07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 30, 2012

எங்கள் சரவெடி 2


    
வலைச்சரம் வாசகப்  பெருமக்களுக்கு    ... 
  
மீண்டும் நினைவுறுத்துகின்றோம், நாங்கள் செய்வது அறிமுகங்கள் அல்ல. பெரும்பாலும் நீங்கள் நன்கு அறிந்த முகங்களை, எங்கள் பார்வையில் எங்கள் கோணத்தில் உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துள்ளோம். 

அ  வில் தொடங்குகிறோம். ஆனால், எந்த வரிசையும் கிடையாது! ராண்டம் தாட்ஸ்! ரண்டக ...  ரண்டக....  ரண்டக  .... ஸ்டார்ட் மியூசிக்!! 
   

மிகவும் ரசிக்கும்வண்ணம் கவிதைகள் எழுதுகிறார். உதாரணத்துக்கு மகள் திருமணம் முடிந்து சென்றதும் வீட்டில் ஏற்பட்ட வெறுமையை, தாய்மையின் தவிப்பைச் சொல்லும் கவிதை. 
      
2) பழனி.கந்தசாமி மூத்த பதிவர்களில் ஒருவர். ஓய்வு பெற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர். லேசான நகைச்சுவையுடன் நல்ல பல பதிவுகள் கொடுப்பவர். இவர் கேட்கும் இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்! இவர் பக்கத்தில் ஆற, அமர படித்து ரசிக்க நிறைய விஷயங்கள் இந்தப் பதிவு  உட்பட!  

3) அமுதவன் பக்கங்கள்     [இவர்களை எல்லாம் பிரபலங்கள் பக்கங்கள் என்ற கேடகரியில் சேர்க்கலாம். இவர் ஒரு எழுத்தாளர் இவருடன் வேணுவனம் சுகா, கடுகு அகஸ்தியன், ஜெயமோகன் போன்றோரைச் சேர்க்கலாம்]
  
சாவி'யால் அறிமுகப் படுத்தப் பட்டு, பல பிரபல பத்திரிகைகளிலும் எழுதிய எழுத்தாளர். சுவாரஸ்யத் தலைப்புகளில் நிறைய எழுதியுள்ளார்.சாம்பிள்.
                
4) வேணுவனம் நெல்லை கண்ணன் புதல்வர் சுரேஷ் கண்ணன் என்கிற சுகாவின் பக்கம். இவர் ஒரு இயக்குனர், பாலு மகேந்திராவின் சிஷ்யர், எழுத்தாளர், இளையராஜாவின் ரசிகர். இவர் எழுதிய அம்மன் சன்னதி'யும், விகடனில் எழுதிய மூங்கில் மூச்சும் படித்தவர்கள் இவர் எழுத்தை மறக்க மாட்டார்கள் 
              
5) சொல்வனம் மாதமிருமுறை சிற்றிலக்கிய மாத இதழ். நீங்கள் கூட உங்கள் படைப்புகளை இங்கு அனுப்பலாம் வேணுவனம் சுகா இங்கு(ம்) எழுதுகிறார். தரமான படைப்புகளை இங்கு படிக்கலாம்.
                  
6) மூன்றாம் பிறை என்கிற இந்தப் பெயரே இது யாருடைய பக்கம் என்பதைச் சொல்லி விடும். ஆம், இயக்குனர், (சுகாவின் குரு) பாலு மகேந்திராவின் வலைப் பக்கம். மிகச் சமீபத்தில் தொடங்கியுள்ளார். 
ஜெயகாந்தன் பற்றிய அவர் எழுத்துகளை இங்கு படிக்கலாம்!
                
7) ஜெயமோகன் பக்கங்கள். அவர் எழுத்தையும், கருத்துகளையும் குறிப்பாகச் சில கதைகளை படிக்க விரும்புபவர்கள் இங்கு சென்று படிக்கலாம். 
               
8) தமிழ் உதயம் சமீபத்தில் இவர் எழுதவில்லை. யோகி என்ற பெயரில் விகடனிலும் கல்கியிலும் கதைகள் எழுதியுள்ளார். மன நலக் கட்டுரைகள், திரைப் பாடல்கள் உட்பட சுவாரஸ்ய எழுத்துகளுக்குரியவரான இவர் சமீபத்தில் ஒன்றும் எழுதவில்லை என்பதோடு, இவர் வலைப் பக்கம் உள்ளே நுழையவே முடியவில்லை. ஏன்  என்று தெரியவில்லை.
               
9) ரிஷபன் இவரைத் தெரியாதவர் இருக்க முடியாது. பல்வேறு பத்திரிகைகளிலும் இவரது கதைகளைப் படிக்கலாம். சிறுகவிதைகள் இவரது ஸ்பெஷல். சமீபத்து ஸ்பெஷல்.
               
10) வை கோபாலகிருஷ்ணன் பல்கலை வல்லுநர். இவர் வலைப்பூவில் விருது மழை. தான் பெற்றவற்றை இதுவரை யாரும் செய்யாத அளவில் 108 பதிவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்த வள்ளல்! சிறுகதை, நீண்ட கதை எழுதுவார். ஓவியங்கள் வரைவார். திருமணம், விழாக்களுக்குப் பரிசளிக்க தானே புதுவிதமாக யோசித்துப் பரிசுகள் தயார் செய்வார். ஆன்மீகப் பதிவுகள் இடுவார். சாப்பாட்டு ரசிகர். பிரமிக்க வைப்பவர். இவரின் இந்த உப்பு சீடைக் கதை சம்திங் ஸ்பெஷல்!    
                  
11) நாச்சியார் மூத்த பதிவர். அன்புக்கு ஒரு எடுத்துக் காட்டு ஒவ்வொரு பதிவையும் 'எல்லோரும் இனிதாக வாழவேண்டும்' என்ற வாழ்த்துடனேயே முடிப்பது இவரின் சிறப்பு. பின்னூட்டங்களிலும் இவரது அன்பு வெளிப்படும்.  இவருடன் பேசியவர்களுக்குத் தெரியும் இவரின் குரலில் இருக்கும் அக்கறையும், அன்பும். சமீபத்திய பதிவர் மாநாட்டில் மூத்த பதிவர் விருது வாங்கியவர்.  துளசி கோபால் தம்பதிகளின் அறுபதாம் திருமணத்தை பொறுப்பேற்று சிறப்பாக நடத்திக் கொடுத்தவர். இவரது பதிவுகளைப் படிக்கும்போது உடன் அமர்ந்து உரையாடுவது போன்ற உணர்வு ஏற்படும்.
      
12) 13) 14) வெங்கட் நாகராஜ் தலைநகரிலிருந்து தமிழ் பரப்பும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் இவர்துணைவியாரும் ஒரு வலைப்பதிவர். ஏன், மகளும் கூட! இவரது ஃப்ரூட் சாலட்பயணக் கட்டுரைகளும்  சுவையானவை. 
               ==========   =========== =============
பதிவுலகம் பற்றி சில ருசிகரத் தகவல்கள்: 
               
தமிழ் வலைப் பூக்கள் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி): ப்ளாகர் தளங்கள் : 6800. 
      
அவற்றில் ஒரே ஒரு பதிவு மட்டும் பகிர்ந்து, பிறகு எழுதாமல் விடப்பட்ட தளங்கள் சுமார் 2500. 
     
ஒற்றை இலக்க  பதிவிட்டவர்கள் மேலும் 2500. 
               
நாளை பார்க்கலாமா? 
                      

35 comments:

  1. அன்பு எங்கள் ப்ளாக்.
    இத்தனை பெரியவர்களைப் பற்றிப் பதிந்த கையோடு என் வலைப்பூவையும் சொன்னது உங்கள் பெருந்தனமை. மிக மிக நன்றி மா.

    ReplyDelete
  2. அனைத்தும் சிறந்த தளங்கள்...

    மூன்றாவது தளம் எனக்கு புதிய தளம்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    முடிவில் புள்ளி விவரங்கள் வியப்பைத் தந்தன...
    tm2

    ReplyDelete
  3. அழகான தொகுப்பு. சுகா அவர்கள் எழுதியது ‘தாயார் சன்னதி’.

    தொடருங்கள்.

    ReplyDelete
  4. பெரும்பாலும் அறிமுகங்கள் என்றே சொல்வேன். நன்றி.

    ReplyDelete
  5. சிலது புதிதாக இருக்கின்றன. படிக்கிறேன்.

    புள்ளிவிபரங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  6. வலைச்சரத்தில் “எங்கள் வாரம்” மா??வாழ்த்துக்கள்.பதிவுலகம் பற்றிய தகவல்கள் ருசிகரமாக இருக்கு. நன்றி.

    ReplyDelete
  7. அருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வலைச்சரம் வலைப்பூவிற்கு, இந்தப் பதிவிற்கு இதுவரை வருகை தந்து, வாழ்த்திய, வாசகர்கள், பதிவர்கள் வல்லிசிம்ஹன், திண்டுக்கல் தனபாலன்,ராமலக்ஷ்மி, அப்பாதுரை, இமா, ரமாரவி எல்லோருக்கும் எ பி ஆ கு இரண்டாவது வட்டம் சார்பாக என் நன்றி!

    ReplyDelete
  9. நன்றி கோவை மு சரளா.

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. புதிய புள்ளி விவரங்கள் இல்லையா ? எக்ஸ்பீரியன்ஸ்டு ப்ளாக்கர்ஸ் ! தொடர்ந்து தங்கள் அனுபவங்களை வாரி வழங்கும் உள்ளங்களுக்கு எனது நன்றி.

    ReplyDelete
  12. முத்தான பதிவர் அறிமுகங்கள் அருமை.

    ReplyDelete
  13. 12 13 14 என்று சுருக்கமாக முடித்ததற்கு தலை நகரில் போராட்டம் நடத்தப்படும்...

    புள்ளி விபரங்கள் கொடுத்து அசத்தியத்தில் எங்கள் பிளாக் அடுத்த ரமணா....

    பல தளங்கள் இந்த சிறுவனுக்கு தெரியாதவை தெரிந்து கொள்கிறேன் சார்

    ReplyDelete
  14. என்னையும் உங்கள் அன்பில் இணைத்துக் கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  15. என்னுடைய அமுதவன் பக்கங்கள் தளத்தையும் தங்கள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருப்பதற்கு நன்றி. எத்தனையோ விதமான தமிழ்ச் சேவைகள். அதில் இணையம் மூலம் நீங்கள் செய்யும் சேவையும் பாராட்டுக்குரிய ஒன்று.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. //10) வை கோபாலகிருஷ்ணன் பல்கலை வல்லுநர். இவர் வலைப்பூவில் விருது மழை. தான் பெற்றவற்றை இதுவரை யாரும் செய்யாத அளவில் 108 பதிவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்த வள்ளல்! சிறுகதை, நீண்ட கதை எழுதுவார். ஓவியங்கள் வரைவார். திருமணம், விழாக்களுக்குப் பரிசளிக்க தானே புதுவிதமாக யோசித்துப் பரிசுகள் தயார் செய்வார். ஆன்மீகப் பதிவுகள் இடுவார். சாப்பாட்டு ரசிகர். பிரமிக்க வைப்பவர். இவரின் இந்த உப்பு சீடைக் கதை சம்திங் ஸ்பெஷல்!//


    என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய வலைச்சர ஆசிரியர், [எங்கள் ப்ளாக்] திரு. கே.ஜி.கெளதமன் சார் அவர்களே, வணக்கம்.

    முதல் நாள் தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள பிரபல பதிவுலக ஜாம்பவான்களுடன், மிகச் சாதாரணமானவனாகிய அடியேனையும் இணைத்து, “பல்கலை வல்லுநர்” எனச்சொல்லி சிறப்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    அதற்கு என் முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தொடரும் >>>>>>>>

    ReplyDelete
  17. //இவர் வலைப்பூவில் விருது மழை. தான் பெற்றவற்றை இதுவரை யாரும் செய்யாத அளவில் 108 பதிவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்த வள்ளல்! //

    அடடா! காசா பணமா செலவு?

    யார் யாரோ எனக்கு மீண்டும் மீண்டும் இதே 2012 ஆம் ஆண்டு மட்டுமே 12 முறைகள் விருதுகள் அளித்து கெளரவித்தனர்.

    அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவே நிறைய பதிவுகள் எழுதும்படி ஆனது.

    கடைசியாகக்கிடைத்த 10, 11 + 12 ஆகிய மூன்று விருதுகளையும், ஒவ்வொன்றையும் 108 பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    என்னுடைய பதிவுலக நட்பு வட்டம் சற்றே பெரிதாக அமைந்து விட்டதால், என்னுடன் பழகிய அனைவருக்கும் என் மூலம் ஏதாவது ஒரு விருதாவது போய்ச்சேர வேண்டும் என்ற ஆவலில் அது போல மூன்று முறை செய்தேன்.

    தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள பதிவினில் 108 பதிவர்களின் பெயர்கள் மட்டுமே இருக்கும்.

    அடுத்ததில் பதிவர் பெயரும் அவர்களின் வலைத்தளமும் இருக்கும். இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

    மூன்றாவதில், பதிவர் பெயர், வளைத்தள முகவரி மற்றும் அவர்களின் லோகோ படம் என அனைத்துமே இருக்கும். டெலிபோன் டைரக்டரி போன்று மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் விதமாகச் செய்திருந்தேன்.

    இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

    இவ்வளவும் தூரம் திட்டமிட்டு செய்தும், என் அன்புக்குரிய ஒருசில பதிவர்களின் பெயர்கள் விடுபட்டுத்தான் போய் உள்ளன. அதற்காக நான் வருத்தப்படுவது உண்டு.

    >>>>>>>>>>

    ReplyDelete
  18. //சிறுகதை, நீண்ட கதை எழுதுவார். ஓவியங்கள் வரைவார். திருமணம், விழாக்களுக்குப் பரிசளிக்க தானே புதுவிதமாக யோசித்துப் பரிசுகள் தயார் செய்வார். ஆன்மீகப் பதிவுகள் இடுவார். சாப்பாட்டு ரசிகர். பிரமிக்க வைப்பவர்.//

    ஏதேதோ சொல்லி, கடைசியில் என்னை ஓர் ”சாப்பாட்டுராமன்” என்றும் சொல்லி, தாங்களும் பிரமிக்கத்தான் வைத்து விட்டீர்கள். ;))))))

    என் சாப்பாடு விஷயத்தைப்பற்றி அறியாதவர்கள் அறிய மட்டும் இதோ இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_26.html
    உணவே வா ... உயிரே போ [நகைச்சுவைக் கட்டுரை]

    >>>>>>>>>>

    ReplyDelete
  19. //இவரின் இந்த உப்பு சீடைக் கதை சம்திங் ஸ்பெஷல்!//

    ஆஹா! இந்தத்தங்களின் அறிமுகம் வெல்லச்சீடையாக இனிக்கிறது எனக்கு.

    ஸ்பெஷல் தாங்க்ஸ், சார்.

    >>>>>>>>>>

    ReplyDelete
  20. எனக்கும் உங்களுக்கும் ஓர் பாச இணைப்பாக அமைந்த என் ஒருசில பதிவுகளைத் தாங்கள் குறிப்பிடாமல் போனது, தங்களின் தன்னடகத்தையே காட்டுகிறது.

    மற்றவர்களுக்காக மட்டுமே இதோ அதன் இணைப்புகள் கொடுத்துள்ளேன்:

    http://gopu1949.blogspot.in/2011/07/blog-post.html
    சிந்தனைக்கு சில துளிகள் பகுதி-1

    http://gopu1949.blogspot.in/2011/07/2_23.html
    சிந்தனைக்கு சில துளிகள் பகுதி-2

    http://gopu1949.blogspot.in/2011/07/3_30.html
    சிந்தனைக்கு சில துளிகள் பகுதி-3

    >>>>>>>>>>

    ReplyDelete
  21. இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    தங்களுக்கும் என் பாராட்டுக்களும், நன்றிகளும்.

    குறிப்பாக என் எழுத்துலக மானஸீக குருநாதரும், என் நலம்விரும்பியுமான திரு. ரிஷபன் சார் அவர்களுக்கு அடுத்ததாக என் பெயரைச் சுட்டிக்காட்டியுள்ளது எனக்கு மிகவும் பெருமையாக இருக்குது.

    பெரும் மகிழ்ச்சியாக இருக்குது.

    அதற்கு மட்டுமே தங்களுக்கு ஓர் ஸ்பெஷல் தாங்க்ஸ் சார்.

    -oOo-

    ReplyDelete
  22. சிறந்த தளங்கள்
    அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  23. நல்ல நல்ல அறிமுகங்கள். தொடரும் ‘எங்கள்’ அமர்க்கள அறிமுகங்களுக்காக ஆர்வமுடன் தொடர்கிறேன்.

    ReplyDelete
  24. முதல் மூவரைக்குறித்து நிஜம்மாவே இன்று வரை தெரியாது. மற்றப் பதிவர்கள் தெரிந்தவர்களே. சுகாவின் கட்டுரை ஒன்றை நேற்றுக்கூட(முந்தாநாள்??) ஜி+ல் படித்து ரசித்தேன். வல்லி சிம்ஹனை அறிமுகம் செய்யவேண்டிய அவசியம் இல்லைனாலும் அவரைச் சொல்லாத வலைச்சரப் பதிவே இருக்காது. அந்த அளவுக்கு அனைவரிடமும் தன் அன்பைக் கொட்டி இருக்கிறார். எடுக்க எடுக்கக் குறையாத அக்ஷய பாத்திரம். இங்கே இடம் பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. Dear Sir,

    தாங்கள் தினமும் அறிமுகப்படுத்தும் பதிவர்களுக்கு மட்டுமாவது அவர்களின் சமீபத்திய இடுகைகளின் பின்னூட்டப்பெட்டியில் தகவல் தெரிவித்து, வலைச்சர இணைப்பையும் கொடுத்தால் நல்லது.

    வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்பவர்களில் பெரும்பாலானோர் இதுபோல செய்வதே வழக்கம்.

    எனக்கு இன்று இதுவரை தகவல் ஏதும் வராததாலும், தங்களுக்கு இதுவிஷயம் தெரியுமோ தெரியாதோ என்பதாலும் மட்டுமே இதை இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  26. வலைச்சரத்தின் இந்தப் பதிவிற்கு வருகை தந்து, கருத்துரைத்த வாசகர், பதிவர்கள் அமைதிச்சாரல், கலாகுமரன், சசிகலா, சீனு, ரிஷபன், அமுதவன், வை. கோபால கிருஷ்ணன், இராஜராஜேஸ்வரி, பால கணேஷ் ஆகியோருக்கு எ பி இரண்டாம் வட்டம் சார்பில் நன்றி.

    ReplyDelete
  27. வை. கோபாலகிருஷ்ணன் சார், விவரமான கருத்துரைகளுக்கு எங்கள் சிறப்பு நன்றி.

    //அறிமுகப்படுத்தும் பதிவர்களுக்கு மட்டுமாவது அவர்களின் சமீபத்திய இடுகைகளின் பின்னூட்டப்பெட்டியில் தகவல் தெரிவித்து, வலைச்சர இணைப்பையும் கொடுத்தால் நல்லது. //
    ஆமாம் - சரிதான். இன்று முதல் முயற்சி செய்கிறோம்.

    ReplyDelete
  28. நான் அறியாத பல அரிய வலைப்பூக்களையும், அரிய பல தகவல்களையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! தொடருங்கள்!

    ReplyDelete
  29. நன்றி திரு எஸ் சுரேஷ். இன்னும் நிறைய வலைப்பூக்கள் வரும் நாட்களில் பதிகின்றோம்.

    ReplyDelete
  30. எங்கள் குடும்பத்தையே அறிமுகம் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி + நன்றிகள்.

    பதிவுலக ருசிகர தகவல்கள் சுவாரசியமாக இருந்தது. தொடருங்கள்.

    ReplyDelete
  31. அட அட ஸ்டார்ட் ம்யூசிக்... ரண்டக்க ரண்டக்க... தொடக்கம் சூப்பர்ப்பா....

    பெரிய பெரிய ஜாம்பவான்களில் அறிமுகம் அசத்தல்பா....

    இதில் நான் அறிந்தவர் வல்லிம்மா, வை.கோ அண்ணா, ரிஷபன், வெங்கட், ஆதிவெங்கட்....

    மீதி பேர்களின் வலைப்பூ எல்லாம் சென்று பார்க்கிறேன்பா...

    மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் அசத்தலான இரண்டாம் நாள் சரவெடிக்கும்.. அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்...

    ReplyDelete
  32. மொத்தமாக எங்கள் குடும்பம் வலைச்சரத்தில் அறிமுகம் - எங்கள் பிளாக் குடும்பத்தின் மூலம்....

    மிக்க நன்றி.

    சீனு - போராட்டம் நீங்களே நடத்துவீங்க போல :))

    ReplyDelete
  33. மிகப் பெரிய ஜாம்பவான்கள் இன்று இடம்பெற்றுள்ளனர்.

    தொடருங்கள்...

    ReplyDelete
  34. என் நன்றியை எப்படி முழுமையாக சொல்வது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  35. //பதிவுலகம் பற்றி சில ருசிகரத் தகவல்கள்:

    தமிழ் வலைப் பூக்கள் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி): ப்ளாகர் தளங்கள் : 6800.

    அவற்றில் ஒரே ஒரு பதிவு மட்டும் பகிர்ந்து, பிறகு எழுதாமல் விடப்பட்ட தளங்கள் சுமார் 2500.

    ஒற்றை இலக்க பதிவிட்டவர்கள் மேலும் 2500. //

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    புள்ளிவிபரங்கள் என்னை புல்லரிக்க வைக்கிறது.

    அன்புடன்
    VGK

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது