07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 27, 2010

என் தோட்டத்து மலர்கள்

வலைச்சரத்தில் மலர் தொடுக்க வாய்ப்பளித்ததற்காக வலைச்சரக்குழுவிற்கு எனது நன்றிகள். இவ்வாரம் நான் வலைச்சரத்தில் வலைப்பூக்கள் கொண்டு மாலைக்கட்ட போகிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூக்கள் கொண்டு மாலை தொடுக்க திட்டம். இன்று என் தோட்டத்து மலர்கள்.

ஒவ்வொரு வலைப்பூவை வைத்தும், அந்த வலைப்பூவின் சொந்தக்காரர் பற்றி அறிந்துக்கொள்ளலாம். அவருடைய ஆர்வங்கள், திறமைகள், பண்புகளை பற்றி அறிந்துக்கொள்ளலாம். போலவே என் வலைப்பூவும்.

ஆரம்பத்தில் நகைச்சுவையை மையமாக வைத்து நிறைய பதிவுகள் எழுதியிருக்கிறேன். chaos தியரி பற்றி எழுதிய இப்பதிவு எனக்கு ஸ்பெஷல். ஆனந்த விகடனில் இதை வெளியிட்டு இருந்தார்கள்.

கதைகள் எழுதவும் முயற்சி செய்ததுண்டு. அப்படி ஒரு முயற்சி, இண்டர்வியூ செல்லும் ஒருவனைப் பற்றிய கதை. நன்றாக இருந்ததாகவே அப்பொழுது நண்பர்கள் சொன்னார்கள். நீங்களும் படிச்சிட்டு சொல்லுங்க.

பெரும்பாலும் நகைச்சுவை அனுபவங்கள் சார்ந்தே கதைகள் எழுதியிருக்கிறேன். கன்சல்டன்சி, சரக்கும் சைடு டிஷ்ஷும், காத்திருந்து காத்திருந்து, ட்டுடூர்ர்ர்ர், சாவுடன் ஒரு பந்தயம் போன்ற இந்த கதைகளை வாசித்தால் நீங்கள் சிரிக்க வாய்ப்பிருக்கிறது. அன்றைய காலக்கட்ட சூழலை பொறுத்து எழுதிய கதை - விடாது வெறி!!!

வலைப்பூ தொடங்க காரணமாக இருந்த வாசிக்கும் பழக்கம் இன்னும் தொடர்கிறது. எப்பொழுதும் ஒரு புத்தகத்துடனேயே வாழ்வது பழக்கமாகிவிட்டது. அவ்வப்போது அப்படி வாசிப்பதை பதிந்திருக்கிறேன். என் இனிய இயந்திரா, துணையெழுத்து, கனவு தொழிற்சாலை, பெரியார், எம்.ஆர்.ராதா, கலைவாணர், சந்திரபாபு, ரஹ்மான், 2 ஸ்டேட்ஸ் என வாசித்து பகிர நினைத்தவை அனைத்தையும் பகிர்ந்திருக்கிறேன்.

வாசித்து பதிந்த எல்லா புத்தகங்களையும் இங்கே காணலாம்.

அடுத்ததாக சுதந்திரமான பயணங்கள் ரொம்பவும் பிடிக்கும். ஊர் ஊராக சுற்றியதை அவ்வப்போது பதிந்திருக்கிறேன்.

கன்னியாகுமரி, மணப்பாடு, கொற்கை, ராமேஸ்வரம், தஞ்சை, ஒகேனக்கல், பூனே, டெல்லி, ஆக்ரா என்று சென்ற வந்த இடங்களையெல்லாம் புகைப்படத்துடன் பதிவிட்டு இருப்பதால், அந்த நினைவுகள் தொலைந்து போகாமல் இருக்கிறது. ப்ளாக்கர் இருக்கும் வரை இருக்கும். :-)

பாட்டு கேட்பது இன்னொரு முக்கியமான விஷயம். பொழுதுபோக்கு என்று சொல்ல முடியாது. வேலை நேரத்திலும் கேட்க பிடிக்கும். கேட்ட பாடல்களை பற்றி நானே நிறைய எழுதியிருந்தாலும், நண்பர் மகேந்திரன் எனது தளத்தில் எழுதியிருக்கும் இசை தொடர்பான கட்டுரைகள் பிரபலமானவை. வாசிக்க தவறாதீர்கள்.

நீங்கள் உணவு ரசிகர் என்றால், இப்பதிவையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பக்கத்தையும் பாருங்கள். உபயோகமாக இருக்கலாம்.

இனி வரும் நாட்களில் நான் ரசித்த, வாசித்த மற்ற தோட்டத்து மலர்களை, உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

நன்றி.

12 comments:

  1. இவற்றில் பல நான் ஏற்கனவே ரசித்த மலர்கள். மற்றதை சென்று பார்க்கின்றேன். தேர்ந்தெடுத்து தந்திருக்கும் சுட்டிகளுக்கு நன்றி.

    வலைச்சர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அன்பின் சரவண குமர

    சுய அறிமுகம் அருமை - அனைத்தையும் சென்று பார்க்கிறேன்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  3. வலைப்பூ தொடங்க காரணமாக இருந்த வாசிக்கும் பழக்கம் இன்னும் தொடர்கிறது. எப்பொழுதும் ஒரு புத்தகத்துடனேயே வாழ்வது பழக்கமாகிவிட்டது.

    ஏற்கனவே படித்த தளம் தான் உங்களுடைய எழுத்துக்கள். ஒத்த சிந்தனைகள்.

    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சரவணகுமார் வாழ்த்துக்கள்.மலர்கள் அருமை.தொடருங்கள்.

    ReplyDelete
  5. நண்பரே! தங்களின் அறிமுகமே அமர்கலமாக இருக்கிறேதே. நீங்கள் சுட்டிக்காட்டிய அனைத்தையும் படிக்க தூண்டுகிறது. உடனே சென்று படிக்கிறேன். நன்றி நண்பா!

    ReplyDelete
  6. நான் முதன் முதலில் பார்த்த தமிழ்பிளாக் உங்களுடையதுதான். தற்போதுதான் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்துள்ளேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  8. S
    Nanum first first ungaludaya blog than padichen romba pidichurunthuthu
    enoda friends kita elam soli eruken
    neenga elutharathu romba nalla erukunu
    then
    Mahendran Sir isai pakkam enoda favourate
    Congrajulations, Best Wishes for U

    ReplyDelete
  9. நீங்கள் அறிமுகப்ப்டுத்திய தோட்டத்து ம்லர்கள் எல்லாம் அருமை.
    சமையல் பட்டியல் சூப்பர் (எங்கு என்ன சாப்பிடலாம்)

    ReplyDelete
  10. வலைச்சர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி...

    ReplyDelete
  12. சரவணக்குமரன் வாழ்த்துக்கள்.. அருமையான ஆரம்பம்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது