07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 25, 2012

நான்காம் நாள் பதிவு - சிவஹரி - எதார்த்தமும் எதிர்பார்ப்பும்

எதார்த்தமும் எதிர்பார்ப்பும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்.  ஆனால் ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொண்டே இருப்பதில்லை. ஒருவரின் எதிர்பார்ப்பு வெற்றியடைந்தால் மனம் கொள்ளும் உவகையை எதார்த்தத்தின் போது ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்பது என்னுடைய கருத்து. 

பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி விட்டு பெரியோர்கள் தொலைக்காட்சி முன் அமர்ந்து வீண் கதைகள் பேசிக் கொண்டும்,  தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால், பிள்ளைகளின் மீது அவர்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு ஒரு வேளை கருதிய பயனைத் தராது எதார்த்தமான பயனைத் தந்திடும் போது நம் மனம் கலங்குவதோடு, “ஒரு அரை மணித்துளிகள் குழந்தையின் கல்வியில் கவனம் செலுத்தியிருக்கலாமே” என்று எண்ணிடத் தோன்றும்.

ஆன்மீகத்தைப் பொறுத்தமட்டில் எதார்தத்தின் விளைவையும், எதிர்பார்ப்பின் இலக்கையும் இறைவன் வசமே அர்ப்பணித்து விட்டால் என்றும் நலமே. இவ்வேளையில் ஸ்ரீமந் நாராயணனின் ஏழு மலைகள் குறித்து அறிந்திடுவோமாக.

ஸ்ரீமந் நாராயணன் மக்களின் துன்பங்கள் நீங்க, இம்மண்ணுலகில் 108 திருப்பதிகளில் எழுந்தருளியுள்ளார். அவற்றுள் திருவேங்கடம் என்னும் திருப்பதி இரண்டாவதாகும்.

நாராயணன் எழுந்தருளியுள்ள திருமலையில் ஏழு மலைகள் அடங்கியுள்ளன. 


 அவை சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி, நீலாத்ரி ஆகியவை. திருமலை, திரேதா யுகத்தில் அஞ்சனாத்ரி என்றும், கிருத யுகத்தில் நாராயணாத்ரி என்றும் துவாபரயுகத்தில் நரசிம்மாத்ரி என்றும் கலியுகத்தில் திருவேங்கடாத்ரி என்றும் பெயர் பெற்றுள்ளது.

சேஷாத்ரி: ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் ஒரு சமயம் சண்டை ஏற்பட்டது. அதில் ஆதிசேஷன் வெற்றி பெற்றான். அவனுக்கு கர்வம் ஏற்பட்டது. தான் இல்லாவிட்டால் பகவானுக்கு படுக்கை ஏது? தூக்கம் ஏது? என்றும் நினைக்க ஆரம்பித்துவிட்டான். இந்த கர்வம் அடங்கிய பின் பகவானிடம் தன் தவறை ஒப்புக்கொண்டான். கர்வத்தை விட்ட ஆதிசேஷன் பெயரால் சேஷாத்ரி என்ற பெயர் இம்மலைக்கு ஏற்பட்டது.

அஞ்சனாத்ரி: அஞ்சனாதேவி அனுமாரின் தாயார். அவள் திருப்பதியிலுள்ள ஆகாச கங்கையில் நீராடி தவமிருந்து ஆஞ்சநேயரை பிள்ளையாக அடைந்தாள். அவள் பெயரிலேயே அஞ்சனாத்ரி என்ற பெயர் இம்மலைக்கு ஏற்பட்டது.

நாராயணாத்ரி: நாராயண முனிவர் என்பவர் பிரம்மாவின் யோசனைப்படி இத்தலத்தைத் தேர்ந்தெடுத்து தவமியற்றினார். விஷ்ணு பிரத்யட்சமாகி வேண்டிய வரம் கேட்டபோது அவர் "உலகிலுள்ளவர்கள் வருத்தம் தரும் யோக மார்க்கத்திலிருந்து உன்னைக் காண சக்தி இல்லாதவர்கள். ஆதலால் தாங்கள் எவ்வுயிருக்கும் அருள் சுரந்து காட்சி அளிக்க அகலாது இங்கேயே எழுந்தருளி இருக்க வேண்டும்'' என்று கோரினார். 


பகவானும் அதற்கு இசைந்தார். இந்த இடத்திற்கு "நாராயணாத்ரி' என்ற பெயர் ஏற்பட்டது. பகவானே இந்த இடத்தில் தானே வந்து கோயில் கொண்டதால் இது ஸ்வயம்வக்த ஷேத்திரமாகும்.

விருஷபாத்ரி: விருஷபன் என்று ஒரு அரசன். அவன் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இருந்தான். திருமால் பிரத்யட்சமானார். "உன்னை எல்லாரும் பொல்லா சுவாமி என்கிறார்களே. உன்னோடு போர் புரிய ஆசை. அந்த வரம் தா'' என்றான். இந்த வரம் காரணமாக போர் நடந்தது. 


ஏழுமலையானின் நாமமே அவனை பயமுறுத்திவிட்டது. அவர் சக்கரத்தை எடுத்தவுடன், "சுவாமி நீ பொல்லாத சுவாமிதான். என் பெயரால் இம்மலையின் பெயர் ஏற்பட வரம் அருள்'' என்றான். இதனால் விருஷபாசலம் என்ற பெயர் இம்மலைக்கு ஏற்பட்டது. இதுவே விருஷபாத்ரி என்று அழைக்கப்படுகிறது.

கருடாத்ரி: கருடனையும் ஞாபகப்படுத்தும்படி கருடாசலம் என்ற பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. நாராயணனுடைய மலையானதால் நாராயணாத்ரி. 


திருப்பதி பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன் என்ற பெயருண்டு. ஆகவே ஸ்ரீநிவாஸாத்ரி. இம்மலை கேட்ட வரங்களை எல்லாம் கொடுக்கும் என்று நம்பி "சிந்தாமணிகிரி' என்றும் அழைக்கிறார்கள்.

வேங்கடாத்ரி: திருமலையில் ஏறியதுமே பாவங்கள் பஸ்பமாகி விடுகின்றன. "வே' என்றால் பாவங்கள். "கட' என்றால் கொளுத்தப்படுதல் என்று பொருள். இப்படி பாவங்களைப் போக்குவதால் வேங்கடாத்ரி என்ற பெயர் ஏற்பட்டது.

நீலாத்ரி: நீலன் என்ற வானர வீரன் தவம் செய்த மலை. எனவே இம்மலைக்கு நீலாத்ரி என்ற பெயர் அமைந்தது.

நன்றி: தினமணி இதழ்

சரி, வாருங்கள் உறவுகளே இன்று நாம் காணவிருக்கும் வலைப்பூக்களைப் பற்றிச் சொல்லுகின்றேன்.

இலக்கியச் சுவை கொண்ட இவ்வலைப்பூவில் சிற்றில் கட்டி சிறு சோறு சமைத்து விளையாடும் விளையாட்டைப் பற்றி சுவைபட தந்திருக்கின்றார்கள்.  கிராமங்களில் இது போல கூட்டாஞ்சோறு பழக்கம் இன்னும் சிறுமிகளிடம் இருக்கின்றது என்பது கூடுதலான சுவைகொண்ட தகவல்.

விளையாட்டு

 
இலக்கணமா?இலக்கியமா? என்ற கட்டுரையில் இலக்கியத்திலும் சமுதாயச் சாடல் இருப்பதை படம் பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர். 


சென்னைத்தமிழில் குட்டிச்சுவர் குட்டி குரூப் என்ற தலைப்பிலே நகைச்சுவைப் பேட்டியும் காணுங்களேன். 


 இலங்கைத் தமிழ் பாடும் குயில் கனடாவிலிருந்து தாயகம் சார்பாய் ஒலிக்கின்றது. காதல் கவிதையில் தாய்மையோடு தாய்நாட்டினையும் நேசித்து வடித்திருக்கும் வரிகள் நினைவை விட்டகலாதவை.

இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பில் இல்லாது போன ஈர இதயங்களைத் தட்டி எழுப்பிடும் வரிகளாய் என் இனிய பனை மரங்களே!  ஒளிர்கின்றது.


உளமார்ந்த நட்பினை எடுத்துரைக்கின்றது நம்மோடு நட்பு எனும் கவிதை.
இந்த வலைப்பூவில் முதியோர்களைப் பற்றிய கதைகளும் கட்டுரைகளும், படங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

யாளிகள்….. வண்ணதாசனின் சிறுகதை
இப்படிக்கு உன் அம்மா
கடவுளுடன் பிரார்த்தித்தல் – மனுஷ்ய புத்திரனின் கவிதை 


ஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லத்தினைத் தாண்டி நான் மெல்லப் பயணிக்கும் போது கண்ணபிரானின் கீர்த்தனைகள் பாடல்களாய் நாம் மனதில் வந்து விழுகின்றன. 

அவை எங்கே என்று பார்த்தால் ஒரு குழுமமாய் அமைந்து பாடல் வரிகளை நமக்கு ஒலி, ஒளி, அச்சு வடிவிலே தருகின்றார்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமாக,
இச்சுவை தவிர யான் போய்....

இங்கு சினிமா பாடலொன்றை ஆராய்ந்து முடிவு வெளியிட்டிருக்கின்றார்கள் பாருங்களேன்
சிநேகிதியே(லேடீஸ் ஒன்லி): ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ?


விஷமக்காரக் கண்ணன் பாடலின் தலைப்பே நமக்கு புரிந்திருக்கும் சேட்டைக்கார கண்ணனின் லீலைகளைத் தான் எடுத்துரைக்கின்றதென்று.


யோகா பயிற்சி குறித்தும், மனவளப் பயிற்சி குறித்தும், பங்குவர்த்தகம் செய்து பலனடைய வழிமுறைகள் குறித்தும் பல பயனுள்ள பதிவுகள் இத்தளத்தில் அடங்கியுள்ளன.

படித்துப் பயன்பெறலாமே!

ஓரு வார ஈஷா யோகப்பயிற்சி 


பயில்வோம் பங்குச்சந்தை – 1 


ஆழ்மனதின் அற்புத சக்திகள்-1சக்தியை தேடி சக்தியோடு குரல் கொடுக்கும் வாழ்க்கை! கவிதைக்கான வலைப்பூ "குரல், என்று வலைப்பூ ஆசிரியர் நம்மை குரல் வலைப்பூவிற்கு இனிய வரவேற்பினை அளிக்கின்றார்கள்.

பூக்கள் விற்பனைக்குத்தான்
சருகு ஒன்று மலர் தொடுத்துக் கொண்டிருக்கின்றது”  

-  இந்த ஹைக்கூ வரிகளைப் படிக்கும் போது எத்தனையோ விதமான எண்ணங்கள் நம்மில் எழும். அதனை மறுக்கவும் இயலாது. 

அத்தகைய கவிதை மாமலையில் நானும் படித்தனவற்றை தங்களின் பார்வைக்காவும் வைக்க விரும்புகின்றேன்.
கனவின் சிறகுகள்


சருகு படர்ந்த கூடுகள்


உன்னோடு போனது துக்கம்


அம்மாவும் கைபேசியும்


நான் எழுத்துகளில் இருக்கின்றேன் என்று நம்மோடு எழுத்தின் வழியே அறிமுகமாகும் சுந்தர்ஜி அவர்களின் கைகளில் அள்ளிய நீரில் நாமும் கொஞ்சம் பருகிடுவோமே! 


நகரவாசியின் தனிமை கவிதை வழியே இன்பத்தேன் பாய்ச்சிய சுந்தர்ஜி காய்ந்த குருதி.காயாத சுடர். கட்டுரையில் இதயத்தினை கலங்கடிக்கச் செய்கின்றார். எப்படியோ நம்மை சிரிக்காமல் இருக்க இங்கே சவாலாய் கதையொன்றையும் படிக்கச் சொல்லுகின்றார் என்றால் பாருங்களேன்.! சிரிக்காமல் படிங்க பாப்போம்- ஒரு சவால்!


கவிதை, கட்டுரை, கதை என தூரிகைச் சிதறல்களாய் நம் மனத்தின் மீது எழுத்துகளால் சிதறும் கவிக்காயத்ரி அவர்களின் வலைப்பூவிற்குள் நுழைந்து தான் பார்ப்போமே. வாருங்கள் உறவுகளே!

கருத்த மச்சானை தூக்கத்திலிருந்து எழுப்பும் வரிகளைப் படிக்கும் போது திருப்பாவை நினைவிற்கு வருகின்றதெனக்கு. அத்தோடு சின்ன சின்ன ஆசை - 2 ில் நாம் ரோஜா திரைப்படப் பாடலை மறந்தே விடுவோம். 

உணவும், உணர்வும்.... கட்டுரையில் தமிழ் நாட்டில் ஒரு உணவு விடுதி உரிமையாளர் அனைத்து ஊழியர்களுமே சாப்பிட்ட பின்னர் தான் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றராம்.. 

கேட்கவே எவ்வளவு இனிமையானதொரு செய்தியாக இருக்கின்றது. இத்தனை உயரிய மனம் எல்லோருக்கும் வருமென்று எதிர்பார்ப்பது எதுமாதிரியான பலன் என்று நீங்களே அப்பதிவின் கருத்தில் சொல்லிடுங்களேன்.
தூரிகை தந்த தூறலை சுவாசித்துக் கொண்டிருக்கும் போதே அகல்விளக்கு வலைத்தளம் நம்மை இனிய நற்றமிழோடு கவிதை, கதை, கட்டுரை மற்றும் அனுபவங்களின் மூலம் வரவேற்கின்றார்கள்.

செவிக்கு விருந்தளிக்க அழைத்திடும் போது அங்கே செல்லாமல் இருப்பது தமிழரின் மரபல்லவே. ஆதலின் நாம் சென்று செவியுணவு பருகிடுவோம். வாருங்களேன்.

உள்ளே நுழைந்த வேகத்திலேயே எப்போது... நம் காதல் மலர்ந்தது என்று ஆராய்ச்சிக் கவிதையொன்றை வடித்து தருகின்றார்கள். சரி வடி கட்டி குடித்து விட்டு அடக்கமுடியாத சிரிப்புடன் நமக்கு அப்பாவான கதை யை படிக்க தருகின்றார். நாமும் கதை தானே என்று படித்தால் அது அனுபவம் என்று நம்மிடமே சொல்லிச் சிரிக்கின்றார்கள். நல்ல கூத்து தான்.


விழுகின்ற மழைத்துளியில் ஒரு துளியையேனும் உள்ளங்கைகளில் சேர்த்து வைக்க முயலும்/துணியும் இளங்கோ அவர்களின் வலைப்பூவிற்குள் நாம் நுழைந்து தேன் பருகிடுவோம்.

ஓர் இளம் விஞ்ஞானி
இளம் விஞ்ஞானியான பாலாஜியின் கண்டுபிடிப்பு குறித்து நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்கள்.

மரங்களின் தந்தை - திரு.அய்யாசாமி அவர்களுடன் சந்திப்பினை நமக்கு கட்டுரை வழியில் தருகின்றார்கள்.


இப்போதெல்லாம் சிலை திருட்டு சர்வசாதாரணமாக நடக்கின்றது. அதனை ஹைக்கூ வரிகள் நம்மிடம் காப்பாத்திக்கோ என்ற பதிவில் சொல்லியிருக்கின்றார்கள்.


சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதையான நீ, நான், நேசம் கடித வடிவிலே ஒரு கதையினை நமக்களித்திருக்கின்றார்கள்.

திகில் கதையாய் பூமராங்கினை நமக்கு பிக்கத் ந்திரக்கின்றார்கள். பாதி படித்த மாத்திரத்திலே பயம் தொற்றிக் கொண்டது. தைரியமாய் படிப்பீங்க தானே நீங்க. 
இனியவராய், இயல்பானவராய், இதயசுத்தியுடன் குருவருளை நாடி வாழ்கின்றவள் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் தோழி அவர்களின் சித்தர்கள் இராச்சியம் வலைப்பூவினில் சித்தர்கள் குறித்த தகவல்களும், சித்தர்கள் பாடல்களும், ஆசனங்களும், சித்த மருத்துவ முறைகளும் பொதிந்து கிடக்கின்றன.

 ஆங்கில மருத்துவமானது உலகில் வீறு நடை போட்டு சென்று கொண்டிருப்பதால் சித்தமருத்துவத்தின் உண்மையான பலன் என்னவென்று நம்மில் பலருக்கு தெரிவதே இல்லை.

திரிகடுகம் என்று சொல்லப்படும் சுக்குமி ளகுதி ப்பிலி மூலங்களான மருந்து பொருட்களின் பயன் குறித்து திறன்பட சொல்லியிருக்கின்றார்கள்.

ஆசனங்கள் வழியிலே அகத்தியர் அருளிய கோமுகாசனம், சவாசனம் குறித்த தகவல்களும் நமக்கு அளித்திருக்கின்றார்கள். பயன்மிகு இத்தளத்தில் கருத்துகளைப் படித்து நாமும் பயன்பெறுவோமாக.


சே.அரசன் அவர்களின் எண்ணத்தூறல்களின் சங்கம்மான கரை சேரா அலைகள் வலைப்பூவினில் நுழைந்திருக்கின்றோம். என் மொழிகள் # 1 கொண்டு நம்மை வரவேற்கின்றார்கள்.

அப்படியே உருக்கமான காதல் கதை ஒரு முறையாவது படித்து விடுங்களேன். அத்தோடு ஓராயிரம் இடிகளைப் படித்திடும் போது நெஞ்சில் ஒரு வித உணர்வலைகளை எழுத்துகள் தோற்றுவிக்க வல்லவை என்பதை நிரூபணம் செய்து விடுகின்றது.


அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தினை ஒரு முறை சந்திப்பது நல்லது என்ற தாரகமந்திரம் கொண்டு வலைப்பூவினை வடிவமைத்திருக்கும் சகோ எழில் அவர்கள் பெரியாரின் சிந்தனைத் துளிகளில் நம்மை கரைய வைக்கின்றார்கள்.

சில துளிகளைப் பார்வையிடுவோமே!

பெரியாரின் சிந்தனைத் துளிகள் -5

பெரியாரின் சிந்தனைத் துளிகள் -4

சூழல் காப்போம் -5 சூரிய ஒளியில் மின்னாற்றல் உற்பத்தி செய்து சூழலைக் காக்க வழிமுறைகளை எடுத்துரைக்கின்றார்கள்.

வாழ்வின் தேடல்-1 பதிவில் வாழ்வின் உள்ளார்த்தமான நிலையை விளக்கியிருக்கின்றார்கள். இன்றைய பதிவானது ஆன்மீகத்தில் தொடங்கி பகுத்தறிவாதியின் சிந்தனைத் துளிகளில் ஊறி முடிந்திருக்கின்றது. மேலும் பல சிந்தனைச் சிதறல்களை அடுத்த பதிவினில் காண்போம்.

நன்றி 


சில கட்டாய காரணங்களால் நாளையோடு என் வலைச்சர பதிவுகள் நிறுத்தத்தைக் கண்டு கொள்ளும்.

அதனின் காரணமாக இன்று கூடுதலாக ஒரு பதிவினைத் தந்து என் இலக்கினை அடைய முயற்சித்திருக்கின்றேன். 

ஒத்துழைப்பிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி

29 comments:

 1. அன்பு காலை வணக்கங்கள் தம்பி....

  எதார்த்தமும் எதிர்ப்பார்ப்பும் தலைப்பே மிக அருமை தம்பி....

  உண்மையே.. நானே பலமுறை இந்த தவறு செய்திருப்பதை நினைத்து பார்க்கிறேன். குழந்தையை படிபடி என்று சொல்லிவிட்டு டிவி பார்ப்பது எத்தனை தவறான செயல் என்று தோன்றுகிறது....அம்மா பலமுறை சொல்வார்கள். குழந்தை படிக்கும் இடத்தில் டிவி ஆன் செய்யக்கூடாது என்றும். பிள்ளையின் அருகே அமர்ந்து அவன் கல்வியில் கவனம் செலுத்து என்று....  மிக அருமையாக ஏழுமலைகளைப்பற்றி விவரங்கள் விளக்கங்கள் பகிர்ந்துள்ளது இன்றைய பதிவில்....

  அரியத்தொகுப்பு....

  ஒவ்வொருமுறை திருப்பதி செல்லும்போதும் ஆகாச கங்கை செல்லவேண்டும் என்று நினைத்து செல்லமுடியாமல் ஆகிவிடுகிறது...

  இனி சென்றால் கண்டிப்பாக தரிசிக்கவேண்டும்...

  இன்றைய அறிமுகங்கள் மிக மிக அருமை... அறிமுகப்படுத்தப்பட்ட விதமும் சிறப்பு...

  கைகள் அள்ளிய நீர் சுந்தர்ஜியின் எழுத்துகளை நான் அப்பாதுரை அவர்களின் வலைப்பூவில் வாசித்திருக்கிறேன்....

  இன்றைய நாள் ஏழுமலை பற்றிய பகிர்வு மிக அருமைதம்பி. மனம் நிறைந்த அன்புநன்றிகள்...

  அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்...

  த.ம. 2

  ReplyDelete
 2. என்னையும் ஒரு பொருட்டாய்க் கருதி அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சிவஹரி.

  உங்களைப் பற்றி நான் ஏதும் அறியாதபோதும் என் எழுத்தின் மேல் நீங்கள் காட்டிய உறவு திக்குமுக்காட வைக்கிறது.

  நீங்கள் சுட்டியுள்ள காய்ந்த குருதி - காயாத சுடர் என்ற தலைப்பில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரையை அறிமுகப்படுத்தி இருந்தேன். அவரே முழுப் பாராட்டுக்கும் உரியவர்.உங்கள் அன்பையும் பாராட்டுக்களையும் அவர் இருக்கும் திசைக்கு அனுப்புவதில் மகிழ்கிறேன்.

  அதேபோல் சிரிக்காமல் படிக்கச் சவால் விடும் கதையும் என் நண்பரும், தமிழின் அற்புதமான எழுத்தாளருமான தஞ்சாவூர்க்கவிராயரின் எழுத்துக்கு உதாரணம். அவருக்கும் உங்கள் பாராட்டுக்களைச் செலுத்துகிறேன்.

  உங்கள் அறிமுகம் என்னை இன்னும் செழுமைப்படுத்தும் என்றும் உறுதியளிக்கிறேன்.

  மீண்டும் நன்றி சிவஹரி.

  ReplyDelete
 3. தோழர் சிவஹரி அவர்களுக்கு எம்மை அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சியும், நன்றியும்.

  தாங்கள் ஒவ்வொரு வலைப்பூ, மற்றும் அவர்கள் பதிவுகளைப் பற்றி அறிமுகப்படுத்தியிருக்கும் விதமே மிகவும் அழகு. கவிதையாய், கட்டுரையாய், காவியமாய்க்கூட இருக்கிறது..அவ்வளவு அழகாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்.

  தங்கள் அனைவரது வாழ்த்துக்களும் எமது எழுத்தை செம்மைப் படுத்தட்டும்.

  மற்ற தோழமைகள் அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 4. எத்தனை எத்தனை சிறப்பான தளங்கள்... முதலில் மிக்க நன்றி சார்...

  எவ்வளவு அருமையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள்... எவ்வளவு சிரமம் என்பதும் தெரியும்...

  இரு பகிர்விலும் உள்ள (தளங்கள்) அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்...

  நன்றிகள் பல...
  tm4

  ReplyDelete
 5. எதார்த்தமும் எதிர்பார்ப்பும் அருமை...
  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. படைப்பை அங்கீகரித்த உங்களுக்கு என் நன்றிகள் தோழமையே ...
  மேலும் இன்று அறிமுகமான நண்பர்கள் அனைவருக்கும் என் உள்ளம் கசியும் வணக்கங்களும் , வாழ்த்துக்களும்

  ReplyDelete
 7. வணக்கம் சிவஹரி

  இன்று வலைப்பூ கதம்பத்தில் பலவகைப்பட்ட வலைப்பூக்களை அறிந்துள்ளேன் எவ்வளவு சிரமத்துக்கு மத்தியில்லும் பல வேலைப் பழுமத்தியிலும் அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது அன்பு கனிந்த வாழ்த்துக்கள்.

  இன்று அறிமுகம் செய்துள்ள தளங்கள் அத்தனையும் எனக்கு புதியது அனைத்தையும் சென்று பார்த்து படிக்க வேண்டியுள்ளது நாளையும் வலைப்பூ வலைச்சரம் சிறப்பான படைப்புக்களுடன் வெளிவர எனது
  வாழ்த்துக்கள்.சிவஹரி


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. நீங்கள் அறிமுகப் படுத்திய தளங்களில் சிலவற்றை இன்று பார்த்தேன். மிகச் சிறப்பான பணியை மிகவும் அக்கறையுடன் செய்திருக்கிறீர்கள்.

  நாளையுடன் முடிவடையும் என்று சொல்லி இருக்கிறீர்களே, அது ரொம்பவும் வருத்தத்தைத் தருகிறது.

  வரைவாக வைத்திருந்து பிறகு வெளி இடலாமே!

  ReplyDelete
 10. எனது பதிவுகளை அறிமுகம் செய்த தங்களுக்கு எனதன்பு நன்றிகள். இன்று அறிமுகமான மற்ற பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 11. மிக்க நன்றி சகோதரரே ...பலவிதமான போராட்டங்களுக்கும்,
  வேலை சுமைகளுக்கும் நடுவே வித விதமான சிந்தனை
  வித்துக்களை வலையில் தெளிக்கும் சக பதிவர்கள் எப்போதுமே
  என் மதிப்புக்குரியவர்கள் !
  இதனிடையே,சரமாய்த் தொடுக்கும் பணியும் ஏற்று, அறிமுகம் தரும்
  நண்பர்கள் பெருமதிப்புக்குரியவர்கள்....
  சிவஹரி,உங்கள் அன்புக்கும் ,ரசனைக்கும் என் வணக்கங்கள்...
  (கொஞ்சமாய்க் கைகூட நடுக்குகிறது!உங்கள் மதிப்பீட்டைக்
  காப்பாத்த வேணுமே என்று..)))))))))

  ReplyDelete
 12. வலைச்சரத்தில் என்னுடைய வலைப்பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் சிவஹரி . அறிமுகமான மற்ற வலைப்பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள். என் பதிவு குறித்த பொறுப்பு இன்னமும் அதிகமாகிவிட்டதாய் உணர்கிறேன் நன்றி. வலைச்சரத்தின் ஆசிரியராக உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். மற்ற பதிவுகளையும் படித்து பிறகு பின்னூட்டமிடுகிறேன்

  ReplyDelete
 13. ஆஹா,பரவசத்துல என்னோடு பகிரப்பட்ட மற்ற பதிவர்களைப் பாராட்ட
  மறந்துட்டேனே ...
  வாழ்த்துக்கள் நண்பர்களே

  ReplyDelete
 14. >{மஞ்சுபாஷிணி said...

  அன்பு காலை வணக்கங்கள் தம்பி....

  எதார்த்தமும் எதிர்ப்பார்ப்பும் தலைப்பே மிக அருமை தம்பி....

  உண்மையே.. நானே பலமுறை இந்த தவறு செய்திருப்பதை நினைத்து பார்க்கிறேன். குழந்தையை படிபடி என்று சொல்லிவிட்டு டிவி பார்ப்பது எத்தனை தவறான செயல் என்று தோன்றுகிறது....அம்மா பலமுறை சொல்வார்கள். குழந்தை படிக்கும் இடத்தில் டிவி ஆன் செய்யக்கூடாது என்றும். பிள்ளையின் அருகே அமர்ந்து அவன் கல்வியில் கவனம் செலுத்து என்று....  மிக அருமையாக ஏழுமலைகளைப்பற்றி விவரங்கள் விளக்கங்கள் பகிர்ந்துள்ளது இன்றைய பதிவில்....

  அரியத்தொகுப்பு....

  ஒவ்வொருமுறை திருப்பதி செல்லும்போதும் ஆகாச கங்கை செல்லவேண்டும் என்று நினைத்து செல்லமுடியாமல் ஆகிவிடுகிறது...

  இனி சென்றால் கண்டிப்பாக தரிசிக்கவேண்டும்...

  இன்றைய அறிமுகங்கள் மிக மிக அருமை... அறிமுகப்படுத்தப்பட்ட விதமும் சிறப்பு...

  கைகள் அள்ளிய நீர் சுந்தர்ஜியின் எழுத்துகளை நான் அப்பாதுரை அவர்களின் வலைப்பூவில் வாசித்திருக்கிறேன்....

  இன்றைய நாள் ஏழுமலை பற்றிய பகிர்வு மிக அருமைதம்பி. மனம் நிறைந்த அன்புநன்றிகள்...

  அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்...

  த.ம. 2}<

  சின்ன கருத்தினை கண்டு ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பெரிய சந்தோசம் தாயீஈஈஈஈஈ..

  ReplyDelete
 15. >{சுந்தர்ஜி said...

  என்னையும் ஒரு பொருட்டாய்க் கருதி அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சிவஹரி.

  உங்களைப் பற்றி நான் ஏதும் அறியாதபோதும் என் எழுத்தின் மேல் நீங்கள் காட்டிய உறவு திக்குமுக்காட வைக்கிறது.

  நீங்கள் சுட்டியுள்ள காய்ந்த குருதி - காயாத சுடர் என்ற தலைப்பில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரையை அறிமுகப்படுத்தி இருந்தேன். அவரே முழுப் பாராட்டுக்கும் உரியவர்.உங்கள் அன்பையும் பாராட்டுக்களையும் அவர் இருக்கும் திசைக்கு அனுப்புவதில் மகிழ்கிறேன்.

  அதேபோல் சிரிக்காமல் படிக்கச் சவால் விடும் கதையும் என் நண்பரும், தமிழின் அற்புதமான எழுத்தாளருமான தஞ்சாவூர்க்கவிராயரின் எழுத்துக்கு உதாரணம். அவருக்கும் உங்கள் பாராட்டுக்களைச் செலுத்துகிறேன்.

  உங்கள் அறிமுகம் என்னை இன்னும் செழுமைப்படுத்தும் என்றும் உறுதியளிக்கிறேன்.

  மீண்டும் நன்றி சிவஹரி. }<

  ரசித்து விரிவாய் எழுதிய கருத்துரைக்கு நன்றிகள் பற்பல சகோ.

  தங்களின் பெருந்தன்மையினை எண்ணி மகிழ்ச்சி கொள்கின்றேன்.

  ReplyDelete
 16. >{கவிக்காயத்ரி said...

  தோழர் சிவஹரி அவர்களுக்கு எம்மை அறிமுகப்படுத்தியமைக்கு மகிழ்ச்சியும், நன்றியும்.

  தாங்கள் ஒவ்வொரு வலைப்பூ, மற்றும் அவர்கள் பதிவுகளைப் பற்றி அறிமுகப்படுத்தியிருக்கும் விதமே மிகவும் அழகு. கவிதையாய், கட்டுரையாய், காவியமாய்க்கூட இருக்கிறது..அவ்வளவு அழகாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்.

  தங்கள் அனைவரது வாழ்த்துக்களும் எமது எழுத்தை செம்மைப் படுத்தட்டும்.

  மற்ற தோழமைகள் அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்.}<


  விரிவான பின்னூட்டம், ரசித்து வழங்கியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி சகோ.

  தொடரட்டும் தங்களின் பயணம்.

  ReplyDelete
 17. >{ திண்டுக்கல் தனபாலன் said...

  எத்தனை எத்தனை சிறப்பான தளங்கள்... முதலில் மிக்க நன்றி சார்...

  எவ்வளவு அருமையாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள்... எவ்வளவு சிரமம் என்பதும் தெரியும்...

  இரு பகிர்விலும் உள்ள (தளங்கள்) அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்...

  நன்றிகள் பல...
  tm4}<

  ஊக்கியின் சிறப்பான பதிலாக நான் இதனை கருதுகின்றேன்.

  மகிழ்ச்சி

  ReplyDelete
 18. >{சே. குமார் said...

  எதார்த்தமும் எதிர்பார்ப்பும் அருமை...
  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.}<

  கருத்திட்டமை கண்டு மகிழ்ச்சி சகோ.

  ReplyDelete
 19. >{ அரசன் சே said...

  படைப்பை அங்கீகரித்த உங்களுக்கு என் நன்றிகள் தோழமையே ...
  மேலும் இன்று அறிமுகமான நண்பர்கள் அனைவருக்கும் என் உள்ளம் கசியும் வணக்கங்களும் , வாழ்த்துக்களும் }<

  இனிய வரவேற்புகள் சகோ.

  தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி சகோ.

  நன்றி

  ReplyDelete
 20. >{ 2008rupan said...

  வணக்கம் சிவஹரி

  இன்று வலைப்பூ கதம்பத்தில் பலவகைப்பட்ட வலைப்பூக்களை அறிந்துள்ளேன் எவ்வளவு சிரமத்துக்கு மத்தியில்லும் பல வேலைப் பழுமத்தியிலும் அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது அன்பு கனிந்த வாழ்த்துக்கள்.

  இன்று அறிமுகம் செய்துள்ள தளங்கள் அத்தனையும் எனக்கு புதியது அனைத்தையும் சென்று பார்த்து படிக்க வேண்டியுள்ளது நாளையும் வலைப்பூ வலைச்சரம் சிறப்பான படைப்புக்களுடன் வெளிவர எனது
  வாழ்த்துக்கள்.சிவஹரி


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-}<

  கல்விச் செல்வத்தையே காவலாகக் கொண்டிருக்கும் தகையோரின் கருத்துமிகு பதிவினைக் கண்டு மகிழ்ச்சி.

  நன்றி

  ReplyDelete
 21. >{Lakshmi said...

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.}<

  மகிழ்ச்சி சகோ.

  ReplyDelete
 22. >{இளங்கோ said...

  எனது பதிவுகளை அறிமுகம் செய்த தங்களுக்கு எனதன்பு நன்றிகள். இன்று அறிமுகமான மற்ற பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்களும். }<

  கருத்தினைக் கண்டு மகிழ்ச்சி சகோ.

  நன்றிகள் பற்பல

  ReplyDelete
 23. >{ சக்தி said...

  மிக்க நன்றி சகோதரரே ...பலவிதமான போராட்டங்களுக்கும்,
  வேலை சுமைகளுக்கும் நடுவே வித விதமான சிந்தனை
  வித்துக்களை வலையில் தெளிக்கும் சக பதிவர்கள் எப்போதுமே
  என் மதிப்புக்குரியவர்கள் !
  இதனிடையே,சரமாய்த் தொடுக்கும் பணியும் ஏற்று, அறிமுகம் தரும்
  நண்பர்கள் பெருமதிப்புக்குரியவர்கள்....
  சிவஹரி,உங்கள் அன்புக்கும் ,ரசனைக்கும் என் வணக்கங்கள்...
  (கொஞ்சமாய்க் கைகூட நடுக்குகிறது!உங்கள் மதிப்பீட்டைக்
  காப்பாத்த வேணுமே என்று..))))))))) }<

  தங்களின் வலைப்பூவினிலே நான் ரசித்த கருத்துகள் ஏராளம். அதனை வெளிக்கொணர எனக்கொரு வாய்ப்பினை தாங்கள் வழங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சி சகோ.

  ReplyDelete
 24. >{ ezhil said...

  வலைச்சரத்தில் என்னுடைய வலைப்பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் சிவஹரி . அறிமுகமான மற்ற வலைப்பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள். என் பதிவு குறித்த பொறுப்பு இன்னமும் அதிகமாகிவிட்டதாய் உணர்கிறேன் நன்றி. வலைச்சரத்தின் ஆசிரியராக உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். மற்ற பதிவுகளையும் படித்து பிறகு பின்னூட்டமிடுகிறேன் }<

  பொறுப்புகள் எப்போதுமே எல்லோருக்கும் அதிகம் தான் சகோ.

  அதனை எடுத்துக் கொள்ளும் விதத்தில் தான் நாம் நம்முடைய தனித்தன்மையினைக் காட்டிக் கொள்கின்றோம்.

  வருகைக்கும், உயர்தனி கருத்திற்கும் நன்றிகள் பற்பலவே.

  நன்றி

  ReplyDelete
 25. >{சக்தி said...

  ஆஹா,பரவசத்துல என்னோடு பகிரப்பட்ட மற்ற பதிவர்களைப் பாராட்ட
  மறந்துட்டேனே ...
  வாழ்த்துக்கள் நண்பர்களே }>

  தங்களின் வாழ்த்துகளை நானும் என் சார்போடும் மற்ற பதிவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  நன்றி சகோ.

  ReplyDelete
 26. >{ Ranjani Narayanan said...

  நீங்கள் அறிமுகப் படுத்திய தளங்களில் சிலவற்றை இன்று பார்த்தேன். மிகச் சிறப்பான பணியை மிகவும் அக்கறையுடன் செய்திருக்கிறீர்கள்.

  நாளையுடன் முடிவடையும் என்று சொல்லி இருக்கிறீர்களே, அது ரொம்பவும் வருத்தத்தைத் தருகிறது.

  வரைவாக வைத்திருந்து பிறகு வெளி இடலாமே!}<

  மின்னஞ்சலில் என் சூழலினை தங்களுக்குத் தெரிவித்திருந்தேன் சகோ. பதில் கண்டும் மகிழ்ச்சி.

  மேலான கருத்துரைக்கு நன்றி

  ReplyDelete
 27. வாக்களித்த மூவருக்கும் (manju அக்கா, gayu சகோ dindiguldhanabalan ) அனைவருக்கும் என் நன்றிகள் பற்பல

  ReplyDelete
 28. பலரின் பார்வையில் எனது எழுத்தை கொண்டு சென்ற திண்டுகல் தனபாலனுக்கும்,சிவஹரிக்கும்
  நன்றிகள் பற்பல.மீண்டும் எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறது.மிகவும் வியப்பாக உணர்கிறேன்.நன்றி

  ReplyDelete
 29. >{virudhaimalar said...

  பலரின் பார்வையில் எனது எழுத்தை கொண்டு சென்ற திண்டுகல் தனபாலனுக்கும்,சிவஹரிக்கும்
  நன்றிகள் பற்பல.மீண்டும் எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறது.மிகவும் வியப்பாக உணர்கிறேன்.நன்றி}<

  தாங்கள் யாரென்று எங்களுக்குத் தெரியும். நான் யாரென்று தங்களுக்குத் தெரிந்தும் இருக்கலாம்.

  வருகை கண்டு மகிழ்ச்சி.

  கருத்திட்டமைக்கு நன்றி சகோ.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது