நான்காம் நாள் பதிவு - சிவஹரி - பதிபக்தியில் அருந்ததி
➦➠ by:
சிவஹரி
ஏழு என்பது வேத மரபில் முக்கியமான எண்ணாகக்
கருதப்படுகின்றது. ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என்று வேதம்
அறிந்தோர் விளக்குகின்றார்கள்.
ஒரு கால கட்டத்தில் பூமியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஏழு முனிவர்களான அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன் ஆகியோர் தான் வானில் ஏழு நட்சத்திரங்களாக ஒளி வீசுகின்றார்கள் என்றும் படைப்புகள் தெரியப்படுத்துகின்றன.
கீற்று இணையத்தின் வழியே பெறப்பட்ட மேலே இணைத்திருக்கும் படத்தின் வழி திருமணத்தில் நடத்தப்படும் ஒரு சடங்கினைப் பற்றி அறிந்து கொள்வோமே!
இன்றைய கால கட்டத்தில் திருமணங்கள் என்பது மிகப் பெரிய அளவில் நடத்திடுவதே கௌரவம் என்று நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதிலும் பார்ப்பனச் சடங்குகளின் படி நடைபெறும் திருமணங்களில் குறிப்பிடத்தக்கதொரு சடங்கு ”அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது”.
படத்தில் காட்டப்பட்டிருக்கும் நட்சத்திர தொகுப்பினில் ஆறாவதாய் இருப்பவரே வசிட்ட மாமுனி. அவரோடு சேர்ந்திருப்பது அவரது மனைவி அருந்ததி. மற்ற முனிவர்கள் எல்லாம் ரம்பா, மேனகா, ஊர்வசி போன்ற வனதேவதைகளின் பால் மயங்கியதாகவும், அதே போல் மற்ற முனிவர்களின் மனைவியர் தேவேந்திரனின் அழகில் மயங்கியதாகவும் சரித்திரக் கதைகள் நமக்கு தெரிவிக்கின்றன.
ஆனால் வசிட்ட மாமுனியும், அவரது மனைவியுமான அருந்ததியும் விதிவிலக்கானவர்கள். என்றுமே இணைந்தே இருப்பவர்கள். அவர்களைப் போல மணமகனும், மணமகளும் இணைந்தே இருத்திட வேண்டும் என்பதற்காகத் தான் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு நடத்தப் படுகின்றது.
திருமணத்தின் போது நல்லநாள், பிறந்த நட்சத்திரங்களின் பொருத்தம், நல்ல நேரம், ஜாதகப்பெருத்தம் பார்பதைவிட தம்பதிகளின் மனப்பொருத்தம், மருத்துவ ரீதியான சோதனைகள் பார்ப்பது தம்பதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.
இந்த விடயத்தை அறிந்து கொண்டே நாம் சுப.நற்குணன் அவர்களின் திருத்தமிழ் வலைப்பூவிற்குள் சென்று வருவோம். வாரீர்
மலேசிய எழுத்தாளரான வலைப்பூவின் ஆசிரியருக்கு தமிழின் மீது அளவுகடந்த பற்றிருப்பதை அவரது இயல்பான எழுத்து நடையின் வழியே அறிய முடிகின்றது. சமீபத்தில் மலேசியாவில் தமிழினை கட்டாயப் பாடமாக்குவது குறித்து மலேயப் பிரதமர் அறிவிப்பொன்றை விடுத்திருந்தார் தான! மலேயப் பள்ளிகளில் தமிழினை கட்டாயப் பாடமாக்கினால் ஏற்படும் விளைவுகளை இக்கட்டுரையின் வழியே எடுத்துரைக்கின்றார்கள்.
தமிழ்க் கட்டாயப் பாடம்:- பேராபத்து நிறைந்த பரிந்துரை
அத்தோடான்றி கட்டாயாப் பாடமின்றி எளிதான முறையில் கற்றிட பத்து திட்டங்களை நமக்கு அளிக்கின்றார்கள்.
கட்டாயப் பாடம் இல்லாமலே தமிழ் படிக்க 10 திட்டங்கள்
இடையிடையே நாட்டுப்புற பாடல்களை நமக்குத் தந்து களைப்பினைப் போக்குவதோடு மட்டுமின்றி தரவதனை எதிர்கால சந்ததியினருக்கும் சேமிக்கின்றார்கள்.
நாட்டுப்புறப் பாடல்(2) – சிறுவர் பாட்டு
இவர்களைப்
பற்றிச் சொல்ல வேண்டுமானல் கிராமத்து மணம் பரப்பும் கீழ்திசைக் காற்று.
எளிமையும், பக்தியும் இவரது பதிவுகளில் இருப்பதைக் காணலாம். எந்த விதமான
அலட்டலோ, ஆர்ப்பாட்டங்களோ இல்லாமல் தன்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் “கூடி
வாழ்ந்தால் கோடி நன்மை என எண்ணுபவள்... பிடித்த மேற்கோள். வாழ்க்கை
தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக.” இவ்வாறு
குறிப்பிட்டுருப்பதை ஈண்டு நோக்கத்தக்கது.
முத்துக் கருப்பாயி ஆச்சியினைப் பற்றி இவ்வளவு தான் என்று நான் நினைத்திருக்க கடந்த தினங்களுக்கு முன் அவர்கள் குறித்த ஒரு பதிவினை சகோதரம் தேனம்மை லக்க்ஷ்மணன் அவர்களின் வலைப்பூவிலே கண்டேன்.
இணைப்பு இதோ
வயது ஒரு தடையல்ல..
சாதனைக்கு வயது ஒரு தடையே அல்ல என்று தேனீயாய் உழைக்கும் அவர்களது வலைப்பூவில் சில பதிவுகளை உங்களின் பார்வைக்காக வைத்திட விரும்புகின்றேன்.
தாமரையில நூலெடுத்து
தாலாட்டு.
என்ன நாஞ்சொல்லுறது?! 1
எங்கள் குழந்தைகளின் அப்பத்தாவீட்டு ஐயா
நா.சுரேஸ்குமார் அவர்களின் அறிவுக்கடல் வலைப்பூவில் கணினி குறித்தும், வாழ்வியல் குறித்தும் நிரம்பிக்கிடக்கின்றன. அவற்றை நாமும் பருகிடுவோமே!
Control Panel - Add / Remove Programs-ல் அப்ளிகேஷன்களை மறைக்க
தெரிந்து கொள்ளவேண்டிய இணையதள டிப்ஸ் (INTERNET TIPS)
ரன்பாக்ஸ்(Run Box) மூலம் அப்ளிகேஷன் புரோகிராம் (Computer Tips-5)
வாழ்வில் வெற்றிபெற தியானம் செய்!!
இளைஞசர்களை சீரழிக்க இணையத்தில் பரப்பிவிடப்படும் ஆபாசங்கள்
ஓய்வு
பெற்ற தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக பேராசியர் பழனி.கந்தசாமி
அவர்களின் வலைப்பதிவில் பற்சுவைகளும் குழுமியிருக்கின்றன. இயற்கை விவசாயம்
குறித்த ஆசிரியர் அவர்களின் கருத்துகள் என்றும் விவசாயத் தொழில்
முனைவோருக்கு உதவிடும் விதமாக அமைந்திருப்பது கூடுதற் சிறப்பு.
இயற்கை விவசாயம் என்றால் என்ன?
இயற்கை விவசாயம் - கூடுதலாக சில சிந்தனைகள்
நகைச்சுவை உணர்வுடன் களிமண் குறித்து விளக்கிய பதிவினை படித்து அதிர சிரித்து விட்டேன்.
தலைல என்ன களிமண்ணா இருக்கு?
பத்திரிக்கையாளர் வ. மு, முரளி அவர்களின் குழலும் யாழும் வலைப்பூவில் கவிதை மாலைகளும், சமூக அவலச் செய்திகளை துகிலுரிக்கும் பதிவுகளும் நிரம்பி வழிகின்றன.
கருவாடு குறித்த கவிதையைப் படிக்கும் போது எண்ண அலைகள் பலவிதமாய் பறந்தோடிற்று எனக்கு.
புரிந்தும் புரியாமலும்... இலக்கிய நடையோடு எதிர்ப்பார்ப்பினை அளித்த கவிதையாய் நான் கருதுகின்றேன்.
மாற்று ஊடக வாய்ப்புக்களும் நாமும்...என்ற தலைப்பிலே சமூகத்தின் இன்றைய கால ஊடக நிலையினை படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார்கள். நல்லதொரு வலைப்பூ. நானும் அறிந்து கொண்டேன்.
மழலைகளுக்கென ஓர் வலைத்தளம், குழந்தைகளுக்கு நீதியினை போதித்திடும் பாடல்களும், கதைகளும், கவிதைகளும் இங்கே ஏராளம். அத்தோடு காணொளி வடிவாகவும் கற்றுக் கொள்ள வழிகள் செய்திருக்கின்றார்கள்.
வருங்கால சந்ததியினை எண்ணி படைக்கப்பட்டிருக்கும் இத்தளத்திலிருந்து சில இணைப்புகள் நமது பார்வைக்காக..
இணையப் பாட்டி
கற்றிடல் வேண்டும் - நடராஜன் கல்பட்டு
பொது அறிவுக் கடல்
நகைச்சுவை உணர்வில்லையெனில் இம்மானுடம் என்றோ மடிந்து போயிருக்கும். கவலைகள் மறக்கச் செய்யவல்லது அன்பான உபசரிப்பும், நகைச்சுவை கலந்த உடல்நளினங்களுமே தான்.
அந்த வகையிலே இந்த வலைப்பூவின் ஆசிரியர்கள் நகைச்சுவை ததும்பிடும் பதிவுகளோடு மனம் கலங்கிடச் செய்யும் பதிவொன்றையும் பகிர்ந்திருக்கின்றார்கள்.
ஒருவருக்கு உதவி விட்டு உலகம் முழுமைக்கும் தம்பட்டம் அடித்து தற்பெருமை சூடிக்கொள்ளும் மனிதரும், தற்பெருமைக்காக அடுத்தவரின் மேல் கடமைகளை திணித்திடும் மானிடரும் இவ்வையத்தில் இருப்பதில் வியப்பில்லை.
ஆனால் வலக்கை கொடுப்பதினை இடக்கை கூட அறியா வகையில் உதவி செய்வோரும் இப்பாரினில் உண்டு.
ஆம் இங்கே சொடுக்கி அறிக.
நடிகர் விக்ரம் ஏன் இப்படி செய்தார்?, சந்தானத்தின் முடிவுகள், பவர் ஸ்டார் யாரு? : கும்ப்ளிங் கும்ப்ளிங் 04/10/2012
நாம் நடிகர் விக்ரம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு தனித்திறமை பொதிந்திருக்கும். தத்ரூபமாக புகைப்படம் எடுப்பது ஒரு உன்னதமான கலை. அதற்கும் எனக்கு சம்பந்தமே இல்லை என்றாகிலும் உறவுகளில் புகைப்படத்துறையில் கை தேர்ந்தவர்கள்/ தேற முயற்சிப்பவர்கள்/ தேற நினைப்பவர்கள் இருப்பர் என்பது உண்மையான விடயமே.
அவர்களுக்காக இவ்வலைப்பதிவினை குறித்து இங்கே வழங்குகின்றேன்.
ஓரஞ்சாரமாய் சுதந்திர மென்பொருளான ஜிம்ப் பற்றி கூறியிருக்கின்றார்கள் இங்கே Selective Coloring- செய்வது எப்படி ? இதனை நான் முத்தமிழ் மன்றத்தினை குறித்த பதிவினில் அசைபட வரைகலை தெரிவோமா என்பதிலும் GIMPல் கலக்குவோம் வாருங்கள் என்ற பதிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன்.
Post Production - DOF இல்லாமல் தவிக்க வேண்டாம்
Macro ன்னா என்ன ?... அப்படி என்ன செப்படிவித்தை இருக்கு இதிலே ?
இவர்களது வலைப்பூவிற்கான விசிறிகள் வலைச்சரத்தில் ஏராளம் என்பதை கூட தற்போது தான் அறிந்து கொண்டேன். நிமிடக்
கதைகள் படைப்பதில் கரைகண்ட பெருங்கடலாய் விளங்குகின்றார்கள். அன்னையின்
அன்பு குறித்த கவிதை என் மனதினை மிகவும் கவர்ந்திழுத்தது என்னமோ உண்மை
தான்.
ஊனமில்லா மனம் !! (2 நிமிடக் கதை)
சோளியன் குடுமி சும்மா ஆடுமா? (நிமிடகதை)
அன்னையின் அன்பு!! (கவிதை)
வைணவம் சார்ந்த கருத்துகள் நிறைந்திருக்கும் தளம். பாடல்களாகவும், பக்தி
இலக்கியங்களாகவும் விரவிக் கிடக்கின்றன. பருகி பயன்பெறுவோம்.
மடல் 000 - நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை
தென்தமிழின் பத்துக்கட்டளைப் பலன்கள்
மடல் 107 - மழைக் கண்ணா! மாலே! மணிவண்ணா!
ஆரோக்கியமான வாழ்விற்கு ஆகமத்தின் படி உடல்நலக் குறிப்பினை நமக்காக வழங்கிடும் ஓர் அற்புதமான வலைப்பூ. சில பதிவுகளை இங்கே இணைக்கின்றேன்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து!!!
எல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம், பூஜையும் செய்யலாம்
உறக்கமின்மையால் அவதியா??? - உங்களுக்கோர் எளிய தீர்வு !!!!
இல்வாழ்க்கைக்கு இருபது
அறிவியல் விந்தைகளின் ஆசிரியர் ம.ஞானகுரு அவர்கள் உலகில் மறைக்கப்படும் உண்மைகள் என்ற தலைப்பிலே தொடர் எழுதி வருகின்றார்கள்.
பயிர்வட்டங்கள் குறித்த சமீபத்திய தொடரினைப் படித்தேன். ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு பார்வைகள். உலகில் மறைக்கப்படும் உண்மைகள்(மர்மங்கள்)-13 சரி உங்கள் பார்வை என்ன என்பதினை அங்கே பதிவு செய்யுங்களேன்.
நம் தொழிற்களத்தின் ஆசிரியர் தான் அறிவியல் விந்தைகளின் ஆசிரியர் போலிருக்கு. உண்மையைக் கண்டுபிடித்து விட்டோமே!
விஞ்ஞானமும் மெய்ஞானமும் சரியான பகுப்பாய்வுக் கட்டுரை.
பசிக்கு இரப்போர் பட்டியல் இன்னும் இவ்வுலகில் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
ஒவ்வொரு ஐந்து நிமிட்த்திற்கும் 5 இந்தியர்கள் பசியால் இறக்கின்றார்கள் என்ற செய்தியினையும் நமக்கு இந்த தளம் தெரிவிப்பதோடு பசியால் வாடும் ஏழைகளுக்காய் நாம் இவர்களது இணையத்தில் இருக்கும் இணைப்பினைச் சொடுக்கினால் உலக அமைப்பின் மூலம் பசிப்பிணி தீர்த்த பாக்கியம் நமக்கு கிடைக்கும்.
சொடுக்கிடுக: http://www.bhookh.com/index.php
அடுத்து இன்னும் பல வலைப்பூக்களோடு சந்திக்கின்றேன்.
நன்றி
ஒரு கால கட்டத்தில் பூமியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ஏழு முனிவர்களான அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன் ஆகியோர் தான் வானில் ஏழு நட்சத்திரங்களாக ஒளி வீசுகின்றார்கள் என்றும் படைப்புகள் தெரியப்படுத்துகின்றன.
கீற்று இணையத்தின் வழியே பெறப்பட்ட மேலே இணைத்திருக்கும் படத்தின் வழி திருமணத்தில் நடத்தப்படும் ஒரு சடங்கினைப் பற்றி அறிந்து கொள்வோமே!
இன்றைய கால கட்டத்தில் திருமணங்கள் என்பது மிகப் பெரிய அளவில் நடத்திடுவதே கௌரவம் என்று நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதிலும் பார்ப்பனச் சடங்குகளின் படி நடைபெறும் திருமணங்களில் குறிப்பிடத்தக்கதொரு சடங்கு ”அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது”.
படத்தில் காட்டப்பட்டிருக்கும் நட்சத்திர தொகுப்பினில் ஆறாவதாய் இருப்பவரே வசிட்ட மாமுனி. அவரோடு சேர்ந்திருப்பது அவரது மனைவி அருந்ததி. மற்ற முனிவர்கள் எல்லாம் ரம்பா, மேனகா, ஊர்வசி போன்ற வனதேவதைகளின் பால் மயங்கியதாகவும், அதே போல் மற்ற முனிவர்களின் மனைவியர் தேவேந்திரனின் அழகில் மயங்கியதாகவும் சரித்திரக் கதைகள் நமக்கு தெரிவிக்கின்றன.
ஆனால் வசிட்ட மாமுனியும், அவரது மனைவியுமான அருந்ததியும் விதிவிலக்கானவர்கள். என்றுமே இணைந்தே இருப்பவர்கள். அவர்களைப் போல மணமகனும், மணமகளும் இணைந்தே இருத்திட வேண்டும் என்பதற்காகத் தான் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு நடத்தப் படுகின்றது.
திருமணத்தின் போது நல்லநாள், பிறந்த நட்சத்திரங்களின் பொருத்தம், நல்ல நேரம், ஜாதகப்பெருத்தம் பார்பதைவிட தம்பதிகளின் மனப்பொருத்தம், மருத்துவ ரீதியான சோதனைகள் பார்ப்பது தம்பதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது.
இந்த விடயத்தை அறிந்து கொண்டே நாம் சுப.நற்குணன் அவர்களின் திருத்தமிழ் வலைப்பூவிற்குள் சென்று வருவோம். வாரீர்
மலேசிய எழுத்தாளரான வலைப்பூவின் ஆசிரியருக்கு தமிழின் மீது அளவுகடந்த பற்றிருப்பதை அவரது இயல்பான எழுத்து நடையின் வழியே அறிய முடிகின்றது. சமீபத்தில் மலேசியாவில் தமிழினை கட்டாயப் பாடமாக்குவது குறித்து மலேயப் பிரதமர் அறிவிப்பொன்றை விடுத்திருந்தார் தான! மலேயப் பள்ளிகளில் தமிழினை கட்டாயப் பாடமாக்கினால் ஏற்படும் விளைவுகளை இக்கட்டுரையின் வழியே எடுத்துரைக்கின்றார்கள்.
தமிழ்க் கட்டாயப் பாடம்:- பேராபத்து நிறைந்த பரிந்துரை
அத்தோடான்றி கட்டாயாப் பாடமின்றி எளிதான முறையில் கற்றிட பத்து திட்டங்களை நமக்கு அளிக்கின்றார்கள்.
கட்டாயப் பாடம் இல்லாமலே தமிழ் படிக்க 10 திட்டங்கள்
இடையிடையே நாட்டுப்புற பாடல்களை நமக்குத் தந்து களைப்பினைப் போக்குவதோடு மட்டுமின்றி தரவதனை எதிர்கால சந்ததியினருக்கும் சேமிக்கின்றார்கள்.
நாட்டுப்புறப் பாடல்(2) – சிறுவர் பாட்டு
முத்துக் கருப்பாயி ஆச்சியினைப் பற்றி இவ்வளவு தான் என்று நான் நினைத்திருக்க கடந்த தினங்களுக்கு முன் அவர்கள் குறித்த ஒரு பதிவினை சகோதரம் தேனம்மை லக்க்ஷ்மணன் அவர்களின் வலைப்பூவிலே கண்டேன்.
இணைப்பு இதோ
வயது ஒரு தடையல்ல..
சாதனைக்கு வயது ஒரு தடையே அல்ல என்று தேனீயாய் உழைக்கும் அவர்களது வலைப்பூவில் சில பதிவுகளை உங்களின் பார்வைக்காக வைத்திட விரும்புகின்றேன்.
தாமரையில நூலெடுத்து
தாலாட்டு.
என்ன நாஞ்சொல்லுறது?! 1
எங்கள் குழந்தைகளின் அப்பத்தாவீட்டு ஐயா
*********************************
நா.சுரேஸ்குமார் அவர்களின் அறிவுக்கடல் வலைப்பூவில் கணினி குறித்தும், வாழ்வியல் குறித்தும் நிரம்பிக்கிடக்கின்றன. அவற்றை நாமும் பருகிடுவோமே!
Control Panel - Add / Remove Programs-ல் அப்ளிகேஷன்களை மறைக்க
தெரிந்து கொள்ளவேண்டிய இணையதள டிப்ஸ் (INTERNET TIPS)
ரன்பாக்ஸ்(Run Box) மூலம் அப்ளிகேஷன் புரோகிராம் (Computer Tips-5)
வாழ்வில் வெற்றிபெற தியானம் செய்!!
இளைஞசர்களை சீரழிக்க இணையத்தில் பரப்பிவிடப்படும் ஆபாசங்கள்
*******************************
இயற்கை விவசாயம் என்றால் என்ன?
இயற்கை விவசாயம் - கூடுதலாக சில சிந்தனைகள்
நகைச்சுவை உணர்வுடன் களிமண் குறித்து விளக்கிய பதிவினை படித்து அதிர சிரித்து விட்டேன்.
தலைல என்ன களிமண்ணா இருக்கு?
*******************
பத்திரிக்கையாளர் வ. மு, முரளி அவர்களின் குழலும் யாழும் வலைப்பூவில் கவிதை மாலைகளும், சமூக அவலச் செய்திகளை துகிலுரிக்கும் பதிவுகளும் நிரம்பி வழிகின்றன.
கருவாடு குறித்த கவிதையைப் படிக்கும் போது எண்ண அலைகள் பலவிதமாய் பறந்தோடிற்று எனக்கு.
புரிந்தும் புரியாமலும்... இலக்கிய நடையோடு எதிர்ப்பார்ப்பினை அளித்த கவிதையாய் நான் கருதுகின்றேன்.
மாற்று ஊடக வாய்ப்புக்களும் நாமும்...என்ற தலைப்பிலே சமூகத்தின் இன்றைய கால ஊடக நிலையினை படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார்கள். நல்லதொரு வலைப்பூ. நானும் அறிந்து கொண்டேன்.
*******************************
இந்த
வலைத்தளம் தமிழ் ஆர்வலர்களுக்கு கிடைத்த மாபெரும் சொத்து என்றே கூறலாம்.
சிங்கப்பூர் வாழ் பத்திரிக்கையாளரும் தமிழ் ஆர்வலருமான திருவாளர் ரமேஷ்
சக்ரபாணி அவர்களால் தொகுத்தளிப்பட்ட இத்தளத்தில் அரசியல், ஆன்மீகம், இசை, இலக்கணம், இஸ்லாம், உடல்நலம், எழுத்தாளர்கள்,கட்டுரை, கவிஞர்கள், இத்யாதியென பல வகைகளில் மின்னூல் கோப்புகளை நமக்கு அளிக்கின்றார்கள். படித்துப் பயன் பெறுவோம். மழலைகளுக்கென ஓர் வலைத்தளம், குழந்தைகளுக்கு நீதியினை போதித்திடும் பாடல்களும், கதைகளும், கவிதைகளும் இங்கே ஏராளம். அத்தோடு காணொளி வடிவாகவும் கற்றுக் கொள்ள வழிகள் செய்திருக்கின்றார்கள்.
வருங்கால சந்ததியினை எண்ணி படைக்கப்பட்டிருக்கும் இத்தளத்திலிருந்து சில இணைப்புகள் நமது பார்வைக்காக..
இணையப் பாட்டி
கற்றிடல் வேண்டும் - நடராஜன் கல்பட்டு
பொது அறிவுக் கடல்
நகைச்சுவை உணர்வில்லையெனில் இம்மானுடம் என்றோ மடிந்து போயிருக்கும். கவலைகள் மறக்கச் செய்யவல்லது அன்பான உபசரிப்பும், நகைச்சுவை கலந்த உடல்நளினங்களுமே தான்.
அந்த வகையிலே இந்த வலைப்பூவின் ஆசிரியர்கள் நகைச்சுவை ததும்பிடும் பதிவுகளோடு மனம் கலங்கிடச் செய்யும் பதிவொன்றையும் பகிர்ந்திருக்கின்றார்கள்.
ஒருவருக்கு உதவி விட்டு உலகம் முழுமைக்கும் தம்பட்டம் அடித்து தற்பெருமை சூடிக்கொள்ளும் மனிதரும், தற்பெருமைக்காக அடுத்தவரின் மேல் கடமைகளை திணித்திடும் மானிடரும் இவ்வையத்தில் இருப்பதில் வியப்பில்லை.
ஆனால் வலக்கை கொடுப்பதினை இடக்கை கூட அறியா வகையில் உதவி செய்வோரும் இப்பாரினில் உண்டு.
ஆம் இங்கே சொடுக்கி அறிக.
நடிகர் விக்ரம் ஏன் இப்படி செய்தார்?, சந்தானத்தின் முடிவுகள், பவர் ஸ்டார் யாரு? : கும்ப்ளிங் கும்ப்ளிங் 04/10/2012
நாம் நடிகர் விக்ரம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு தனித்திறமை பொதிந்திருக்கும். தத்ரூபமாக புகைப்படம் எடுப்பது ஒரு உன்னதமான கலை. அதற்கும் எனக்கு சம்பந்தமே இல்லை என்றாகிலும் உறவுகளில் புகைப்படத்துறையில் கை தேர்ந்தவர்கள்/ தேற முயற்சிப்பவர்கள்/ தேற நினைப்பவர்கள் இருப்பர் என்பது உண்மையான விடயமே.
அவர்களுக்காக இவ்வலைப்பதிவினை குறித்து இங்கே வழங்குகின்றேன்.
ஓரஞ்சாரமாய் சுதந்திர மென்பொருளான ஜிம்ப் பற்றி கூறியிருக்கின்றார்கள் இங்கே Selective Coloring- செய்வது எப்படி ? இதனை நான் முத்தமிழ் மன்றத்தினை குறித்த பதிவினில் அசைபட வரைகலை தெரிவோமா என்பதிலும் GIMPல் கலக்குவோம் வாருங்கள் என்ற பதிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன்.
Post Production - DOF இல்லாமல் தவிக்க வேண்டாம்
Macro ன்னா என்ன ?... அப்படி என்ன செப்படிவித்தை இருக்கு இதிலே ?
ஊனமில்லா மனம் !! (2 நிமிடக் கதை)
சோளியன் குடுமி சும்மா ஆடுமா? (நிமிடகதை)
அன்னையின் அன்பு!! (கவிதை)
மடல் 000 - நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை
தென்தமிழின் பத்துக்கட்டளைப் பலன்கள்
மடல் 107 - மழைக் கண்ணா! மாலே! மணிவண்ணா!
ஆரோக்கியமான வாழ்விற்கு ஆகமத்தின் படி உடல்நலக் குறிப்பினை நமக்காக வழங்கிடும் ஓர் அற்புதமான வலைப்பூ. சில பதிவுகளை இங்கே இணைக்கின்றேன்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதை நிறுத்தவும் - ஆபத்து!!!
எல்லா நாட்களிலும் பெண்கள் கோவிலுக்கு செல்லலாம், பூஜையும் செய்யலாம்
உறக்கமின்மையால் அவதியா??? - உங்களுக்கோர் எளிய தீர்வு !!!!
இல்வாழ்க்கைக்கு இருபது
அறிவியல் விந்தைகளின் ஆசிரியர் ம.ஞானகுரு அவர்கள் உலகில் மறைக்கப்படும் உண்மைகள் என்ற தலைப்பிலே தொடர் எழுதி வருகின்றார்கள்.
பயிர்வட்டங்கள் குறித்த சமீபத்திய தொடரினைப் படித்தேன். ஒவ்வொரு வாசகருக்கும் ஒவ்வொரு பார்வைகள். உலகில் மறைக்கப்படும் உண்மைகள்(மர்மங்கள்)-13 சரி உங்கள் பார்வை என்ன என்பதினை அங்கே பதிவு செய்யுங்களேன்.
நம் தொழிற்களத்தின் ஆசிரியர் தான் அறிவியல் விந்தைகளின் ஆசிரியர் போலிருக்கு. உண்மையைக் கண்டுபிடித்து விட்டோமே!
விஞ்ஞானமும் மெய்ஞானமும் சரியான பகுப்பாய்வுக் கட்டுரை.
பசிக்கு இரப்போர் பட்டியல் இன்னும் இவ்வுலகில் இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
ஒவ்வொரு ஐந்து நிமிட்த்திற்கும் 5 இந்தியர்கள் பசியால் இறக்கின்றார்கள் என்ற செய்தியினையும் நமக்கு இந்த தளம் தெரிவிப்பதோடு பசியால் வாடும் ஏழைகளுக்காய் நாம் இவர்களது இணையத்தில் இருக்கும் இணைப்பினைச் சொடுக்கினால் உலக அமைப்பின் மூலம் பசிப்பிணி தீர்த்த பாக்கியம் நமக்கு கிடைக்கும்.
சொடுக்கிடுக: http://www.bhookh.com/index.php
அடுத்து இன்னும் பல வலைப்பூக்களோடு சந்திக்கின்றேன்.
நன்றி
|
|
மிகவும் விரிவாக பதிவுகளை அலசியிருக்கிறீர்கள். புதிய பாணி. மிக நன்றாக இருக்கிறது. என்னையும் ஒரு பதாவராக அறிமுகப் படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteவாழ்க்கை தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக...
ReplyDeleteஅருமையான தளங்களின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..
பல பதிவர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள், எம்மையும் அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete>{பழனி.கந்தசாமி said...
ReplyDeleteமிகவும் விரிவாக பதிவுகளை அலசியிருக்கிறீர்கள். புதிய பாணி. மிக நன்றாக இருக்கிறது. என்னையும் ஒரு பதாவராக அறிமுகப் படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்.}<
தங்களின் வருகைக்கு என் மனமார்ந்த வரவேற்பினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கருத்திற்கு நன்றி
>{இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteவாழ்க்கை தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக...
அருமையான தளங்களின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..}<
மகிழ்ச்சி சகோ.
பாராட்டுதலுக்கு நன்றி
>{Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
ReplyDeleteபல பதிவர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள், எம்மையும் அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.}<
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பற்பல சகோ.
நன்றி மீண்டும்
ஏழு முனிவர்களைப்பற்றிய விளக்கம் மிக அருமை தம்பி....
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அறிமுகங்களுக்கும் மிக அருமை....
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் தம்பிக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும்...
சிறப்பான தளங்கள்...
ReplyDeleteஅறியாத சில தளங்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...
tm4
நன்றி சிவஹரி. என்னுடைய வலைத்தளத்தையும் , என் அம்மாவின் வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு. வாழ்க வளமுடன். நன்றி திண்டுக்கல் தனபாலன், சீனா சார்.:)
ReplyDeleteசிவஹரி அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteநிறைய சிறப்பான தளங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். உண்மையில் இதற்கு நிறைய பொருமையும் ஆர்வமும் வேண்டும். உங்களிம் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
என் வலைத்தளத்தையும் அழகுபட அறிமுகப் படுத்தியமைக்கும் மிக்க நன்றி.
திரு. தனபாலன் ஐயா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
We thank you on behalf of Photography in tamil group. Thanks
ReplyDelete-- Iyappan
என் வலைதளத்தை அறிமுகப்படுத்திய நண்பர் சிவஹரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.
ReplyDelete
ReplyDeleteஎன் தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பா
>{மஞ்சுபாஷிணி said...
ReplyDeleteஏழு முனிவர்களைப்பற்றிய விளக்கம் மிக அருமை தம்பி....
அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அறிமுகங்களுக்கும் மிக அருமை....
மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் தம்பிக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும்...}<
ஸோ.. சுவீத்து கமெண்ட்ஸ் யக்காவோய்.
நல்லாயிருக்கு
>{திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசிறப்பான தளங்கள்...
அறியாத சில தளங்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...
tm4}<
கருத்திட்டமை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி சகோ.
>{ Thenammai Lakshmanan said...
ReplyDeleteநன்றி சிவஹரி. என்னுடைய வலைத்தளத்தையும் , என் அம்மாவின் வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு. வாழ்க வளமுடன். நன்றி திண்டுக்கல் தனபாலன், சீனா சார்.:)}<
அவர்கள் தங்களின் தாயார் என்பதனையே முதலில் இதன் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்.
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பற்பலவே
>{அருணா செல்வம் said...
ReplyDeleteசிவஹரி அவர்களுக்கு வணக்கம்.
நிறைய சிறப்பான தளங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். உண்மையில் இதற்கு நிறைய பொறுமையும் ஆர்வமும் வேண்டும். உங்களிம் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.
என் வலைத்தளத்தையும் அழகுபட அறிமுகப் படுத்தியமைக்கும் மிக்க நன்றி.
திரு. தனபாலன் ஐயா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.}<
இனிய வரவேற்புகள் சகோ.
பொறுமையோடு செய்ததின் விளைவு தான் இந்த வெளியீடு.
ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி சகோ.
>{ஐயப்பன் கிருஷ்ணன் said...
ReplyDeleteWe thank you on behalf of Photography in tamil group. Thanks
-- Iyappan }<
கருத்தினைக் கண்டு மிக்க மகிழ்ச்சி சகோ.
>{ARIVU KADAL said...
ReplyDeleteஎன் வலைதளத்தை அறிமுகப்படுத்திய நண்பர் சிவஹரி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.}<
என் சார்பில் இனிய வரவேற்புகளைத் தெரிவித்துக் கொள்வதோடு கருத்திட்டமைக்கு நன்றிகள் பல தெரிவித்துக் கொள்கின்றேன் சகோ.
>{ம.ஞானகுரு said...
ReplyDeleteஎன் தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பா}<
வரவேற்பினையும் நன்றியினையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் சகோ.
வாக்களித்த ஐவருக்கும் (avvaipaatti@live.fr dindiguldhanabalan PKandaswamy cheenakay manju அக்கா ) நன்றிகள் பற்பல
ReplyDelete