07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 28, 2010

இன்னிசை மலர்கள்

முன்பே சொன்னதுபோல், பாட்டு கேட்பது ரொம்ப பிடித்த விஷயம். அதேப்போல் பாடல்களைப் பற்றி எழுத்துக்களும் பிடிக்கும். இன்று இசை தொடர்பான பதிவுகளைப் பார்க்கலாம்.

ரவிஷங்கர் எழுதும் இளையராஜாவின் பாடல்கள் தொடர்பான பதிவுகளை படித்துவிட்டால், உடனே அந்தந்த பாடல்கள் கேட்க தோன்றிவிடும். அதுவும் பாடலில் இந்த இந்த இடங்கள் என்று விநாடி விவரம் சொல்லி அவர் குறிப்பிடும் இசைத்துணுக்குகள் கேட்டால், அவர் எப்படி இப்படி இசையை ஆழ்ந்து கவனிக்கிறார் என்ற ஆச்சரியம் வரும். அவர் இளையராஜாவை வியந்து எழுதியிருப்பார். நான் இவரை வியந்துக் கொண்டிருப்பேன்.

ஷாஜியின் இசைப்பதிவுகள் பற்றி இசை ரசிகர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். மலேசியா வாசுதேவன் பற்றி வந்த சமீபத்திய பதிவு தவறவிட கூடாதது. பதிவு வந்த சில நாட்களிலேயே, மலேசியா வாசுதேவனின் இன்றைய நிலை பற்றிய கட்டுரை ஆனந்த விகடனில் வந்தது.

பாடல் பிறந்த கதையை தெரிந்துக்கொள்வதில் ஆர்வம் உண்டா? எனக்கு உண்டு. கவிஞர் யுகபாரதி ‘முன்னாள் சொற்கள்’ என்ற தலைப்பில் அவருடைய வலைப்பூவில் எழுதி வருவது பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும். அதைப்போல, புகழ்பெற்ற பழைய பாடல்கள் உருவான விதம் பற்றி ஆர்வியின் இந்த தளத்தில் காணலாம். காதலிக்க நேரமில்லை ‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’ பாடலின் சுவாரஸ்ய பிண்ணனி இங்கே இருக்கிறது.

அகி மியூசிக் அகிலனின் வலைத்தளத்தில் இளையராஜா, ரஹ்மான் என இவ்விரு இசை பிரம்மாக்களுடனான அவருடைய அனுபவங்கள் காணக் கிடைக்கிறது.

இசையமைப்பாளர் விவேக் நாராயணின் வலைப்பூ இது. எழுத்தாளர் சுஜாதாவின் கவிதைக்கு இவர் அமைத்துள்ள இசை, இங்கே இருக்கிறது.

ஆனந்த் என்ற இசையமைப்பாளரின் வயலின் வில் வாங்கிய கதை, நீங்களும் வில் வாங்கினால் உதவலாம். டிஜிட்டல் இசை பற்றிய அவருடைய பதிவு, இசையுலகில் தொழில்நுட்ப வளர்ச்சியின் அருமை பெருமையை கூறுவதாக அமைந்துள்ளது.

கவிஞர் மரபின் மைந்தன் முத்தையாவின் வலைப்பூவில், கண்ணதாசன் பற்றிய நினைவுகளுடன் கூடிய பதிவுகள் நிறைய உண்டு. சமீபத்தில் மரணமடைந்த ஸ்வர்ணலதாவுக்கு அவர் அஞ்சலி செய்து எழுதிய பதிவு இது.

டேப் ரிக்கார்டர் காலத்தில், ஒரு கேசட் வாங்கி ஒவ்வொரு படத்தில் இருந்தும் நன்றாக இருக்கும் பாடல்கள் என்று தேர்வு செய்து பனிரெண்டு பாடல்கள் பதிவோம் அல்லவா? இப்ப, அப்படி தேர்ந்தெடுக்க வேண்டுமானால், மோகன் உதவுவார். ஒவ்வொரு மாதமும் சிறந்த பத்து பாடல்கள் வரிசை ஒன்று வெளியிடுவார். போன மாத வரிசை இங்கே.

ஸ்ரீ சரவணகுமார், பாடகி ஜானகியின் தீவிரமான ரசிகர். ஜானகி பாடிய பாடல்களைப் பற்றி பதிவெழுதியவர். சமீப காலங்களில் எழுவதில்லை. தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.

ராகவனும், அமைதிச்சாரலும் தங்களுக்கு பிடித்த பாடலை கேட்டு விட்டு மட்டும் போகாமல், ரசித்த பாடலின் வரிகளை முழு விவரத்துடன் பதிந்தும் வருகிறார்கள்.

பாடல்கள் கொண்டாட்டத்தை கொடுக்கும். மனக்கஷ்டத்தை குறைக்கும். போலவே இப்பதிவுகளும்.

பாடல்களைப் பற்றி இவ்வளவு பதிவுகளைப் பார்த்தோம் அல்லவா? அப்படியே, பாட்டு பாடிக்கொண்டே இன்றைய தினத்தை சிறப்பாக தொடருங்கள் பார்க்கலாம்!!! நாளை உங்களை கவரும் இன்னொரு வகை பூக்களுடன் சந்திக்கிறேன். :-)

21 comments:

  1. இன்னிசை மலர்கள் அருமை.பதிவுலகில் பாட்டும் கேட்கலாம் என்பது மகிழ்ச்சி தானே.

    ReplyDelete
  2. வலைச்சர ஆசிரியருக்கு நல்வரவு.

    மலேசியா வாசுதேவன் வார இதழில் படிச்சுட்டு வருத்தமா இருந்துச்சு.

    வாய் வார்த்தையா யாராவது பேசமாட்டாங்களான்னு ஒரு தவிப்பு.

    எப்படி இருக்குன்னா..... பின்னூட்டம் வராதான்னு பதிவர்கள் நினைப்பது போல!

    ReplyDelete
  3. இதுவரையில் என் கண்ணில் படாத பொக்கிஷங்கள்

    ReplyDelete
  4. இது நாள் வரை இப்படி எல்லாம் வலைப்பக்கங்கள் இருக்கின்றன என்றே தெரியவில்லையே. அவைகளை எங்களுக்காக அறிமுகம் செய்து வைத்ததற்காக நன்றி நண்பரே!

    அருமையாக இருக்கும் உங்களது பணி என்று எதிர்பார்பை தூண்டு விடுகிறது. மிகவும் மகிழ்ச்சி! பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்ல அறிமுகங்கள் நண்பரே. ஒவ்வொன்றாக பார்க்க வேண்டும். ”ராகவனும், அமைதிச்சாரலும்....” என்று கொடுத்து இருக்கும் இரு சுட்டிகளும் ஒரே பதிவினை திறக்கின்றன. சரிதானா? சுட்டிக் காட்டியது தவறென்றால் மன்னிக்கவும்.

    வெங்கட்.

    ReplyDelete
  6. இன்னிசையான மலர்கள்.
    அருமை.

    ReplyDelete
  7. இன்னிசை மலர்கள் அருமை.

    ReplyDelete
  8. நல்ல அறிமுகங்கள் நன்றி!

    ReplyDelete
  9. இன்னிசை மலர்கள் அருமை.

    ReplyDelete
  10. உங்களுடைய இந்தப் பதிவில்,என்னைப் பற்றியும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி சரவணகுமரன்!

    ReplyDelete
  11. இனி முடிந்த போது பாடல்களும் கேட்டு மகிழலாம். நன்றி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. இதான் பாடல்கள் முதல் முறை அறிமுகம் என்றூ நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. நன்றி asiya omar, துளசிம்மா, பிரபு, ஜோதிஜி, வசந்தகுமார், வெங்கட் நாகராஜ், இந்திரா, சே.குமார், எஸ்.கே., தியா, மோகன், Jaleela

    ReplyDelete
  14. இணைப்பு தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி... தவறுக்கு மன்னிக்கவும்... தற்போது அதை சரி செய்துவிட்டேன்.

    ReplyDelete
  15. இன்னிசையான மலர்கள்.
    அருமை.

    ReplyDelete
  16. Ver interesting topic. GOod collections.

    ReplyDelete
  17. நன்றி ஜெய்லானி.

    நன்றி வானதி.

    நன்றி மோகன் குமார்.

    ReplyDelete
  18. அடடா.. கவனிக்காம விட்டுட்டேனே!!.

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி :-)

    ReplyDelete
  19. எவ்ளோ நாளானாலும் சரியென்று நன்றி சொன்னதற்கு நன்றி :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது