07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 3, 2012

சிந்தனை - கதம்ப உணர்வுகள் (மூன்றாம் நாள்)

” சிந்தனை செய் மனமே “ எப்படி??? யாரை எப்படி எந்த நேரத்தில் கவுக்கலாம் என்றோ, பொய் சொல்லி ஏமாற்றி சொத்தை அபகரிக்கலாம் என்றோ எப்ப ஒழிவான்னு காத்திருந்து அவர் சீட்டை கபளீகரம் செய்வது போன்றோ இல்லவே இல்லை... நற்சிந்தனைகள் வளர்த்து யாருக்கும் எப்போதும் தீங்கு ஏற்படாவண்ணம் நல்லவைகள் செய்து... நாளும் முடிந்தவரை உதவிகள் புரிந்து.... எப்போதும் நலமுடன் வாழ சிந்திக்கவேண்டும்.... சரிப்பா மூன்றாம் நாளான இன்று என் மனம் கவர் பதிவர்களை அறிமுகப்படுத்தட்டுமா?



முதன்முதல் வலைப்பூவில் நான் ரமணிசாரின் கவிதை வரிகள் ஈர்க்கப்பட்டு விமர்சனம் எழுத ஆரம்பித்தேன். இன்று வரை ரமணிசாரின் வலைப்பூவுக்கு சென்றால் புதிய கவிதைமலர் ஒன்று மணம் வீசிக்கொண்டிருக்கும் வாழ்வியலின் கருத்தை தாங்கிக்கொண்டுஏமாற்றமே கிடைத்ததில்லை எனக்கு. கருத்துகள் தாங்கிய எளிய நடை கொண்ட ரமணிசாரின் கவிதைகளில் ரசித்து வாசித்ததில் சிறு துளிகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்..


ரிஷபன் 


நான் மிக வியக்கும் குட்டி டைனமைட்/ இத்துணூண்டு கதை தான் எழுதுவார். ஆனால் அந்த அத்துணூண்டு கதையில் நமக்கு வாழ்க்கைக்கு பயன்படக்கூடும் கருத்துகள் கண்டிப்பாக இருக்கும்அட படிச்சுட்டு அதோடு மறந்துட்டு அடுத்த வேலை பார்த்துட்டு போகலாம் என்பது போல இருக்காது. அட நம்ம ரிஷபன் சொன்னதுபோல நாம யோசிச்சு செயல்பட்டால் தான் என்ன என்று யோசிக்கவைக்கும். இத்துணூண்டு வயசுல இத்தனை அறிவா சிந்திக்கிறதே பிள்ளை என்று எனக்கு வியக்கத்தோணும்.. சொன்னா நம்பமாட்டீங்க. ரிஷபனோட சில பதிவுகளைத்தரேன்.. படிச்சுப்பார்த்தீங்கன்னா அட ஆமாம்னு நீங்களே நினைப்பீங்க.



இந்த சாக்ரடீஸீன்(அப்பாதுரையே தான்) வார்த்தைகள் எழுத்துகள்
எல்லாமே மிகவும் பிடிக்கும்சொல்ல வந்த கருத்தை, கோபத்தை கூட
அசால்டா சொல்லிட்டு போறதிலும் இவருக்கு நிகர் இவர் தான். எதிலும் 
இவர் மனத்திண்மை நான் மிகவும் ரசிக்கும் விஷயம். தேவர் கதைகளை 
கூட சுவாரஸ்யமா தன் ஸ்டைலுக்கு மாத்தி சொல்லி 
ரசிக்கவைத்துவிடுவார் படிக்கும் வாசகர்களை. சமீபத்தில் நான் படித்த
கடவுள் இல்லையடி பாப்பா க்ளாசிக் கவிதை. தேவர்கள் கதை எல்லாம்
க்ரியேட்டிவிட்டியோடு இவர் ஸ்டைலில் தருவது மிக அழகு... இப்படி
எல்லாம் சொன்னால் கண்டிப்பா ஹுஹும் புரியாது. இவர் பதிவுகள்
படிச்சா தான் நான் சொல்வது சரின்னு சொல்வீங்க.



இந்த தூரிகையின் தூறலை படிக்கச்சென்றால் மனதை அங்கேயே நிறுத்திவைத்துவிடும்
அளவுக்கு மிக அழகிய கவிதைகளும் கதைகளும் இருக்கின்றது....
மதுமதி.....கவிதையில், கதையில் மட்டும் அசத்துகிறார் என்று பார்த்தால் உதவி
செய்வதிலும் முதன்மையாக நிற்கிறார்.... பதிவர்கள் மாநாடு நடந்து, நம் நண்பர்கள்
எல்லாம் ஒருங்கிணைந்து சந்தித்து சந்தோஷித்த நாட்களை நினைக்கும்போதெல்லாம்
மதுமதியும் தவறாமல் நினைவுக்கு வருவார்... அவர் பதிவுகளை கொஞ்சம்
பார்ப்போமா??


( உயிரைத்தின்று பசியாறு என்ற இவர் படைப்பு ராணிமுத்து இதழில் 2011
வெளிவந்துள்ளது )


கவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல்
கூடுகட்டி, கூவித்திரியும் குயிலின் ஓசையை கொஞ்சம் கேட்போமா??
மனிதர்களின் காதலைக்கண்டு அலுத்துப்போய் பறவைகளின் காதலில்
மனம் லயித்து அட்டகாசமான கவிதை ஒன்று சமீபத்தில் எழுதி
எல்லோரையும் வசப்படுத்தியவர். இவரின் பதிவுகள் சில பார்ப்போமா?





இந்த பிள்ளையைப்பற்றி சொல்லனும்னா மனிதம் என்னும் எங்கோ
மிச்சமாகி இருக்கிறது என்பதற்கு இந்தப்பிள்ளையின் வரிகளை
படிக்கும்போது உணரலாம்.. அட நிஜமாதாம்பா...மனிதர்களையும்
தாண்டி பறவை, பூச்சி, மீன், மிருகம் என்று எல்லா உயிர்களிலும் அதன்
வலியை அதன் சந்தோஷத்தை அதன் உணர்வுகளை தானாய் இருந்து
எழுதிய வரிகளை படித்தால் புரியும்....இவரின் சில
பதிவுகளைப்பார்ப்போமா?






இவர் ஒரு சுறுசுறு, துறுதுறு, மொறுமொறு... என்ன புரியலையா?
எப்பவும் சுறுசுறுப்பாவே இருப்பார். எப்ப எந்த நேரம் என்ன கேள்வி
கேட்டாலும் உடனே அதுக்கான பதிலை தேடி எடுத்து
கொடுத்துருவார்...அப்புறம் துறுதுறுன்னு ஆக்டிவா இருக்கும் இவர்
பதிவுகள்....மொறுமொறுன்னு ரசிக்கும்படி இவர் அனுபவத்தையே
படிக்க தருவார்.... சில பகிர்வுகள் படிச்சாலே புரியும் உங்களுக்கு.



எனக்கு தகப்பன்ஸ்வாமி என் பிள்ளை என்று சொன்னால் அது
மிகையில்லை. என் நலத்தில், ஆரோக்கியத்தில் அதிக கவனம்
என் தம்பிக்கு. எப்போதும் தினம் தவறாமல் அழைத்து நான
நேரத்துக்கு சாப்பிடவேண்டும் என்று மிரட்டியே என்னை
சாப்பிடவைத்துவிடுவான். என் கருத்துகள் அதிகரிக்கும்போதெல்லாம்
இவனுக்கு கவலைகள் அதிகரிக்கும். அக்கா உங்க கைவலியை
பொருட்படுத்தாம இப்படி செய்யாதீங்கன்னு அன்பாக திட்டுவான்.
தம்பியின் வலைப்பூவில் எப்போது நற்சிந்தனைகளின் தொகுப்புகளும்
பொன்மொழிகளும் அழகிய கவிதைகளும் அன்பு பதிவுகளும்
காணலாம் கண்டிப்பாக. பார்ப்போமா சில அவற்றில்?




மெல்லிய இசை அமைத்து பாடலாக பாடும்படி கவிதைகள்
படிக்கனும்னா யோசிக்காம நேரா நம்ம வசந்தமண்டபத்துக்கு வந்து
இளைப்பாறினால் போறும்பா.... நாட்டுப்புற பாடல் வரிகள் தந்தானே
தந்தானே தந்தாந்த்தனே அப்டின்னு தானாவே நமக்கு
பாடத்தோன்றிவிடும் மகியின் எழுத்துகளை படிக்கும்போதே.
கருத்தும் இருக்கும், பாடலும் இருக்கும், மெல்லிய சோகமும்
இருக்கும், சந்தோஷக்கூச்சலும் இருக்கும். மணம் நிறைந்த 
மலர்களின் தோட்டமும் இருக்கும். காற்றாட தென்னம்பிள்ளையின்
வளர்த்தியும் இருக்கும்... சொல்லிக்கிட்டே போகாம உடனே
பகிர்வுகள் கொஞ்சம் பார்ப்போமா?


குணக்குன்றான குணசீலனின் வலைப்பூக்கம் சென்றால் இலக்கண
தமிழ் மணக்கும்.. இனிமையான கருத்துகள் கிடைக்கும்.
சுவாரஸ்யமான தகவல் சேமிப்பும் அறியலாம். இலக்கியத்திலும்
சிந்தனையிலும் சீரான எழுத்து நடையிலும் குணசீலனின்
தனித்தன்மையான எழுத்துகள் வாசிக்க கிடைக்கும்.. அவருடைய
பதிவுகளில் சில காண்போமா?


இதை எல்லாம் படிச்சு முடிக்க இன்று ஒரு நாள் போதும் தானேப்பா
உங்க எல்லாருக்கும்? ஏன்னா நாளை நாட்டின் கண்மணிகள் நம்ம
வலைப்பூவில் அசத்தும் என் மனம் கவர் பெண்மணிகளின் பகிர்வை
பகிரப்போகிறேன். தயாராயிருங்க படிக்க... சரியா

இன்றைய பொழுது எல்லோருக்கும் நல்லதை மட்டுமே தர
இறைவனிடம் என் அன்புப்பிரார்த்தனைகள்.




48 comments:

  1. நல்ல தொகுப்பு அக்கா. என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு முதற்கண் நன்றி பற்பல.. இவற்றில் சிலருடைய பதிவுகளைப் படித்திருக்கின்றேன். அவைகளில் எதார்த்தங்கள் பொருந்தியிருப்பதையும் கண்டு இரசித்திருக்கின்றேன். பலருடைய எண்ணவோட்டங்கள் படிப்பினையைத் தரவல்லது என்பதில் மாற்றமில்லை.

    மேலும் என் எண்ணக் கிறுக்கல்களிலிருந்து உங்களுக்கென எழுதிய என் வரிகளை மட்டும் இங்கே மேற்கோளிட கடமைப் பட்டிருக்கின்றேன்.
    அவை:
    http://sivahari.blogspot.com/2012/06/blog-post_6449.html
    http://sivahari.blogspot.com/2012/06/1.html

    நன்றி பற்பல

    ReplyDelete
  2. ஓ!...அருமை...மகிழ்ச்சி.
    பலர் அறிமுகமுடையவர்களாக உள்ளனர்.
    அனைவருக்கும், தங்களுக்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. மோகன் ஜி மற்றும் சிவஹரி நான் இதுவரை படித்திராதவர்கள். படித்துப் பார்த்து நட்பாக்கிக் கொள்கிறேன். மற்ற என் நண்பர்களுடன் என்னையும் இங்கே காண்கையில்... அதுவும் உங்களின் வார்த்தைகளில் எனக்கான அறிமுகத்தைப் படிக்கையில் மனதில் மகிழ்ச்சிப் பூ மலர்கிறது மஞ்சு. ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட உங்களுக்கு என் நன்றியையும், தோழர்களுக்கு என் நல்வாழ்த்தையும் சொல்லிக்கறேன்.

    ReplyDelete
  4. அனைவரும் சிறந்த அறிமுகங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  5. சிவஹரி, மதுமதி பக்கங்கள் சென்றதில்லை! மற்றவர்களைத் தெரியும்!

    ReplyDelete
  6. மகிழ்ச்சி மகிழ்ச்சி எனது வலைப்பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

    இன்று என்னோடு அறிமுகமான பதிவுலக நண்பர்களுக்கு வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  7. மூன்றாம் சுழி அப்பாதுரை, சிவகுமரன் தவிர பிற பதிவர்களை நான் நன்கு அறிவேன்..

    இப்பதிவர்களையும் நான் அறிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த இந்தவார வலைச்சர ஆசிரியருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  8. என்னையும் சிறந்த பதிவர்களுடன் இணைத்து
    அறிமுகம் செய்ததை பெருமையாகக் கருதுகிறேன்
    அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்கள் அனைவரும்
    நான் விரும்பித் தொடர்கிற பதிவர்களாய் இருப்பது
    எனக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது.
    சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு தங்களுக்கு
    என் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. நல்ல அறிமுகங்கள் மஞ்சு. அப்பாதுரை மற்றும் சிவஹரி இவர்களைத் தவிர மற்ற எல்லோருடைய வலையையும் பின்தொடர்கிறேன். இனி அவர்களையும் தொடர்வேன். மிகவும் சிரத்தையுடன் நல்ல நல்லப் பதிவர்களாய் தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்துவதற்கு பாராட்டுகள் மஞ்சு. பதிவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அனைவருமே அசத்தலான அறிமுகங்கள் ..இவர்களில் ரமணி அண்ணா
    தெரியும் ..மற்ற அனைவரின் வலைப்பூக்களுக்கும் இப்பவே செல்கிறேன் .
    மிகவும் அருமையா தொகுத்து தந்ததற்கு நன்றிப்பா

    ReplyDelete
  11. அழகான மிகச்சிறந்த பத்து பதிவர்களை இங்கு முத்துச்சரமாக வலைச்சரத்தில் கோர்த்து, அழகான மாலையாக்கி அமர்க்களாக அடையாளம் காட்டியுள்ள மஞ்சுவுக்கு முதலில் என் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அடையாளம் காணப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    முடிந்தால் மீண்டும் வருவேன்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  12. பகிர்வுக்கு நன்றி !மகி,ரமணி,கணேஸ் ,மதுமதி ,தொடரும் வலைப்பூக்கள் இனி மற்றவர்கள் வலையையும் ரசிக்கலாம்.

    ReplyDelete
  13. //சிவஹரி said...
    நல்ல தொகுப்பு அக்கா. என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு முதற்கண் நன்றி பற்பல.. இவற்றில் சிலருடைய பதிவுகளைப் படித்திருக்கின்றேன். அவைகளில் எதார்த்தங்கள் பொருந்தியிருப்பதையும் கண்டு இரசித்திருக்கின்றேன். பலருடைய எண்ணவோட்டங்கள் படிப்பினையைத் தரவல்லது என்பதில் மாற்றமில்லை.

    மேலும் என் எண்ணக் கிறுக்கல்களிலிருந்து உங்களுக்கென எழுதிய என் வரிகளை மட்டும் இங்கே மேற்கோளிட கடமைப் பட்டிருக்கின்றேன்.
    அவை:
    http://sivahari.blogspot.com/2012/06/blog-post_6449.html
    http://sivahari.blogspot.com/2012/06/1.html

    நன்றி பற்பல//

    எப்போதும் போல் முதலில் வந்து என்னை ஊக்குவிக்கும் என்பிள்ளை சிவஹரிக்கு என் நன்றிகள்.

    நீ எனக்கான பிறந்தநாள் வாழ்த்து எழுதியபோது நான் இந்தியாவில் இருந்ததையும், அக்கா உங்க பிறந்தநாளுக்கு என்ன வேண்டும் என்று அன்புடன் கேட்டதையும் நினைவு கூறுகிறேன்.

    நீ எனக்காக எழுதிய பிறந்தநாள் வாழ்த்துகளின் கவிதை வரிகளில் இழையோடிய அன்பையும் பாசத்தையும் நெகிழ்ச்சியுடன் பார்த்தேன் தம்பி.

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தம்பி.

    ReplyDelete
  14. // kovaikkavi said...
    ஓ!...அருமை...மகிழ்ச்சி.
    பலர் அறிமுகமுடையவர்களாக உள்ளனர்.
    அனைவருக்கும், தங்களுக்கும் நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் வேதாம்மா.

    ReplyDelete
  15. //பால கணேஷ் said...
    மோகன் ஜி மற்றும் சிவஹரி நான் இதுவரை படித்திராதவர்கள். படித்துப் பார்த்து நட்பாக்கிக் கொள்கிறேன். மற்ற என் நண்பர்களுடன் என்னையும் இங்கே காண்கையில்... அதுவும் உங்களின் வார்த்தைகளில் எனக்கான அறிமுகத்தைப் படிக்கையில் மனதில் மகிழ்ச்சிப் பூ மலர்கிறது மஞ்சு. ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட உங்களுக்கு என் நன்றியையும், தோழர்களுக்கு என் நல்வாழ்த்தையும் சொல்லிக்கறேன்.//

    உங்கள் சந்தோஷம் எங்களையும் தொற்றிக்கொண்டதேப்பா...மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா..

    ReplyDelete
  16. //திண்டுக்கல் தனபாலன் said...
    அனைவரும் சிறந்த அறிமுகங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் தனபாலன்.

    ReplyDelete
  17. //ஸ்ரீராம். said...
    சிவஹரி, மதுமதி பக்கங்கள் சென்றதில்லை! மற்றவர்களைத் தெரியும்!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ஸ்ரீராம்... அப்ப நானு?? என்னைத்தெரியுமா தெரியாதாப்பா? :)

    ReplyDelete
  18. //முனைவர்.இரா.குணசீலன் said...
    மகிழ்ச்சி மகிழ்ச்சி எனது வலைப்பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

    இன்று என்னோடு அறிமுகமான பதிவுலக நண்பர்களுக்கு வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    முனைவர்.இரா.குணசீலன் said...
    மூன்றாம் சுழி அப்பாதுரை, சிவகுமரன் தவிர பிற பதிவர்களை நான் நன்கு அறிவேன்..

    இப்பதிவர்களையும் நான் அறிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த இந்தவார வலைச்சர ஆசிரியருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் குணசீலா.

    ReplyDelete
  19. //Ramani said...
    என்னையும் சிறந்த பதிவர்களுடன் இணைத்து
    அறிமுகம் செய்ததை பெருமையாகக் கருதுகிறேன்
    அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்கள் அனைவரும்
    நான் விரும்பித் தொடர்கிற பதிவர்களாய் இருப்பது
    எனக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது.
    சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு தங்களுக்கு
    என் மனமார்ந்த நன்றி

    Ramani said...
    tha.ma 6//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரமணிசார்..

    என் சிந்தனைகளை உயிர்ப்பித்த உங்கள் கவிதையை முதன் முதல் கண்டு கருத்துகள் எழுத ஆரம்பித்து தொடர்கிறேன் உங்கள் ஆசியுடன்.

    ReplyDelete
  20. //angelin said...
    அனைவருமே அசத்தலான அறிமுகங்கள் ..இவர்களில் ரமணி அண்ணா
    தெரியும் ..மற்ற அனைவரின் வலைப்பூக்களுக்கும் இப்பவே செல்கிறேன் .
    மிகவும் அருமையா தொகுத்து தந்ததற்கு நன்றிப்பா//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா அஞ்சு...

    ReplyDelete
  21. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    அழகான மிகச்சிறந்த பத்து பதிவர்களை இங்கு முத்துச்சரமாக வலைச்சரத்தில் கோர்த்து, அழகான மாலையாக்கி அமர்க்களாக அடையாளம் காட்டியுள்ள மஞ்சுவுக்கு முதலில் என் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அடையாளம் காணப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    முடிந்தால் மீண்டும் வருவேன்.

    அன்புடன்
    VGK//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அண்ணா தங்கள் ஆசியுடன்....

    ReplyDelete
  22. // தனிமரம் said...
    பகிர்வுக்கு நன்றி !மகி,ரமணி,கணேஸ் ,மதுமதி ,தொடரும் வலைப்பூக்கள் இனி மற்றவர்கள் வலையையும் ரசிக்கலாம்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.

    ReplyDelete
  23. மிகச்சிறப்பான தொகுப்பும் அறிமுகங்களும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. மனங்கவர் பதிவர்களின் பட்டியலில் என்னையும் இணைத்துக்கொண்டது கண்டு மகிழ்ச்சி..ஏனையோருக்கு வாழ்த்துக்களையும் உங்களுக்கு என் நன்றியினையும் சொல்லிக்கொள்கிறேன்.இருவரைத் தவிர அனைவருடனும் தொடர்பில் இருக்கிறேன்..தெரியாதவர்களை தெரிந்துக்கொள்கிறேன்.. பழகாதவர்களிடம் பழகிக்கொள்கிறேன்..பட்டையக் கிளப்புங்க..இன்னும் நிறைய அறிமுகங்களைக் காணும் ஆவல் அதிகரிக்கிறது..

    ReplyDelete
  25. //Jaleela Kamal said...
    மிகச்சிறப்பான தொகுப்பும் அறிமுகங்களும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

    மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜலீலா கமால்.

    ReplyDelete
  26. மிகவும் நன்றி மஞ்சுபாஷிணி. திக்குமுக்காட வைத்தீர்கள்.

    சிவஹரி படித்ததில்லை - அறிமுகத்துக்கு நன்றி.

    மதுமதியின் 'உயிரைத்தின்று பசியாறு' - what a title! உடனே படிக்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  27. நல்ல அறிமுகம்! அனைவரும் எனக்கு நன்கு அறிமுகம் உள்ளவர்களே! மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. //அப்பாதுரை said...
    மிகவும் நன்றி மஞ்சுபாஷிணி. திக்குமுக்காட வைத்தீர்கள்.

    சிவஹரி படித்ததில்லை - அறிமுகத்துக்கு நன்றி.

    மதுமதியின் 'உயிரைத்தின்று பசியாறு' - what a title! உடனே படிக்கத் தூண்டுகிறது.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் அப்பாதுரை...

    ReplyDelete
  29. //புலவர் சா இராமாநுசம் said...
    நல்ல அறிமுகம்! அனைவரும் எனக்கு நன்கு அறிமுகம் உள்ளவர்களே! மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் இராமானுசம் ஐயா.

    ReplyDelete
  30. அடடா என்னோட நண்பர்கள் ஸ்பெஷல் ஆக உள்ளதே இப்பதிவு !!

    அப்பாதுரை படம் எங்கிருந்து பிடித்தீர்கள்? செம ஜாலியா இருக்கு பார்க்க !

    ReplyDelete
  31. அடடா என்னோட நண்பர்கள் ஸ்பெஷல் ஆக உள்ளதே இப்பதிவு !!

    அப்பாதுரை படம் எங்கிருந்து பிடித்தீர்கள்? செம ஜாலியா இருக்கு பார்க்க !

    ReplyDelete
  32. நீங்கள் அறிமுகப்படுத்தும் விதமே அமர்க்களமாய் உள்ளது.. சில புதுமுகங்களும் இருக்கிறார்கள். தேடிப் படிக்க ஆர்வம் தூண்டி இருக்கிறீர்கள். அதற்காகவே ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete
  33. சரீயான படைப்பு....

    அறிமுகம் அருமை,,,

    ReplyDelete
  34. மஞ்சுபாஷிணி, நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களில் சிவஹரி பதிவுகள் மட்டும் படித்தது இல்லை படித்து விடுகிறேன்.
    மற்ற எல்லோரும் அறிமுகமானவர்கள்.

    நீங்கள் அறிமுகப்படுத்திய விதமே அருமை.
    அடுத்த அறிமுகங்களுக்கு காத்து இருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. வலைச்சரத்தில் ஆசிரிகையாக இருப்பதற்கு வாழ்த்துக்கள் சகோதரி..!

    ReplyDelete
  36. அட்டகாசமான பதிவர்கள்,அசத்தலான பகிர்வுகள்..வாழ்த்துக்கள்..நான் வாசிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கேன்னு இப்ப ரொம்ப கவலையாக போய்விட்டது மஞ்சு.

    ReplyDelete
  37. மிகச்சிறப்பான தொகுப்பும் அறிமுகங்களும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. பல பதிவர்களும் எனக்கு அறிமுகமானவர்கள்தான் ஒரு சிலர் உன் பதிவு மூலமாக தெரிந்து கொள்ள முடியுது நன்றிகூடியமானவரை அனைத்து வலைபூக்களுக்கும் போயி படித்து ரசித்து பின்னூட்டமும்ம் போட்டுட்டுவேன்

    ReplyDelete
  39. //மதுமதி said...
    மனங்கவர் பதிவர்களின் பட்டியலில் என்னையும் இணைத்துக்கொண்டது கண்டு மகிழ்ச்சி..ஏனையோருக்கு வாழ்த்துக்களையும் உங்களுக்கு என் நன்றியினையும் சொல்லிக்கொள்கிறேன்.இருவரைத் தவிர அனைவருடனும் தொடர்பில் இருக்கிறேன்..தெரியாதவர்களை தெரிந்துக்கொள்கிறேன்.. பழகாதவர்களிடம் பழகிக்கொள்கிறேன்..பட்டையக் கிளப்புங்க..இன்னும் நிறைய அறிமுகங்களைக் காணும் ஆவல் அதிகரிக்கிறது..//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் மதுமதி... அதென்னப்பா பட்டை ? :)

    ReplyDelete
  40. // மோகன் குமார் said...
    அடடா என்னோட நண்பர்கள் ஸ்பெஷல் ஆக உள்ளதே இப்பதிவு !!

    அப்பாதுரை படம் எங்கிருந்து பிடித்தீர்கள்? செம ஜாலியா இருக்கு பார்க்க !//

    அப்பாதுரை அவ்ளோ லேசுல தன் படம் தந்திருவாரா என்ன? எப்படியோ சிரமப்பட்டு எங்கெங்கோ தேடி எடுத்ததுப்பா....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் மோகன்.

    ReplyDelete
  41. //ரிஷபன் said...
    நீங்கள் அறிமுகப்படுத்தும் விதமே அமர்க்களமாய் உள்ளது.. சில புதுமுகங்களும் இருக்கிறார்கள். தேடிப் படிக்க ஆர்வம் தூண்டி இருக்கிறீர்கள். அதற்காகவே ஸ்பெஷல் நன்றி.//

    அட ரிஷபன் வாங்கப்பா....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா...

    ReplyDelete
  42. //தொழிற்களம் குழு said...
    சரீயான படைப்பு....

    அறிமுகம் அருமை,,,//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.

    ReplyDelete
  43. //கோமதி அரசு said...
    மஞ்சுபாஷிணி, நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களில் சிவஹரி பதிவுகள் மட்டும் படித்தது இல்லை படித்து விடுகிறேன்.
    மற்ற எல்லோரும் அறிமுகமானவர்கள்.

    நீங்கள் அறிமுகப்படுத்திய விதமே அருமை.
    அடுத்த அறிமுகங்களுக்கு காத்து இருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் கோமதிம்மா...

    ReplyDelete
  44. //காட்டான் said...
    வலைச்சரத்தில் ஆசிரிகையாக இருப்பதற்கு வாழ்த்துக்கள் சகோதரி..!//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.

    ReplyDelete
  45. //Asiya Omar said...
    அட்டகாசமான பதிவர்கள்,அசத்தலான பகிர்வுகள்..வாழ்த்துக்கள்..நான் வாசிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கேன்னு இப்ப ரொம்ப கவலையாக போய்விட்டது மஞ்சு.//

    இதுக்கே இப்படி அசந்தால் எப்படியாம் ஆசியா?

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா...

    ReplyDelete
  46. //Avargal Unmaigal said...
    மிகச்சிறப்பான தொகுப்பும் அறிமுகங்களும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ.

    ReplyDelete
  47. //Lakshmi said...
    பல பதிவர்களும் எனக்கு அறிமுகமானவர்கள்தான் ஒரு சிலர் உன் பதிவு மூலமாக தெரிந்து கொள்ள முடியுது நன்றிகூடியமானவரை அனைத்து வலைபூக்களுக்கும் போயி படித்து ரசித்து பின்னூட்டமும்ம் போட்டுட்டுவேன்//

    உங்க சிரத்தை நான் அறிவேன் அம்மா...

    மனம் நிறைந்த அன்புநன்றிகள் லக்‌ஷ்மிம்மா...

    ReplyDelete
  48. நன்றி சொல்லக் கூட தாமதமாக வந்திருக்கிறேன் தங்கள் பாராட்டுக்கு நான் தகுதியானவனா எனத் தெரியவில்லை. முதலில் என்னை மன்னித்து என் நன்றிகளை ஏற்றுக் கொள்ளுங்கள் சகோதரி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது