  நாம  பார்க்கலாம்..

அன்புடன் ஆனந்தி -  இவங்க கொஞ்சம் நகைச்சுவையுடன்  நடு நடுவில கொஞ்சம் குழம்பி   கவிதையா  ஹாஸ்யமான்னு  பெண்டுலம்   மாதிரி  இருக்காங்க .ஆனா  உன் நினைவில்..கவிதையை படிச்சா  இவங்களையும் இந்த லிஸ்டில சேர்த்திடலாம். கவிஞர் தான் .


எழுத்தோசை   தமிழரசி  இவங்களோட இந்த   வெட்கம் பார்த்துட்டு எனக்கும் வெட்க  வெட்கமா  வந்துச்சின்னா பாத்துக்கோங்களேன்  பாருங்கள்  உங்களுக்கும்  பிடிக்கும்


முபீன் ஸாதிகா -  இவங்களோட எல்லாமே சுத்த தமிழ்ல இலக்கண சுத்தமா இருக்கும்.. அதனால தமிழ் பற்று உள்ள எல்லாருக்குமே  அவளகரம் அவனகரம் இது பிடிக்கும்

சோமாயணம் -  வித்தியாசமான பேர்தான் இன்னும் கொஞ்சம் டிரை பண்ணீனா  நல்லா வர சான்ஸ் இருக்கு மணசாட்சி  கொஞ்சமா குத்துதே..!!

வாரியர் ..இல்லாட்டி வாரியார் -  யாரு நம்ம தேவாதான்   கவிதை எழுதிட்டு புரியாதவங்களுக்கு மூனு ஆப்ஷன் குடுத்த வள்ளல் ..((எல்லாம் நம்ம தொல்லை தாங்காம தான் ) வெளி...! அது கவிதையா கட்டுரையான்னு நீங்க கேக்க பிடாது  ..  இவர்  என்ன கட்டுரை போட்டாலும் இவரை ஒரு கவிதையாளராதான் சரியா பார்க்க முடியுது..சிலநேரம் சாமியார் மாதிரி பேசுறார் அதான் பயமா இருக்கு..


அன்புடன் அருணா   இவங்க  எழுதுவது எளிய நடையில,,   கவிதையை   படிச்சா நமக்கும் அது போல வே எழுததூண்டும்  இதை பாருங்க கை விரித்துச் சிரித்தது மரம்!!

அன்புடன் நான்   கருணாகரசு அவர்கள் வாயை திறக்கும் போதே சிலதில் அனல் பறக்கும்  ,மென்மையும் இருக்கும்  இதில  காணாமல் போகும் முன் 

ஆயிரத்தில் ஒருவன்   சங்கர்  இலங்கையை சேர்ந்த  இவர் ஆரம்பத்தில நல்ல கவிதையா குடுத்தவர் ....  வெள்ளி கிழமையும் என் காதலும்      ஒரு வேளை கேட்டது கிடச்சுதான்னு தெரியல பயபுள்ள இப்ப கவித பக்கமே போவதில்லை ஆசை அதுவும் .அதுமேல ...பேராசைதான்

இந்திராவின் கிறுக்கல்கள்  புதியவர்  இன்னும் இவரிடம் எதிர் பார்க்கலாம் படித்தில பிடித்தது  நமக்கான நம் முகங்கள்  


ஹேமாவின் வானம் வெளித்த பின்னும்   முழு பிளாகும் கவிதையாவே இருக்கும் ..படிக்க படிக்க இனிமையா இருக்கும் .

என் உயிரே...! - அப்துல் மாலிக்கின் விளையாட்டாய் ஒரு முயச்சி   வலைப்பதிவுகளின் பெயரில் ஒரு கவிதை

கனவு பட்டறை..... - நடத்தி  அசத்தி வரும் சீமான் கனி இதில ராச்சஷி பூக்கள்...

காகிதஓடம் -  பத்மாவின் முத்தக் கப்பல்

சும்மா  வாவது பேருக்கு தலைப்ப வச்சிகிட்டு  இவங்க வாய திறந்தாலே அது கவிதைதான் . இவங்க எழுதுவதில எது நல்லா இருக்குன்னு தனியா  பிரிக்கிரது ரொம்ப கஷ்டம்  . யாரு நம்ம தேனக்கா தான்

நான் வாழும் உலகம்...! -  ரியாஸின் மனசு...! புரிகிறது...

விஜய் கவிதைகள்   இதில  விளிம்பு நிலை  என்ன சொல்ல....!!!!!!!!!

நிலாரசிகன் பக்கங்கள்  கவிதைகள் மென்மையாய்   பறவை வேடமிட்ட புல்லுருவி

கவிதை நேரமிது.   இது ஒரு அமைதிச்சாரலில் நடக்கும் ஒரு சாகசப்பயணம்...

நானும் என் கவிச்சாரலும்.   கானவில்லை என்ன செய்ய பாருங்க ஐ லவ் யூடா புருஷா

தியாவின் பேனா பேசுகிறது...படிக்கும் போதே வலிக்கும் தேவதைகள் உலவுகிற தேசம்

நிலா அது வானத்து மேல!  -ன்னு சொல்லிகிட்டு அப்படியே கவிதையில் அவ்வபொழுது பிரமிக்க வைக்கும் ஸ்டார் நான் கோவலன் அல்ல..   இப்பிடி சொன்னா நாங்க நம்பிடுவோமா .

நீரோடைபெயருக்கேத்த ஓடை இல்லை ..இது மலையருவி மாதிரி துள்ளும் , ஆடும் பாடும் சாதாரணமா எளிய நடையில் படிக்க முடியும்.. வலையுலகில் நான் படிக்க ஆரம்பிச்ச முதல் கவிதை பிளாக் இவங்கதான் ..குறிப்பிட்டு இது நல்லா இருக்குன்னு சொல்ல முடியாதபடி .எல்லாமே நல்லா இருக்கும்..

பலா பட்டறை ஷங்கருக்கு எதிர்  கவிதைகள் நல்லாவே வருது  மோதல்..

பனித்துளிச்சங்கர்   இவரின்  காதல் சிலுவைகள்   நல்ல ரசனையா இருக்கும்



    கவிஞர்களை பாராட்டி அவங்களுக்கு ஊக்கமா ஒரு கருத்துப் போட்டா அது அவங்களை இன்னும் நல்லா கவிதை எழுத வைக்கும்  .

.
       இவங்க கவிதைகளை படிப்பதாலோ என்னவோ எனக்கும் சில நேரம் மண்டைக்குள்ள பல்ப் சின்னதா கண் சிமிட்டும்.திரும்ப .நல்லா படிங்க எரியாது.. இதை என் மொக்கை பதிவுகளில் சில நேரம் போடுவேன் . பாத்துட்டு , படிச்சிட்டு பல பேர் எனக்கு ஸ்வீட்டு  பரிசா வாங்கி  தந்திருக்காங்க பார்ஸலும் வந்திருக்கு பாராட்டி  இன்னும் நிறைய எழுதுன்னு  சொல்லி இல்ல   இனிமே இப்படி எழுதி எங்களை கொல்லாதேன்னு... ஸ்வீட்ட பார்த்தா ஆசையாவும் இருக்கு..

             எழுதாட்டி இது கிடைச்சி இருக்குமான்னு ஒரு சந்தேகமாவும் இருக்கு. இப்படி இங்கேயும் என்னை சந்தேகம் கேக்க வச்சிட்டாங்களே..சில கவிஞர்களுக்கு ஸ்வீட் வாங்கி தருவதன் ரகசியம் ஒரு வேளை இதானோ..?

         பெண்கள் தன்னுடைய பணிச்சுமையின் நடுவிலும்  பிளாகில கொடிகட்டி பறப்பதை பார்க்கும் போது உண்மையில ஆச்சிரியமும் பெருமையும் தோனுது. ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னே ஆணும் இருக்கிறான் .அது ப்போல ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னே கண்டிப்பாக ஒரு பெண்ணும் இருக்கிறாள்...

       சரிங்க இந்த கவிதை ., கவிதைன்னு எழுதறவங்களுக்கு கமெண்ட் போடற எல்லாருக்குமே அந்த கவிதை புரிஞ்சுதான் கமெண்ட் போடறாங்களா..???  . ஹி..ஹி.. ஏன்னா ஒருத்தரோட கவிதையை படிச்சிட்டு (பேரெல்லாம் கேக்கப்பிடாது  , அவர் இங்கேதான் இருக்கார் ) ரெண்டு நாள் வேலைக்கு லீவு போட்டுட்டு  முழுசும் அழுதிருக்கேன் அது என்னான்னே  புரியாம..அவ்வ்வ்வ்வ்வ்

   எலேய்.மக்கா  கேமராவை மூடுலே  ஆள் அரிவாளோட வருதூஊஊஊஊஊ.எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
(    ஜெய்லானி டீவியில் திரும்பவும் பவர் கட் நாளை திரும்பவும் சந்திப்போம் )

  

109 comments:

  1. ஜெய், அறிமுகங்கள் அருமை. நான் நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. @@@ vanathy --//ஜெய், அறிமுகங்கள் அருமை. நான் நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்க்கிறேன்.//

    வாங்க வான்ஸ்.. இன்னைக்கு முதல் வடை உங்களுக்குதான் ..!! வருகைக்கு நன்றி,

    ReplyDelete
  3. அன்பின் ஜெய்லானி

    பலே பலே - இத்தனை அறிமுகங்களா -நன்று நன்று - பொறுமையாகப் படிக்க வேண்டும். செய்கிறேன்.


    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  4. இன்னிக்கு முழுசும் படிக்கலாம் போல இருக்கே!
    அறிமுகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  5. அறிமுகத்துக்கு நன்றி சகோ..

    ஜெய்டிவி களை கட்டிடுச்சு :-))

    ReplyDelete
  6. //( ஜெய்லானி டீவியில் திரும்பவும் பவர் கட் நாளை திரும்பவும் சந்திப்போம் )///

    அங்க இந்த ஒரு வாரத்துக்கு மட்டும் பவர் கட் வராதா? ஹிஹி

    ReplyDelete
  7. கலக்கலா அறிமுகம் செய்றீங்க! தமாஷ இருக்கு நீங்க எழுதறது..நல்லா இருங்குங்க தோழா...

    எத்தனைப் பேரை அறிமுகம் செய்திட்டீங்க. நல்லதுங்க எல்லோரையும் போய் பாத்திட்டு வரலாம்ன்னு இருக்கேன்.

    ReplyDelete
  8. கலக்கலா அறிமுகம் செய்றீங்க! தமாஷ இருக்கு நீங்க எழுதறது..நல்லா இருங்குங்க தோழா...

    எத்தனைப் பேரை அறிமுகம் செய்திட்டீங்க. நல்லதுங்க எல்லோரையும் போய் பாத்திட்டு வரலாம்ன்னு இருக்கேன்.

    ReplyDelete
  9. ஏகப்பட்ட இடுகைகள்!! வாழ்த்துக்கள் ஜெய்லானி.

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! உங்கள் காமெடி டச் சேர்த்து இருப்பது நல்லா இருக்குது....

    ReplyDelete
  11. அறிமுகத்தை அள்ளி கொடுத்து இருக்கீங்க.ஜெய்லானி பாராட்டுக்கள்.

    பெண்கள் தன்னுடைய பணிச்சுமையின் நடுவிலும் பிளாகில கொடிகட்டி பறப்பதை பார்க்கும் போது உண்மையில ஆச்சிரியமும் பெருமையும் தோனுது. ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னே ஆணும் இருக்கிறான் .அது ப்போல ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னே கண்டிப்பாக ஒரு பெண்ணும் இருக்கிறாள்...

    --டச்சிங் டச்சிங் கண்ணை தொடைச்சிகிட்டேன்.

    ReplyDelete
  12. அருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் ஜெய்லானி!//
    பெண்கள் தன்னுடைய பணிச்சுமையின் நடுவிலும் பிளாகில கொடிகட்டி பறப்பதை பார்க்கும் போது உண்மையில ஆச்சிரியமும் பெருமையும் தோனு// பெண்களை நீங்கள் பெருமைபடுத்திய விதத்திற்கு ஒரு ராயல் சல்யூட்.

    ReplyDelete
  13. நல்ல அறிமுகங்கள் ஜெய்லானி.

    ReplyDelete
  14. ஹேய் , ஜெய்லானி நல்லா அறிமுகப் படுத்தி இருக்க

    ReplyDelete
  15. இரசிக்கும் வகையில் அறிமுகங்களும்

    நல்லாயிருக்கு ஜெய்லானி

    ReplyDelete
  16. கவிதை பக்கங்கள் நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  17. nalla arimuganggal...kandippa padichu paakren..vazhthukkal

    ReplyDelete
  18. என்னையும் கவிஞராக மதித்து வலைச்சரத்தில் தொகுத்ததிற்கு நெஞ்சார்ந்த நன்றி நண்பா

    விஜய்

    ReplyDelete
  19. அட என்னோட பேரு கூட இருக்குது போல... மறந்துட்டு எழுதிட்டீங்களா??? இல்லையா??
    அப்படினா டாங்க்ஸ்ங்க..
    மத்தவங்களோட பதிவுங்களயும் படிக்கிறேன்.
    வுடு ஜூட்..

    ReplyDelete
  20. namma dhevavai patthi sariyaa solli irukeenga

    ReplyDelete
  21. ஜெய்லானி..@ யோவ் பங்காளி..


    என்னய அறிமுகப்படுத்தினியா.. இல்ல கும்முனியா..? வலைச்சரத்துல பொதுவா அறிமுகதானே படுத்தணும் நீ அந்த ட்ரெண்ட உடைக்கிறீயே...

    எல்லோரையும் இரண்டு வரில செதுக்குபுட்டு...என் மேல கொல வெறி தாக்குதல் நடத்தியிருக்கியே.. நல்லா இரு பங்காளி... ( நம்ம குருப்புக்கு சொல்லி அனுப்பி இருக்கேன்..ஒவ்வொருத்தனா வருவாய்ங்க இப்ப...)

    ReplyDelete
  22. நன்றி ஜெய்லானி.. என்னையையும் அறிமுகப்படுத்தியிருப்பதற்கு..

    இப்பவும் சொல்றேன்.. நான் கோவலன் அல்ல.. சாதாரணமான ஆள்.. ஹி ஹி ஹி..

    ReplyDelete
  23. ஏகப்பட்ட அறிமுகங்கள். பார்க்கிறேன் நண்பரே...

    வெங்கட்.

    ReplyDelete
  24. //இவர் என்ன கட்டுரை போட்டாலும் இவரை ஒரு கவிதையாளராதான் சரியா பார்க்க முடியுது..சிலநேரம் சாமியார் மாதிரி பேசுறார் அதான் பயமா இருக்கு.. //

    ஹி ஹி ஹி .. போங்க உங்களுக்கு எப்பவுமே தமாசு தான் ..!!

    ReplyDelete
  25. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. புது பொறுப்பிற்கு வாழ்த்துகள்!!

    ReplyDelete
  27. நல்ல அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. நல்ல அறிமுகங்கள் மக்கா.

    ReplyDelete
  29. //ஏன்னா ஒருத்தரோட கவிதையை படிச்சிட்டு (பேரெல்லாம் கேக்கப்பிடாது //


    எலே பாண்டி எட்றா என்ட்ற அருவாவை...ரத்தம் பாரக்காம வைக்கமாட்டம்லே....:)

    ReplyDelete
  30. ஆஹா தல எனக்கே எழுதி மறந்த பதிவை தூசு தட்டி எடுத்து திரும்பவும் புத்துணர்ச்சி கொடுத்திருக்கீங்க நன்றி

    நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  31. பலே பலே இன்று ஜெய்லானி டீ வி கவிதையாணிகள், கவிஞர்களாக களை கட்டு கிறது, நீறைய தெரிந்த கவிககள் இருந்தாலும், தெரியாத முகங்களை தெரிந்து கொண்டேன், அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. அட என்னையுமா? நன்றிங்க மற்றும் வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு..

    ReplyDelete
  33. வலை உலகில் இன்னொரு ஸாதிகா.வா

    ReplyDelete
  34. என்னையும் கவிஞரென்று அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அண்ணாத்தே!.

    அதுசரி சின்ன சந்தேகம் கவிதையின்னா என்னா
    [ஓடு ஓடுமல்லி]

    அறிமுகங்கள் அனைத்தும் சூப்பர்..
    வாழ்த்துக்கள் அவர்களுக்கும்..

    ReplyDelete
  35. அறிமுகங்கள் அருமை பாஸ்!!

    ReplyDelete
  36. // இவங்க கவிதைகளை படிப்பதாலோ என்னவோ எனக்கும் சில நேரம் மண்டைக்குள்ள பல்ப் சின்னதா கண் சிமிட்டும்... இதை என் மொக்கை பதிவுகளில் சில நேரம் போடுவேன். பாத்துட்டு பாராட்டி இன்னும் நிறைய எழுதுன்னு சொல்லி இல்ல இனிமே இப்படி எழுதி எங்களை கொல்லாதேன்னு... ஸ்வீட்ட பார்த்தா ஆசையாவும் இருக்கு..//

    அப்ப இத்தனை மொக்கையிலும் எழுதியது கவிதை இல்லையா, அடப்பாவி மக்கா அதப் போயி நானும் படிச்சிட்டு, நமக்குத் தான் கவிதைப் புரியலையோன்னு ஹி.. ஹி..

    ReplyDelete
  37. என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  38. நிறைய கவிதை அறிமுகங்கள்...
    எல்லாவற்றையும் சென்று படிக்கவேண்டும்.
    நன்றி ஜெ...!

    ReplyDelete
  39. ///அன்புடன் ஆனந்தி - இவங்க கொஞ்சம் நகைச்சுவையுடன் நடு நடுவில கொஞ்சம் குழம்பி கவிதையா ஹாஸ்யமான்னு பெண்டுலம் மாதிரி இருக்காங்க .

    ***ஹிஹி... இப்படியா பப்ளிக்ல கலாய்க்கிறது..
    என் கவிதையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க :-)))

    ///ஆனா உன் நினைவில்..கவிதையை படிச்சா இவங்களையும் இந்த லிஸ்டில சேர்த்திடலாம். கவிஞர் தான் ////

    ***எது எப்படியோ... கவிஞர் லிஸ்ட்-ல சேர்த்துட்டாங்க...
    தொடரட்டும் உங்கள் தேடல் பயணம்.. :-)
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  40. ////ஹி..ஹி.. ஏன்னா ஒருத்தரோட கவிதையை படிச்சிட்டு (பேரெல்லாம் கேக்கப்பிடாது , அவர் இங்கேதான் இருக்கார் ) ரெண்டு நாள் வேலைக்கு லீவு போட்டுட்டு முழுசும் அழுதிருக்கேன் அது என்னான்னே புரியாம..அவ்வ்வ்வ்வ்வ்///

    ****ஹா ஹா ஹா... ரொம்ப கஷ்டம் தான் போல இருக்கு... இட்ஸ் ஓகே .. இட்ஸ் ஒகே..
    நோ பீலிங்க்ஸ்... ஐயோ முடியலங்க.. :-)))

    ReplyDelete
  41. அறிமுகங்களுக்கும் பெண்களைப் பெருமைப்படுத்தி எழுதிய விதத்துக்கும் அன்பார்ந்த நன்றி!

    ReplyDelete
  42. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். அசத்தல் தொடருங்கள்..பவர் கட் பழகி விட்டது .... பொறுத்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  43. ஜெய்! அருமையான விருந்து... எனக்கு தெரியாத பூந்தோட்டத்துக்கு கூட்டிட்டு போயிட்டீங்க... பொறுமையா எல்லா ஊட்டுக்கும் போயிட்டு வர்ரேன் ...

    ஆசியா அக்கா! கண்ண தொடச்சிட்டு எனக்கு அப்ப்டியே டிஸ்யூ பாக்ஸ் பாஸ் பண்ணுங்க‌

    ReplyDelete
  44. @@@cheena (சீனா)--//

    அன்பின் ஜெய்லானி

    பலே பலே - இத்தனை அறிமுகங்களா -நன்று நன்று - பொறுமையாகப் படிக்க வேண்டும். செய்கிறேன்.


    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா //

    உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றிங்க

    ReplyDelete
  45. @@@அன்பரசன்--//

    இன்னிக்கு முழுசும் படிக்கலாம் போல இருக்கே!
    அறிமுகத்திற்கு நன்றி. //

    வாங்க அன்பரசன் ..சந்தோஷம் ..!!!

    ReplyDelete
  46. @@@அமைதிச்சாரல்--//

    அறிமுகத்துக்கு நன்றி சகோ..

    ஜெய்டிவி களை கட்டிடுச்சு :-)) //

    வாங்க சாரலாக்கா..!! சந்தோஷம்.. கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  47. @@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)--

    //( ஜெய்லானி டீவியில் திரும்பவும் பவர் கட் நாளை திரும்பவும் சந்திப்போம் )///

    அங்க இந்த ஒரு வாரத்துக்கு மட்டும் பவர் கட் வராதா? ஹிஹி //

    கஷ்டமாதான் ஓடிகிட்டு இருக்கு.. அதுக்குதான் வருத்த படாத வாலிப சங்கம் முயற்சி செய்யுது ஹி..ஹி..

    ReplyDelete
  48. @@@என்னது நானு யாரா?--

    கலக்கலா அறிமுகம் செய்றீங்க! தமாஷ இருக்கு நீங்க எழுதறது..நல்லா இருங்குங்க தோழா...

    எத்தனைப் பேரை அறிமுகம் செய்திட்டீங்க. நல்லதுங்க எல்லோரையும் போய் பாத்திட்டு வரலாம்ன்னு இருக்கேன். //


    வாங்க..நீங்க நீங்கதான் ..!!ஏதோ மொக்கை போட்ட்டுகிட்டு இருக்கேன் பாருங்க ஹி...ஹி...

    ReplyDelete
  49. @@@சைவகொத்துப்பரோட்டா--//

    ஏகப்பட்ட இடுகைகள்!! வாழ்த்துக்கள் ஜெய்லானி. //

    அப்போ அடுத்த தடவை வேனுமுன்னா குறைக்க முயற்சி செய்யுரேன் பாஸ்

    ReplyDelete
  50. @@@Chitra--//

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்! உங்கள் காமெடி டச் சேர்த்து இருப்பது நல்லா இருக்குது....//

    ரொம்ப சந்தோஷம் டீச்சர்...!! :-)

    ReplyDelete
  51. @@@@asiya omar--//

    அறிமுகத்தை அள்ளி கொடுத்து இருக்கீங்க.ஜெய்லானி பாராட்டுக்கள். //

    பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்கக்கா..!!

    பெண்கள் தன்னுடைய பணிச்சுமையின் நடுவிலும் பிளாகில கொடிகட்டி பறப்பதை பார்க்கும் போது உண்மையில ஆச்சிரியமும் பெருமையும் தோனுது. ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னே ஆணும் இருக்கிறான் .அது ப்போல ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னே கண்டிப்பாக ஒரு பெண்ணும் இருக்கிறாள்...

    --டச்சிங் டச்சிங் கண்ணை தொடைச்சிகிட்டேன். //

    ஆஹா.இதுக்கெல்லாம் அழப்பிடாது ஊஹும்.. :-)) வருகைக்கு நன்றி

    ReplyDelete
  52. @@@ ஸாதிகா--//

    அருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் ஜெய்லானி!//
    பெண்கள் தன்னுடைய பணிச்சுமையின் நடுவிலும் பிளாகில கொடிகட்டி பறப்பதை பார்க்கும் போது உண்மையில ஆச்சிரியமும் பெருமையும் தோனு// பெண்களை நீங்கள் பெருமைபடுத்திய விதத்திற்கு ஒரு ராயல் சல்யூட். //

    வாங்க ஸாதிகாக்கா..ராயல் சல்யூட்டுக்கு ஒரு சல்யூட்.. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  53. @@@ மாதேவி--//
    நல்ல அறிமுகங்கள் ஜெய்லானி. //

    வாங்க சந்தோஷம்..வருகைக்கு நன்றி

    ReplyDelete
  54. ஜெய்....இன்றுதான் பார்க்க நேரம் கிடைத்தது.நானுமா !
    நன்றி நன்றி நன்றி !

    இனி பல்ப் எரிஞ்சா என்கிட்டயே சொல்லிடுங்க.சரியா !

    ReplyDelete
  55. ஆஜர். வேறென்ன செய்ய? எனக்கும் கவிதைக்கும் ஏழாம்பொருத்தம்.

    அதென்ன ஏழாம்பொருத்தம்? தெரியாதுங்க. நெறய பேரு சொல்றாங்கன்னு நானும் சொல்லிப்புட்டேன்.

    ReplyDelete
  56. @@@ மங்குனி அமைசர் --//

    ஹேய் , ஜெய்லானி நல்லா அறிமுகப் படுத்தி இருக்க //


    கருத்து சொன்னதுக்கு நன்றி மங்கு

    ReplyDelete
  57. @@@ நட்புடன் ஜமால்--//

    இரசிக்கும் வகையில் அறிமுகங்களும்

    நல்லாயிருக்கு ஜெய்லானி //

    சந்தோஷம் நன்றிங்க ஜமால்

    ReplyDelete
  58. @@@தமிழ் உதயம்-//

    கவிதை பக்கங்கள் நல்ல அறிமுகங்கள் //

    ரொம்ப நன்றிங்க தமிழ் உதயம்

    ReplyDelete
  59. @@@ Gayathri--//

    nalla arimuganggal...kandippa padichu paakren..vazhthukkal //


    வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

    ReplyDelete
  60. @@@ விஜய்---//

    என்னையும் கவிஞராக மதித்து வலைச்சரத்தில் தொகுத்ததிற்கு நெஞ்சார்ந்த நன்றி நண்பா

    விஜய் //

    பாராட்ட வேண்டியவங்களை பாராட்ட தவறுவதில்லை நான் :-))

    ReplyDelete
  61. @@@இந்திரா---//

    அட என்னோட பேரு கூட இருக்குது போல... மறந்துட்டு எழுதிட்டீங்களா??? இல்லையா??
    அப்படினா டாங்க்ஸ்ங்க..
    மத்தவங்களோட பதிவுங்களயும் படிக்கிறேன்.
    வுடு ஜூட்.. //

    ஹி..ஹி.. சந்தேகம் நான் தான் கேக்கோனும் இந்திரா ..நீங்க கேகக்கூடாது..நன்றி..!!

    ReplyDelete
  62. @@@ LK--//

    namma dhevavai patthi sariyaa solli irukeenga //

    கோத்து விட்டுடாதீங்க தல,,ஏற்கனவே கொலவெறியில திரியிறார் ஹா..ஹா..

    ReplyDelete
  63. @@@ dheva--//

    ஜெய்லானி..@ யோவ் பங்காளி..


    என்னய அறிமுகப்படுத்தினியா.. இல்ல கும்முனியா..? //

    இதுக்கு பேருதான் வஞ்சப்புகழ்ச்சி ந்னு பேரு வாத்தியாரே ஹி..ஹி..

    //வலைச்சரத்துல பொதுவா அறிமுகதானே படுத்தணும் நீ அந்த ட்ரெண்ட உடைக்கிறீயே...//

    செக்குமாடு மாதிரி ஒரே மாதிரி இருந்தா சரிவருமா...அதனாலதான்

    // எல்லோரையும் இரண்டு வரில செதுக்குபுட்டு...என் மேல கொல வெறி தாக்குதல் நடத்தியிருக்கியே.. நல்லா இரு பங்காளி... ( நம்ம குருப்புக்கு சொல்லி அனுப்பி இருக்கேன்..ஒவ்வொருத்தனா வருவாய்ங்க இப்ப...)//

    ஹி..ஹி.. மீ எஸ்ஸ்ஸ்ஸ்கேஏப்

    ReplyDelete
  64. @@@ Starjan ( ஸ்டார்ஜன் )--//

    நன்றி ஜெய்லானி.. என்னையையும் அறிமுகப்படுத்தியிருப்பதற்கு..

    இப்பவும் சொல்றேன்.. நான் கோவலன் அல்ல.. சாதாரணமான ஆள்.. ஹி ஹி ஹி.. //


    வாங்க ஷேக்...ஹி..ஹி.. நாங்க நம்பிடுவோமாக்கும்..!!

    ReplyDelete
  65. @@@ வெங்கட் நாகராஜ்--//

    ஏகப்பட்ட அறிமுகங்கள். பார்க்கிறேன் நண்பரே...

    வெங்கட். //

    நேரம் இருக்கும் போது படித்துப்பாருங்கள் சார் ..வருகைக்கு ரொம்ப நன்றி

    ReplyDelete
  66. @@@ ப.செல்வக்குமார்--//

    //இவர் என்ன கட்டுரை போட்டாலும் இவரை ஒரு கவிதையாளராதான் சரியா பார்க்க முடியுது..சிலநேரம் சாமியார் மாதிரி பேசுறார் அதான் பயமா இருக்கு.. //

    ஹி ஹி ஹி .. போங்க உங்களுக்கு எப்பவுமே தமாசு தான் ..!! //

    கோத்து விட்டுடாதீங்க பாஸ்.ஹி...ஹி..

    ReplyDelete
  67. @@@ S Maharajan --//

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்! //


    வாழ்த்துக்கு நன்றிங்க

    ReplyDelete
  68. //ஜெய்லானி டிவியில் இன்று ஒரு கவிதை --இரண்டாம் நாள் //

    இப்பிடி ஒரு தலைப்ப பாத்ததும் உள்ள வர கொஞ்சம் பயமாத் தான் இருந்தது :)) மத்தவங்களோட கவிதைகள் அப்படின்னு போட்டிருந்தா தைரியமா உள்ள வந்திருப்போம் :))

    ReplyDelete
  69. @@@ஹுஸைனம்மா --//

    புது பொறுப்பிற்கு வாழ்த்துகள்!! //

    வாங்க சகோஸ்..வாழ்த்துக்கு ரெம்ப நன்றி..!!

    ReplyDelete
  70. @@@அமைதி அப்பா--//

    நல்ல அறிமுகங்கள்.
    வாழ்த்துக்கள் //

    வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

    ReplyDelete
  71. @@@ Jey --//

    நல்ல அறிமுகங்கள் மக்கா.//

    வாய்யா பங்காளி உடம்பு எப்படி இருக்கு ..((உண்மையாதான்யா நலம் விசாரிக்கிரேன் ))

    ReplyDelete
  72. @@@நாஞ்சில் பிரதாப் --
    //ஏன்னா ஒருத்தரோட கவிதையை படிச்சிட்டு (பேரெல்லாம் கேக்கப்பிடாது //


    எலே பாண்டி எட்றா என்ட்ற அருவாவை...ரத்தம் பாரக்காம வைக்கமாட்டம்லே....:) //


    ஆஹா..கற்பூற புத்தியுள்ள ஆட்களும் இங்கே இருக்காங்கப்பூ..மீ எஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்

    ReplyDelete
  73. @@@அப்துல்மாலிக்--//

    ஆஹா தல எனக்கே எழுதி மறந்த பதிவை தூசு தட்டி எடுத்து திரும்பவும் புத்துணர்ச்சி கொடுத்திருக்கீங்க நன்றி

    நல்ல அறிமுகங்கள் //

    வாங்க மாலிக்..அதான் ஜெய்லானிங்கிறது

    ReplyDelete
  74. @@@ Jaleela Kamal --//

    பலே பலே இன்று ஜெய்லானி டீ வி கவிதையாணிகள், கவிஞர்களாக களை கட்டு கிறது, நீறைய தெரிந்த கவிககள் இருந்தாலும், தெரியாத முகங்களை தெரிந்து கொண்டேன், அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    வாங்க ஜலீலாக்காவ்..ரொம்ப நன்றி உங்க கருத்துக்கு

    ReplyDelete
  75. @@@ தமிழரசி--//

    அட என்னையுமா? நன்றிங்க மற்றும் வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு. //


    வாங்க தமிழ் நீங்களும்தான் ... :-))

    ReplyDelete
  76. @@@ தமிழரசி--//

    அட என்னையுமா? நன்றிங்க மற்றும் வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு. //


    வாங்க தமிழ் நீங்களும்தான் ... :-))

    ReplyDelete
  77. @@@Jaleela Kamal --//

    வலை உலகில் இன்னொரு ஸாதிகா.வா //

    ஆஹா.. விட மாட்டீங்கப்போல இருக்கே..ஹி..ஹி..

    ReplyDelete
  78. @@@அன்புடன் மலிக்கா--//

    என்னையும் கவிஞரென்று அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அண்ணாத்தே!. //

    வாங்கக்காவ்..!!கவியை கவின்னு சொல்லாம எப்படி சொல்றதாம்

    அதுசரி சின்ன சந்தேகம் கவிதையின்னா என்னா
    [ஓடு ஓடுமல்லி] //


    //இருங்க உங்க மாம்ஸ கேட்டுட்டு வரேன் ஹி..ஹி..

    அறிமுகங்கள் அனைத்தும் சூப்பர்..
    வாழ்த்துக்கள் அவர்களுக்கும்....//


    வாழ்த்டுக்கு ரொம்ப நன்றிங்கோ..!!

    ReplyDelete
  79. @@@ எம் அப்துல் காதர் said...

    அறிமுகங்கள் அருமை பாஸ்!! //

    ஓக்கே சிஷ்யா..

    //// இவங்க கவிதைகளை படிப்பதாலோ என்னவோ எனக்கும் சில நேரம் மண்டைக்குள்ள பல்ப் சின்னதா கண் சிமிட்டும்... இதை என் மொக்கை பதிவுகளில் சில நேரம் போடுவேன். பாத்துட்டு பாராட்டி இன்னும் நிறைய எழுதுன்னு சொல்லி இல்ல இனிமே இப்படி எழுதி எங்களை கொல்லாதேன்னு... ஸ்வீட்ட பார்த்தா ஆசையாவும் இருக்கு..//

    அப்ப இத்தனை மொக்கையிலும் எழுதியது கவிதை இல்லையா, அடப்பாவி மக்கா அதப் போயி நானும் படிச்சிட்டு, நமக்குத் தான் கவிதைப் புரியலையோன்னு ஹி.. ஹி..//


    ஹி..ஹி.. நீங்க என்னை ரொம்ப புகழ்றீங்க ஓரே கூச்சமா இருக்கு..

    வருகைக்கு ரொம்ப நன்றி பாஸ்..

    ReplyDelete
  80. @@@ Mubeen Sadhika--//

    என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. //

    வாங்க முபீன் ..:-))

    ReplyDelete
  81. @@@NIZAMUDEEN--//

    நிறைய கவிதை அறிமுகங்கள்...
    எல்லாவற்றையும் சென்று படிக்கவேண்டும்.
    நன்றி ஜெ...! //

    பாருங்க நேரம் இருக்கும் போது...:-)) வருகைக்கு நன்றிங்க

    ReplyDelete
  82. @@@ Ananthi --

    ///அன்புடன் ஆனந்தி - இவங்க கொஞ்சம் நகைச்சுவையுடன் நடு நடுவில கொஞ்சம் குழம்பி கவிதையா ஹாஸ்யமான்னு பெண்டுலம் மாதிரி இருக்காங்க .

    ***ஹிஹி... இப்படியா பப்ளிக்ல கலாய்க்கிறது..
    என் கவிதையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க :-))) //


    வாங்க மேடம்ஸ்...!!ஹி..ஹி.. நம்ம குணம் தெரியும் தானே

    ///ஆனா உன் நினைவில்..கவிதையை படிச்சா இவங்களையும் இந்த லிஸ்டில சேர்த்திடலாம். கவிஞர் தான் ////

    ***எது எப்படியோ... கவிஞர் லிஸ்ட்-ல சேர்த்துட்டாங்க...
    தொடரட்டும் உங்கள் தேடல் பயணம்.. :-)
    வாழ்த்துக்கள்..//

    வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க

    /////ஹி..ஹி.. ஏன்னா ஒருத்தரோட கவிதையை படிச்சிட்டு (பேரெல்லாம் கேக்கப்பிடாது , அவர் இங்கேதான் இருக்கார் ) ரெண்டு நாள் வேலைக்கு லீவு போட்டுட்டு முழுசும் அழுதிருக்கேன் அது என்னான்னே புரியாம..அவ்வ்வ்வ்வ்வ்///

    ****ஹா ஹா ஹா... ரொம்ப கஷ்டம் தான் போல இருக்கு... இட்ஸ் ஓகே .. இட்ஸ் ஒகே..
    நோ பீலிங்க்ஸ்... ஐயோ முடியலங்க.. :-))) //

    ஹி..ஹி.. என்ன செய்ய நிலமை அப்படி...

    ReplyDelete
  83. @@@ மனோ சாமிநாதன் --//

    அறிமுகங்களுக்கும் பெண்களைப் பெருமைப்படுத்தி எழுதிய விதத்துக்கும் அன்பார்ந்த நன்றி! //

    வாங்க மேடம் உண்மையை ஒத்துகிறதுதானே அழகு..:-))

    ReplyDelete
  84. @@@மதுரை சரவணன்--//
    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். அசத்தல் தொடருங்கள்..பவர் கட் பழகி விட்டது .... பொறுத்துக் கொள்கிறோம்.//


    வாங்க சார்.. அது ஜெய்லானி டீவியில அப்ப அப்ப நடக்கும் ஹி..ஹி..

    ReplyDelete
  85. @@@ இலா--//

    ஜெய்! அருமையான விருந்து... எனக்கு தெரியாத பூந்தோட்டத்துக்கு கூட்டிட்டு போயிட்டீங்க... பொறுமையா எல்லா ஊட்டுக்கும் போயிட்டு வர்ரேன் ...//


    வாங்க மயில் பொருமையா நேரம் இருக்கும் போது பாருங்க..

    // ஆசியா அக்கா! கண்ண தொடச்சிட்டு எனக்கு அப்ப்டியே டிஸ்யூ பாக்ஸ் பாஸ் பண்ணுங்க‌ //
    அட நீங்களுமா..!!

    ReplyDelete
  86. @@@ ஹேமா --//

    ஜெய்....இன்றுதான் பார்க்க நேரம் கிடைத்தது.நானுமா !
    நன்றி நன்றி நன்றி ! ///

    வாங்க குழந்தை நிலா..நீங்க இலாமலா ஹா..ஹா..

    // இனி பல்ப் எரிஞ்சா என்கிட்டயே சொல்லிடுங்க.சரியா !//

    ஹி..ஹி...

    ReplyDelete
  87. @@ DrPKandaswamyPhD --//

    ஆஜர். வேறென்ன செய்ய? எனக்கும் கவிதைக்கும் ஏழாம்பொருத்தம்.

    அதென்ன ஏழாம்பொருத்தம்? தெரியாதுங்க. நெறய பேரு சொல்றாங்கன்னு நானும் சொல்லிப்புட்டேன்.//

    வாங்க சார்...இதுக்கு என்னுடைய பிளாக்கில பதில் சொல்றேன் ஹி..ஹி..

    ReplyDelete
  88. @@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்--//

    //ஜெய்லானி டிவியில் இன்று ஒரு கவிதை --இரண்டாம் நாள் //

    இப்பிடி ஒரு தலைப்ப பாத்ததும் உள்ள வர கொஞ்சம் பயமாத் தான் இருந்தது :)) மத்தவங்களோட கவிதைகள் அப்படின்னு போட்டிருந்தா தைரியமா உள்ள வந்திருப்போம் :)) //

    வாங்க சந்தூஸ்... இங்கே கொஞ்சம் டிஃப்ரண்டா இருக்கும் வருகைக்கு ரொம்ப நன்றி..:-))

    ReplyDelete
  89. ///வாங்க சார்...இதுக்கு என்னுடைய பிளாக்கில பதில் சொல்றேன் ஹி..ஹி.. /////

    ஐயோ ராமா... சும்மாவே.... சந்தேகம் கேட்டு கேட்டு, ஒரு வழி பண்ணுவாங்க..
    இதுல இது வேறயா... ??? நல்லது.. :-)))

    ReplyDelete
  90. @@@ Ananthi--//

    ///வாங்க சார்...இதுக்கு என்னுடைய பிளாக்கில பதில் சொல்றேன் ஹி..ஹி.. /////

    ஐயோ ராமா... சும்மாவே.... சந்தேகம் கேட்டு கேட்டு, ஒரு வழி பண்ணுவாங்க..
    இதுல இது வேறயா... ??? நல்லது.. :-))) //


    என்னங்க சொன்னதுக்கே பயப்படுறீங்க ..அப்போ பதிவுப்போட்டா..ஹி..ஹி...

    ReplyDelete
  91. என்னோட 'நீ நான்' கவித நாமினேட் ஆகாததுக்கு என்ன காரணம்னுதேன் தெரியல! இலக்கணப்படி பாத்தாலும், இலக்கியப்படி பாத்தாலும் எந்த தப்புமில்லையே...ம்ம்..??

    ReplyDelete
  92. ஜெய்லானி பாய்

    என்னுடைய கவிதய இந்த லிஸ்ட்டுல ரேன்க் பண்ணாததால தமிழுலகமே கொந்தளிச்சி போயிருக்கு (எப்ப, எப்பிடி, ஆதாரம் எங்கேன்னெல்லாம் கேக்க கூடாது!!) அவைங்களை சமாதானம் பண்றதுக்கொசரம் இன்னொரு கவிதயும் எழுதிட்டேன். அதையாவது நாமினேட் பண்ணி ...முன்னடி வரிசைல...ஆங்...தோ நம்ம வைரமுத்து சாருக்கு பக்கத்து சீட்ல ...அங்...அங்கதேன் வெச்சிருங்க.(ப்ளீஸ் பாய்...இல்லின்ன இன்னொரு கவிதயும் எழுதி தமிழை மெல்ல சாகாம சீக்கிரமா சாகடிக்க விரும்புறீங்களா??)

    ReplyDelete
  93. @@@ அன்னு--//
    என்னோட 'நீ நான்' கவித நாமினேட் ஆகாததுக்கு என்ன காரணம்னுதேன் தெரியல! இலக்கணப்படி பாத்தாலும், இலக்கியப்படி பாத்தாலும் எந்த தப்புமில்லையே...ம்ம்..?? //

    வாங்க அன்னு மேடம்..!!ரொம்ப சூடா இருக்கிற மாதிரி தெரியுதே. பொருமை இருங்க லெமன் ஜுஸ் சாப்பிடுங்க ...!!! :-))

    ReplyDelete
  94. என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  95. THANKS JAILAANI ...ROMBA SANTHOSHAMA IRUKKU

    ReplyDelete
  96. @@@கலாநேசன்--//என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.//

    சந்தோஷம் நன்றிங்க கலாநேசன் சார்

    ReplyDelete
  97. @@@ பத்மா--// THANKS JAILAANI ...ROMBA SANTHOSHAMA IRUKKU //


    வாங்க ..!!வாங்க..!! இந்த சந்தோஷம் என்றும் நீடிக்கட்டும்..!! :-))

    ReplyDelete
  98. // கவிதைன்னு எழுதறவங்களுக்கு கமெண்ட் போடற எல்லாருக்குமே அந்த கவிதை புரிஞ்சுதான் கமெண்ட் போடறாங்களா..??? . ஹி..ஹி.. ஏன்னா ஒருத்தரோட கவிதையை படிச்சிட்டு (பேரெல்லாம் கேக்கப்பிடாது , அவர் இங்கேதான் இருக்கார் ) ரெண்டு நாள் வேலைக்கு லீவு போட்டுட்டு முழுசும் அழுதிருக்கேன் //

    ayya...ithu yaarunnu naan sollava....:)))

    ReplyDelete
  99. "கவிஞர் ஜெய்லானி" பெயரை விட்டுவிட்டதால் நான் இந்த அவையிலிருந்து (வலைத்தளம்) வெளிநடப்பு செய்கிறேன்...!

    ReplyDelete
  100. என்னையும் சேர்த்து கிட்டதுக்கு நன்றி

    இதோ வாரங்க

    ReplyDelete
  101. இம்பூட்டு பேத்துக்கு நடுவுல என்னையும் சேர்த்ததுக்கு நன்றி ஜெய்லானி...

    ReplyDelete
  102. //Jaleela Kamal said...
    வலை உலகில் இன்னொரு ஸாதிகா.வா //

    அதானே!!!! யாரு அவுக பாப்போம்...

    //அன்புடன் மலிக்கா said...
    அதுசரி சின்ன சந்தேகம் கவிதையின்னா என்னா
    [ஓடு ஓடுமல்லி]//

    எக்கோவ் இது கொஞ்சம் ஓவர்தே....

    ReplyDelete
  103. மிக்க நன்றி ஜெய்லானி. :) பதிவுலக டைரக்டரியாவே ஆகிட்டு வர்றீங்க! :))

    ReplyDelete
  104. நன்றி ஜெய்லானி.:)

    ReplyDelete
  105. அருமையான அறிமுகம் வாசிக்கிறேன்... அப்படியே நம்ம ஓடையிலும் நனைவதற்காய் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்..
    mathisutha.blogspot.com

    ReplyDelete
  106. அட!நானுமா!நன்றி!நன்றி ஜெயிலானி!

    ReplyDelete
  107. வாழ்த்துக்கள் ஜெய்லானி !
    அதிக வேலை பளு இன்றுதான் அனைத்தும் முடித்தேன் . உங்களின் ஆசிரியர் பனி மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன் . அனைத்துப் பதிவுகளையும் வாசித்துவிட்டு வருகிறேன் . அறிமுகத்திற்கு நன்றி !

    ReplyDelete
  108. என்னையும் இணைத்ததற்கு நன்றி

    ReplyDelete
  109. கவிதை தொகுப்புக்கும் நன்றி
    நல்லதொரு சமையல் தொகுப்பு நன்றி ஜெய்லானி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது