➦➠ by:
* அறிமுகம்
சென்று வருக சிவஹரி - வருக வருக ”எங்கள் பிளாக்” கௌதமன்
அன்பின் சக பதிவர்களே !இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் சிவஹரி - பணிச்சுமையின் காரணமாக இன்று நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
பணிச்சுமைக்கு இடையேயும் - தான் ஏற்ற பொறுப்பினை - இடை விடாத முயற்சியுடனும் கடும் உழைப்புடனும் - வெற்றிகரமாக - மன நிறைவுடன் நிறைவேற்றி இருக்கிறார். வலைச்சரத்தில் இத்தனை பதிவர்களையோ - இத்தனை பதிவுகளையோ யாரும் அறிமுகப் படுத்தியதில்லை என நினைக்கிறேன் .
இவர் எழுதிய பதிவுகள் : 9 ( ஆறு நாட்களீல் )
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 101
அறிமுகப் படுத்தப்பட்ட பதிவுகள் : 370
பெற்ற மறுமொழிகள் : 250
இவர் எழுதிய விதமும் புதுமையாக இருந்தது. ஒவ்வொரு பதிவும் புதுப் புது தலைப்புகளைக் கொண்டது - அத்தலைப்புகளின் அடிப்படையில் பதிவர்களும் பதிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்தனை பதிவர்களும் புதிய பதிவர்கள் - அவர்களீன் தளங்களோ பெரும்பாலும் புதிய தளங்கள் - இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப் படாத தளங்கள் . உண்மையிலேயே இணையத்தில் அதிக நேரம் செலவழித்திருக்கிறார். தேடிக் கண்டு பிடித்து அறிமுகப் படுத்திய சாதனை பிரமிக்க வைக்கிறது.
நண்பர் சிவஹரியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
வருகிற 29.10.2012 திங்கள் முதல் ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் கே ஜி கௌதமன். இவர் எங்கள் பிளாக் என்னும் தளத்தினில் உறவினர்களுடன் சேர்ந்து எழுதி வருகிறார்.
இவர் முதலில் பெற்றது பொறியியல் டிப்ளமோ. பிறகு அசோக் லேலண்டில் சேர்ந்து, அதற்குப் பின் A M I E (Appeared Many times In Exams) பகுதி நேர படிப்பாக எடுத்து, போராடி வென்று, அசோக் லேலண்டில் அப்ரெண்டிஸ் முதல் மேலாளர் பதவி வரை வந்து, பிறகு விருப்ப ஓய்வு பெற்றவர்.
அசோக் லேலண்டில் ஆராய்ச்சி & அபிவிருத்திப் பகுதியில் முப்பத்து இரண்டு வருடங்கள் குப்பை கொட்டியவர்.
படித்த காலத்திலும், வேலை பார்க்க ஆரம்பித்த காலத்திலும் கையெழுத்துப் பத்திரிகை எழுதி, நண்பர்களிடம் படிக்கக் கொடுத்து, அவர்களின் பாராட்டைப் பெற்றது, பின்னாட்களில் வலைப்பூ ஆரம்பிக்க ஊக்கம் அளித்த விஷயம்.
இருப்பது - மார்கழி தவிர மற்ற மாதங்களில் பெங்களூர்;.மார்கழியில் சென்னை. இசைவிழா கச்சேரிகளில் காதால் இசை பருகி (ஆமாம், ஆமாம், பெரும்பாலும் ஓ சி கச்சேரிகள்தாம்), காண்டீன்களில் செவிக்கு உணவு இல்லாத நேரங்களில் வயிற்றுக்கு ஈந்து (ஹூம் இங்கே ஓ சி சாப்பாடு எல்லாம் கிடையாதுங்கோ) வாழ்ந்து கொண்டிருப்பவர்.
” எங்கள் ப்ளாக் ” தளத்தின் சக ஆசிரியர்களான ராமன், கே ஜி, ஸ்ரீராம், காசு சோபனா எல்லோரும் இவரின் சொந்த, பந்தங்களே.
அருமை நண்பர் கவுதமனை வருக வருக என வரவேற்று வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பினில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் சிவஹரி
நல்வாழ்த்துகள் கே ஜி கவுதமன்
நட்புடன் சீனா
|
|
சிவஹரி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... பல பயனுள்ள தளங்களை அறிமுகம் செய்துள்ளார்... படிக்க தான் நேரம் வேண்டும்... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஎங்கள் பிளாக்... அது எங்கள் பிளாக்...
கே ஜி கௌதமன் சார்... கலக்கல் ஆரம்பம் ஆகட்டும்... வாழ்த்துக்கள்...
நன்றி...
tm1
கடந்த வாரம் கலக்கிய சிவஹரி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த வாரம் கலக்க போகும் எங்கள் பிளாக்.கே ஜி கௌதமன் சார்..அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
எல்லாருமே எங்கள் பிளாகின் சொந்த பந்தங்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் kgg.
ReplyDeleteகடந்த வார ஆசிரியர் சிவஹரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த வார ஆசிரியர்(கள்) எல்லோருக்கும் இனிமையான வரவேற்புடன் கூடிய வாழ்த்துக்கள்.
வரவேற்ற தலைவர் சீனாவுக்கும், வாழ்த்தி அமர்த்திய உள்ளங்களுக்கும் எங்கள் ஆசிரியர் குழு சார்பாக எந்தன் நன்றி.
ReplyDelete
ReplyDeleteநல்வாழ்த்துகள் Mr. சிவஹரி Sir.
நல்வாழ்த்துகள் Mr. கே ஜி கவுதமன் Sir
நட்புடன் VGK
எடுத்துக்கொண்ட பணியினை சிறப்பாக அதே சமயம் விரைவில் முடித்த அன்புத்தம்பி சிவஹரிக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள்....
ReplyDeleteஇந்தவாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்கும் எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவினருக்கு மனம் நிறைந்த அன்பு வரவேற்புகளுடனான அன்புவாழ்த்துகள்...
கே ஜி கௌதமன், ஸ்ரீராம், காசு ஷோபனா அனைவருக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...